முஹம்மது நபி ﷺ யார், அவர்கள் நமக்கு என்ன கற்பித்தார்கள்?

من هو النبي محمّد ﷺ وماذا علمنا؟
முஹம்மது நபி ﷺ யார், அவர்கள் நமக்கு என்ன கற்பித்தார்கள்?

 هو الذي دافع عن حقوق كل البشر منذ 1400 عام.
 1400 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதகுலத்தின் உரிமைகளைப் பாதுகாத்தவர்கள்.

 حفظ الرجال، والنساء، والصغار والضعفاء.
 அவர்கள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமானவர்களின் உரிமைகளைப் பாதுகாத்தார்கள்.

 حفظ حقوق الحيوان والنبات وحث على الاعتناء بالأرض.
 அவர்கள் விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலின் உரிமைகளைப் பாதுகாத்தார்கள் மற்றும் பூமியைப் பராமரிக்க ஆர்வமூட்டினார்கள்.

 أمرنا بحسن الخلق ونظّم العلاقة بين الأقارب والجيران.
 நற்குணத்துடன் நடந்துகொள்ள கட்டளையிட்டார்கள். மேலும் உறவினர்கள் மற்றும் அண்டை வீட்டார்களுக்கு இடையே உறவுகளை வளர்த்து ஒழுங்கமைத்தார்கள்.

 وأسس علاقة تعايش بين المسلمين وغير المسلمين.
 முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் இடையே சகவாழ்வு உறவை ஏற்படுத்தினார்கள்.

 ونظّم العلاقات الأسرية التي تضمن للأب وللأم حقوقا كبيرة وعظيمة على أبنائهم.
அவர்கள் பெற்றோர்களுக்காக மகத்தான உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் விதத்தில் அவர்களது பிள்ளைகள் மீது பொறுப்புக்கூறும் கடமைகளை ஏற்படுத்தி குடும்ப உறவுகளை ஒழுங்கமைத்தார்கள்.

 منع الظلم ودعا للعدل والمحبة والتكاتف والتعاون للخير.
 அவர்கள் அடக்குமுறையைத் தடுத்தார்கள், மேலும் நீதி, அன்பு, ஒற்றுமை மற்றும் நல்ல விடயங்களில் ஒத்துழைக்க அழைப்பு விடுத்தார்கள்.

 دعا لمساعدة المحتاج وزيارة المريض والمحبة والتناصح بين كل الناس.
 ஏழைகளுக்கு உதவவும், நோயுற்றவர்களைச் சந்திக்கவும், அனைத்து மனிதர்களுக்கு மத்தியிலும் அன்பு செலுத்தவும், ஒருவருக்கொருவர் நலவு நடுவதற்கும் அவர்கள் அழைப்பு விடுத்தார்கள்.

 منع على المسلمين المعاملات السيئة مثل السرقة والغش والقتل والظلم.
 திருடுதல், ஏமாற்றுதல், கொலை, அநீதி இழைத்தல் போன்ற மோசமான நடவடிக்கைகளை முஸ்லிம்களுக்கு அவர்கள் தடை செய்தார்கள்.

 إنه من غيّر حياتنا وطباعنا السيئة إلى حسنة.
 நிச்சயமாக அவர்கள்தான் நம் வாழ்வையும் நம் கெட்ட இயல்புகளையும் நல்ல நிலைக்கு மாற்றியவர்கள்.

 علم المسلم أن لا يسرق.
 திருடக்கூடாது என்று முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

 علم المسلم أن لا يكذب.
 பொய் சொல்லக்கூடாது என்று முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

 علم المسلم أن لا يشرب الخمر.
 முஸ்லிம்களுக்கு மது அருந்த வேண்டாம் என்று போதித்தார்கள்.

 علم المسلم أن لا يزني.
 விபச்சாரத்தில் ஈடுபட வேண்டாம் என்று முஸ்லிம்களுக்கு போதித்தார்கள்.

 علم المسلم أن لا يغش.
 ஏமாற்ற வேண்டாம் என்று முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

 علم المسلم أن لا يقاتل الأبرياء
 அப்பாவி மக்களுடன் சண்டையிட வேண்டாம் என்று முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

 علم المسلم أن لا يؤذي جاره مسلما كان أو كافرا
 முஸ்லிம்கள் தங்கள் அயலவர் முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் அவரைத் துன்புறுத்தக் கூடாது என்று அவர்கள் முஸ்லிம்களுக்குக் கற்பித்தார்கள்.

