இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ் ஒருவருக்கு குழந்தையை வழங்கினால், அதற்கு நல்ல பெயரைச் சூட்டி, சிறந்த ஒழுக்கங்களைக் கற்றுக்கொடுத்து, அவன் பருவமடைந்து விடும் போது, அவனுக்குத் திருமணம் செய்து வைக்கட்டும்."
(நூல்: அந்-நஃபகா அலல் இயால் - இப்னு அபீ துன்யா)
கதாதா (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் இளைஞன் பருவமடைந்து, அவனது தந்தை அவனுக்குத் திருமணம் செய்து வைக்காத நிலையில், அவன் (திருமணத்திற்கு முன்பே) பாவம் செய்துவிட்டால், அதற்கு அவனது தந்தையே குற்றவாளியாவார் என்று கூறப்பட்டு வந்தது."
(நூல்: அந்-நஃபகா அலல் இயால்)
ஷேக் இப்னு பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் தலைமையிலான நிரந்தரக் குழு (அல்-லஜ்னதுத் தாயிமா) அறிஞர்கள் கூறியது:
"ஒரு மகன் திருமண வயதை அடைந்துவிட்டால், அவனைப் பாதுகாப்பது (ஹராமானவற்றிலிருந்து காப்பது) அவனது தந்தையின் மீது கடமையாகும். அவனது உயிரைக் காக்க உணவு மற்றும், உடை போன்ற தேவைகளைச் செலவிடுவது எந்த அளவுக்குக் கடமையோ, அதே அளவுக்கு இதுவும் அவசியமான கடமையாகும்."
(நூல்: ஃபதாவா அல்-லஜ்னதுத் தாயிமா)