எல்லா நபிமார்களையும், தூதர்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்கள் ஏனைய மனிதர்களை விடச் சிறந்தவர்கள் என்றும் நம்ப வேண்டும்.
அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்ட நேர்வழியை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை நேர்வழியின்பால் அழைப்பதற்காக அனுப்பப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்கள்.
மனிதர்களை நேர்வழியின் பக்கம் அழைப்பதற்காக அல்லாஹ்வால் அனுப்பப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்கள்.
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ فَمِنْهُمْ مَّنْ هَدَى اللّٰهُ وَمِنْهُمْ مَّنْ حَقَّتْ عَلَيْهِ الضَّلٰلَةُ فَسِيْرُوْا فِىْ الْاَرْضِ فَانْظُرُوْا كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِيْنَ
மெய்யாகவே நாம் ஒவ்வொரு சமூகத்தாரிடத்திலும், “அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; ஷைத்தான்களை விட்டும் நீங்கள் விலகிச் செல்லுங்கள்” என்று (போதிக்குமாறு) நம் தூதர்களை அனுப்பி வைத்தோம்; எனவே அ(ந்த சமூகத்த)வர்களில் அல்லாஹ் நேர்வழி காட்டியோரும் இருக்கிறார்கள்; வழிகேடே விதிக்கப்பெற்றோரும் அவர்களில் இருக்கிறார்கள்; ஆகவே நீங்கள் பூமியில் சுற்றுப்பயணம் செய்து, பொய்யர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதைக் கவனியுங்கள். (அல்குர்ஆன் : 16:36)
ஏராளமான தூதர்களை அல்லாஹ் மனித சமுதாயத்திற்காக தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளான். அவர்களில் இருபத்தி ஐந்து தூதர்களின் பெயர்களை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான். அந்நபிமார்கள் அனைவரையும் அவர்களின் பெயர்களுடன் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
وَتِلْكَ حُجَّتُنَاۤ اٰتَيْنٰهَاۤ اِبْرٰهِيْمَ عَلٰى قَوْمِهٖ نَرْفَعُ دَرَجٰتٍ مَّنْ نَّشَآءُ اِنَّ رَبَّكَ حَكِيْمٌ عَلِيْمٌ وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَ كُلًّا هَدَيْنَا وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ وَزَكَرِيَّا وَيَحْيٰى وَعِيْسٰى وَاِلْيَاسَ كُلٌّ مِّنَ الصّٰلِحِيْنَۙ وَاِسْمٰعِيْلَ وَالْيَسَعَ وَيُوْنُسَ وَلُوْطًا وَكُلًّا فَضَّلْنَا عَلَى الْعٰلَمِيْنَۙ
இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்ராஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.
நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.
இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.
இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம். (அல்குர்ஆன் : 6:83-86)
மேலும் பார்க்க:
அல்குர்ஆன்:
3:33,19:50,26:125,143,178,38:46,33:40.
முதல் நபி:
நபிகளில் முதலாமவர் ஆதம் (அலை) ஆவார்கள். அவரை அல்லாஹ் தனது கைகளால் நேரடியாகப் படைத்து இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான். மேலும், மனித சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட முதல் இறைத் தூதர் நபி நூஹ் (அலை) ஆவார்கள்.
இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) ஆவார்.
நபி அவர்களுக்குப் பின் வஹீயா?
வஹீ நபி (ஸல்) அவர்களோடு முற்றுப்பெற்று விட்டது. அவர் நபிமார்களிலும், தூதர்களிலும் இறுதியானவர் என நம்பிக்கை கொள்ள வேண்டும்.
நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு எந்த நபியும், ரஸூலும் வருவதற்கில்லை. ஏனெனில் அல்லாஹ் அவனது மார்க்கத்தை நபி(ஸல்) அவர்கள் மூலமாக முழுமைப்படுத்திவிட்டான். எனவே நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு தூதரின் அவசியமில்லை.
مَا كَانَ مُحَمَّدٌ اَبَآ اَحَدٍ مِّنْ رِّجَالِكُمْ وَلٰـكِنْ رَّسُوْلَ اللّٰهِ وَخَاتَمَ النَّبِيّٖنَ وَكَانَ اللّٰهُ بِكُلِّ شَىْءٍ عَلِيْمًا
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை; ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார்; மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் : 33:40)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்களின் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும்விட்டுவிட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்துவிட்டு ஆச்சரியடைந்து, 'இச்செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா?' என்று கேட்கலானார்கள். நானே அச்செங்கல். மேலும், நானே இறைத் தூதர்களில் இறுதியானவன். அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா(ரலி) ஸஹீஹ் புகாரி : 3535.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன. நான் முஹம்மது - புகழப்பட்டவர் - ஆவேன். நான் அஹ்மத் - இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன். நான் மாஹீ - அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான். நான் ஹாஷிர் - ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள். நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.
அறிவிப்பாளர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
ஸஹீஹ் புகாரி : 3532, ஸஹீஹ் முஸ்லிம் : 4896.
நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு யார் நுபூவத்தை வாதிடுவானோ அவன் பொய்யன் ஆவான்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்னுடைய சமுதாயத்தில் முப்பது பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் அனைவரும் தன்னை நபி என்று வாதிடுவார்கள். நான் தான் நபிமார்களில் முத்திரையானவன். எனக்கு பின் எந்த நபியும் கிடையாது. நூல்: சுனனு அபீ தாவூது 4252,
சுனனுத் திர்மிதி 2219.
நபி(ஸல்) அவர்களுடன் வஹீ நின்றுவிட்டது. அவருக்குப் பிறகு யாருக்கும் வஹீ வராது. அப்படி வருவதாக யார் வாதிடுவானோ அவன் பொய்யனும், காஃபிரும் ஆவான். இன்னும் அவன்மீது நம்பிக்கை கொள்வோரும் காஃபிர்கள் ஆவார்கள்.
இன்று அஹ்மதியா முஸ்லிம் என்ற பெயரில் உலகின் பல நாடுகளில் இயங்கி வரும் மக்கள், மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவனை நபியாக ஏற்றுக் கொண்டவர்கள் ஆவார்கள். எனவே மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி என்பவனும், அவனை நபியாக ஈமான் கொண்ட மக்களும் காஃபிர்கள் ஆவார்கள்.
அதே போன்று கடவுளுக்கு அடிப்பணிந்தோர் என்ற பெயரில் ரஷாத் கலிஃபா என்பவனை நபியாக ஏற்றுக் கொண்டவர்களும் காஃபிர்கள் ஆவார்கள்.
- உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி.