றாபிழாக்கள்

முதலில் ஷிஆக்கள்:

ஷிஆக்கள்‌ யார்‌ என்பதில்‌ பல முரண்பாடான கருத்துக்கள்‌ இடம்பெற்றுள்ளன.

இதற்குக்‌ காரணம்‌ ஆரம்பகாலம்‌ முதல்‌ இன்றைய காலம்வரை பல பிரிவினர்களாகப்‌ பிளவுபட்டு வருவதும்‌, அவர்களுடைய அடிப்படைகள்‌ நாளுக்கு நாள்‌ வித்தியாசப்படுவதும்‌ ஆகும்‌. இதனால்‌, ஷீஆக்கள்‌ என்றால்‌ இன்னார்தான்‌ என்பதை
அடையாளம்‌ காட்ட முடியவில்லை.

ஷீஆக்கள்‌ பற்றிக்‌ கூறப்பட்டுள்ள கருத்துக்களில்‌ கீழ்‌ குறிப்பிடப்படும்‌ கருத்து மிகப்‌ பொருத்தமானதாகும்‌ என பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள்‌ கருதுகின்றனர்‌. நேர்வழி நடந்த கலீபாக்களான அபூபக்கர்‌(ரலி), உமர்‌(ரலி), உஸ்மான்‌(ரலி) ஆகியோரைவிட நபியவர்களுக்குப்‌ பின்‌ இஸ்லாமிய ஆட்சி நடத்துவதற்கு மிகத்‌ தகுதியானவர்‌ அலி(ரலி) அவர்களாவார்‌ எனவும்‌, தமக்குப்பின்னர்‌ ஆட்சிப்பொறுப்புக்குத் தகுதியானவர்‌ அலீ(ரலி) என ‌ நபி(ஸல்‌) அவர்கள்‌ வஸிய்யத்‌ செய்தார்கள்‌ எனவும்‌, மேலும்‌, அலீ(ரலி) அவர்களுக்குப்‌ பின்னர்‌ இஸ்லாமிய ஆட்சி முறைக்கு நபி(ஸல்‌) அவர்களின்‌ குடும்பத்தவர்களே தகுதியானவர்கள்‌ எனவும்‌,‌ அது தவிர ஏனைய ஆட்சி முறைகள்‌ அனைத்தும்‌ தவறானது எனவும் கருதுகின்றனர்‌. மேலும்‌, மேற்கூறப்பட்ட மூன்று கலீபாக்களையும்‌, ஏனைய ஸஹாபாப்‌ பெருமக்களையும்விட அலீ(ரலி) அவர்களே சிறப்புக்குரியவர்கள்‌ போன்ற கருத்துக்களுடனும்‌ "வாழ்பவர்கள்‌ ஷீஆக்கள்‌ என்றழைக்கப்படுவர்‌.

ஹிஜ்ரி 37ஆம்‌ ஆண்டு கலீபா அலி(ரலி), அவர்களுக்கும்‌, முஆவியா(ரலி) அவர்களுக்கும்‌ இடையில்‌ ஸிப்பீன்‌ யுத்தம்‌ நடைபெற்றது. இந்த நாளில்தான்‌ ஷீஆக்களின்‌ தோற்றம்‌
ஆரம்பமானது.

றாபிழாக்கள்‌ ஷீஆக்களிடையே பல பரிவினர்‌ உள்ளனர்‌. இவர்களுக்கிடையில்‌ எழுபது பிரிவுகள்‌ இருப்பதாகச்‌ சில வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்‌. (இவர்களில்‌ இஸ்லாத்தின்‌ எல்லையை விட்டு வெளியேறிய பிரிவினரும்‌ உள்ளனர்‌. (இன்று உலகத்தில்‌ இவர்களில்‌ நான்கு மிகமுக்கிய பிரிவினர்கள்‌ உள்ளனர்‌. அப்பிரிவுகளின்‌ பெயர்கள்‌ பின்வருமாறு:

1. ஸபஇய்யாக்கள்‌
2. கைஸாஇய்யாக்கள்‌ 
3. ஸைதிய்யாக்கள்‌
4. றாபிழாக்கள்‌

(ருஹைலி: மவ்கிபு அஹ்லிஸ்‌ ஸுன்னா (1:40) (அல்‌ அவாஜி: பிரக்‌ முஆஸிரா 1:303).

