புலுகுல் மராம் நபிமொழி தொகுப்பு
அத்தியாயம் - 2 தொழுகை
தொழுகையின் நேரம்
163 ''லுஹர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் (உச்சியிலிருந்து) சாய்ந்ததிலிருந்து, ஒரு மனிதனின் நிழல் அவனுக்குச் சமமாக ஆகி, அஸருடைய நேரம் வராத வரையிலாகும். இன்னும் அஸர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் மஞ்சள் நிறத்தையடையாத வரையாகும். இன்னும் மக்ரிப் (தொழுகை) உடைய நேரம் செவ்வானம் (சூரியன்) மறையாத வரையாகும். மேலும், இஷா (தொழுகை) உடைய நேரம் நள்ளிரவு வரையாகும். இன்னும் சுபுஹு (தொழுகையு)டைய நேரம் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் உதயமாகும் வரையிலாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
164 ''அஸர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் சுத்த வெள்ளையாக இருக்கும் வரை'' என்று புரைதா(ரலி) வாயிலாக முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
165 இன்னும் (முஸ்லிமில்), ''சூரியன் (சற்று) உயர்ந்து இருக்கும் வரை'' என்று அபூ மூஸா(ரலி) வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
166 நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள். பின்னர் சூரியன் வெளிச்சமாக உள்ள நிலையில் நாங்கள் எங்களுடைய நகரின் மறு ஓரத்தில் (உள்ள) தம்முடைய வீட்டிற்குத் திரும்பச் சென்று விடுவோம். இன்னும் இஷா தொழுகையைப் பிற்படுத்துவதை விரும்புகிறவர்களாகவும், இஷாவிற்கு முன் தூங்குவதையும் இஷாவிற்குப் பின் (வீண் பேச்சுக்கள்) பேசுவதையும் வெறுப்பவர்களாகவும் இருந்தார்கள். நாங்கள் எங்கள் அருகில் அமர்ந்திருப்பவரை அறிய முடிகின்ற வேளையில் தொழுகையை முடித்துக் கொள்வார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் (ஃபஜ்ர் தொழுகையில்) அறுபது முதல் நூறு வசனங்கள் வரை ஓதுவார்கள் என பர்ஸா அஸ்லமி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
167 நபி(ஸல்) அவர்கள் இஷா தொழுகையை சில நேரங்களில் விரைவாகவும், சில நேரங்களில் தாமதமாகவும் தொழுவார்கள். மக்கள் விரைவாக ஒன்று திரளக் கண்டால் விரைவாகவும், தாமதமாக வரக் கண்டால் தாமதமாகவும் (இஷாத்) தொழுவார்கள். இன்னும் ஃபஜ்ர் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் இருட்டில் தொழுவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
168 நபி(ஸல்) அவர்கள் கிழக்கு வெளுத்ததும் ஃபஜர் தொழுகையை தொழுவார்கள் (அப்போது) மக்கள் ஒருவரையொருவர் (இருளின் காரணமாக) அறிய முடியாத நிலையில் இருப்பார்கள் என அபூமூஸா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
169 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மக்ரிப் தொழுவோம். (அதன் பின்) எங்களில் எவராவது சென்றால் அவர் (தன்னால் வீசப்பட்ட) தமது அம்பின் இலக்கினை (அந்நேர வெளிச்சத்தில்) பார்ப்பர் என ராஃபிஃ இப்னு கதீஜ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
170 இரவின் பெரும் பகுதி, கழியும் அளவிற்கு இஷா தொழுகையை நபி(ஸல்) அவர்கள் பிற்படுத்தி பின்னர் சென்று ஒரு இரவுத் தொழுகை நடத்திவிட்டு ''என்னுடைய சமுதாயத்திற்குச் சிரமம் ஏற்படும என நான் அஞ்சவில்லை எனில் இதுவே இஷாவுடைய நேரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
171 ''கடும் வெப்ப காலத்தில், குளிர்ந்த நேரத்தில் (தொழுகையைத்) தொழுங்கள். ஏனெனில் நிச்சயமாக, கடுமையான வெப்பம் நரகத்தின் பெருமூச்சினால் உண்டாவதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
172 ''பஜ்ருடைய நேரம் வந்து விட்டது என்று தெளிவாகத் தெரிந்தபின் தொழுங்கள். ஏனெனில், நிச்சயமாக அது உங்களுக்கு மகத்தான கூலியைப் பெற்றுத் தரும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ராஃபி இப்னு கதீஜ்(ரலி) அறிவிக்கிறார்.
அபூ தாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸாயீ மற்றும் அஹ்மத். இது திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
173 ''எவர் சூரிய உதயத்திற்கு முன் ஃபஜ்ருடைய ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ, அவர் ஃபஜ்ர் தொழுகையை (அதன் நேரத்தில்) அடைந்து விட்டார். இன்னும் எவர் அஸருடைய ஒரு ரக் அத்தை சூரியன் மறைவதற்குள் அடைந்து விட்டாரோ அவர், அஸர் தொழுகையை (அதன் நேரத்தில்) அடைந்து விட்டார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
174 முஸ்லிமில் ஆயிஷா(ரலி) வாயிலாக இதே போன்று ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. ஆனால் அங்கு ரக்அத்திற்குப் பதிலாக ஸஜ்தா என்று பதிவாகியுள்ளது. பின்னர் ஸஜ்தா என்பது ரக்அத்(தில் உள்ளது) எனவும் ஆயிஷா(ரலி) கூறியதாக உள்ளது.
175 ''ஃபஜ்ருக்குப் பின்னர் சூரியன் உதயமாகும் வரையிலும், அசருக்குப் பின்னர் சூரியன் மறையும் வரையிலும் எந்தத் தொழுகையும் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன் என அபூஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
ஃபஜ்ருத் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையுமில்லை என்று முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
176 சூரியன் ஒளிர்ந்து கொண்டு, உதயமாகி வரும் வேளையில் அது உயரும் வரையிலும், இன்னும் சூரியன் உச்சியில் நின்று சாயும் வரையிலும், இன்னும் சூரியன் மறைவதற்காகத் தாழும் (மறையும்) வேளையிலும் ஆகிய மூன்று நேரங்களில் நாங்கள் தொழுவதையும், எங்களில் இறந்தவர்களை அடக்கம் செய்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்து வந்தார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
177 தொழுவது தடை செய்யப்பட்ட வேளைகளில் இரண்டாவது வேளை(யான சூரியன் உச்சி சாயும் நேரம்) பற்றிய செய்தி ஷாஃபிஈயில் அபூஹுரைரா(ரலி) அவர்கள் வாயிலாக ளயீஃப் எனும் தரத்தில் இடம் பெற்றுள்ளது. அதில் ''ஜும்ஆ நாளைத் தவிர'' என்னும் வாசகம் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.
ஜும்ஆ நாளில் மட்டும் உச்சிசாயும் நேரத்தில் தொழுவது தடை செய்யப்படவில்லை என்பது இதிலிருந்து தெரியவருகின்றது. (சுபுலுஸ் ஸலாம்)
178 இதே போன்று அபூ கதாதா(ரலி) வாயிலாக அபூ தாவூதிலும் பதிவாகியள்ளது.
179 ''அப்து மனாஃப் உடைய மக்களே! இரவாயினும், பகலாயினும் எந்நேரத்திலும் இந்த இறையில்லத்தில் யாரும் தொழுவதையோ, வலம் வருவதையோ தடுக்காதீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜுபைர் பின் முத்இம்(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. திர்மிதீ மற்றும் இப்னு ஹிப்பானில் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
180 ''ஷஃபக் என்பது செவ்வானமாகும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார்.
தாரகுத்னீ. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
181 ''பஜ்ர் இரண்டிருக்கிறது, ஒரு ஃபஜ்ரில் சாப்பிடுவது தடுக்கப்பட்டும், தொழுவது அனுமதிக்கப்பட்டும், மற்றொரு ஃபஜ்ரில் தொழுவது தடை செய்யப்பட்டும், சாப்பிடுவது அனுமதிக்கப்பட்டும் உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.
இப்னு குஸைமா, ஹாகிம். இது இரண்டிலும் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
182 நிச்சயமாக அது ஓரத்தில் நீண்டதாகச் செல்வதால் (ஸஹர்) சாப்பாடு தடுக்கப்பட்டுள்ளது. மற்றொன்று ஓநாயின் வால் போன்றுள்ளது என்று ஹாகமில் ஜாபிர்(ரலி) வாயிலாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
183 ''செயல்களில் சிறந்தது (தொழுகையை) அதன் நேரத்தில் தொழுவதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்.
இது திர்மிதீ மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புகாரி மற்றும் முஸ்லிமில் உள்ளது.
184 ''(தொழுகையின்) ஆரம்ப நேரம் அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும் நேரமாகும். நடுநேரம் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் நேரமாகும், இறுதி நேரம் அல்லாஹ்வின் மன்னிப்புக் கிடைக்கும் நேரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ மக்தூரா(ரலி) அறிவிக்கிறார்.
இது மிகவும் (பலவீனம்) ளயீஃப் எனும் தரத்தில் தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
185 மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் வாயிலாக திர்மிதீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் ளயீஃப் எனும் தரத்தில் தான் உள்ளது.
186 ''ஃபஜ்ருடைய வேளை வந்த பின் (கடமையான) இரண்டு ரக்அத்தைத் தவிர்த்து வேறு எந்த (நஃபிலான) தொழுகையுமில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னு மாஜா.
ஃபஜ்ருடைய வேளை உதயமான பின் ஃபஜ்ருடைய (கடமையான) இரண்டு ரக்அத்தைத் தவிர்த்து நபி(ஸல்) வேறு தொழுகையே இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஃபஜ்ருடைய வேளை வந்த பின் நஃபிலான தொழுகை இல்லை) வந்த பின் நஃபிலான தொழுகை இல்லை) என உம்மு ஸலமா (ரலி) வாயிலாக அப்துர் ரஸ்ஸாக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஃபஜ்ருடைய கடமையான இரு ரக் அத்துக்களுக்குக்கும் முன்பாக இரு ரக்அத்துகள் சுன்னத்தான தொழுகை உண்டு. ஆகவே ஃபஜ்ருடைய வேளை உதயமான பின் சுன்னத்தான இரு ரக்அத்துகளுடன் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை'' என்று தான் இதற்குப் பொருள் கொள்ள வேண்டும். (கபுலுஸ்ஸலாம்)
187 அம்ர் இப்னு ஆஸ் வாயிலாக தாரகுத்னியிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
188 நபி(ஸல்) அவர்கள் (பள்ளியில்) அஸர் தொழுது விட்டு என்னுடைய வீட்டினுள் வந்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். நான் அதைப் பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, ''நான் லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழ மறந்து விட்டமையால் இப்போது தொழுதேன்'' என்று கூறினார்கள். அதற்கு ''எங்களுக்கு இவ்வாறு தவறி விட்டால் நாங்களும் இதைக் களாச் செய்யலாமா?'' என்று நான் கேட்டதற்கு ''கூடாது'' என்று 188 நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்
189 ஆயிஷா(ரலி) வாயிலாக அபூ தாவூதில் 188வது ஹதீஸ் போன்றே உள்ளது.
அதான் (பங்கு)
190 நான் தூங்கிக் கொண்டிருந்த போது என்னிடம் (கனவில்) ஒரு மனிதர் வந்தார். ''அல்லாஹ் அக்பர், அல்லாஹு அக்பர்'' என்று பாங்கைச் சப்தமிட்டு இரண்டிரண்டு முறை (கூறுமாறு) கற்றுக் கொடுத்தார். காலையானதும், நான் நபி(ஸல்) அவர்களிடம் (ஓடி) வந்தேன். (அவர்களிடம் நான் கண்ட கனவை எடுத்துரைத்த போது)) அவர்கள், ''நிச்சயமாக இது மெய்யான கனவு தான்'' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு ஜைது(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத். இது திர்மிதீ மற்றும் இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
191 ஃபஜ்ர் தொழுகையின் பாங்கில் ''தூக்கத்தை விடத் தொழுகையே மேலனாது'' என்ற பிலால்(ரலி) அவர்களின் சொல்லை பற்றிய செய்தி மேற்கண்ட ஹதீஸின் இறுதியில் அதிகப்படியாக அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
192 ''முஅத்தின் (பாங்கொலிப்பவர்) 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று கூறும் போது, 'அஸ்ஸலாத்து கைரும் மினன்னவ்ம்' என்று கூறுவது நபிவழிக்கு உட்பட்டது என அனஸ்(ரலி) அவர்கள் கூறியதாக இப்னு குஸைமாவில் வந்துள்ளது.
193 ''நபி(ஸல்) அவர்கள் பாங்கை இரண்டிரண்டு முறை உரக்கச் சப்தமிட்டுக் கூறுமாறு தனக்குக் கற்றுக் கொடுத்தார்கள்'' என அபூ மக்தூரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஆனால் முஸ்லிம்(ரஹ்), ''தக்பீரை'' ஆரம்பத்தில் இரண்டு முறை மட்டும் பதிவு செய்துள்ளார். அல்லாஹு அக்பர் என்பது நான்கு முறை என்று அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, நஸாயீ மற்றும் இப்னு மாஜா ஆகியோர் பதிவு செய்துள்ளனர்.
194 அதான் (பாங்கு) உடைய வாக்கியங்களை இரண்டிரண்டு முறையும் இகாமத்தில் 'கத் காமதிஸ் ஸலாஹ்' என்பதைத் தவிர்த்து மற்றவற்றை ஒவ்வொரு முறையும் கூற வேண்டுமென பிலால்(ரலி) அவர்களுக்கு கட்டளையிடப்பட்டதென அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
195 நஸயீயில் பிலால்(ரலி) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என்றுள்ளது.
196 தமது இரு கட்டை விரல்களையும் தம் இரு காதுகளில் வைத்தபடி பிலால்(ரழி) அவர்கள் பாங்கு சொல்வதை நான் பார்த்தேன். அப்போது நான் அவர்களுடைய வாய் இங்குமங்குமாக (வலப்பக்கமும் இடப்பக்கமுமாக)ச் சென்றதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன். இது அஹ்மத் மற்றும் திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
197 ''அவர் தம்முடைய இரு காதுகளிலும் தமது இரு விரல்களை வைத்துக் கொண்டார்'' என்று இப்னு மாஜாவில் உள்ளது.
198 '' 'ஹய்ய அலஸ் ஸலாஹ்' என்று கூறும் போது, அவர் வலப்பக்கமும், இடப்பக்கமும் தமது கழுத்தைத் திருப்பினார். ஆனால் (கழுத்தை) முழுமையாகத் திருப்பவில்லை'' என்று அபூ தாவூதில் உள்ளது. இந்த ஹதீஸ் புகாரி, முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது.
199 நபி(ஸல்) அவர்களுக்கு அவருடைய (பிலால்-ரலி) குரல் இனிமையானதாக இருந்ததால், அவருக்கு பாங்கைக் கற்றுக் கொடுத்தார்கள் என அபூ மஹ்தூரா(ரலி) அறிவிக்கிறார்.
200 நான் நபி(ஸல்) அவர்களுடன் ஓரிரு முறை (மட்டும்) அல்ல பலமுறை இரு பெரு நாட்கள் தொழுகையையும் பாங்கு மற்றும் இகாமத் இல்லாமல் தொழுதிருக்கிறேன் என ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
201 இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாகவும், பிறர் வாயிலாகவும் இதே போன்று ஹதீஸ் புகாரி, முஸ்லிம் இரண்டிலும் இடம் பெற்றுள்ளது.
202 ஒருமுறை அனைவரும் ஃபஜ்ர் தொழுகையை விட்டு விட்டுத் தூங்கியதைப் பற்றிக் குறிப்பிடுகையில், ''பிலால்(ரலி) பாங்கு கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் வழக்கமாக ஒவ்வொரு நாளும் தொழ வைப்பது போன்றே தொழ வைத்தார்கள்'' என அபூ கதாதா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
203 ''நபி(ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிற்கு வந்த போது ஒரு பாங்கு மற்றும் இரு இகாமத்துகளுடன் மக்ரிப் மற்றும் இஷாவை தொழ வைத்தார்கள்'' என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
204 ''நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் மற்றும் இஷாவை ஒரே இகாமத்துடன் சேர்த்து தொழுதார்கள்'' என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
''ஒவ்வொரு தொழுகைக்கும் ஓர் இகாமத்துடன்'' என்று அபூ தாவூதில் அதிகப்படியாக உள்ளது. அபூதாவூதின் மற்றோர் அறிவிப்பில் எந்த ஒன்றுக்கும் அவை இரண்டிற்குமேல் பாங்கு சொல்லப்படவில்லை என்றுள்ளது.
