நவாஸிப்

இவர்கள்‌ நபி(ஸல்‌) அவர்களின்‌ குடுபத்தவர்களாகிய பனூஹாஷிம்‌, பனூமுத்தலிப்‌ கோத்திரத்தைச்‌ சார்ந்தவர்களை எதிர்ப்பர்‌. அவர்களைக்‌ குறைகூறி விமர்சனம்‌ செய்வர்‌. அவர்களை ஏசித்‌ திரிவர்‌. 

இவர்கள்‌ றாபிழாக்களுக்கு நேர்‌ முரணானவர்கள்‌. ஏனெனில்‌, றாபிழாக்கள்‌ நபித்‌ தோழர்களைத்‌ தம்‌ உள்ளத்தால்‌ வெறுத்து, தம்‌ நாவினால்‌ விமர்சிப்பர்‌. ஆனால்‌, நவாஸிப்களோ நபியவர்களின்‌ குடும்பத்தையே வெறுக்கின்றனர்‌. (இப்னு உஸைமீன்‌: ஷரஹ்‌ அல்வாஸிதிய்யா: 2:283).

இஸ்லாமிய வரலாற்றில்‌ தோன்றிய முஃதஸிலாக்கள்‌, ஜஹமியாக்கள்‌, முர்ஜிஆக்கள்‌ போன்று இவர்கள்‌ ஒரு தனிப்பிரிவினர்‌ அல்லர்‌. இவர்களுக்கென்று வேறுபட்ட கொள்கை, கோட்பாடுகள்‌ இல்லை. மாறாக, உமய்யா ஆட்சியின்‌ ஆரம்ப காலத்தில்‌ மேற்கூறப்பட்ட சிந்தனையோடு வாழ்ந்த சில தனி நபர்களே 'நவாஸிப்கள்‌ எனப்படுவர்‌. இதனால்தான்‌ வரலாற்றாசிரியர்கள்‌ யாரும்‌ நவாஸிப்கள்‌ பற்றி விரிவாக எதையும்‌ எழுதவில்லை.

- மெளலவி. எம்‌. எம்‌. ஸக்கி, B.A(Hons) மதினா

Previous Post Next Post