றாபிழாக்கள்‌:

"றாபிழா என்ற வார்த்தை “றபழ” என்ற பதத்திலிருந்து வந்த சொல்லாகும்‌. இதன்‌ பொருள்‌ புறக்கணித்தல்‌” என்பதாகும்‌.

கலீபாக்களான அபூபக்கர்‌(ரலி), உமர்‌(ரலி) ஆகியோரின்‌ ஆட்சியைப்‌ புறக்கணித்தவர்களே றாபிழாக்கள்‌ என்றழைக்கப்பட்டனர்‌.
இவர்கள்‌ 'இமாமிய்யாக்கள்‌” என்ற பெயரிலும்‌ அழைக்கப்படுவர்‌.

இமாம்‌ அப்துல்லாஹ் பின் அஹ்மத் (ரஹ்‌)அவர்கள்‌கூறுவதாவது:
எனது தந்‌தை (அஹ்மத்‌ பின்‌ ஹம்பல்‌) அவர்களிடம் றாபிழாக்கள் எனப்படுவோர்‌ யார்‌? என்று கேட்டேன் அதற்கவர்‌ “அபூபக்கர்‌(ரலி), உமர்‌(ரலி) ஆகியோரை சபிப்பவர்களே றாபிழாக்கள்‌ ஆவர்‌”. எனப்‌ பதிலுரைத்தார்‌.

றாபிழாக்களுக்கு மத்தியிலும்‌ பல பிரிவினர்‌ உள்ளனர்‌. அவர்கள்‌ மத்தியில்‌ 15 பிரிவினர்கள்‌ இருப்பதாகச்‌ சில அறிஞர்களும்‌, 20 பிரிவினர்கள்‌ இருப்பதாக வேறு சில அறிஞர்களும்‌ கருத்துத்‌ தெரிவிக்கின்றனர்‌.

நபி(ஸல்‌) அவர்கள்‌ தனது மரணத்திற்குப்‌ பின்‌ அலி(ரலி) அவர்கள்தான்‌ அடுத்த ஆட்சியாளர்‌ என்பதைத்‌ தெளிவாகவும்‌, பகிரங்கமாகவும்‌ கூறியிருந்தார்கள்‌. எனினும்‌, நபி(ஸல்‌) அவர்கள்‌ மரணித்த பின்னர்‌ அலி (ரலி) அவர்களை ஆட்சித்‌ தலைவராக .நியமிக்காது பெரும்பாலான. ஸஹாபாக்கள்‌ வழிகெட்டு. விட்டனர்‌. ஏனெனில்‌, ஆட்சிப்‌ பொறுப்பானது (இமாமத்‌ என்பது) நபி (ஸல்‌) அவர்களால்‌ தெளிவாகச்‌ சொல்லப்பட்ட அடிப்படையிலேயே நடைபெற வேண்டும்‌. அதில்‌ மாற்றங்கள்‌ இடம்பெறக்‌ கூடாது. ஏனெனில்‌, இமாமத்‌ என்பது ஒரு இபாதத்‌ ஆகும்‌” என்கிற கருத்துக்களை கொண்ட அனைவரும் ராபிழாக்களே.