205 ''நிச்சயமாக இரவில் பிலால்(ரலி) பாங்கு சொல்வார். (அப்போது(ஸஹர்) உண்ணுவதை நிறுத்த வேண்டாம்). அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்'' பருகுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் இப்னு உம்மி மிக்தூம் பார்வையற்றவர். எனவே அவரிடம் ''விடிந்து விட்டது, என்று கூறப்படாத வரை பாங்கு சொல்ல மாட்டார்'' என இப்னு உமர் மற்றும் ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றனர். புகாரி, முஸ்லிம்
206 ஒரு முறை பிலால்(ரலி) ஃபஜ்ருக்கு (அதன் நேரம் வரும்) முன்பாக பாங்கு சொல்லிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் திரும்பிச் சென்று, ''அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக நான் தூங்கி விட்டேன் என்று அறிவியுங்கள்'' என அவருக்குக் கட்டளையிட்டார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
207 ''நீங்கள் பாங்கின் அழைப்பைச் செவியுற்றால், முஅத்தின் கூறுவது போன்றே கூறுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
208 முஆவியா(ரலி) வாயிலாக புகாரியிலும் இதுபோன்ற ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
209 'இரண்டு ஹய்யா அலா' வைத் தவிர பாங்கின் மற்ற சொற்கள் ஒவ்வொன்றையும் முஅத்தின் கூறுவதைப் போன்றே கூறுவதற்குள்ள சிறப்பைக் குறித்து உமர்(ரலி) அவர்கள் கூறிய (நபிவழிச்) செய்தியொன்று முஸ்லிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
210 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னுடைய கூட்டத்தார்க்கு என்னை இமாமாக ஆக்குங்கள்! என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். (அதற்கு) ''நீ தான் அவர்களின் இமாம்! நீ அவர்களில் மிகவும் பலவீனமானவரை கவனத்தில் கொள். (அவருக்குத் தகுந்தாற் போல் சுருக்கமாகத் தொழ வை) இன்னும் பாங்கு சொல்வதற்கு (உலகில்) கூலி வாங்காத முஅத்தினை நியமித்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உஸ்மான் இப்னு அபில் ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், திர்மிதீ, நஸாயீ மற்றும் அபூதாவூத். இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
211 ''தொழுகை(யின் நேரம்) வந்துவிட்டால், உங்களில் ஒருவர் (பாங்கின் மூலம் தொழுகைக்கு) உங்களை அழைக்கட்டும்'' என்ற நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மாலிக் இப்னு ஹுவைரிஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் அபூ தாவூத், இப்னு மாஜா
212 ''பாங்கை நிறுத்தி நிறுத்தியும்! இகாமத்தை வேகவேகமாகவும் சொல்! இன்னும் பாங்கிற்கும், இகாமத்திற்குமிடையில், சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் ஒருவர், சாப்பிட்டு முடிக்கும் அளவிற்கு இடை வெளி விடு!'' என்று நபி(ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
213 ''உளுச் செய்தவரை தவிர (வேறெவரும்) பாங்கு சொல்ல வேண்டாம்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
214 ''பாங்கு சொல்பவரே இகாமத்தும் சொல்லட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜியாத் இப்னு ஹாரிஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இதுவும் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது உள்ளது.
215 நான் (பாங்கு சொல்ல வேண்டுமென) விரும்பிக் கொண்டிருந்த நிலையில் பாங்கு சொல்லும் முறையைக் கனவில் கண்டேன். (நான் அதைத் தெரிவித்தவுடன் அதை பிலால்(ரலி) அவர்களுக்குக் கற்றுத் தரச் சொல்லி உத்தரவிட்டு விட்டு என்னிடம் நபி(ஸல்) அவர்கள், ''நீ இகாமத் சொல்'' என்று சொன்னார்கள். திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
217 அலீ(ரலி) அவர்கள் வாயிலாக இது பைஹகீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
218 'பாங்கிற்கும், இகாமத்திற்கும் இடைப்பட்ட நேரத்தில் துஆ (கேட்டால்) அது நிராகரிக்கப்படுவதில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவிக்கிறார். நஸாயீ. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
219 ''பாங்கை செவியேற்ற பின்பு எவர் ''முழுமையான இந்த அழைப்பிற்குச் சொந்தக்காரனே! நிலையான தொழுகைக்கும் உரியவனே! முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு வஸீலா எனும் பதவியையும் சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்கு வாக்களித்த புகழுக்குரிய இடத்தில் எழுப்புவாயாக!'' என்று (பாங்கு துஆ கூறி) பிரர்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை (உறுதியாக) ஆகுமானதாகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார். என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், திர்மிதீ, நஸாயீ மற்றும் இப்னுமாஜா.
தொழுகையின் நிபந்தனைகள்
220 ''உங்களில் எவருக்கேனும் தொழுகையில் காற்று பிரிந்தால் அவர் தொழுகையை விட்டு விட்டு உளுச் செய்து கொண்டு பின்னர் தொழுகையை திரும்ப தொழட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ இப்னு தல்க்(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், நஸாயீ, இப்னு மாஜா, திர்மிதீ மற்றும் அபூ தாவூத். இது ஸஹீஹ் எனும் தரத்தில் இப்னு ஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
221 ''பருவமடைந்த பெண்களின் தொழுகை (கழுத்தை மறைக்கும் முக்காட்டுத் துணியின்றி ஏற்றுக் கொள்ளப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.
திர்மிதீ, அபூ தாவூத், இப்னு மாஜா மற்றும் அஹ்மத். இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
222 தொழுகையில் உடை விசாலமாக இருப்பின் அதனால் (உடல் முழுவதையும்) போர்த்திக் கொள்ளுமாறு தன்னிடம் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
முஸ்லிமில், அதன் இரு ஓரங்களையும் ஒன்றுக் கொன்று குறுக்காக (தோளில்) போட்டுக் கொள். அது இறுக்கமானதாக இருந்தால் அதைக் கீழ் அங்கியாக அணிந்து கொள்'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அதிகப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
223 ''உங்களில் எவரும் தனது தோளில் துணி இல்லாமல் தொழ வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
224 ''கீழாடையில்லாமல் மற்றும் தலைக் கழுத்தை மறைக்கும் முழு நீள அங்கியடனும் முகத்திரையுடனும் பெண் தொழலாமா?'' என்று நான் கேட்டதற்கு, ''அங்கி கீழே வரை நீண்டு பாதங்களை மறைத்துக் கொண்டால் (தொழலாம்)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத். இது மவ்கூஃப் எனும் தரம் பெற்றுள்ளது.
225 (மிகவும்) இருட்டான ஓர் இரவில், நாங்கள் நபி(ஸல்) அவர்களுடனிருந்தபோது எங்களுக்கு கிப்லா(திசையைக் கண்டறிவது) கடினமாகி விட்டது. (ஒரு திசையை நோக்கி) நாங்கள் தொழுது விட்டோம். பின்னர் சூரியன் உதயமான பின்னர் பார்க்கும் போது நாங்கள் கிப்லா அல்லாத திசையில் தொழுது விட்டோம் என்பது தெரிய வந்தது. அப்போது தான், ''நீங்கள் உங்கள் முகங்களை எங்கு திருப்பினும் அங்கு இறைவனின் முகத்தை அடைவீர்கள்'' (2:115) எனும் வசனம் அருளப்பட்டது என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
226 ''கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையில் கிப்லா உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. ''இது 'கவீ தரத்திலுள்ள பலமான ஹதீஸ்'' என புகாரி கூறியுள்ளார்.
227 ''ஒட்டகம் எத்திசையில் சென்றதோ அத்திசையை நோக்கி, அதன் மீது அமர்ந்த வண்ணம் நபி(ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்துள்ளேன்'' என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அறிவிக்கிறார்.புகாரி, முஸ்லிம்
''நபி(ஸல்) அவர்கள் தம் தலையின் சமிக்ஞை மூலம் இவ்வாறு தொழுதார்கள். ஆனால் ஃபஜ்ர் தொழுகையை இவ்வாறு வாகனத்தின் முதுகில் அமர்ந்த படி தொழ மாட்டார்கள்'' என்னும் வாசகம் புகாரியில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
228 நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருக்கும்போது நஃபில் தொழ நாடினால் தமது ஒட்டகத்தை கிப்லா திசையை நோக்கித் திருப்பி, தக்பீர் கூறுவார்கள். பின்னர் ஒட்டகம் எத்திசை நோக்கிச் செல்கிறாதோ, அதே திசையில் தொழுவார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத். இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
229 ''இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி முழுவதுமே (அல்லாஹ்வைத்) தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
230 1. குப்பைக் கிடங்கு 2. பிராணிகளை அறுக்கும் இடம் 3. அடக்கத்தலம் 4. பொதுவழி 5. குளியலறை 6. ஒட்டகம் கட்டுமிடம் 7. கஅபத்துல்லாஹ்வின் முதுகு (கூரை) ஆகிய ஏழு இடங்களில் தொழ வேண்டாமென நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
231 ''அடக்கத் தலங்களின் அருகே தொழாதீர்கள்'' அதன் மீது உட்காரவும் செய்யாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன் என அபூ மர்ஸத் அல் கனவி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
232 ''உங்களில் எவரேனும் காலணிகளுடன் பள்ளிக்கு வந்து அவற்றில் ஏதேனும் அசுத்தத்தைக் கண்டால், அதனைத் தூய்மைப்படுத்திக் கொண்டு அவற்றுடன் தொழுது கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத். இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
233 ''உங்கள் காலுறைகளில் அசுத்தம் பட்டுவிட்டால் (அடுத்து வரும்) மண் அதை தூய்மையாக்கிவிடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத். இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
234 ''தொழுகையில் தஸ்பீஹ், அல்லாஹ் அக்பர் என்று கூறுதல், குர்ஆன் ஓதுதல் ஆகியவற்றைத் தவிர்த்து வேறெதையும் மக்கள் பேசுவது சரியல்ல'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முஆவியா பின் ஹகம்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
235 நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் எங்கள் தேவையைக் குறித்து ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்வோம். அப்போது தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்; நடுத் தொழுகையையும் பேணுங்கள். மேலும் அல்லாஹ்வின் முன்பு (முற்றிலும்) கீழ்ப்படிந்தவர்களாக நில்லுங்கள். (2:237) என்னும் இறைவசனம் அருளப்பட்டு, தொழுகையில் மௌனமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவிடப்பட்டது. தொழுகையில் பேச வேண்டாம். என எங்களுக்கு நபி(ஸல்) அவர்களால் தடைவிதிக்கப்பட்டது என ஜைத் இப்னு அர்கம்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம். இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
236 ''(தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும் போது) ஆண்கள், ''சுப்ஹானல்லாஹ்'' என்று கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம். முஸ்லிமில் தொழுகையில் என்பது அதிகப்படியாக உள்ளது.
237 தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெஞ்சில் அழுகையிலினால் சட்டி கொதிக்கும் போது ஏற்படுவது போன்ற சத்தம் ஏற்படுவதை நான் பார்த்துள்ளேன் என அப்துல்லாஹ் பின் ஷிக்கீர் தன் தந்தை வழியாக அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத், நஸயீ மற்றும் திர்மிதீ. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
238 நபி(ஸல்) அவர்களிடம் நான் செல்வதற்கு எனக்கு (தினமும்) இரண்டு நேரங்கள் அனுமதிக்கப்பட்டிருந்தன. நான் அவர்களிடம் செல்லும் போது அவர்கள் தொழுது கொண்டிருந்தால் அஹ், அஹ் என்று செருமி சமிக்ஞை செய்வார்கள் என அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். நஸயீ இப்னு மாஜா
239 ''நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு ஸலாம் சொல்லப்பட்டால் அவர்கள் எவ்வாறு பதில் கொடுப்பார்கள்?'' என்று நான் பிலால்(ரலி) அவர்களிடம் கேட்டேன். (அதற்கு) அவர் தமது கையை விரித்து ''இவ்வாறு செய்வார்கள்'' என்று கூறினார் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத். இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
240 ''நபி(ஸல்) அவர்கள் உமாமா பின்த் ஜைனபைத் தூக்கிக் கொண்டு தொழுவார்கள். ஸஜ்தாவிற்குப் போகும் போது இறக்கி விடுவார்கள். பின்னர் நிற்கும் போது தூக்கிக் கொள்வார்கள்'' என அபூ கதாதா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
அப்போது 'நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு இமாமாக நின்று தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள் எனும் வாசகமும் முஸ்லிமில் உள்ளது.
241 ''தொழுகையில் பாம்பு மற்றும் தேள் ஆகிய இரு கருப்பர்களைக் கண்டால் அவற்றைக் கொன்று விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்
அபூ தாவூத் திர்மிதீ, நஸாயீ மற்றும் இப்னுமாஜா. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழுது கொண்டிருப்பவர் பயன்படுத்தும் தடுப்பு
242 ''தொழுது கொண்டிருப்பவாரின், குறுக்கே செல்வதால் ஏற்படும் பாவத்தை ஒருவர் அறிந்திருந்தால், அதைவிட நாற்பது(ஆண்டுகளு)க்கு நிற்பதே மேல் எனக் கருதுவார்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஜுஹைம்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது. பஸ்ஸாரின் மற்றோர் அறிவிப்பில் நாற்பது ஆண்டுகள் என்றுள்ளது.
243 தொழுகைக்கு வைக்கும் தடுப்பு(சுத்ராவைப்) பற்றி தபூக் யுத்தத்தின் போது நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், ''(ஒட்டக) வாகனத்தின் பிற்பகுதியிலுள்ள குச்சியின் அளவு'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
244 ''உங்களில் ஒவ்வொரு வரும் ஓர் அம்பையேனும் நட்டு வைத்து; தொழுகையில் ஒரு தடுப்பை (சுத்ராவை) ஏற்படுத்திக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸப்ரா இப்னு மஅபத்(ரலி) அறிவிக்கிறார். ஹாகிம்.
245 ''ஓர் ஒட்டக சேணத்தின் பின்னாலுள்ள குச்சியளவு கூட தொழுகைக்கான தடுப்பு இல்லையெனில், பெண், கழுதை, கருப்பு நாய் ஆகியவை ஒரு முஸ்லிமுடைய தொழுகையை முறித்து விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூதர் அல்கிஃபாரி(ரலி) அறிவிக்கிறார்.
கருப்பு நாய் என்பது ஷைத்தானாகும் என்றும் (ஒர் அறிவிப்பில்) உள்ளது. முஸ்லிம்
246 'நாய்' என்பதைத் தவிர்த்து இந்த ஹதீஸ் அபூ ஹுரைரா(ரலி) வாயிலாகவும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
247 கடைசி வார்த்தையைத் தவிர்த்து வெறும் 'பெண்' என்பதற்கு பதிலாக 'மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் பெண்' என்னும் வாசகத்துடன் மேற்கண்ட ஹதீஸ் இப்னு அப்பாஸ் வாயிலாக அபூதாவூத் மற்றும் நஸயீயில் இடம் பெற்றுள்ளது.
248 உங்களில் எவரேனும் மக்களை விட்டுத் தடுப்பாக (சுத்ரா) ஒரு பொருளை வைத்துத் தொழுது கொண்டிருக்கும்போது, எவரேனும் அதனுள் நுழைந்து செல்ல விரும்பினால் கைகளால் (தொழுது கொண்டே) தடுங்கள். அவன் அதை(யும்) மீறினால், (தொழுது கொண்டே) அவனைத் தள்ளி, (அகற்றி) விடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவன் ஷைத்தான் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில் ''அவனுடன் அவனுடைய (ஷைத்தான்) துணைவன் இருக்கிறான்'' என்றுள்ளது.
249 ''நீங்கள் தொழும் போது உங்கள் முகத்திற்கு முன்பாக எதையேனும் ஒரு பொருளை (சுத்ரா) தடுப்பாக வைத்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதும் கிடைக்கவில்லையெனில் ஒரு குச்சியை நட்டுக் கொள்ளுங்கள். அப்படி எதுவும் கிடைக்கவில்லையெனில் ஒரு கோட்டைக் கிழித்துக் கொள்ளுங்கள். பின்னர் தமக்கு முன்னால் நடந்து செல்பவரால் தமக்குத் தீங்கு ஏற்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், இப்னு மாஜா. இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
250 ''தொழுகையை (முன்னால் கடந்து செல்லும்) எந்தப் பொருளும் முறித்து விடாது. (இருப்பினும்) உங்களால் முடிந்த வரை தவிர்த்துக் கொள்ளுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார்.
அபூ தாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உள்ளச்சத்துடன் தொழும்படி தூண்டுதல்
251 ''இடுப்பில் கை வைத்த நிலையில் தொழுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம். இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
252 ''(இடுப்பில் கை வைத்துத தொழும்) இச்செயல் யூதர்கள், அவர்களுடைய தொழுகையில் செய்யும் செயல்'' என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
253 ''இரவு உணவு முன்னதாகவே கொண்டு வரப்பட்டு விட்டால், மக்ரிப் தொழுவதற்கு முன்னரே அதை (உண்ணத்) தொடங்கி விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
254 ''உங்களில் எவரேனும் தொழுகைக்கு நின்றுவிட்டால், அவர் (தம் நெற்றியில் ஒட்டியுள்ள) சிறிய கற்களை அகற்ற வேண்டாம். ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்வுடைய அருள் (இறங்கிக் கொண்டு) உள்ளது. அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா.
''(அவசியம் தேவையெனில் ஒருமுறை செய்து கொள்ளட்டும் அல்லது அப்படியே விட்டுவிடட்டும்'' என்னும் வாசகம் அஹ்மதில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
255 முஅய்கிப் (ரலி) வாயிலாக இதே போன்ற ஹதீஸ் உள்ளது.
