அஷ்ஷைக் ஸாலிஹ் இப்னு பௌஸான் அல் பௌஸான்-ஹபிழஹுல்லாஹ்- அவர்களிடம் ஒரு கேள்வி வினவப்பட்டது.
கேள்வி: "நாம் ஓர் அரபு நாட்டைச் சேர்ந்த சில வாலிபர்கள், எமது நாட்டில் தாடி வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தமது தாடியை சவரம் செய்ய வேண்டுமென ஒரு தீர்மானம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது, அத்தோடு அவ்வாறு சவரம் செய்யாதவரை அவரது தொழிலிருந்து நீக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும்? (அல்லாஹ் உங்களுக்கு தௌபீக் செய்வானாக)"
பதில்: பின்வரும் நபியவர்களின் தீர்மானங்கள் ஹிஜ்ரி 1426 ஆண்டுகளுக்கு முன்னரே வெளியாகிவிட்டன.
" ● தாடியை வளர்வதற்கு -அவ்வாறே- விட்டுவிடுங்கள்
● தாடியைக் கண்ணியப்படுத்துங்கள்
● தாடியை வளர விடுங்கள் - தொங்க விடுங்கள்-"
மேலும் " படைப்பாளனுக்கு மாற்றம் செய்து படைப்பினங்களுக்கு வழிப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை " என்ற நபியின் தீர்மானமும் இன்னும் " யார் அல்லாஹ்வை பயப்பட்டு இறையச்சம் கொள்கிறாரோ அவருக்கு விடிவை (கஷ்டங்களிலிருந்து வேளியேறும் வழியை) ஏற்படுத்திக் கொடுப்பான், மேலும் அவருக்கு நினையாத விதத்தில் உணவளிப்பான் (தேவையானவற்றை நிறைவு செய்து கொடுப்பான்) " என்ற அல்லாஹ்வின் தீர்மானமும் எப்பொழுதோ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
வாழ்வாதாரம் இத்தொழிலில் மாத்திரம் வரையறுக்கப்பட்டு சுருக்கப்பட்டதாக இல்லை, ஆகையால் இதுவல்லாத பாவம் இடம்பெறாத வேலையைத் தேடிக்கொள்வது உகந்ததாகும்."
குறிப்பு : இங்கு தீர்ப்புக் கொடுத்திருக்கும் காலம் இப்பதிவிலிருந்து12 வருடங்களுக்கு முன் என்பதால் 1426 என்று குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் இப்பொழுது நாம் 1437 வருடங்களுக்கு முன் என்று சொல்வதே பொருத்தமாகும்.
வெளியீடு: https://goo.gl/0MvTWy (இணையம்)
தமிழாக்கம்:
அஸ்(z)ஹான் ஹனீபா