றாபிழாக்களின்‌ மிகவும்‌ பிரசித்தி பெற்ற இமாம்களில்‌ ஒருவரான முபீத்‌ (முஹம்மது பின்‌ முஹம்மது, மரணம்‌ ஹிஜ்ரி 413) என்பவர்‌ மறுமை நாள்‌ ஏற்படுவதற்கு முன்னர்‌, மரணித்தவர்களில்‌ அதிகமானோர்‌ உலகத்துக்கு மீண்டும்‌ திரும்பி வருவது நிச்சயம்‌ மேலும்‌, ஈமானில்‌ உயர்ந்த அந்தஸ்தைப்பெற்ற. அனைவரும்‌, குழப்பம்‌ விளைவிப்பதில்‌ உச்சகட்டத்தை அடைந்த அனைவரும்‌ தமது மரணத்திற்குப்‌ பின்‌ திரும்பி வருவர்‌” எனக்‌ கூறினார்‌. (அவாஇலுல்‌ மகாலாத்‌: 51, 95).

இதேபோன்று அல்லாஹ்வின்‌ பண்புகள்‌ விஷயத்தில்‌, இவர்கள்‌ இறைவனுக்கு 'பதாஅத்‌” எனும்‌ பண்பு உண்டென்று கூறகின்றனர்‌. 'பதாஅத்‌” என்பதற்கு இரு கருத்துக்கள்‌ உள்ளன:

அ) மறைந்திருந்த  பின்னர் தோன்றுதல்‌, 
ஆ) புதிய கருத்துத்‌ தோன்றுதல்‌.

எல்லாம்‌ வல்ல அல்லாஹ்வுக்கு எதுவுமே மறைந்து விடுவதில்லை.

அவ்வாறிருக்க, மறைந்திருந்த அல்லது தெரியாதிருந்த ஒரு விஷயம்‌ இறைவனுக்குப்‌ பின்னர்‌ தெரியவந்தது என்று எவ்வாறு கூறமுடியும்‌? அதுபோன்றே, 'இறைவனின்‌ அறிவு அனைத்தையும்‌ சூழ்ந்துகொண்டது. அவன்‌ ஞானம்‌ மிக்க மகத்தானவனாக இருக்கும்போது, புதியதோர்‌ விஷயம்‌ எவ்வாறு அவனுக்குத்‌ தோன்ற முடியும்‌? அவன் அறிவிலும், ஆற்றலிலும்‌ அனைத்திலுமே ஆரம்பமானவனாக இருக்கும்போது இவ்வாறு அவனுக்கு 'பதாஃ” உண்டென்று வேண்டுமென்றே கூறுவது இறைவன்‌ மீது அபாண்டம்‌ கூறுவதல்லவா?

மேலும்‌, றாபிழாக்கள்‌ இறைவன்‌ மீது 'பதாஃ' என்னும்‌ இப்பண்பு உண்டென்று கூறுவதைப்‌ புனித வணக்கமாகக்‌ கருதுகின்றனர்‌. இதுபோன்ற கருத்துக்களை விளங்குவதில்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்‌ தடம்‌ புரண்டு விட்டனர்‌ எனவும்‌ அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்‌' இமாம்களைப்‌ பற்றிக்‌ குறையும்‌ கூறுகின்றனர்‌.

மேற்கூறப்பட்டவைகள்‌ றாபிழாக்களுடைய அடிப்படைகளாகும்‌. மேற்கூறப்பட்ட அடிப்படைகள்‌ அனைத்திலும்‌ முஃதஸிலாக்கள்‌, கவாரிஜ்கள்‌, ஸைதிய்யாக்கள்‌, முர்ஜிஆக்கள்‌, அஹ்லுஸ்‌ ஸுன்னத்‌ வல்‌ ஜமாஅத்தினர்‌ ஆகிய அனைவரும்‌ முரண்பாடான
கருத்துக்களையே கொண்டுள்ளனர்‌. (அல்முபீத்‌: அவாதிலுல்‌ மகாலாத்‌ 48, 49).

முன்னோர்களான ஸலபுஸ்‌ ஸாலிஹீன்கள்‌ தமது நூற்களில்‌ றாபிழாக்களைக்‌ கண்டித்திருப்பதோடு மட்டுமின்றி, இவர்கள்தான்‌ மிக மோசமான பிரிவினர்கள்‌ என்றும்‌ அடையாளப்படுத்தி உள்ளனர்‌. மேலும்‌, 'இவர்களைப்‌ பற்றி எச்சரிக்கையும்‌ செய்துள்ளனர்‌.