256 ''தொழுகையில் திரும்பிப் பார்ப்பதைப் பற்றி நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ''அது அடியானின் (கவனம் சிதறும் போது) அவனது தொழுகையில் ஷைத்தான் செய்யும் திருட்டாகும்'' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
''தொழுகையில் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அது அழிவைத் தரும் பின்னர் அவசியம் ஏதும் ஏற்பட்டால் நஃபில் (தொழுகையில்) திரும்பிப் பார்த்துக் கொள்ளலாம்'' என்று திர்மிதீயில் உள்ளது. இது ஸஹீஹ் எனும் தரத்தில் திர்மிதீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
257 ''உங்களில் எவரேனும் தொழுகையில் நின்று விட்டால் அவர் தன்னுடைய இரட்சகனிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார். (எனவே, அவர் எச்சில் துப்ப வேண்டிய அவசியம் ஏற்பட்டால்) அவர் ஒரு போதும் வலப் பக்கத்திலோ மற்றும் இடப்பக்கத்திலோ துப்ப வேண்டாம். மாறாக, தனது இடப் பக்கமாக காலுக்குக் கீழே துப்பிக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
258 ''ஆயிஷா(ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் ஒரத்தில் சித்திரங்கள் வரையப்பட்ட மெல்லிய திரைச் சீலை ஒன்று இருந்தது. (அதைப் பார்த்த) நபி(ஸல்) அவர்கள் உனது இந்தத் திரைச் சீலையை எம்மை விட்டு அகற்றிவிடு! ஏனெனில், தொழுகையில் அதன் சித்திரங்கள் என் முன் வந்து குறுக்கிட்டுக் கொண்டே இருக்கின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
259 அபூஜஹ்கி அன்பளிப்புச் செய்த சித்திரங்கள் கொண்ட போர்வை போன்ற அங்கி தொடர்பான நிகழ்ச்சியைக் கூறும் போது ஆயிஷா(ரலி) ''நிச்சயமாக அது தொழுகையை விட்டு என் கவனத்தைத் திருப்பி விட்டது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள். புகாரி, முஸ்லிம்
260 ''தொழுகையில் தங்களது பார்வையை வானத்தின் பால் உயர்த்தும் மக்கள், அதைத் தவிர்த்துக் கொள்ளட்டும். இல்லையெனில் (அவர்களது பார்வை) மறுபடியும் அவர்களிடம் திரும்பி வராமல் போகக் கூடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் பின் ஸமுரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
261 ''உணவு முன்னால வைக்கப்பட்டிருக்கும் போதும், (மலம் ஜலம்) ஆகிய இரண்டு துன்பங்கள் நிர்பந்திக்கும் போதும் (அவற்றை முடிக்காமல்) தொழுகை இல்லை'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
262 ''கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே எவருக்கேனும் கொட்டாவி வந்தால், அவர் அதை முடிந்த அளவு அடக்கிக் கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
திர்மிதீயில் தொழுகையில் என்ற வாசகம் அதிகப்படியாக உள்ளது.
பள்ளிவாசல்கள்
263 ''தெருக்களில் பள்ளி வாசல்கள் கட்டுமாறும், அவற்றைத் தூய்மையாக வைத்துக் கொள்ளு மாறும், அவற்றில் நறுமணம் கமழச் செய்யுமாறும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ. இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது
264 யூதர்களை அல்லாஹ் அழிக்கட்டும்! அவர்கள் தங்கள் நபிமார்களின் அடக்கத்தலங்களைப் பள்ளிவாசல்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
''கிறிஸ்தவர்களையும்'' எனும் சொல் முஸ்லிமில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
265 மேலும், ''அவர்களில் (யூதர்கள் கிறிஸ்தவர்களில்) ஒரு நல்ல மனிதர் இறந்துவிட்டால் அவருடைய அடக்கஸ்தலத்தின் மீது பள்ளிவாசல்கள் கட்டி விடுவார்கள். இவர்களே படைப்புகளில் மிகக் கெட்டவர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
266 ''நபி(ஸல்) அவர்கள் குதிரைப் படை ஒன்றை அனுப்பினார்கள். அவர்கள் (ஸமாமா என்ற) ஒருவரைக் கொண்டு வந்து பள்ளிவாசலின் தூண்களில் ஒரு தூணில் கட்டிப் போட்டார்கள்'' (நீண்ட ஹதீஸின்சுருக்கம்) என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
267 ஹஸ்ஸான் இப்னு ஸாபித்தை உமர்(ரலி) அவர்கள் கடந்து சென்ற போது அவர் பள்ளிவாயிலில் கவிதை படித்துக் கொண்டிருந்தார். உமர்(ரலி) அவர்கள் அவரைக் கூர்ந்து கவனித்தார்கள். (அதற்கு) அவர், ''உங்களைவிடச் சிறந்தவர் இங்கே இருக்கும்போது (அவர் முன்பு) இதே இடத்தில் நான் கவிதை பாடியுள்ளேன்'' என்று சொன்னார் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
268 ''எவர் தன்னுடைய தொலைந்து போன பொருளைப் பள்ளிவாசலில் தேடுகிறாரோ (அவரை நோக்கி) 'அல்லாஹ் உமக்கு அதைக் கிடைக்காமல் ஆக்குவானாக!'' என்று கூறவும். ஏனெனில் பள்ளிவாசல்கள் இதற்காகக் கட்டப்படவில்லை'' கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
269 ''எவரேனும் பள்ளிவாசலில் (வியாபாரம் செய்த வண்ணம்) விற்று, வாங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் கண்டால் (அவரை நோக்கி), அல்லாஹ் உமது வியாபாரத்தில் இலாபமில்லாமல் ஆக்கட்டும்!'' என்று கூறுங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். நஸயீ, திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
270 ''பள்ளிவாசல்களில் (பெரும்) தண்டனைகளும் நிறைவேற்றப்படாது. பழியும் தீர்க்கப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹகீம் இப்னு ஹிஸாம்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத் மற்றும் அபூ தாவூத். இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
271 அகழ் யுத்தத்தில் ஸஅத் பின் முஆத்(ரலி) அவர்களுக்குக் காயம் ஏற்பட்டது. அதனால் நபி(ஸல்) அவர்கள் அருகேயிருந்து அவர்களை நலம் விசரிப்பதற்காக (தொழுகைக்காக ஏற்படுத்தப்பட்ட பள்ளிவாசலில்) கூடாரம் ஒன்றை அமைத்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
272 ''பள்ளிவாசலில் (ஈட்டிகளை எறிந்து) வீரவிளையாட்டுகள் நடத்திக் கொண்டிருந்த அபிசீனியர்களை நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, நபி(ஸல்) அவர்கள் என்னை மறைத்துக் கொண்டிருக்க நான் (அதைப்) பார்த்தேன்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (நீண்ட ஹதீஸின் சுருக்கம்) புகாரி, முஸ்லிம்
273 ''கருநிற அடிமைப் பெண் ஒருவருக்கு பள்ளிவாசலில் கூடாரம் ஒன்று இருந்தது. அவர் என்னிடம் வருவார்; பேசிக் கொண்டிருப்பார்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) புகாரி, முஸ்லிம்
274 ''பள்ளிவாசலில் எச்சில் துப்புவது பாவமாகும். அதை மண்ணிற்குள் (புதைபடும்படி ) மூடுவது (அப்புறப்படுத்துவது) அதற்குப் பாரிகாரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
275 ''பள்ளிவாசல்களைக் கொண்டு மக்கள் பெருமையடிக்காத வரை கியாமத் (அழிவு) நாள் ஏற்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரழி) அறிவிக்கிறார்.
அஹ்மத், அபூதாவூத், நஸாயீ, மற்றும் இப்னு மாஜா. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
276 ''பள்ளிவாசல்களை உயரமாகக் கட்டி அலங்காரிக்குமாறு எனக்குக் கட்டளையிடப்படவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
277 ஒருவர் பள்ளிவாசலிலிருந்து குப்பை கூளத்தை வெளியேற்றுவது உட்பட என்னுடைய சமுதாயத்தாரின் நற்செயல்களுக்கான நற்கூலிகள் எனக்குக் காண்பிக்கப்பட்டன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.
அபூதாவூத். இது திர்மிதீயில் காரிப் எனும் தரத்திலும், இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது
278 ''உங்களில் எவரேனும் பள்ளிவாசலினுள் நுழைந்தால் இரண்டு ரக்அத்கள் தொழாமல் அமர வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ கதாதா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
தொழுகை முறை
279 நீ தொழுகைக்காக நின்றால் நன்றாக உளுச் செய்து கொள்! பின்னர் கிப்லாபை நோக்கி நின்று, 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் கூறிக் கொள்! பின் (மெதுவாக) ருகூவு செய்! பின்னர் எழுந்து நேராக உனக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நிதானமாக நின்று கொள்! பின்னர் தலையை உயர்த்தி நன்றாக அமர்ந்து கொள்! பின்னர் திருப்தியாக ஸஜ்தா செய்து கொள்! பின்னர் இதேபோன்று உனக்குத் திருப்தி ஏற்படும் வரையில் தொழுகை முழுவதும் (ஒவ்வொரு ரக்அத்திலும்) செய்து கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ மற்றும் இப்னு மாஜா
உனக்குத் திருப்தி ஏற்படும் வகையில் ''நின்று கொள்!'' என்பது இப்னு மாஜாவில் முஸ்லிமில் சனதுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
280 ரிஃபாஆ இப்னு ராஃபிஃ வாயிலாக மேற்கண்டவாறே அஹ்மத் மற்றும் இப்னு ஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
281 ''எலும்புகள் அதனிடத்தில் மீண்டு வரும் அளவிற்கு உன்னுடைய முதுகை நேராக்கிக் கொள்!'' என்று அஹ்மதில் உள்ளது.
282 ''அல்லாஹ் உங்களுக்கு கட்டளையிட்டபடி நன்றாக உளுச் செய்து, பின்னர் அல்லாஹு அக்பர் - 'அல்லாஹ் பெரியவன்' என்று (தக்பீர்) கூறி, அவனைப் புகழ்ந்து போற்றாத வரை உங்கள் தொழுகை முழுமையடையாது'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ரிஃபாஆ இப்னு ராஃபிஉ வாயிலாக நஸாயீ மற்றும் அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவை இரண்டிலும், ''உன்னுடன் குர்ஆன் (வசனம் மனப்பாடமாக) இருந்தால் அதை ஓதிக் கொள்! (இல்லையெனில்) ''அல்ஹம்து லில்லாஹ்'' 'அல்லாஹு அக்பர்' மற்றும் ''லாயிலாஹஇல்லல்லாஹ்'' என்று கூறிக் கொள்!'' என்றும் உள்ளது.
283 ''பின்னர் சூரத்துல் ஃபாத்திஹாவை ஒதிக் கொள்! பின்னர் இறைவனின் நாட்டப்படி (நீ நாடியதை) ஓதிக் கொள்'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
284 ''பின்னர் நீ விரும்பியதை (ஓதிக்கொள்!)'' என்று இப்னு ஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
285 நபி(ஸல்) அவர்கள் 'அல்லாஹு அக்பர்' என்று கூறும் போது தமது இரண்டு கரங்களையும் தோள்கள் வரை உயர்த்தினார்கள். பின்னர் ருகூவு செய்த போது தம் இரு கரங்களையும் தம் இரு கால்களின் முட்டியில் வைத்தார்கள். பின்னர் தமது முதுகை வளைத்தார்கள். பின்னர் தம் தலையை உயர்த்தும் போது எலும்புகள் எல்லாம் அதன் இடத்தில் வரும் வரை நேராக நிற்பார்கள். பின்னர் ஸஜ்தா செய்யும் போது (பூமியில்) தம் கைகளை (விரல்களை) விரிக்காமலும், சேர்க்காமலும் வைப்பார்கள். தம் கால் விரல்களின் முனைகளை கிப்லாவை நோக்கியிருக்குமாறு வைப்பார்கள். இரண்டாவது ரக்அத்தில் உட்காரும் போது இடக்காலில் அமர்ந்து வலக்காலை நிமிர்த்தி வைத்தார்கள். பின்னர் கடைசி ரக் அத்தில் அமர்ந்த போது இடக் காலை முற்படுகிறது மற்றொன்றை நிற்க வைத்து தமது இருக்கையின் மீது அமர்ந்தார்கள் என அபூ ஹுமைத் அஸ்ஸாயிதி(ரலி) அறிவிக்கிறார். புகாரி
286 நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்று விட்டால், ''வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி சத்தியமார்க்கத்தை விரும்பியவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். மேலும், நான் முஸ்லிம்களில் ஒருவன். ''எங்கள் இரட்சகனே! நீயே அரசன்! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீயே என்னுடைய இரட்சகன்! நான் உன்னுடைய அடிமை! என்று இறுதி வரை ஓதுவார்கள் என அலீ இப்னு அபீதாலிப்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் இது இரவுத் தொழுகையில் என்றுள்ளது.
287 நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறிவிட்டால் (கிராஅத்) ஓதுவதற்கு முன்பு, சிறிது நேரம் அமைதியாக இருப்பார்கள். நான் (அதைப்பற்றி) அவர்களிடம் கேட்டதற்கு, 'அல்லாஹ்வே கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியது போன்று எனக்கும் என் தவறுகளுக்குமிடையில் வெது தூரத்தை ஏற்படுத்துவாயாக! அல்லாஹ்வே! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்துவது போன்று தவறுகளிலிருந்து என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! அல்லாஹ்வே! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங் கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!'' என ஓதுவேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
288 உன்னைப் புகழ்ந்தவனாக உன் தூய்மையை நான் எடுத்துரைக்கிறேன். உன்னுடைய பெயர் பாக்கியமானது. உன்னுடைய நிலை உயர்வானது. வணக்கத்திற்குரியவர், உன்னைத் தவிர வேறு எவருமில்லை'' என்று உமர்(ரலி) ஓதுவார்கள்.
இது முஸ்லிமில் 'முன்கதிஃ எனும் தரத்திலும், தாரகுத்னியில் மவ்ஸூல் மற்றும் மவ்கூஃப் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
289 இதே (288ம் எண்) போன்றதை அபூசயீத் அல்குத்ரி(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களைக் குறித்து அறிவித்துள்ளார்கள். அதில், ''நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறியபின், ''அஊது பில்லாஹிஸ்ஸமீஇல் அலீம் மினஷ் ஷைத்தானிர்ரஜீம் மின்ஹமஸிஹி வ நஃப்கிஹி வநஃபிதிஹி' - விரட்டப்பட்டவனான ஷைத்தானின் வெறித்தனத்திலிருந்து அவனுடைய பாரிகாச வசை பாடலிலிருந்தும் நன்கறிந்தோனும் செவிமடுப்போனுமாகிய அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் ஓதியதாக வந்துள்ளது. அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னு மாஜா, நஸயீ
290 நபி(ஸல்) அவர்கள் தொழுகையை 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லி ஆரம்பம் செய்வார்கள். 'அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்' என்பதிலிருந்து குர்ஆன் ஓதத்தொடங்குவார்கள். அவர்கள் ருகூவு செய்யும் போது தம் தலையை உயர்த்தவும் மாட்டார்கள்; குனிந்து கொள்ளவும் மாட்டார்கள். நடுநிலையாக வைத்திருப்பார்கள். அவர்கள் ருகூஃவை விட்டு எழுந்து விட்டால், சரியாக நிற்காதவரை ஸஜ்தா செய்ய மாட்டார்கள். இன்னும், அவர்கள் ஸஜ்தாவில் இருந்து தலையை உயர்த்தி விட்டால், சரியாக அமராதவரை (மறுபடியும்) ஸஜ்தா செய்ய மாட்டார்கள். இன்னும், அவர்கள் இரண்டு ரக்அத்களுக்கு ஒருமுறை 'அத்தஹிய்யாத்' ஓதுவார்கள். இன்னும், அவர்கள் தம்முடைய இடக் காலைப் படுக்க வைத்தும்; வலக் காலை நிற்க வைத்தும் அமர்வார்கள். ஷைத்தானின் அமர்வு போன்று அமர்வதையும் மிருகங்களின் அமர்வு போன்று அமர்வதையும் தடை செய்வார்கள். மேலும், அவர்கள் ஸலாம் சொல்லி தொழுகையை முடிப்பார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
இது மஃலூஸ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
291 நபி(ஸல்) அவர்கள் (அல்லாஹு அக்பர் என்று தக்பீர் கூறி) தொழுகையை ஆரம்பம் செய்யும் போதும், ருகூஃவிற்காக 'அல்லாஹு அக்பர்' என்று தக்பீர் கூறும் போதும், ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் தம் இரு கரங்களையும் தம் தோள்களுக்கு நேராக உயர்த்துவார்கள் என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
292 ''தம் இரு கரங்களையும் தம் தோள்களுக்குச் சமமாக உயர்த்துவார்கள். பின்னர் தக்பீர் கூறுவார்கள்'' என்று அபூஹுமைத் வாயிலாக அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
293 முஸ்லிமில் மாலிக் இப்னுஹுவை ரிஸ் வாயிலாக இப்னு உமர்(ரலி) அவர்களின் ஹதீஸ் போன்றே இடம் பெற்றுள்ளது. ஆனால், அதில் தம் இரு காதுகளுக்குச் சமமாக உயர்த்துவார்கள் என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.
