முஸ்லிம்களை எதுவும் பிரிக்காது இதை தவிர.!
'தவ்ஹீத்'தில் பலவீனமாக இருப்பது.!
தவ்ஹீதை நிலைநாட்டாமல் இருப்பது.!
தவ்ஹீதிற்கு முக்கியத்துவம் தராமல் இருப்பது.!
(அஷ்ஷைக் சாலிஹ் இப்னு ஸாத் அல் ஸுஹைமி(حفظه الله)
ஆம் சகோதர்களே.! அத் தவ்ஹீத் இது தான் இஸ்லாத்தின் முதல் அடிப்படை.! இதற்கத்தான் அல்லாஹ்ﷻ நபிமார்களை அனுப்பினான்.! அல்லாஹ்ﷻதன்னுடைய நபிﷺ அவர்களுக்கு முதலில் போதித்தது, கற்றுக்கொடுத்தது தவ்ஹீத்தை தான்!
அல்லாஹ்ﷻ கூறுகின்றான்:-
ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக இன்னும் உம்முடைய பாவத்திற்காகவும், முஃமின்களாகன ஆண்களுக்காகவும், பெண்களுக்காகவும் (பாவ) மன்னிப்புத் தேடுவீராக.
(அல் குர்ஆன் 47-19)
மேலும் அஷ்ஷைக் சாலிஹ் இப்னு ஸாத் அல் ஸுஹைமி(حفظه الله) கூறுகிறார்கள்:-
ஆகையால் அறிந்துகொள்ளுங்கள்.! எந்த ஒரு அழைப்புப்பணி தவ்ஹீதை கொண்டு துவங்கவில்லையோ, அல்லது 'தவ்ஹீத்'தின் அடிப்படையை கொண்டு துவங்கவில்லையோ அந்த அழைப்புப்பணி ஒருபோதும் வெற்றிபெறாது.!
மக்கள் இல்லாம் ஒன்று சேர்ந்து புது புது கொள்கைகளை, சித்தாந்தங்களை, கொண்டுவந்தாலும் சரி அல்லது ஒவ்வொரு ஜமாத்தும் புது கொள்கைகளை கொண்டு வந்தாலும் சரி அது ஒருபோதும் பயனளிக்காது, மக்களை ஒன்று சேர்க்காது.! எதுவரை என்றால் அது தவ்ஹீதின் அடிப்படையில் கட்டியெழுப்பாதவரை.!
தவ்ஹீத்இன் அடிப்படை இல்லாமல் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கு, மக்கள் அதற்காக எவ்வளவு செலவு செய்தலும் சரி அல்லது எவ்வளவு அழகாக பேசினாலும் சரி அல்லது அதற்காக எவ்வளவு முயற்சி எடுத்தாலும் சரி அது அனைத்தும் பயனளிக்காமல் போய்விடும்.! தவ்ஹீத் இல்லாமல் ஒரு அமலை செய்தால் அந்த அமல் அல்லாஹ்ﷻவிடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது அந்த அமலுக்கு எந்த ஒரு பயனும் இல்லை.!
அல்லாஹ்ﷻ கூறுகின்றான்:
இன்னும் நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப்பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.
(அல் குர்ஆன் 25- 23)
ஆகையால் மக்களை ஒன்று சேர்க்க விரும்பும் சகோதர்களே மற்றும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பவர்களே.! முதலில் தவ்ஹீதை படியுங்கள்!
தவ்ஹீத்தின் கல்வியை கல்வியாளர்களிடம் இருந்து படியுங்கள்.! அதை அமல் படுத்துங்கள்.! அல்லாஹ் அனைவருக்கும் வெற்றியை தருவான்.!
-அமீர் இப்னு அப்துர்ரஹ்மான்