'றாபிழாக்கள்‌ பற்றி இமாம்‌ இப்னு தைமிய்யா (ரஹ்‌) அவர்கள்‌ கூறுவதாவது:
இஸ்லாத்தில்‌ தோன்றியுள்ள அனைத்துப்‌ பிரிவினர்களிடமும்‌ பித்‌அத்களும்‌, வழிகேடுகளும்‌ காணப்படுகின்றன. எனினும்‌, அவர்களில்‌ எவரும்‌ ரீபிழாக்களைவிடக்‌ கெட்டவர்கள்‌ அல்லர்‌. மேலும்‌, அவர்களைவிட முட்டாள்களும்‌, பொய்யர்களும்‌. அநியாயக்காரர்களும்‌, பாவச்செயல்களில்‌ ஈடுபடுவோரும்‌ வேறு எவரும்‌ இல்லை இன்னும்‌, இறை நிராகரிப்பிற்கு மிக நெருக்கமானவர்களும்‌, ஈமானின்‌ அடிப்படைகளைவிட்டு மிகத் தூரமானவர்களும் இவர்களே.

றாபிழாக்களும்‌, ஜஹமிய்யாக்களும்‌ நயவஞ்சகர்கள்‌ ஆவர்‌. அல்லது நபி(ஸல்‌) அவர்களது வழிமுறைகள்‌ பற்றித்‌ தெரியாத முட்டாள்கள்‌ ஆவர்‌. (இப்னு தைமிய்யா: மின்ஹாஜ்‌ அல்ஸான்னா 5 - 160)

றாபிழாக்கள்‌ இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா? என்பதில்‌ மார்க்க அறிஞர்கள்‌ மத்தியில்‌ கீழ்வரும்‌ கருத்துக்கள்‌ காணப்படுகின்றன.

இமாம்‌ இப்னு தைமிய்யா(ரஹ்‌) அவர்கள்‌ கூறுகின்றார்கள்‌:
'கவாரிஜ்கள்‌ இறை நிராகரிப்பாளர்களா? இல்லையா? என்பதில்‌ அனைவரும்‌ அறிந்த இருவிதமான கருத்துக்கள் உள்ளது போன்றே, இருவிதமான கருத்துக்கள்‌ ‌ றாபிழாக்கள்‌ விஷயத்திலும்‌ காணப்படுகின்றன. றாபிழாக்கள்‌ சொல்லக்கூடிய கருத்துக்கள்‌, நபி(ஸல்‌) அவர்களுடைய வழிமுறைக்கு முரணானதும்‌, நிராகரிப்பை ஏற்படுத்தக்‌ கூடியவைகளுமாகும்‌. மேலும்‌, அவர்களுடைய செயல்களும்‌, இறைநிராகரிப்பாளர்களின்‌ செயல்பாடுகளைப்‌ போன்று இறை மறுப்பை ஏற்படுத்துபவைகளாகும்‌. எனினும்‌, அவர்களில்‌ ஒரு தனி நபர்‌ குறித்து, இறை நிராகரிப்பாளன்‌ என்றும்‌, அவன்‌ நிரந்தர நரகவாசி என்றும்‌ மார்க்கத்‌ தீர்ப்பு வழங்குவதற்கு சில நிபந்தனைகள்‌ உள்ளன.”
நூல்‌: ௬ஹைலி: மவ்கிபு அஹ்லிஸ்ஸுன்னா (1-146), நாஸிர்‌ அல்‌ கிபாரி: உஸுல்‌‌ மத்ஹப்‌ அல்ஷீஆ (2-937).

- மெளலவி. எம்‌. எம்‌. ஸக்கி, B.A(Hons) மதினா
Previous Post Next Post