294 நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். அப்போது அவர்கள் தமது நெஞ்சில் தமது இடக்கரத்தை வைத்து, அதன் மீது தம் வலக் கரத்தை வைத்தார்கள் என்று வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) அறிவிக்கிறார். இப்னு குஸைமா
295 ''எவர் உம்முல் குர்ஆன் (சூரத்துல் ஃபாத்திஹா) ஓதவில்லையோ, அவருக்குத் தொழுகை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
296 இப்னு ஹிப்பான் மற்றும் தாரகுத்னீயின் மற்றோர் அறிவிப்பில், 'சூரத்துல் ஃபாத்திஹா ஓதாமல் தொழுகை முழுமையாவதில்லை' என்றுள்ளது.
297 மற்றோர் அறிவிப்பின்படி அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களில், ''நீங்கள் இமாமுக்குப் பின்னால் ஓதுகிறார்கள் போலும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நாங்கள், ''ஆமாம்'' என்று பதிலளித்தோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் சூரத்துல் ஃபாத்திஹாவைத் தவிர வேறு எதையும் ஓதவேண்டாம். ஏனெனில், எவர் சூரத்துல் ஃபாத்திஹா ஓதவில்லையோ அவருக்குத் தொழுகை இல்லை'' என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.
298 நபி(ஸல்) அவர்களும், அபூபக்ர்(ரலி), இன்னும் உமர்(ரலி) ஆகியோரும், ''அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்'' ஓதித்தான் தொழுகையைத் தொடங்குவார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்
299 அவர்கள் அதன் ஆரம்பத்திலும், இறுதியிலும், பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் ஓதியதில்லை என்னும் வாசகம் முஸ்லிமில் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
300 மற்றோர் அறிவிப்பின்படி ''அவர்கள் பிஸ்மில்லாஹ்வை சப்தமிட்டு ஓதமாட்டார்கள்'' என்று அஹ்மத், நஸாயீ, இப்னு குஸைமாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
301 இப்னு குஸைமாவின் மற்றோர் அறிவிப்பின்படி அவர்கள் (பிஸ்மில்லாஹ்) மெதுவாக ஓதுவார்கள் என்று உள்ளது.
302 நான் அபூஹுரைரா(ரலி) அவர்களுக்குப் பின்னால் தொழுதேன். அப்போது அவர்கள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஓதினார்கள். பின்னர் சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்கள். 'வலள்ளால்லீன்' எனும் வசனத்தை அடைந்ததும் 'ஆமீன்' என்று கூறினார்கள். அவர்கள் ஸஜ்தா செய்யும் போது, அமர்விலிருந்து எழும் போது 'அல்லாஹு அக்பர்' என்று கூறினார்கள். பின்னர் ஸலாம் சொல்லிவிட்டு, ''எவனது கரத்தில் என் உயிர் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் நபி(ஸல்) அவர்களின் தொழுகைக்கு மிகவும் ஒப்பான முறையில் தொழுபவன் நானேயாவேன் என்று கூறினார்கள் என நுஅய்கி அல் முஜ்மிர் அறிவிக்கிறார். நஸாயீ, இப்னு குஸைமா
303 ''நீங்கள் சூரத்துல் ஃபாத்திஹா ஓதினால், பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்! ஓதிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அதுவும் அதன் ஒரு வசனமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னி
304 நபி(ஸல்) அவர்கள் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் தமது சப்தத்தை உயர்த்தி 'ஆமின்' என்று கூறுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்.
இது தாரகுத்னியில் ஹஸன் எனும் தரத்திலும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் இடம் பெற்றுள்ளது.
305 அபூதாவூத் மற்றும் திர்மிதீயில் வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) வாயிலாக இதே போன்ற ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
306 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''நான் குர்ஆனிலிருந்து எதையும் எடுக்க (ஓத) முடியாத நிலையில் உள்ளேன். (எனவே) அதை சாரிக்கட்டும் வகையில் எனக்கு ஏதாவது கற்றுத் தருவீராக!'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''சுப்ஹானல்லாஹ் - அல்லாஹ் தூய்மையானவன்'' என்றும், ''அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்'' என்றும், ''லா இலாஹ இல்லல்லாஹ் -அல்லாஹ்வைத் தவிர வேறொவருமில்லை'' என்றும் ''அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியவன்'' என்றும், ''உயர்ந்தவனும் மகத்தானவனுமான அல்லாஹ்வைக் கொண்டே தவிர தீமையிலிருந்து தப்பும் சக்தியும், நன்மையடைவதற்கான ஆற்றலும் இல்லை'' என்று கூறிக்கொள்'' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸாயீ
இது இப்னு ஹிப்பான், தாரகுத்னி மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளளது.
307 நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்துவார்கள். லுஹர் மற்றும் அஸர் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் 'சூரத்துல் ஃபாத்திஹாவையும் இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள். சில சமயங்களில் சில வசனங்கள் மட்டும் ஓதுவார்கள். முதல் ரக்அத்தை நீட்டியும் பிந்திய இரண்டு ரக்அத்துக்களில் 'ஃபாத்திஹா சூரா' மட்டும் ஓதுவார்கள் என அபூகதாதா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
308 நாங்கள் லுஹா மற்றும் அஸர் தொழுகைகளில் நபி(ஸல்) அவர்களது தொழுகையை (நேரத்தை) கணித்திருக்கின்றோம். அவர்கள் லுஹர் தொழுகையின் முந்திய இரண்டு ரக்அத்களில் 'அலிஃப் லாம் மீம் தன்ல்' ஸஜ்தா சூரா ஓதுமளவு நேரம் இருக்கும். பிந்திய இரண்டு ரக்அத்களில் அதில் பாதி (நேரம்) இருக்கும் என்பது எங்களின் கணிப்பாகும். பின்னர் அஸர் தொழுகையின் முந்திய இரண்டு ரக்அத்கள், லஹர் தொழுகையின் பிந்திய ரக்அத்களின் (நேர) அளவும் அஸரின் பிந்திய இரண்டு ரக்அத்கள் அஸரின் முந்திய இரண்டு ரக்அத்களின் பாதி (நேர) அளவும் இருக்கும் என்று அபூஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
309 ''ஒருவர் லுஹருடைய முதல் இரண்டு ரக்அத்களை நீட்டியும், அஸரைக் குறைத்தும், மக்ரிபில் சிறிய சூராக்களையும், இஷாவில் நடுத்தரமான சூராக்களையும், சுப்ஹில் நீண்ட சூராக்களையும் ஒதுகிறார்'' என்று நான் கூறியதற்கு, ''அல்லாஹ்வின் தூதருடைய தொழுகைக்கு இதை விட அதிகமாக ஒப்பான ஒரு தொழுகையை வேறவர் பின்னாலும் நான் தொழுததில்லை'' என்று அபூஹுரைரா(ரலி) கூறியதாக சுலைமான் இப்னு யஸார் அறிவிக்கிறார். இது நஸாயீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
310 நபி(ஸல்) அவர்கள் மக்ரிப் தொழுகையில் 'சூரத்துத் தூர்' ஓத நான் கேட்டுள்ளேன் என்று இப்னு ஜுபைர் இப்னு முத்இம்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
311 நபி(ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை ஃபஜ்ர் தொழுகையில் 'அலிஃப் லாம் மீம் தன்ல்' ஸஜ்தா சூராவும் 'ஹல் அதா அலல் இன்ஸானி' சூராவும் ஓதுவார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
312 இப்னு மஸ்வூத் வாயிலாக தப்ரானீயில் இடம் பெறுள்ள ஹதீஸில், ''நபி(ஸல்) அவர்கள் எப்போதும் அவ்வாறு தான் செய்து வந்தார்கள்'' என்று உள்ளது.
313 நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதேன். இறைக்கருணை குறித்த வசனங்கள் ஒதப்படும் இடத்தை அவர்கள் கடந்து சென்றால் அங்கு நின்று துஆ செய்வார்கள். மேலும், அவர்கள் இறைத்தண்டனை குறித்த வசனங்கள் ஓதப்படும் இடத்தைக் கடந்து சென்றால் அவர்கள் (அதிலிருந்து அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோருவார்கள் என ஹுதைஃபா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
314 ''அறிந்து கொள்ளுங்கள்! நான் ருகூஃ மற்றும் ஸுஜூதுகளில் குர்ஆன் ஓத வேண்டாமென தடுக்கப்பட்டுள்ளேன். நீங்கள் ருகூஃவில் இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்! இன்னும் ஸஜ்தாவில், மன்றாடி துஆ கேளுங்கள். அது (இறைவனால்) ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருக்கும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
315 நபி(ஸல்) அவர்கள் தமது ருகூஃவிலும், தமது ஸுஜூதிலும் ''எங்கள் இரட்சகனே! உன்னைப் புகழ்ந்த நிலையில் உன் தூய்மையை நான் எடுத்துரைக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பை அருள்வாயாக!'' என்று பிரர்த்திப்பவர்களாக இருந்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
316 நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நிற்கும் போது, 'அல்லாஹு அக்பர்' என்று கூறுபவர்களாக இருந்தார்கள். பின்னர் ருகூஃ செய்யும் போது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள். பின்னர் தமது முதுகை ருகூஃவிலிருந்து உயர்த்தும் போது, 'ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா' என்று கூறுவார்கள். பின்னர் அவர்கள் நின்ற நிலையில், 'ரப்பனாவ லகல் ஹம்து' என்று கூறுவார்கள். பின்னர் ஸஜ்தா செய்யும்போது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள், பின்னர் (ஸஜ்தாவிலிருந்து) தன்னுடைய தலையை உயர்த்தும் போது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள், பின்னர் தொழுகை முழுவதும் இவ்வாறே செய்வார்கள். மேலும், இரண்டு ரக்அத்களுக்குப் பின் அமர்ந்து விட்டு எழும் போதும், 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
317 நபி(ஸல்) அவர்கள் ருகூஃவிலிருந்து தம் தலையை உயர்த்தியதும், 'அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து' இறைவா! வானங்கள் நிறைய, பூமி நிறைய, இன்னும் எதை நீ நாடுகிறாயோ, அது நிறைய உனக்கே புகழனைத்தும்! நீயே உயர்வு மற்றும் புகழுக்குரியவன்! இன்னும் நாங்கள் ஒவ்வொருவரும் உனக்கு அடிமை என்று கூறுவதே அடிமைகளுக்குப் பொருத்தமானது. எங்கள் இறைவா! நீ எதைக் கொடுக்கின்றாயோ அதை யாரும் தடுக்க முடியாது. நீ எதைத் தடுக்கின்றாயோ அதை யாரும் கொடுக்க முடியாது. இன்னும் நீயே தேவையற்றவன். தேவையற்ற வேறு எவனும் எந்த பலனும் அளிக்க முடியாது.'' என்று கூறுவார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
318 ''ஏழு எலும்புகளின் மீது ஸஜ்தா செய்யுமாறு நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிவிட்டு நெற்றியின் மீது தம்முடைய மூக்கு, தம்முடைய கரங்கள், தம்முடைய முட்டிக் கால்கள், தம்முடைய கால்கள் ஆகியவற்றை தமது கரத்தால் சுட்டிக் காண்பித்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
319 நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது தமது ஆக்குள்களின் வெண்மை தெரியும் அளவிற்கு தமது கரங்களுக்கிடையில் இடைவெளி விடுவார்கள் என இப்னுபுஹைனா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
320 ''நீ ஸஜ்தா செய்தால் உன்னுடைய உள்ளங்கைகளைத் தரையில் வைத்து முழங்கைகளை உயர்த்திக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என பரா இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
321 நபி(ஸல்) அவர்கள் ருகூஉ செய்யும் போது தம்முடைய விரல்களை ஸஜ்தா செய்யும் போது தம்முடைய விரல்களை இணைத்தும் வைத்திருப்பார்கள் என வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) அறிவிக்கிறார். ஹாகிம்
322 நபி(ஸல்) அவர்கள் சம்மணமிட்டுத் தொழுததை நான் பார்த்தேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். நஸாயீ
இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
323 நபி(ஸல்) அவர்கள் இரண்டு ஸஜ்தாவிற்கிடையே ''இறைவா! என்னை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை காட்டுவாயாக! எனக்கு வழி காட்டுவாயாக! எனக்கு நிவாரணமளிப்பாயாக! எனக்கு வாழ்வாதாரங்களை நல்குவாயாக!'' என்று கூறுவார்கள் என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், திர்மிதீ மற்றும் இப்னுமாஜா
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
324 நபி(ஸல்) அவர்கள் தொழுததை நான் பார்த்தேன். அவர்கள் ஒற்றை ரக்அத்தில் முதலவாது மற்றும் ஸஜ்தாவிலிருந்து எழும்போது) சரியாக அமராதவரை எழமாட்டார்கள் என மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ்(ரலி) அறிவிக்கிறார். இப்னு குஸைமா
இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சஅத் இப்னு தாரிக் தம்முடைய தந்தையிடம் ''என் தந்தையே! தாங்கள், நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி), உமர்(ரலி) உஸ்மான்(ரலி), அலீ(ரலி) ஆகியோரின் பின் (நின்று) தொழுதுள்ளீர்கள். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்களா?'' என்று கேட்டதற்கு, ''என்னுடைய மகனே! இது புதிதாக உண்டாக்கப்பட்ட செயல்'' என்று பதில் கூறினார் என சஅத் இப்னு தாரிக்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா.
329 நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக, ''இறைவா! நீ நேர்வழி காட்டியவர்களுடன் சேர்த்து எனக்கும் நேர்வழி காட்டுவாயாக! நீ ஆரோக்கியம் அளித்தவர்களுடன் சேர்த்து எனக்கும் ஆரோக்கியம் அளிப்பாயாக! நீ பொறுப்பேற்றுக் கொண்டவர்களுடன் சேர்த்து எனக்கும் பொறுப்பேற்றுக் கொண்டோயோ அவர், இழிவடையமாட்டார். எங்கள் இரட்சகனே! நீ வளம் பொருந்தியவன்; உயர்ந்தவன்'' என்ற வாக்கியங்களை நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள் என ஹஸன் இப்னு அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
தப்ரானி மற்றும் பைஹகீயில் ''நீ யாரை இழிவு படுத்தி விட்டாயோ! அவரை கண்ணியப்படுத்துபவர் யாரும் இல்லை!'' என்றுள்ளது. நஸாயீயுடைய மற்றோர் அறிவிப்பில், ''அல்லாஹு தஆலா நபி(ஸல்) அவர்கள் மீது சாந்தி ஏற்படுத்துவானாக!'' என்றுள்ளது.
330 நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு துஆ கற்றுக் கொடுத்தார்கள். நாங்கள் அதை ஃபஜ்ர் தொழுகையில் ஓதிக் கொண்டிருந்தோம் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ. இது ளயீஃப் எனும் தரத்தில் உள்ளதாகும்.
331 ''நீங்கள் ஸஜ்தா செய்யும் போது ஒட்டகம் அமர்வது போல் அமர வேண்டாம் உங்கள் முழங்கால்களை (தரையில்) வைப்பதற்கு முன்பாக உங்கள் கரங்களை (தரையில்) வைப்பதற்கு முன்பாக உங்கள் கரங்களை வையுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீ
332 நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்யும் போது (தரையில்) முட்டுக்கால்களை வைப்பதற்கு முன்னதாக தமது இரு கரங்களையும் வைத்ததை நான் பார்த்தேன் என (அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ மற்றும் இப்னு மாஜா
இப்னு உமர்(ரலி) அவர்களது ஹதீஸ் முதல் ஹதீஸிற்கு சான்றாக உள்ளது. இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்திலும், புகாரியில் முஅல்லக், மவ்கூஃப் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
333 நபி(ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் (பெரும் இருப்பில்) அமர்ந்தால் தமது வலக் கையை வலது முழங் காலின் மீதும், இடக் கையை இடது முழங்காலின் மீதும் வைத்து அதை ஐம்பத்தி மூன்று போல் ஆக்கி தமது சுட்டு விரலால் சமிக்ஞை செய்வார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், எல்லா விரல்களையும் மடக்கிப் பிடித்துக் கொண்டு கட்டை விரலை அடுத்த (சுட்டு) விரலால் சமிக்ஞை செய்தார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
334 நபி(ஸல்) அவர்கள் எங்களை நோக்கி, ''உங்களில் ஒருவர் தொழும் போது, ''(அத்தஹிய்யாத்து....) எல்லாவிதமான காணிக்கைகளும், தொழுகைகளும், ஏனைய நல்லறங்களும் அல்லாஹ்விற்கே உரித்தானவை. நபியே! உம்மீது சாந்தியும் இறைவனின் கருணையும், அபிவிருத்தியும் உண்டாகட்டும்! இன்னும் எங்கள் மீதும் இறைவனின் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்! 'நிச்சயமாக வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை' அவன் தனித்தவன். அவனுக்கு இணையுமில்லை, துணையுமில்லை' என்று நான் சாட்சி கூறுகிறேன். இன்னும் முஹம்மத்(ஸல்) அவர்கள் அவனுடைய நல்லடியராகவும், தூதராகவும் உள்ளார்' என நான் சாட்சி கூறுகிறேன் என்று ஓதிக் கொண்டு, பின்னர் அவர் துஆக்களில் தான் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துப் பிரார்த்திக்கட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரி மற்றும் நஸாயீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ''எல்லா விரல்களையும் மடக்கிப்பிடித்துக் கொண்டு கட்டை விரலை அடுத்த (சுட்டு) விரலால் சமிக்ஞை செய்தார்கள்'' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களுக்கு தஷஹ்ஹுதைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்னும் அதை மக்களுக்குக் கற்றுத் தருமாறு கட்டளையிட்டார்கள் என்று அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
335 முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ''அத்தஹிய்யாத்துல் முபாரகாத்துஸ் ஸலவாத்துத் தைய்யிபாத்து லில்லாஹி அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன்னபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹி! ஸாலிஹீன் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ்'' எனும் தஷஹ்ஹுதைக் கற்றுக் கொடுத்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக இடம் பெற்றுள்ளது.
