நபி (ஸல்) அவர்களின் உறவினர்கள் விபரம்

பெருமானாரின் தந்தையுடன் பிறந்த சகோதரர்களின் பிள்ளைகள்:

1. ஹாரிதின் பிள்ளைகள்:
1. அப்துல்லாஹ் (ரலி)
2. அபூ ஸுஃயான் ((ரலி)
3. உமைய்யா
4. நவ்ஃபல் (ரலி)
5. ரபீஆ
6. அர்வா பின்த் ஹாரித்.
7. உபைதா (ஸைனப் பின்த் குஸைமாவின் கணவர்)

இவர்களில்
1. அப்துல்லாஹ் (ரலி),
2. ரபீஆ
3. அபூ ஸுஃயான் (ரலி)
4. நவ்ஃபல் (ரலி)
5. உபைதா (ரலி) ஆகிய ஐவர் இஸ்லாத்தை ஏற்றனர்.

2. அபூ-லஹபின் பிள்ளைகள்:
1. உத்பா,
2. உதைபா,
3. முஅத்திப் (ரலி),
4. துர்ரா பின்த் அபீலஹப் (ரலி)

இவர்களில்
1. உத்பா (ரலி),
2. முஅத்திப் (ரலி),
3. துர்ரா (ரலி)
ஆகிய மூவர் மக்கா வெற்றியின் போது இஸ்லாத்தை ஏற்றனர். உதைபா பெருமானாரை கொலை செய்ய முயன்று அவர்களின் சினத்திற்கு ஆளாகி அவரது சிரியாப்பயணத்தின் போது சிங்கம் கடித்து இறந்தார்.

3. அஸ்ஸுபைரின் பிள்ளைகள்:
1. அப்துல்லாஹ், 
2. முஸ்அப், 
3. உர்வா, 
4. உம்முல் ஹிகம் 
5. ளுபாஆ
இவர்களில் அப்துல்லாஹ், உம்முல் ஹிகம, ளுபாஆ மூவர் இஸ்லாத்தை ஏற்றனர்.

4. அப்பாஸ் (ரலி) அவர்களின் பிள்ளைகள்:
1.ஃபள்லு (ரலி),
2. அப்துல்லாஹ்(ரலி),
3. உபைதுல்லாஹ் (ரலி),
4. குதம் (ரலி),
5. அப்துர் ரஹ்மான் (ரலி),
6. மஃபத் (ரலி),
7. கதீர் (ரலி),
8. அல்-ஹாரித் (ரலி),
9. அவ்ன் (ரலி),
10. தமாம் (ரலி),
11.உம்மு குல்தூம் (ரலி).

இவர்களில் உபைதுல்லாஹ்வைத் தவிர ஏனையோர் யாவரும் இஸ்லாத்தில் இணைந்து விட்டனர்.

5. ஹம்ஸா (ரலி) அவர்களின் பிள்ளைகள்:
1. யஃலா(ரலி),
2. உமாரா(ரலி)
3. உமாமா (உம்மு வரக்கா) (ரலி).
இவர்கள் யாவரும் இஸ்லாத்தை ஏற்றனர். இவரை தமது மனைவி உம்மு ஸலமாவின் மகன் ஸலமாவுக்கு நபி(ஸல்) மணமுடித்து வைத்தனர். ஸலமா தனது தாயாரை வலியாக இருந்து பெருமானாருக்கு மணமுடித்து வைத்ததால் ‘இந்த திருமணம் அதற்கு பகரம்’ என்று நபி (ஸல்) மகிழ்ச்சி மொழி பகர்ந்தனர்.

6. ஹஜ்லின் பிள்ளைகள்:
1. முர்ரா. (இவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை)

7. அல்-முகவ்விமின் பிள்ளைகள்:
1. ஹிந்த் 
2. அர்வா. (இவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை)

8. அபூ-தாலிபின் பிள்ளைகள்:
1. தாலிப்,
2. அகீல் (ரலி)
3. ஜஃபர் (ரலி)
4. அலீ (ரலி)
5. உம்மு ஹானி (ரலி)
6. ஜுமானா(ரலி)
இவர்களில் தாலிப் தவிர ஏனைய ஐவரும் இஸ்லாத்தை ஏற்றனர்.