 علم المسلم أن يبر بوالديه ويخدمهما ولو كانا على غير دينه.
 ஒரு முஸ்லிம் தனது பெற்றோரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளவும், அவர்களுக்குச் சேவை செய்யவும் கற்றுக் கொடுத்தார்கள். அவர்கள் மாற்று மதத்தில் இருந்தாலும் சரியே. 

 علم المسلم أن يعطف على الصغار وعلى النساء وعلى الضعفاء وكبار السن.
 குழந்தைகள், பெண்கள், பலவீனமானவர்கள், முதியவர்கள் ஆகியோரிடம் இரக்கம் காட்ட முஸ்லிம்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

 علم المسلم أن لا يعذب البشر ولا الحيوانات ولا يفسد البيئة.
 மனிதனையோ விலங்குகளையோ துன்புறுத்தக் கூடாது என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடாது என்றும் முஸ்லிம்களுக்கு போதித்தார்கள்.

 علم المسلم أن يرحم ويحب زوجته ويهتم ويعطف على أبنائه حتى آخر يوم من عمره.
 முஸ்லிம்கள் தங்கள் வாழ்க்கையின் கடைசி நாள் வரை தங்கள் மனைவிகளை நேசிக்கவும், தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்ளவும், அவர்களிடம் கருணை காட்டவும் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.

 علم المسلم أن لا تنتهي علاقته بأولاده بعد سن الرشد أبدا.
 குழந்தைகள் வயது வந்த பிறகும் பெற்றோர்கள் அவர்களுடனான உறவை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று அவர்கள் முஸ்லிம்களுக்குக் கற்பித்தார்கள்.

 كل مسلم يحب محمدًا ﷺ أكثر من كل مخلوق.
 ஒவ்வொரு முஸ்லிமும் முஹம்மத் ﷺ அவர்களை எல்லா படைப்புகளை விடவும் நேசிக்கிறான்.

بشّر به موسى وعيسى عليهما السلام.
 அவர்களைப் பற்றிய நற்செய்தியை மூஸா (மோசஸ்), ஈஸா (இயேசு) -அலைஹிமஸ்ஸலாம்- ஆகிய நபிமார்களும் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

كل مسلم يحب موسى وعيسى عليهما السلام ويؤمن أنهما من أفضل الأنبياء عليهم السلام.
 ஒவ்வொரு முஸ்லிமும் மோசஸ் மற்றும் இயேசுவை நேசிக்கிறார்கள் -அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும்- மேலும் அவ்விருவரும் நபிமார்களில் மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள் என்றும் நம்புகிறார்கள், -அவர்கள் அனைவருக்கும் சாந்தி உண்டாகட்டும்-.

 بعث محمد ﷺ للعرب وغير العرب
 முஹம்மத் ﷺ அவர்கள் அரேபியர்களுக்கும் அரேபியர்கள் அல்லாதவர்களுக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள்.

 ولا فرق في دينه بين عربي وغير عربي إلا بالتقوى.
 அவர்கள் போதித்த மார்க்கத்தில் அரேபியர்களுக்கும் அரேபியர் அல்லாதவர்களுக்கும் இடையே  இறையச்சத்தைக் கொண்டே தவிர வேறு எந்த வேற்றுமையும் இல்லை.

 إنه محمد رسول الله ﷺ.
 நிச்சயமாக, அவர்கள் தான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ﷺ .

 هل عرفتم لماذا يحب كل المسلمون محمدًا ﷺ؟
 எல்லா முஸ்லிம்களும் முஹம்மத் ﷺ அவர்களை ஏன் நேசிக்கிறார்கள் என்று உங்களுக்குப் புரிகிறதா?

 هل عرفتم ماذا يعنى محمدًا ﷺ للمسلمين؟
 இஸ்லாமியர்களிடம் முஹம்மது ﷺ என்பவர்கள் எந்த அளவு மதிப்புள்ளவர்கள்  என்பது இப்போது உங்களுக்குப் புரிகிறதா?

தமிழ் மொழி பெயர்ப்பு: 
ஸுன்னஹ் அகாடமி


Previous Post Next Post