336 அல்லாஹ்வைப் புகழாமலும், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமலும் ஒரு மனிதர் தம்முடைய தொழுகையில் துஆ செய்ததை நபி(ஸல்) அவர்கள் செவியேற்று, ''இவர் அவசரப்பட்டு விட்டார்'' என்று கூறினார்கள். பின்னர் அவரை அழைத்து, ''நீங்கள் தொழும் போது தம்முடைய இரட்சகனைப் புகழ்ந்தும், போற்றியும் ஆரம்பியுங்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுங்கள். அதற்குப் பின் நீங்கள் விரும்பியதைக் கேட்டுக் கொள்ளுங்கள்'' என்று அவர்கள் கூறினார்கள் என ஃபளாலா இப்னு உபைத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, மற்றும் திர்மிதீ
இது திர்மிதீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
337 ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்கள் மீது ஸலவாத் கூறுமாறு இறைவன் கட்டளையிட்டுள்ளானே, தங்கள் மீது நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது?'' என்று பஷீர் இப்னு ஸஃத்(ரலி) கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் (சிறிது) அமைதியாக இருந்துவிட்டு ''எங்கள் இரட்சகனே! இப்ராஹீம்(அலை) அவர்கள் மீதும் அருள் புரிந்தது போன்று முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக! இன்னும் அம்லத்தார் அனைவரிலும் நீ இப்ராஹீம்(அலை) அவர்கள் மீதும் அருள்வளத்தைப் பொழிந்தது போன்று முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அருள்வளத்தைப் பொழிவாயாக! நிச்சயமாக நீ புகழப்பட்டவனாக இருக்கிறாய்!'' என்று கூறிக்கொள்ளுங்கள். இன்னும் ''உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறிக் கொள்ளுங்கள்'' என்று பதிலளித்தார்கள் என அபூமஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
''நாங்கள் எங்கள் தொழுகையில் தங்கள் மீது ஸலாவத் கூறினால் எப்படிக் கூறுவது?'' என்று கேட்டதாக இப்னு குஸைமாவில் உள்ளது.
338 உங்களில் ஒருவர் இறுதித் தஷ்ஹ்ஹுதில் அமர்ந்தால் நான்கு விஷயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளட்டும். ''எங்கள் இரட்சகனே! நரக வேதனையிலிருந்தும், வாழ்வு, மரணம் ஆகியவற்றின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் 'உங்களில் ஒருவர் இறுதித் தஷஹ்ஹுதை முடித்துக் கொண்டால்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.
339 ''நான் என்னுடைய தொழுகையில் ஓதிக் கொள்வதற்காக எனக்கு ஒருதுஆ கற்றுக் கொடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்டதற்கு ''எங்கள் இரட்சகனே! எனக்கு நானே நிறைய அநியாயம் செய்து கொண்டேன்! பாவங்களை மன்னிக்கக் கூடியவன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை! எனவே, உன் தரப்பிலிருந்து என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக! எனக்குக் கருணை புரிவாயாக! நீயே மன்னிக்கக் கூடியவன்; மற்றும் கிருபையாளன், என்று கூறிக்கொள்'' என்று அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
340 நான் நபி(ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கிறேன். அப்போது அவர்கள் தம்முடைய வலப்பக்கம் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு' என்றும், தம்முடைய இடப் பக்கம் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு என்றும் ஸலாம் கொடுப்பார்கள் என வாயில் இப்னு ஹுஜ்ர்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
341 நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஃபர்ளுத் தொழுகைக்குப் பின்பும் ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை! அவன் தனித்தவன்! அவனுக்கு இணை, துணை எதுவுமில்லை! அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியது! இன்னும் புகழனைத்தும் அவனுக்கே உரியது! மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன்! எங்கள் இரட்சகனே! நீ கொடுப்பதைத் தடுப்பவர் எவரும் இல்லை! நீ தடுப்பதைக் கொடுப்பவர் எவரும் இல்லை! மதிப்புடைய எவரும் இல்லை! மதிப்புடைய எவரும் எந்தப் பலனும் அளிக்க மாட்டார் மதிப்பு உன்னிடமே உள்ளது'' என்று ஓதுவார்கள் என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
342 நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப் பின்பு, இந்தச் சொற்களால் பாதுகாவல் தேடுவார்கள் ''இரட்சகனே! கோழைத்தனத்திலிருந்தும், உலோபித்தனத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். தள்ளாத வயது வரை வாழ்வதிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இவ்வுலகத்தின் குழப்பங்களிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன். இன்னும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்'' (என்று கூறுவார்கள்) என ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
343 நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டால் மூன்று முறை 'அஸ்தக் ஃபிருல்லாஹ்' என்று கூறிவிட்டு (அல்லாஹும்ம அன்தஸ்....) ''இரட்சகனே! நீ எல்லாக் குறைகளிலிருந்தும் பாதுகாப்பானவன். உன்னிடமிருந்தே பாதுகாப்பு கிடைக்கின்றது. மதிப்பும், மகத்துவமும் மிக்கவனே! நீ உயர்ந்து விட்டாய்!'' என்றும் கூறுவார்கள் என ஸவ்பான்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
344 ''ஒவ்வொரு ஃபர்ளு தொழுகைக்குப் பின்பும் 33 முறை ஸுப்ஹானல்லாஹ், மேலும் 33 முறை அல்ஹம்துலில்லாஹ், மேலும் 33 முறை அல்லாஹு அக்பர். இவை மொத்தம் 99 ஆகிறது. இவற்றைக் கூறிக் கொண்டு நூறை நிவர்த்தி செய்வதற்காக 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை துணை இல்லை. அரசாட்சி அனைத்தும் அவனுக்கே இணை துணை இல்லை. அரசாட்சி அனைத்தும் அவனுக்கே உரியன! புகழனைத்தும் அவனுக்கே உரியது! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி வாய்ந்தவன்'' என்று எவர் கூறுகிறாரோ, அவருடைய பாவங்கள் கடல் நுரையளவு இருப்பினும் அவை மன்னிக்கப்படுகின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில் ''அல்லாஹு அக்பர்' என்பது 34 முறை'' என்றும் உள்ளது.
345 ''முஆதே! ஒவ்வொரு பர்ளு தொழுகைக்கும் பின்பு நீ இதைக் கூறாமல் இருக்க வேண்டாம் என உனக்கு நான் உபதேசிக்கிறேன். (அது) ''என் இரட்சகனே! உன்னை நினைவு கூருவதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கும், எனக்கு உதவுவாயாக! (என்பதாகும்)'' என நபி(ஸல்) அவர்கள் தன்னிடம் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸாயீ
346 ''ஒவ்வொரு ஃபர்ளுத் தொழுகைக்கு பின்பு எவர் 'ஆயத்துல் குர்ஸி'' ஓதுகிறாரோ, அவர் சொர்க்கம் செல்வதை மரணத்தைத் தவிர வேறு எதுவும் தடுக்காது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ உமாமா(ரலி) அறிவிக்கிறார். நஸாயீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ''இன்னும் 'குல்ஹு வல்லாஹு அஹத் (ஓதுகிறாரோ) என்பதும் தப்ரானீயில் அதிகப்படியாக உள்ளது.
347 ''என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என மாலிக் இப்ன ஹுவைரிஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி,
348 ''நின்று தொழுங்கள்! உங்களால் இயலவில்லை எனில், உட்கார்ந்து தொழுங்கள்! அதுவும் உங்களால் இயலவில்லை எனில் ஒரு பக்கமாக ஒருக்களித்து (படுத்து) தொழுங்கள்! அதுவும் இயலவில்லை எனில் சமிக்ஞை மூலமாவது தொழுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுசைன்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
349 தலையணை ஒன்றின் மீது தொழுதுவிட்டு அதை எறிந்து விட்ட நோயாளி அதை எறிந்து விட்ட நோயாளி ஒருவரை நோக்கி நபி(ஸல்) அவர்கள், ''உன்னால் முடிந்தால் தரை மீது தொழுது கொள். முடியாவிட்டால், சமிக்ஞை செய்து தொழுது கொள். உன் ருகூவை விட உன் சுஜூதை சுருக்கமானதாக்கிக் கொள்'' என்று கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.
சஜ்தா சஹ்வு, சஜ்தத்துத் திலாவத், சஜ்தத்துஷ்ஷுக்ரு ஆகியவற்றின் விளக்கம்
350 நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு லுஹர் தொழ வைத்தார்கள். முதல் இரு ரக்அத்துகளிலும் நிலையில் நின்றார்கள். இரண்டாவது ரக்அத்தின் முடிவில் உட்காரவில்லை; மக்களும் அவர்களுடன் நிலையில் நின்றார்கள். அவர்கள் (நான்காவது ரக்அத்தையும்) தொழுது முடித்தபோது மக்கள் அவர்கள் சலாம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்திருக்க, அவர்கள் அமர்ந்த படியே தக்பீர் சொல்லி, சலாம் கொடுப்பதற்கு முன்பாக இரு சஜ்தாக்கள் செய்து விட்டு பிறகு சலாம் கொடுத்தார்கள். புகாரி, முஸ்லிம், அஹ்முத், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ மற்றும் இப்னு மாஜா
''அவர்கள் முதல் (தஷஹ்ஹுத்) இருப்பில் உட்கார மறந்து விட்டதற்குப் பகரமாக, உட்கார்ந்து படியே ஒவ்வொரு சஜ்தாவிற்கும் தக்பீர் கூறி (இரு) சஜ்தா செய்தார்கள். மக்களும் அவர்களுடன் சஜ்தா செய்தார்கள்'' மக்களும் அவர்களுடன் சஜ்தா மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது.
351 மாலைத் தொழுகைகளில் ஒன்றைத் தொழுவித்த நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்து விட்டார்கள். பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியில் இருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன் மேல் தம் கையை ஊன்றிக் கொண்டு நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) இருவரும் நபி(ஸல்) அவர்களிடத்தில் அதுபற்றிப் பேசப் பயந்து கொண்டு இருந்த போது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறிய மக்கள் 'தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா?'' எனப் பேசிக் கொண்டார்கள்.
அப்போது நபி(ஸல்) அவர்களால் 'துல்யதைன்' (நீண்ட கைகளை உடையவர்) என அழைக்கப்படும் (அவர்களின் தோழர்) ஒருவர், ''மறந்து விட்டீர்களா?'' அல்லது தொழுகை சுருக்கப்பட்டு விட்டதா?'' எனக் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''நான் மறக்கவும் இல்லை. (தொழுகை) சுருக்கப்படவும் இல்லை'' என்றவுடன், ''இல்லை. நிச்சயமாக தாங்கள் மறந்து விட்டீர்கள்!'' என அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது பின் ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தமது வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தமது வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ, அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து பின்புறம் தலையை உயர்த்தியவாறே தக்பீர் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ''அஸா தொழுகை'' என்று வந்துள்ளது.
352 நபி(ஸல்) அவர்கள், ''துல்யதைன் சொன்னது உண்மை தானா?'' என்று கேட்க, மக்கள், ''ஆமாம்'' என்று சைகை செய்தனர்'' என்று வந்துள்ளது. புகாரி முஸ்லிமிலும் இது வந்துள்ளது. ஆனால் அவற்றில் ''ஆம்'' என்று கூறினர் என வந்துள்ளது.
353 அபூதாவூதின் மற்றோர் அறிவிப்பில், (இரண்டு ரக்அத்துடன் சலாம் சொல்லி விட்டோம் என்ற) உறுதியை அல்லாஹ் ஏற்படுத்திய பின்னர் தான் அவர்கள் சஹ்வு செய்தார்கள்'' என்று வந்துள்ளது.
354 நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழ வைத்தார்கள். தொழுகையில் மறதிக்கு ஆளாம், (அதற்குப் பாரிகாரமாக) இரு சஜ்தாக்கள் செய்தார்கள். பிறகு லாஇலாஹ இல்லல்லாஹ முஹம்மது ரஸுலுல்லாஹ் என்னும் தஷ்ஹ்ஹுதை ஓதிவிட்டு சலாம் கொடுத்தார்கள் என இம்ரான் பின் ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், திர்மிதீ
இது திர்மிதியிலும் ஹஸன் தரத்திலும் ஹாகிமில் 'ஸஹீஹ்' தரத்திலும் பதிவாகியள்ளது.
355 ''உங்களில் ஒருவருக்கு அவருடைய தொழுகையில் சந்தேகம் ஏற்பட்டு நாம் மூன்று ரக்அத் தொழுதோமா என்று தெரியாமல் போய்விட்டால் சந்தேகமான(ரக்அத்)தை விட்டு விட்டு உறுதியான (மூன்று ரக்அத்) தின் அடிப்படையில் செயல்படட்டும். (மீதமுள்ள ஒரு ரக்அத்தைத் தொழுதுவிட்டு) பிறகு சலாம் கொடுப்பதற்கு முன்பாக இரண்டு சஜ்தாக்கள் செய்து கொள்ளட்டும். (அதன் காரணமாக) அவர் ஐந்து ரக்அத்கள் தொழுது விட்டிருந்தாலும், அந்த இரு சஜ்தாக்களும் (ஒரு ரக்அத்தின் ஸ்தானத்தில் இருந்து) அவருடைய தொழுகையை இரட்டைப் படை (ஆறு ரக்அத்) எண்ணிக்கையுடையதாக ஆக்கி விடும். அவர் (இந்த இரு சஜ்தாக்கள் செய்ததன் மூலம்) தொழுகையை (3 ஃ 1 ஆக) நிறைவு செய்தவராக ஆகிவிட்டிருந்தால் அது ஷைத்தானின் மூக்கை மண்ணாக்கி (அவமானப்படுத்தி) விட்டதாக அமைந்துவிடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூசயீத் அல்குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம்
356 நபி(ஸல்) அவர்கள் தொழுது விட்டு ஸலாம் கொடுத்தார்கள். ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தொழுகையில் புதிதாக ஏதோ சேர்த்துள்ளீர்களா?'' என்று வினவப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''அது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு ''தாங்கள் இத்தனை இத்தனை (ரக்அத்கள்) தொழ வைத்தீர்கள்'' என்று மக்கள் (குறிப்பிட்டுக்) கூறினார்கள். (உடனே) தம்முடைய கால்களை திருப்பிக் கொண்டு கிப்லாவை முன்னோக்கி இரண்டு ஸஜ்தா செய்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்னர் மக்களின் பக்கம் திரும்பி, ''தொழுகையில் எதுவும் அதிகப்படுத்தப்பட்டால் நான் உங்களுக்கு நிச்சயம் தெரிவித்திருப்பேன். ஆனால் நானும் உங்களைப் போன்று ஒரு மனிதனேயன்றி வேறில்லை. நீங்கள் மறப்பது போன்றே நானும் மறந்துவிடுகிறேன். எப்போது நான் மறந்து விடுகிறனோ, அப்போது நீங்கள் எனக்கு நினைவூட்டுங்கள்! உங்களில் எவருக்கேனும் தொழுகையில் சந்தேகம் வந்தால் அவர் உறுதியானதை ஆராய்ந்து எடுத்துக் கொண்டு மறதிக்காக இரண்டு ஸஜ்தா செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
357 ''தொழுகையைப் பூர்த்தி செய்து விட்டு, பின்னர் ஸலாம் கொடுத்துவிட்டு, (இரண்டு) ஸஜ்தா மறதிக்காகச் செய்யட்டும்'' என்று புகாரியின் மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
358 முஸ்லிமுடைய அறிவிப்பில் ஸலாம் மற்றும் பேச்சுக்களுக்குப் பின் இரண்டு ஸஜ்தா மறதிக்காகச் செய்தார்கள் என்று உள்ளது.
359 ''எவரேனும் தன் தொழுகையில் சந்தேகம் கொண்டால் அவர் ஸலாம் கொடுத்த பின் இரண்டு ஸஜ்தா (மறதிக்காக) செய்து கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) வாயிலாக மர்ஃபூஃ எனும் தரத்தில் அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸாயீயில் உள்ளது.
இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
360 உங்களில் ஒருவர் இரண்டு ரக்அத்துக்கள் தொழும் போது (இரண்டாவது ரக்அத்தில்) தஷஹ்ஹுதில் உட்காரமல்) சந்தேகம் கொண்டால், அவர் முழுமையாக எழுந்து விட்டிருந்தால் அப்படியே நின்று விடட்டும். திரும்ப வேண்டாம். அதனால் அவர் (இறுதியில்) இரண்டு ஸஜ்தா செய்ய வேண்டியதில்லை என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், இப்னு மாஜா மற்றும் தாரகுத்னீ
இங்கு தாரகுத்னீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
361 ''இமாமிற்குப் பின்னால் நின்று தொழுபவர் மறதிக்கு ஆளானால் அவர் மீது (ஸஜ்தா) ஸஹ்வு இல்லை. இமாம் மறந்து விட்டால் இமாம் மீதும் அவருக்கு பின்னால் இருப்போர் மீதும் ஸஜ்தா ஸஹ்வு கடமையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
இது பைஹகீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
362 ''(தொழுகையில் ஏற்படும்) ஒவ்வொரு மறதிக்கும் ஸலாமிற்குப் பின் இரண்டு ஸஜ்தா உள்ளது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸவ்பான்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார். அபூ தாவூத்
இது இப்னு மாஜாவில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
363 ''இதஸ் ஸமாவுன் ஷக்கத்'' மற்றும் 'இக்ரஃ பிஸ்மிரப்பிக்கல்லதீ கலக்' ஆகிய சூராக்கள் ஓதப்பட்ட போது நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஜ்தா செய்துள்ளோம் உள அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
364 'ஸாத்' எனும் அத்தியாயத்தை ஓதும் போது ஸஜ்தா அவசியமில்லை. (ஆனால்) அதில் நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்ய நான் பார்த்துள்ளேன் என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கிறார். புகாரி
365 நபி(ஸல்) அவர்கள் சூரத்துன் நஜ்மில் ஸஜ்தா செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
366 நபி(ஸல்) அவர்களிடம் சூரத்துன் நஜ்மை ஓதிக் காட்டிய போது அவர்கள் அதற்காக ஸஜ்தா செய்யவில்லை என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
367 நபி(ஸல்) அவர்களிடம் சூரத்துன் நஜ்மை ஓதிக் காட்டிய போது அவர்கள் அதற்காக ஸஜ்தா செய்யவில்லை என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
367 சூரத்துல் ஹஜ்ஜிற்கு இரண்டு ஸஜ்தாக்களைக் கொண்டு சிறப்பு வழங்குப்பட்டுள்ளது என காலித் இப்னு மஅதான்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது முர்ஸல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
368 ''எவர் இந்த இரண்டு ஸஜ்தாக்களைச் செய்யவில்லையோ, அவர் இந்த சூராவை ஓதவேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உக்பா இப்னு ஆமிர்(ரலி) வாயிலாக அஹ்மத் மற்றும் திர்மிதீயில் மவ்சூல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
369 ''மக்களே! நிச்சயமாக நாம் ஸஜ்தாவுக்கான இறைவசனங்களைக் கடந்து செல்கின்றோம். அப்போது எவர் ஸஜ்தா செய்தாரோ அவர் சரியாகச் செய்தார். எவர் (ஸஜ்தா) செய்யவில்லையோ, அவர் மீது பாவமில்லை'' என உமர்(ரலி) கூறினார்கள். புகாரி
''(ஸஜ்தா வசனத்தை ஓதும் போது) விரும்பிச் செய்பவரைத் தவிர மற்றவர் மீது அல்லாஹ் ஸஜ்தாவைக் கடமையாக்கவில்லை என்றும் அவர்கள் கூறினார்கள் என முஅத்தாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
370 நபி(ஸல்) அவர்கள் எங்கள் முன்பு குர்ஆன் ஓதும்போது ஸஜ்தா வசனங்களைக் கடந்து சென்றால் 'அல்லாஹு அக்பர்' என்று கூறி ஸஜ்தாச் செய்வார்கள். நாங்களும் அவர்களுடன் ஸஜ்தாச் செய்வோம் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத்
இது லய்யின் (ளஃயீப்) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
371 நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வருமானால், இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காக நிலத்தில் தம் தலையை வைத்து ஸஜ்தா செய்வார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
372 நபி(ஸல்) அவர்கள் நீண்ட ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் தமது தலையை உயர்த்தி ''என்னிடம் ஜிப்ரில் வந்து எனக்கு நற்செய்தி கூறினார்'' (எனவே) அல்லாஹ்விற்று நன்றி செலுத்தும் வண்ணமாக நான் ஸஜ்தாச் செய்தேன்'' என்று அவர்கள் கூறினார்கள் என அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்
இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
373 நபி(ஸல்) அவர்கள் அலீ(ரலி) அவர்களை எமன் நாட்டிற்கு அனுப்பினார்கள். (ஹதீஸ் முழுவதும் சொல்லப்பட்டது) அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்ற செய்தியை, அலீ(ரலி) அவர்கள் (நபி(ஸல்) அவர்களுக்கு) எழுதினார். நபி(ஸல்) அவர்கள் அக்கடிதத்தைப் படித்ததும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக ஸஜ்தாவில் விழுந்து விட்டார்கள் என பரா இப்னு ஆஸிப்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ
இதன் மூலம் புகாரியில் உள்ளது.
உபாரியான தொழுகைகள்
374 நபி(ஸல்) அவர்கள் என்னை நோக்கி, 'என்னிடம் (ஏதாவது) கேள்!'' என்று கூறினார்கள். அதற்கு நான், ''சுவர்க்கத்தில் தங்களது தோழமையை வேண்டுகிறேன்'' என்று கூறினேன். ''இதுவல்லாமல் (வேறு ஏதும் கேள்!)'' என்று அவர்கள் கூறினார்கள். அதற்கு நான், ''(எனக்கு) அதுவே (வேண்டும்)'' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் ''உன் நாட்டம் நிறைவேறிட அதிகம் ஸஜ்தா செய்து எனக்கு உதவி செய்'' என்று கூறினார்கள் என ரபீஆ இப்னு மாலிக் அறிவிக்கிறார். முஸ்லிம்
375 லுஹர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள், அதற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் மக்ரிப் தொழுகைக்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் ஸுப்ஹுவிற்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் (ஆகிய சுன்னத் தொழுகைகளை) நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டேன் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
புகாரி, முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ஜும்ஆவிற்குப் பின்பு வீட்டில் இரண்டு ரக்அத்துக்கள் என்பதும் உள்ளது.
376 ஃபஜ்ருடைய நேரம் வந்து விட்டால் நபி(ஸல்) அவர்கள் சுருக்கமான இரண்டு ரக்அத்துக்களைத் தவிர வேறு எதும் (ஃபர்ளைத் தவிர்த்து) தொழ மாட்டார்கள் என முஸ்லிமில் உள்ளது.
377 'லுஹர்' தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்துக்களையும், ஃபஜ்ர்' தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்களையும் நபி(ஸல்) அவர்கள் (தொழாமல்) விடமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
378 ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டிய அளவு வேறு எந்த உபாரித் தொழுகைக்கும் ஆர்வம் காட்டியதில்லை என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
379 ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துகள், உலகம் மற்றும் அதிலுள்ள அனைத்தையும் விடச் சிறந்தவையாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்துள்ளனர். முஸ்லிம்
380 ''எவர் இரவிலும் பகலிலும் (சுன்னத்தாக உள்ள) பன்னிரெண்டு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ, அதன் காரணமாக அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு வீடு, கட்டப்படுகிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்முல் முஃமினீன் உம்மு ஹபீபா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
மற்றோர் அறிவிப்பில் ''சுன்னத்தான தொழுகை'' என்று உள்ளது.
381 திர்மிதீயில் 380 வது ஹதீஸ் போன்றே உள்ளது. மேலும் லுஹருக்கு முன்பு நான்கு ரக்அத்துக்கள். அதற்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள். இன்னும் மக்ரிபிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் இஷாவிற்குப் பின்பு இரண்டு ரக்அத்துக்கள், இன்னும் ஃபஜ்ர் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் என்பது அதிகமாக உள்ளது.
382 ''எவர் லுஹர் தொழுகைக்கு முன்பு நான்கு ரக்அத்துக்களையும், அதற்குப் பின்பு நான்கு ரக்அத்துகளையும் பேணித் தொழுகின்றாரோ, அல்லாஹ் அவர் மீது நரக நெருப்பை விலக்கி விட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உம்மு ஹபீபா(ரலி) அறிவிக்கிறார்கள். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
383 அஸரு(தொழுகை)க்கு முன்பு எவர் நான்கு ரக்அத்துக்கள் தொழுகிறாரோ அவருக்கு அல்லாஹ் அருள் செய்யட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ
இது திர்மிதீயில் ஹஸன் எனும் தரத்திலும் இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
384 ''மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள! மக்ரிபிற்கு முன்பு தொழுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மூன்றாவது முறை கூறும் போது ''விரும்பியவர்'' எனக் கூறினார்கள். மக்கள் அதை (கண்டிப்பான) சுன்னத்தாக ஆக்கிக் கொள்வதை விரும்பாமல் தான் அப்படிக் கூறினார்கள்'' என்று அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் அல்முஸ்னீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி
385 இப்னு ஹிப்பானுடைய மற்றோர் அறிவிப்பில் மக்ரிபிற்கு முன்பு நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என்று உள்ளது.
386 சூரியன் மறைந்ததும் நாங்கள் இரண்டு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தோம். (அதைக் காணும்) நபி(ஸல்) அவர்கள் அவற்றைக் கட்டாயம் தொழுதாக வேண்டும் எனக் கட்டளையிடவுமில்லை; தொழக் கூடாதென எங்களுக்கு ஏவுபவர்களாகவும் இல்லை என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள் என முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
387 ''சூரத்துல் ஃபாத்திஹா ஓதினார்களா?'' என நான் கேட்கும் அளவிற்கு நபி(ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகைக்கு முன்புள்ள இரண்டு ரக்அத்துக்களையும் சுருக்கமாகத் தொழுவார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
388 நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்தான) இரண்டு ரக்அத்துக்களில் 'குல்யா அய்யுஹல் காஃபிரூன்' மற்றும் 'குல் ஹுவல்லாஹு' ஓதுவார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
389 நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால் வலப் பக்கமாகச் சாய்ந்து விட்டால் வலப்பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.
390 ''உங்களில் எவரேனும் சுப்ஹுத் தொழுகைக்கு முன்பு இரண்டு ரக்அத்துக்கள் தொழுது விட்டால், வலப் பக்கமாக ஒருக்களித்து(சிறிது நேரம்) படுக்கட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், அஹ்மத் மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
391 ''இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களாகும். எவராவது காலையாகி விடும் என்று அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் (வித்ரு) தொழுது கொள்ளட்டும். அது அவர் தொழுத தொழுகையை ஒற்றையாக்கி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
392 ''இரவு மற்றும் பகல் தொழுகைகள் இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அஹ்மத், அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா, நஸயீ.
மேலும் இது இப்னு ஹிப்பானி 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
393 ''ஃபர்ளுத் தொழுகைகளுக்குப் பின்பு சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
394 வித்ருத் தொழுகை முஸ்லிம் மீது அவசியமானதாகும். எவராவது ஐந்து ரக்அத்துக்கள் வித்ரு தொழ விரும்பினால் தொழுது கொள்ளட்டும். எவரேனும் மூன்று ரக்அத்துக்கள் தொழ விரும்பினால் தொழுது கொள்ளட்டும். எவரேனும் ஒரு ரக்அத் தொழ விரும்பினாலும் தொழுது கொள்ளட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூப் அன்சரி(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ மற்றும் இப்னு மாஜா.
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நஸாயீயில் மவ்கூஃப் எனும் தரம் மேலோங்கியள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
395 வித்ருத் தொழுகை கடமையாக்கப்பட்ட (ஃபர்ளு) தொழுகை போன்றதல்ல. ஆனால், நபி(ஸல்) அவர்களால் நிறுவப்பட்ட சுன்னத் ஆகும் என்று அலீ அப்னு அபீதாலிப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீயில் இது ஹஸன் எனும் தரத்திலும், நஸாயீ மற்றும் ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
396 நபி(ஸல்) வேர்ள் ரமளான் இரவில் (பள்ளிவாசலில்) நின்று வணங்கினார்கள். பின்னர் அடுத்துவரும் இரவில் மக்கள் அவர்களை எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அவர்கள் வெளிவரவில்லை. மேலும், ''உங்கள் மீது வித்ரு கடமையாக்கப்பட்டு விடுமென நான் அஞ்சுகிறேன்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான்
397 ''அல்லாஹ் உங்களுக்கு ஒரு தொழுகையை (உங்களின் மற்ற தொழுகைகளுக்கு) வலு சேர்க்கும் விதத்தில் கொடுத்துள்ளான். அது சிவப்பு ஒட்டகங்களை விட உங்களுக்குச் சிறந்ததாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! அது எந்தத் தொழுகை?'' என்று நாங்கள் வினவினோம். ''இஷாவிற்கு, ஃபஜ்ரு நேரம் வருவதற்கும் இடையிலுள்ள வித்ருத் தொழுகை'' என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என காரிஜா இப்னு ஹுதாஃபா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
398 அம்ர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கும் ஹதீஸ் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது. அது 397வது ஹதீஸ் போன்றதாகும். அபூ தாவூத். இது லய்யின் (ளஃயீப்) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
400 அபூஹுரைரா(ரலி) வாயிலாக அஹமதில் இடம் பெற்றுள்ள ஹதீஸ் 399வது ஹதீஸ் ளயீஃப் என்பதற்குச் சாட்சியாக உள்ளது.
401 நபி(ஸல்) அவர்கள் ரமலான் மாதத்திலும், அதுவல்லாத நாட்களிலும் பதினோரு ரக்அத்திற்கு மேல் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் நான்கு ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும் நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அதனுடைய அழகையும், நீளத்தையும் பற்றிக் கேட்க வேண்டியதில்லை. பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். நான் (ஒருமுறை) ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! வித்ருக்கு முன்பு தாங்கள் தூங்குகிறீர்களே!'' என்று கேட்டேன். அதற்கு, ''ஆயிஷாவே! என்னுடைய இரண்டு கண்களும் தூங்கும். என்னுடைய இதயம் தூங்காது'' என்று பதில் கூறினார்களென ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
402 நபி(ஸல்) அவர்கள் இரவில் பத்து ரக்அத்துக்கள் தொழுவார்கள். இன்னும் ஒரு ரக்அத் வித்ருத் தொழுவார்கள். இன்னும் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள். இவை தாம் பதிமூன்று ரக்அத்களாகும் என்று புகாரி, முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் ஆயிஷா(ரலி) வாயிலாக இடம் பெற்றுள்ளது.
403 இன்னும் நபி(ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்துக்கள் தொழுவார்கள். அவற்றில் வித்ரு ஐந்து தொழுவார்கள். இறுதியிலன்றி இடையில் எங்கும் அமர மாட்டார்கள் என்று ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புகாரி, முஸ்லிம்
404 நபி(ஸல்) அவர்கள் இரவு முழுவதும் வித்ருத் தொழுதுள்ளார்கள். அவர்களது வித்ரு சஹ்ரு நேரத்தில் முடிவடையும் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். புகாரி, முஸ்லிம்
405 ''அப்துல்லாஹ்வே! இரவில் நின்று வணங்கிக் கொண்டிருந்து, பின்னர் இரவில் நின்று வணங்குவதை விட்டு விட்ட இன்னாரைப் போன்று ஆகிவிடாதே!'' என்று நபி(ஸல்) அவர்கள் (எச்சரிக்கையாகக்) கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னி ஆஸ்(ரலி) அறிவிக்கிறார்.
406 ''குர்ஆன் வழங்கப்பட்டவர்களே! வித்ருத் தொழுங்கள். (ஏனெனில்) அல்லாஹ் ஒருவன்; அவன் ஒற்றையையே விரும்புகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
407 ''வித்ரை இரவில் உங்களுடைய தொழுகைகளில் இறுதியானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
408 ''ஒரே இரவில் இரண்டு வித்ருகள் இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என தல்க் இப்னு அலீ(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ, மற்றும் திர்மிதீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
409 நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையில் சப்பிஹிஸ்மரப்பிக்கல் அஃலா, குல்யா அய்யுஹல் காஃபிரூன், குல்ஹு வல்லாஹு அஹத் ஆகிய சூராக்களை ஓதுவார்கள் என உபய இப்னு கலஃப்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸாயீ
அவற்றின் இறுதியில் தான் ஸலாம் கொடுப்பார்கள் என்பதும் அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.
410 அபூ தாவூத் மற்றும் திர்மிதீயுடைய (மற்றோர்) அறிவிப்பில் 409வது ஹதீஸ் போன்றே ஆயிஷா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஒவ்வொரு ரக்அத்திற்கும் ஒரு சூராவையும் மற்றும் இறுதி ரக்அத்தில் குல்ஹுவல்லாஹு அஹத் மற்றும் முஅவ்வதத்தைன் சூராவையும் ஓதுவார்கள் (அத்தியாயம் 113, 114) என்றும் உள்ளது.
411 ''நீங்கள் காலை பொழுதையடையும் முன்பு வித்ருத் தொழுது விடுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
412 ''எவரேனும் சுப்ஹை அடைந்தும் வித்ரு தொழவில்லை என்றால் அவருக்கு வித்ரு இல்லை'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு ஹிப்பானில் இடம் பெற்றுள்ளது.