11. பெருமானாரின் தந்தையுடன் பிறந்த சகோதரிகளின் (மாமிகள்) பிள்ளைகள்:
1.ஆத்திகா (ரலி) அவர்களின் பிள்ளைகள்:
1. ஸுஹைர்,
2. அப்துல்லாஹ்
3. கரீபா
(இவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை)

2. உமைமாவின் பிள்ளைகள்
1. ஸைனப் (ரலி)
2. உம்மு ஹபீபா
3. ஹம்னா (ரலி)
4. அப்துல்லாஹ்
5. உபைதுல்லாஹ்
6. அபூ அஹ்மது (ரலி)

அபூ ஸுஃயான் (ரலி) அவர்களின் மகள் உம்மு ஹபீபாவை மணந்து வாழ்ந்த உபைதுல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் என்பவர் இஸ்லாத்தில் இணைந்து தனது மனைவியுடன் அபிஸீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்றார், பினனர் கிறித்தவராக மாறி அங்கே மரணமடைந்தார். அதன் பின்னர் உம்மு ஹபீபா(ரலி) அவர்களை நஜ்ஜாஷி மன்னர் மூலம் பெருமானார்(ஸல்) அவர்கள் மணமுடித்தனர்.

3. பர்ராவின் பிள்ளைகள்:
1. அபூ ஸலமா இப்னு பர்ரா
2. அபூ ஸீரா
இவர்களில் அபூ ஸீரா இஸ்லாத்தை ஏற்கவில்லை.

4. ஸஃபிய்யா (ரலி) அவர்களின் பிள்ளைகள்:
1. அஸ்ஸாயிப்,
2. அப்துல் கஃபா,
3. அஸ்ஸுபைர் (ரலி)
4. ஸபிய்யா பின்த் ஸபிய்யா,
5. உம்மு ஹபீபா.
இவர்களில் அஸ்ஸுபைர் (ரலி) மட்டுமே இஸ்லாத்தை ஏற்றார்.

5. உம்மு ஹகீம்- அல்-பைளாவின் பிள்ளைகள்:
1. அர்வா,
2. ஆமிர்,
3. உம்மு தல்ஹா
இவர்கள் மூவரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை

6. அர்வாவின் பிள்ளைகள்:
1. துலைப்(ரலி)
2. பாத்திமா

12. பெருமானாரின் தாயுடன் பிறந்த சகோதரர்கள்.
1. அல்-அஸ்வது இப்னு அப்து யகூது
2. அப்துல்லாஹ் இப்னுல் அர்கம் இப்னு அப்து யகூது. (இவர் ஒருவரே இஸ்லாத்தை ஏற்றுள்ளார்.)

13. பெருமானரின் வளர்ப்புத்தாய்
1. ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி)
பெருமானாரின் அருமைச் சிறிய தந்தையார் அபூதாலிப் அவர்களின் மனைவியும், தாலிப், அகீல் (ரலி), ஜஃஃபர் (ரலி), அலி (ரலி) ஆகியோரின் தாயாருமான இவர்கள் ஹிஜ்ரத்துக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்கு ஹிஜ்ரத் பயணமும் மேற்கொண்டு அங்கேயே மரணமடைந்தார். தமது சட்டையால் போர்த்தி நபி(ஸல்)அவர்கள் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்தார்கள். பெருமானார்(ஸல்) அவர்கள் கப்ரில் இறங்கி அடக்கம் செயத ஐவரில் இவரும் ஒருவர். (ஆதாரம்: அஸதுல் காபத்)
அபூதாலிபுக்குபின் இவர்களைத்தவிர வேறு எவரும் எனக்கு உபகாரம் செய்யவில்லையென நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அல்-இஸாபா இப்னுஹஜர்)

14. பெருமானாரின் பால்குடித் தந்தை:
1. அல்-ஹாரித் இப்னு அப்துல் உஸ்ஸா இப்னு ரிஃபாஆ. (ஹலீமாவின் கணவர்)
(இவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.)

15. பெருமானாருக்குப் பாலூட்டிய தாயார்கள்:
1. தாயார் ஆமினா.
2. அபூ லஹபின் அடிமை துவைபா அல் அஸ்லமிய்யா (ரலி)
3. கவ்லா பின்த் முன்திர்
4. உம்மு ஐமன் (ரலி)
5. ஹலீமா பின்து அபீ துஅய்ப் அஸ்ஸஃதிய்யா (ரலி). இவரே இவர்களில் அதிகமாகப் பாலூட்டியவர்.
இவர்களில் துவைபா, உம்மு ஐமன், ஹலீமா மூவரும் இஸ்லாத்தை ஏற்றுவிட்டனர். துவைபா இஸ்லாத்தை ஏற்றுள்ளாரா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும் அபூ முன்திஹ் இஸ்லாத்தை ஏற்றுள்ளதாகவே குறிப்பிடுகிறார் (ஆதாரம்:அஸதுல் காபத்)