413 ''எவரொருவர் வித்ருத் தொழாமல் தூங்கிவிட்டாரோ அல்லது அதை மறந்துவிட்டாரோ அவர் சுப்ஹை அடைந்ததும் அல்லது ஞாபகம் வந்ததும் தொழுது கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
414 ''இரவின் இறுதிப் பகுதியில் எழ முடியாதென எவர் அஞ்சுகிறாரோ அவர் இரவின் முதல் பகுதியில் வித்ரைத் தொழுது கொள்ளட்டும். எவருக்கு இரவின் இறுதிப்பகுதியில் எழும் நம்பிக்கை உள்ளதோ அவர் வித்ரை இரவின் இறுதிப்பகுதியில் தொழுது கொள்ளட்டும். ஏனெனில், இரவின் இறுதிப் பகுதியின் தொழுகை (இரவு பகல் இரண்டின் வானவர்களாலும்) வருகை தரப்படும். அதுவே சிறந்ததாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். முஸ்லிம்
415 ''ஃபஜ்ர் உதித்துவிட்டால் இரவுத் தொழுகை மற்றும் வித்ருடைய எல்லா நேரமும் போய்விட்டது. நீங்கள் ஃபஜ்ர் உதிப்பதற்கு முன்பு வித்ருத் தொழுது விடுங்கள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
416 நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை நான்கு ரக்அத்துக்கள் தொழுபவர்களாக இருந்தார்கள். இன்னும் அல்லாஹ் நாடிய அளவு அதிகப்படுத்தவும் செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
417 ஆயிஷா(ரலி) வாயிலாக அவர்களிடம் ''அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ளுஹா தொழுவார்களா?'' என்று கேட்கப்பட்டதற்கு, ''பயணத்திலிருந்து அவர்கள் திரும்பினால் தவிர (தொழுதது) இல்லை'' என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
418 ''நபி(ஸல்) அவர்கள் ளுஹா தொழுகை தொழுததை நான் ஒரு போதும் கண்டதில்லை. நிச்சயமாக இப்போது நான் இந்த (தொழுகையைத்) தொழுகின்றேன்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார் என்று முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் உள்ளது.
419 ''வெயிலின் காரணமாக சூடேறிய மணல் (ஒட்டகக் குட்டிகள் கால் வைக்க முடியாத அளவு வெப்பமாக) உள்ள நேரமே அவ்வாபீன் தொழுகைக்குரிய நேரமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜைத் இப்னு அர்கம்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
420 ''எவர் ளுஹாவை பன்னிரெண்டு ரக்அத்துக்களாகத் தொழுதாரோ, அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது காரிப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
421 நபி(ஸல்) அவர்கள் என்னுடைய வீட்டில் நுழைந்தார்கள். பின்னர் எட்டு ரக்அத்துக்கள் ளுஹா தொழுதார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். இப்னு ஹிப்பான். இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜமாஅத் தொழுகை மற்றும் இகாமத்
422 ''தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்தாக தொழுவது இருபத்தி ஏழு மடங்கு சிறப்பானதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
423 புகாரி, முஸ்லிமில், ''இருபத்தைந்து மட்டும் சிறந்ததாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்களின் அறிவிப்பொன்று இடம்பெற்றுள்ளது.
424 இதே போன்று அபூஸயீத்(ரலி) வாயிலாக புகாரியில் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.
425 ''எவனுடைய கரத்தில் என்னுடைய உயிர் இருக்கிறதோ? அவன் மீது ஆணையாக! விறகுக் கட்டைகளை ஒன்று சேர்க்குமாறு கட்டளையிட்டு விட்டு, பின்னர் பாங்கு சொல்லுமாறு கட்டளையிட்டு விட்டு, எவரேனும் ஒருவரை இமாமத் செய்யுமாறு கட்டளையிட்டு விட்டு, தொழுகைக்கு வராதவர்களின் வீடுகளுக்குச் சென்று; அவர்களது இல்லங்களைக் கொளுத்தி விட நான் விரும்புகிறேன். என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! (ஜமாஅத் தொழுகைக்கு வராமலிருக்கும்) அவர்கள் கொழுத்த சதைப்பற்றுள்ள எலும்போ அல்லது அழகான இருகுளம்புக்கறியோ தமக்குக் கிடைக்கும் என்று அறிவார்களாயின் இஷா தொழுகையில் கட்டாயம் கலந்து கொள்வார்கள்'' என்று கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியீன் வாசகம் இடம் பெற்றுள்ளது.
426 ''நயவஞ்சகர்களுக்கு இஷா மற்றும் ஃபஜ்ர் தொழுகைகள் பெரும் சுமையாக உள்ளன. அவை இரண்டிலும் எவ்வளவு நன்மையுள்ளது என்பதை அவர்கள் அறிந்து கொண்டால் (நடக்க முடியாவிட்டாலும்) தவழ்ந்தபடியாவது வருவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
427 நபி(ஸல்) அவர்களிடம் பார்வையற்ற ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! என்னைப் பள்ளிக்குச் அழைத்துச் செல்ல ஒரு வழிகாட்டி இல்லை'' என்று கூறினார். (உடனே) நபி(ஸல்) அவர்கள் அவருக்கு சலுகையளித்து விட்டார்கள். அவர் திரும்பிச் சென்ற போது அவரை (மறுபடியும்) அழைத்தார்கள். பின்னர் ''தொழுகைக்கான பாங்கை நீ செவியேற்கிறாயா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், ''ஆமாம்'' என்று பதிலளித்தார். ''அப்படியானால் அதற்கு பதிலளி (பள்ளிக்கு வா!) என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
428 ''பாங்கைக் கேட்டு விட்டு (தவிர்க்க முடியாத) காரணமின்றி எவரேனும் பள்ளிவாசலுக்கு வரவில்லை எனில், அவருக்குத் தொழுகை இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா, தாரகுத்னீ, இப்னு ஹிப்பான் மற்றும் ஹாகிம்.
இது முஸ்லிமுடைய நிபந்தனைகளுக்குட்பட்ட ஹதீஸாகும். இருப்பினும் சிலர் இது மவ்கூஃப் எனும் தரத்தில் உள்ளது என்று கூறியுள்ளனர்.
429 நான் நபி(ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுதேன். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது, தொழாமல் இரண்டு மனிதர்கள் நின்றிருந்தார்கள். அவர்கள் இருவரையும் நபி(ஸல்) அவர்கள் அழைத்து வரச் சொன்னார்கள். அவர்கள் இருவரும் இதயம் படபடத்தவர்களாக (பயந்த நிலையில்) வந்தார்கள். அவர்கள் இருவரிடமும், ''எங்களுடன் தொழ எது?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவ்விருவரும், ''நாங்கள் எங்கள் இல்லத்தில் தொழுது விட்டோம்'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ''நீங்கள் இருவரும் இவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் இருவரும் உங்களது இல்லங்களில் தொழுதுவிட்டு வந்தபின்பு இமாம் தொழுவதைக் காண்பீர்களாயின், அவருடனும் தொழுது கொள்ளுங்கள். அது உங்கள் இருவருக்கும் உபாரியானதாம் (நஃபிலாம்) விடும்'' என்று கூறினார்கள் என யத் இப்னு அல் அஸ்வத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத் அபூ தாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீ
இது இப்னு ஹிப்பான் மற்றும் திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு அஹமதின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
430 ''பின்பற்றுவதற்காகவே இமாம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தக்பீர் கூறும்போது, நீங்களும் தக்பீர் சொல்லுங்கள். அவர் தக்பீர் கூறாதவரை, நீங்களும் தக்பீர் கூறாதீர்கள். அவர் ருகூஃ செய்யும் போது நீங்களும் ருகூஃ செய்யுங்கள். அவர் ருகூஃ செய்யாதவரை நீங்களும் ருகூஃ செய்யாதீர்கள். அவர் 'சமி அல்லாஹு லிமன் ஹமிதா' என்று சொன்னால் நீங்கள் 'அல்லாஹும்ம ரப்பனா லகல் ஹமது' என்று சொல்லுங்கள். அவர் உட்கார்ந்து தொழும் போது நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத்
இதன் மூலம் புகாரி, முஸ்லிமில் உள்ளது.
431 தன்னுடைய தோழர்கள் பின்னால் நின்றிருப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், ''முன்னால் வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். உங்களுக்குப் பின்னால் (நின்று) இருப்பவர்கள் உங்களைப் பின்பற்றட்டும்'' என்று கூறினார்கள் என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
432 நபி(ஸல்) அவர்கள் ஈச்ச ஓலை வேயப்பட்ட ஒரு கூடார அறை அமைத்து அதில் தொழுதார்கள். அப்போது அவர்களைத் தேடி வந்து பின்தொடர்ந்து வந்து சிலர் அவர்களுடன் தொழுதார்கள். (நீண்ட ஹதீஸ்) அதில், ''பர்; தொழுகையைத் தவிர மற்ற தொழுகையை ஆண்கள் தங்களது வீட்டில் தொழுவதே சிறந்தது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
433 முஆத்(ரலி) தம்முடைய தோழர்களுக்கு இஷா தொழுகை நடத்தும் போது நெடுநேரம் தொழ வைத்தார்கள். (அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள்,) ''முஆதே! நீர் குழப்பத்தை உண்டாக்குபவராக இருப்பதை விரும்புகிறாயா? நீ மக்களுக்கு இமாமத் செய்தால் வஷ்ஷம்ஸி, வளுஹா(91), ஸப்பி ஹிஸ்மரப்பிக்க அஃலா(87) இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க(96), வல்லைலி இதாயக்ஷா (92) (போன்ற சூராக்களை) ஓதுவீராக!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
434 நபி(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு (இமாமத் செய்து) தொழவைத்ததைப் பற்றிக் கூறுகையில்..... ''அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து அபூபக்ர்(ரலி) அவர்களுக்கு இடப் பக்கமாக அமர்ந்து கொண்டார்கள். அமர்ந்த படியே மக்களுக்குத் தொழ வைத்தார்கள். அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களை நின்றவாறு பின் தொடர்ந்தார்கள். மக்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களைப் பின் தொடர்ந்தார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
435 ''உங்களில் எவரேனும் மக்களுக்கு இமாமத் செய்தால் தொழுகையில் (நீண்ட நேரமாக்காமல்) இலேசாக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், அவர்களில் சிறியவர்களும், வயோதிகர்களும், பலவீனர்களும், தேவையுடையோரும் இருக்கிறார்கள். நீங்கள் தனித்து தொழும் போது விரும்பியவாறு தொழுது கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
436 நான் உண்மையாக நபி(ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். அவர்கள், ''தொழுகை நேரம் வந்து விட்டால் உங்களில் எவரேனும் ஒருவர் பாங்கு சொல்லுங்கள். இன்னும் உங்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் இமாமத் செய்யுங்கள்'' என்று கூறினார்கள் என என்னுடைய தந்தை என்னிடம் கூறினார் என்று அம்ர் இப்னு ஸலமா அறிவிக்கிறார். மேலும், ''அப்போது என்னைத் தவிர குர்ஆனை அதிகம் அறிந்தவர் (எங்களில்) எவரும் இல்லை. (எனவே) என்னை இமாமாக முன்னிறுத்துவார்கள். அப்போது (எனக்கு) ஆறு அல்லது ஏழு வயது இருக்கும்'' என்றும் அம்ர் இப்னு ஸலமா(ரழி) கூறினார். புகாரி, அபூ தாவூத் மற்றும் நஸாயீ
437 எவர் குர்ஆனை அதிகம் கற்றுள்ளாரோ, அவா இமாமத் செய்யட்டும். அதில் எல்லோரும் சமமாக இருந்தால் அவர்களில் சுன்னாவை அதிகம் அறிந்தவரும், அதிலும் எல்லோரும் சமமாக இருந்தால் அவர்களில் ஹிஜ்ரத்தில் முந்தியவரும், அதிலும் எல்லோரும் சமமாக இருந்தால், அவர்களில் இஸ்லாத்தை முதலில் ஏற்றவர் (இமாமத் செய்யட்டும்) என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார்.
மற்றோர் அறிவிப்பின்படி (அவர்களில் வயது கூடியவர்) என்றும் மேலும் அதிகாரம் பெற்றவர் இருக்கும் நிலையில் மற்றவர் இமாமத் செய்ய வேண்டாம் என்றும் ஒருவருடைய இல்லத்தில் அவருக்கே உரிய படுக்கையில் அவாரின் அனுமதியின்றி அமர வேண்டாம் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
438 ''பெண் ஆணுக்கும், கிராமவாசி முஹாஜிருக்கும், பாவி இறை நம்பிக்கையாளனுக்கும் (மூஃமினுக்கும்) இமாமத் செய்ய வேண்டாம் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி) வாயிலாக இப்னு மாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
439 ''உங்கள் வாரிசைகளை (ஸஃப்புகளை) சேர்த்துக் கொள்ளுங்கள். இன்னும் அவற்றுக்கிடையில் நெருக்கத்தை ஏற்படுத்துங்கள். இன்னும் கழுத்துக்களை ஒன்றுக்கொன்று நேராக வைத்துக் கொள்ளுங்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
440 ''ஆண்களுடைய சிறந்த வாரிசை மறுமைப்பலன் அதிகமாகக் கிடைக்கும் வாரிசை (ஸஃப்) முதலில் உள்ளதாகும். இன்னும் அதில் சிறப்பற்றது மறுமைப்பலன் குறைவாகக் கிடைக்கும் வாரிசை இறுதியில் உள்ளதாகும். பெண்களுடைய சிறந்த வாரிசை (ஸஃப்) இறுதியில் உள்ளதாகும். அதில் சிறப்பற்றது முதலில் உள்ளதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
441 நபி(ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் தொழுத போது நான் அவர்களுக்கு இடப்பக்கமாக நின்றேன். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் என் தலையை பின்பக்கமாகப் பிடித்து என்னை அவர்களுக்கு வலப்பக்கமாக ஆக்கினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
442 நபி(ஸல்) அவர்களுடன் தொழுத போது அவர்களுக்குப் பின்னால் நானும் ஓர் அனாதையும் நின்றோம். எங்களுக்குப் பின்னால் (என்னுடைய தாய்) உம்முஸுலைம் நின்றார் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
443 தொழுகையில் நபி(ஸல்) அவர்கள் ருகூஃவில் இருக்கும் போது, வாரிசையை (ஸஃப்பை) அடைவதற்கு முன்பே நான் ருகூஃ செய்ததால், ''அல்லாஹ் உம் ஆர்வத்தை அதிகப்படுத்தட்டும். இனிமேல் இவ்வாறு செய்யாதீர்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ பக்ரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
''ஸஃப்பீல் சேராமலேயே ருகூஃ செய்து, பின்னர் (குனிந்தவாறு) நடந்து (ஓடிச்) சென்று ஸஃப்பில் சேர்ந்தேன்'' என்பது அபூ தாவூதில் அதிகமாக இடம் பெற்றுள்ளது.
444 ஸஃப்பிற்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரைத் திரும்பத் தொழுமாறு கட்டளையிட்டாகள் என வாயிலாக இப்னு மஅபத்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் திர்மிதீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
445 ''ஸஃப்பிற்குப் பின்னால் தனித்து நிற்பவருக்குத் தொழுகை இல்லை'' என்று தல்க் இப்னு அலீ(ரலி) அறிவிக்கிறார். இன்னும் வாபிஸா(ரலி) வாயிலாக, ''நீ ஏன் அவர்களுடன் (ஸஃப்பில்) சேரவில்லை?'' அல்லது ஏன் ஒருவரை (பின்னால் உன்னுடன்) இழுத்துக் கொள்ளவில்லை'' என்பது தபரானியில் அதிகமாக உள்ளது.
446 ''தொழுகைக்கான இகாமத்தை நீங்கள் செவியேற்றால் அத்தொழுகையின் பக்கம் செல்லுங்கள். இன்னும் அமைதியைக் கடைபிடியுங்கள். மேலும் விரைந்து (ஓடி) வராதீர்கள். மேலும் தொழுகையில் நீங்கள அடைந்த அளவு தொழுது விட்டு பின்னர் அதை (எழுந்து) பூர்த்தியாக்குங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
447 ''ஒரு மனிதர் தனித்துத் தொழுவதைவிட மற்றொருவருடன் இணைந்து தொழுவது அதிகம் நன்மையானதாகும். மேலும் ஒரு மனிதர் மற்றொரு மனிதருடன் தொழுவதைவிட இரண்டு மனிதர்களுடன் இணைந்து தொழுவது அதிகம் நன்மையானதாகும். இவ்வாறே எவ்வளவு அதிகமாகிறார்களோ அந்த அளவு அல்லாஹ்விடம் சிறந்ததாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபய் இப்னு கஅப்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத், நஸாயீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
448 என்னுடைய வீட்டாருக்கு இமாமத் செய்யுமாறு என்னை நபி(ஸல்) அவர்கள் பணித்தார்கள் என உம்மு வரகா(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத்
இது இப்னு குஸைமாவில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
449 மக்களுக்கு இமாமத் செய்வதற்காக நபி(ஸல்) அவர்கள் இப்னு உம்மி மக்தூம்(ரலி) அவர்களை (மதீனாவின்) பிரதிநிதியாக்கினார்கள். அவர் பார்வையற்றவராக இருந்தார் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத்
450 449வது ஹதீஸ் போன்றே ஆயிஷா(ரலி) வாயிலாக இப்னு ஹிப்பானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
451 ''வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை, என்று எவர் சொன்னாரோ? அவருக்குத் தொழுகை நடத்துங்கள். இன்னும், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை' என்று எவர் சொன்னரோ அவருக்குப் பின்னால் தொழுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
452 ''உங்களில் எவரேனும் தொழுகைக்கு வந்தால் இமாம் எந்நிலையில் (எவ்வாறு செய்து கொண்டு) இருக்கிறாரோ அவரும் அவ்வாறே செய்யட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பயணி மற்றும் நோயாளிகளின் தொழுகை
453 முதலில் தொழுகை இரண்டு ரக்அத்துக்கள் தான் கடமையாக்கப்பட்டது. பின்னர் அது பயணத்திற்காக வைத்துக் கொள்ளப்பட்டது; முழுத் தொழுகை பயணியல்லாதோருக்காக (நான்காகப்) பூர்த்தியாக்கப்பட்டது என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
454 பின்னர் ஹிஜ்ரத் செய்தவுடன் நான்கு ரக்அத்துக்கள் கடமையாகின. மேலும், பயணிகளுக்கு முதல் அளவு தொழுகையே (கடமையாக) இருந்தது என்று புகாரியில் இடம் பெற்றுள்ளது.