16. (பால்குடி) சகோதர சகோதரிகள்:
1. மஸ்ரூஹ் (இவரது தாய் அபூ லஹபின் அடிமை துவைபா)
2. ஹம்ஸா இப்னு அப்துல் முத்தலிப் (ரலி) (பாலூட்டிய தாய் துவைபா)
3. அபூ ஸலமா இப்னு அப்துல் அஸத் (ரலி) (பாலூட்டிய தாய் துவைபா)
4. அப்துல்லாஹ் இப்னுல் ஹாரித் (இவரது தாய் ஹலீமா ஸஃதிய்யா)
5. ஹுதாஃபா (இவரது தாய் ஹலீமா ஸஃதிய்யா)
6. அனீஸா பின்துல் ஹாரித் இப்னு அப்துல் உஸ்ஸா(இவரது தாய் ஹலீமா)
7. ஷீமா பின்த் ஹாரித் (ரலி) (இவரது தாய் ஹலீமா)

இவர்களில் துவைபா மூலம் பால் குடித்த சகோதரர்களான சிறிய தந்தையார் ஹம்ஸா(ரலி), மாமி மகன் அபூ ஸலமா, இருவரும், ஹலீமா(ரலி) அவர்களின் மகள் ஷீமாஆகியோர் இஸலாத்தை தழுவியவர்கள்.

17. பெருமானாரின் செவிலித்தாய்:
உம்மு ஐமன் (ரலி). வளர்ப்புத்தாயான இவர்களை என் தாய்குப்பின் தாய் என்று நபி(ஸல்) குறிப்பிட்டார்கள்.

18. பெருமானாரின் வளர்ப்பு மகன்:
ஸைத் இப்னு ஹாரிதா (ரலி) (ஹிப்பு ரஸூலில்லாஹ்)
அடிமையாக இருந்து உரிமைவிடப்பட்ட இவர், பெருமானாரால் வளர்க்கப்பட்டு பின்னர் ஸைத் இப்னு முஹம்மது என மக்களால் அழைக்கப்பட்டார். (’33:40 என்ற வசனத்தின் மூலம் முஹம்மது யாருக்கும் தந்தையல்ல’ என்ற வசனம் அருளப்பட்டு வளர்ப்பு மகன் மரபுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.) நாயகத் தோழர்களில் இவர் ஒருவரின் பெயரே குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. இவர் பெருமானாரின் மாமி மகள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ; (ரலி) அவர்களை மணமுடித்துப் பின்னர் மணவிடுதலை செய்தார். இவர்களுக்கு உம்மு ஐமனை நபி(ஸல்) மணமுடித்து வைத்தனர். இவர்கள் இருவருமே நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தினராகவே கருதப்பட்டனர்.

பெருமானார் (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சார்ந்து நின்றவர்கள்:

நபி(ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களுடன் வாழ்ந்து வந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள.;

1. பணியாளர்கள் :-
1. அனஸ் இப்னு மாலிக் (ரலி) (காதிமு ரஸூலில்லாஹ். 10வயது முதல் நபியின் இறுதிகாலம் வரை பணிவிடை செய்தவர்)
2. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) (ஸாஹிபுஸ்ஸிவாக் வந்நஃலைன்)
3. அபூ மூஸல் அஷ்அரீ (ரலி)
4. பிலால் இப்னு ரபாஹ்(ரலி)
5. முஅய்கீப் இப்னு அபீ ஃபாத்திமா அத்தூஸி
6. ரபாஹுல் அஸ்வத் (ரலி) (அடிமை)
7. ஆனிஸா (ரலி) (அடிமை)
8. அபூஹுரைரா (ரலி) ( ஆதாரம் : ஸாதுல் மஆத்)

2. பாதுகாவலர்கள்:
1. ஸஃது இப்னு மஆத் (ரலி) (பத்ருப் போரில் காவல் புரிந்தவர்)
2. முஹம்மது இப்னு முஸ்லிமா (ரலி) (உஹுதில் காவல் புரிந்தவர்)
3. ஸுபைர் இப்னுல் அவாம் (ரலி) (கந்தக் போரில் காவல் புரிந்தவர்)
4. உப்பாது இப்னு பிஷ்ர் (ரலி) (இவர் எப்போதும் காவல் புரிவபவர்.

‘மேலும் அல்லாஹ் மனிதர்களிடமிருந்து உங்களைப் பாதுகாப்பான்’ என்னும் 5:67 -வது குர்ஆன் வசனம் அருளப்பட்டதும் பாதுகாப்புப் பணிகளிலிருந்து நபி(ஸல்) இவர்களை விலக்கி விட்டனர். (ஸாதுல் மஆத்)
Previous Post Next Post