455 ''மக்ரிபைத் தவிர, ஏனெனில், அது பகலின் வித்ராகும். இன்னும் சுப்ஹைத் தவிர, ஏனெனில், அதில் கிராஅத் நீண்டதாகும்'' என்பது அஹ்மதில் அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.
456 நபி(ஸல்) அவர்கள் பயணத்தில் கஸராகவும், முழுமையாகவும் தொழுவார்கள். நோன்பு, நோற்றும், நோற்காமலும் இருப்பார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள். ஆயினும், இது மஃலூல் எனும் தரத்திலுள்ளது.
457 ''அல்லாஹ் தனக்கு மாறு செய்வதை எவ்வாறு வெறுக்கிறானோ, அவ்வாறே தான் அளித்த சலுகையை நிறைவேற்றுவதை விரும்புகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்
இது இப்னு குஸைமா மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றோர் அறிவிப்பில், ''எவ்வாறு தன்னால் வலியுறுத்தப்பட்டதை விரும்புகிறானோ'' என்று உள்ளது.
458 நபி(ஸல்) அவர்கள் மூன்று மைல் அல்லது மூன்று ஃபர்ஸக்குகள் பயணம் மேற்கொண்டால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
459 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் மதீனாவிலிருந்து மக்காவிற்குச் சென்றோம். நாங்கள் மதீனா திரும்பும் வரை நபி(ஸல்) அவர்கள் இரண்டு இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
460 ஓர் அறிவிப்பில் நபி(ஸல்) அவர்கள் பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். (அவற்றில்) கஸர் செய்தார்கள் என்றும், மற்றோர் அறிவிப்பில் ''மக்காவில் பத்தொன்பது நாட்கள்'' என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
அபூ தாவூதுடைய ஓர் அறிவிப்பின்படி ''பதினேழு நாட்கள்'' என்றும், மற்றோர் அறிவிப்பில் ''பதினைந்து நாட்கள்'' என்றும் உள்ளது.
461 நபி(ஸல்) அவர்கள் தபூக்கில் இருபது நாட்கள் தங்கி கஸர் செய்தார்கள் என ஜாபிர்(ரலி) வாயிலாக அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் பலமானவர்கள்.
463 நபி(ஸல்) அவர்கள் சூரியன் உச்சி சாய்வதற்கு முன்பு பயணத்தைத் தொடங்கினால், லுஹர் தொழுகையை அஸர் வரை பிற்படுத்துவார்கள். பின்னர் இறங்கி இரண்டையும் சேர்த்துத் தொழுவார்கள்.
(அவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது) சூரியன் உச்சி சாய்ந்து விட்டால் லுஹர் தொழுவார்கள். பின்னர் பயணத்தை தொடங்குவார்கள். புகாரி, முஸ்லிம்
''லுஹர் மற்றும் அஸரைத் தொழுவார்கள். பின்னர் பயணத்தைத் தொடங்குவார்கள்'' என்று ஹாகிமில் உள்ளது.
இன்னும் அபூ நயீம் முஸ்தஹ்ரிஜ் முஸ்லிமில்ல, ''அவர்கள் பயணத்தில் இருக்கும்போது சூரியன் அடிசாய்ந்து விட்டால் லுஹர் மற்றும் அஸரையும் சேர்த்துத் தொழுவார்கள். பின்னர் பயணத்தைத் தொடங்குவார்கள்'' என்று உள்ளது.
464 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தபூக் யுத்தத்திற்குச் சென்றோம். (அப்போது) நபி(ஸல்) அவர்கள் ளுஹரையும், அஸரையும் இன்னும் மக்ரிபையும், இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள் என்று முஆத்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
465 ''நான்கு 'புர்த்'துகளுக்குக் குறைந்த தூரத்தில் - மக்காவிலிருந்து உஸ்ஃபான் வரையுள்ள அளவு - கஸர் செய்யாதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். தாரகுத்னீ
இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் இது இப்னு குஸைமாவில் மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மவ்கூஃப் என்பதே சரியான கருத்தாகும்.
466 ''பாவம் செய்து விட்டால் பாவமன்னிப்புத் தேடிக் கொள்பவர்களும், பயணம் செய்தால் கஸர் செய்து நோன்பை விட்டு விடுபவர்களும் என்னுடைய உம்மத்தில் சிறந்தவர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.
இது தபரானீயில் ளயீஃப் எனும் தரத்திலும், ஸயீத் இப்னு முஸய்யபில் முர்ஸல் எனும் தரத்திலும் பைஹகீயில் முக்தஸராகவும் பதிவாகியள்ளது.
467 எனக்கு மூல வியாதி இருந்தது. எனவே, நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, ''நீ நின்று கொண்டு தொழு! முடியவில்லை என்றால் அமர்ந்து கொண்டு தொழு! அதுவும் முடியவில்லை என்றால் வலப் பக்கமாக ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு தொழு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
468 நபி(ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை நலம் விசாரிக்கச் சென்றார்கள். அந்த நோயாளி தலையணையில் ஸஜ்தா செய்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அதைத் தூக்கி எறிந்தார்கள். பின்னர், ''முடிந்தால் பூமியில் தொழு. இல்லையென்றால், சமிக்ஞை மூலம் தொழுது கொள்! ருகூஃஉவை விட ஸஜ்தாவிற்கு சிரத்தைச் சற்றுத் தாழ்த்திக் கொள்!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ
இது அபூ ஹாதமில் மவ்கூஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
469 நபி(ஸல்) அவர்கள் சம்மணமிட்டுத் தொழுததை நான் பார்த்துள்ளேன் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். நஸாயீ. இது ஹாகிமில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜும்ஆத் தொழுகை
470 ''மக்கள் (தங்களது) ஜும்ஆத் தொழுகைகளை விட்டு விடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களில் முத்திரை பதித்து விடுவான். அவர்கள் (பாவத்தில் மூழ்கி) மதி மறந்தவர்களாய் ஆகி விடுவார்கள்'' என நபி(ஸல்) அவர்கள் மிம்பர் கட்டையின் மீது (நின்று) கூற நாங்கள் கேட்டிருக்கிறோம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மற்றும் அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
471 நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் ஜும்ஆ தொழுது விட்டுத் திரும்புவோம். அப்போது உட்காருவதற்கு சுவாரின் நிழல் இருக்காது என்று ஸலமா இப்னு அல் அக்வாஉ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் ''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆ தொழுவோம். அப்போது சூரியன் உச்சி சாய்ந்து விட்டிருக்கும். பின்னர் நாங்கள் திரும்பி, அமர்வதற்கு நிழலைத் தேடுவோம்'' என்று உள்ளது.
472 ''நாங்கள் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு தான் மதிய ஓய்வு எடுப்போம்; மதிய உணவு அருந்துவோம்'' என்று ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. இன்னும் மற்றோர் அறிவிப்பில், ''நபி(ஸல்) அவர்களது காலத்தில்'' என்றும் உள்ளது.
473 நபி(ஸல்) அவர்கள் நின்று உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது சிரியா நாட்டிலிருந்து வணிகக் கூட்டம் ஒன்று உள்ளது. மக்கள் எல்லோரும் அதன் பக்கம் சென்றனர். பள்ளிவாயிலில் பனிரெண்டு பேர் மட்டுமே இருந்தனர் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
474 ''ஜும்ஆ தொழுகையிலோ அல்லது மற்ற தொழுகையிலோ எவர் ஒரு ரக்அத்தை அடைந்து விட்டாரோ அவர் மீதமுள்ளதைப் பூர்த்தியாக்கட்டும். அவருடைய தொழுகை பூர்த்தியாகி விடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். நஸயீ, இப்னு மாஜா மற்றும் தாரகுத்னீ
இங்கு தாரகுத்னீயின் வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும், இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அபூ ஹாதமில் முர்ஸல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
475 நபி(ஸல்) அவர்கள் நின்று கொண்டு உரையாற்றுவார்கள். பின்னர் (சிறிது நேரம்) அமர்ந்து கொள்வார்கள். பின்னர் எழுந்து நின்று உரையாற்றுவார்கள். அவர்கள் அமர்ந்து கொண்டு உரையாற்றினார்கள் என்று எவராவது உனக்குச் செய்தி கொடுத்தால் அவர் பொய்யுரைத்தார் என ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி)( அறிவிக்கிறார். முஸ்லிம்
476 நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது, அவர்களுடைய கண்கள் சிவந்து விடும். சத்தம் உயர்ந்து விடும். கோபம் அதிகரித்து விடும். காலையிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களைப் பற்றி ஒரு படையை எச்சரிப்பவரைப் பற்றி ஒரு படையை எச்சரிப்பவரைப் போன்று உரையாற்றுவார்கள். பின்னர் ''வேதத்தில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களது வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு (தீய) செயலும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்'' என்று கூறுவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், வெள்ளிக்கிழமை உரையில், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி, அதற்குப் பின்னர் உரத்த குரலில் பேசுவார்கள் என உள்ளது.
முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ''யாரை அல்லாஹ் நேர்வழிப்படுத்திவிட்டானோ, அவரை வழி கெடுப்பவர் யாரும் இல்லை. இன்னும் யாரை அல்லாஹ் வழி கெடுத்து விட்டானோ, அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை'' என உள்ளது.
நஸயீயில் ''ஒவ்வொரு வழி கேடும் நரகத்தையே சேரும்'' என்று உள்ளது.
477 ''தொழுகையை நீட்டிக் கொண்டு, உரையைச் சுருக்கிக் கொள்வது மார்க்க அறிவின் அடையாளமாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என அம்மார் இப்னு யாஸிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
478 நபி(ஸல்) அவர்கள் காஃப்வல் குர்ஆனில் மஜீத் (50வது அத்தியாயம்) என்பதை ஒவ்வொரு ஜும்ஆவிலும் மக்களுக்கு உரையாற்றும் போது மிம்பரில் இருந்தபடி ஓதுவார்கள். நான் இதை (அங்கு) அவர்களிடமின்றி வேறு எவரிடமும் கேட்டு மனனம் செய்யவில்லை என்று உம்மு ஹிஷாம் பின்த் ஹாரிஸா இப்னு அன்னுஃமான்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
477 ''ஜும்ஆ தினத்தில் இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், எவர் பேசுகிறாரோ அவர் புத்தகங்களைச் சுமக்கும் கழுதை போலாவார். மேலும் அவரிடம்; 'அமைதியாக இரு!'' என்று எவர் கூறினாரோ அவருக்கும் ஜும்ஆ இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத்
இது புகாரி மற்றும் முஸ்லிமில் மர்ஃபூஃ எனும் தரத்தில் அபூஹுரைரா(ரலி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
480 ''ஜும்ஆ தினத்தன்று இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் நிலையில் உன்னுடைய நண்பரிடம், ''அமைதியாக இரு!'' என்று நீர் கூறினால், உன்னுடைய ஜும்ஆவை நீ வீணடித்து விட்டாய்''
481 ஜும்ஆ தினத்தன்று (பள்ளிவாசலில்) நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் நுழைந்தார். அவரிடம் ''நீர் தொழுது விட்டீரா?'' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு அவர், ''இல்லை'' என்று சொன்னார். (அதற்கு), ''ஏழு! இரண்டு ரக்அத்துக்கள் தொழு!'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
482 நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆத் தொழுகையில் சூரத்துல் ஜும்ஆ மற்றும் சூரத்துல் முனாஃபிகீன் ஆகியவற்றை ஓதுபவராக இருந்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
483 நபி(ஸல்) அவர்கள் இரண்டு பெருநாட்கள் மற்றும் ஜும்ஆவில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா, மற்றும் 'ஹல் அதாக ஹதீஸுல் காஷியா' ஓதுவார்கள் என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
484 (பெருநாளும் ஜும்ஆ நாளும் ஒரே நாளாக அமைந்து விடும் போது) நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை தொழுது விட்டு ஜும்ஆவிற்கு சலுகையளித்தார்கள். பின்னர், ''எவர் (ஜும்ஆ) தொழ விரும்புகிறாரோ அவர் தொழுது விரும்புகிறாரோ அவர் தொழுது கொள்ளட்டும்'' என்று கூறினார்கள் என ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா.
485 ''உங்களில் எவரேனும் ஜும்ஆ தொழுது விட்டால், அதன் பின்னர் நான்கு ரக்அத்துகள் தொழுது கொள்ளட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்
486 ''நீ ஜும்ஆ தொழுது விட்டால், நீ பேசாத வரை அல்லது வெளியேறாத வரை அதனுடன் வேறு எந்தத் தொழுகையையும் இணைக்காதே! நாங்கள் பேசாத வரை அல்லது வெளியேறாத வரை ஒரு தொழுகையுடன் மற்றொரு தொழுகையை இணைக்கக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அதனையே எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதையும் ஸாயிப் இப்னு யத்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
487 ''எவரொருவர் குளித்து விட்டு, பின்னர் ஜும்ஆவிற்கு வந்து, அவரால் முடிந்த அளவு தொழுதுவிட்டு, பின்னர் இமாம் உரையை முடிக்கும் வரையிலும் அமைதியாக இருந்து, பின்னர் அவருடன் தொழுகின்றாரோ, அவருடைய அந்த ஜும்ஆவுக்கும் இடையில் அவர் செய்யும் பிழைகளும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கு அவர் செய்யும் பிழைகளும் அவருக்காக மன்னிக்கப்படுகின்றன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
488 நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் கூறினார்கள். ''இதில் ஒரு நேரம் இருக்கிறது. ஒரு முஸ்லிம் அடியான் தொழுதபடி நின்றிருக்கும் நேரம் அதன் நேரத்துடன் ஒத்தமைந்து விடுமாயின் அப்போது அவன் அல்லாஹ்விடம் எதைக் கேட்டாலும் அவன் அதை அவனுக்குக் கொடுக்காமல் இருப்பதில்லை என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்னும் தன்னுடைய கரத்தால் அதன் அளவைக் குறைவாகக் சுட்டிக் காண்பித்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
''அந்த நேரம் சொற்பமான நேரம்'' என்றும் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
489 ''அந்நேரம் இமாம் (மிம்பரில்) அமர்ந்ததிலிருந்து தொழுகையை முடிக்கும் வரை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன். என, அபூ புர்தா தன் தந்தை வாயிலாக அறிவிக்கிறார். முஸ்லிம்
இது அபூ புர்தாவின் கூற்று என தாரகுத்னீ தீர்மானித்துள்ளார்.
490 ''அந்நேரம் அஸர் தொழுகையிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை'' என அப்துல்லாஹ் இப்னு ஸலாம் வாயிலாக இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ளது.
491 ''அந்நேரம் அஸர் தொழுகையிலிருந்து சூரியன் அஸ்தமிக்கும் வரை'' என ஜாபிர்(ரழி) வாயிலாக அபூ தாவூத் மற்றும் நஸயீயிலும் இடம் பெற்றுள்ளன.
இது சம்பந்தமாக 40க்கும் மேற்பட்ட கூற்றுகள் புகாரியின் விரிவுரையில் இடம் பெற்றுள்ளது.
492 நாற்பது அல்லது அதற்கும் அதிகமான நபர்கள் இருந்தாலே ஜும்ஆவிலும், முஃமினான தொழுகை உண்டு என்பது சுன்னத்தாக இருந்தது என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார்.
தாரகுத்னீ
இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
493 நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும், முஃமினான ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருந்தார்கள் என, ஸமுரா இப்னு ஜுன்துப்(ரலி) அறிவிக்கிறார். பஸ்ஸார். இது லய்யின் (ளயீஃப்) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
494 நபி(ஸல்) அவர்கள் (குத்பா) உரையில் குர்ஆன் வசனங்கள் சிலவற்றை ஓதுவார்கள். மேலும், மக்களுக்கு உபதேசம் செய்வார்கள் என ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
495 ''அடிமைகள், பெண்கள், குழந்தைகள், நோயாளிகள் ஆகிய நான்கு நபர்களைத் தவிர்த்து ஜும்ஆ தொழுகை, ஜமாஅத்துடன் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் என தாரிக் இப்னு ஷிஹாப் அறிவிக்கிறார்.
அபூ தாவூத் இதை தாரிக் நபி(ஸல்) அவர்களிடமிருந்து செயியேற்கவில்லை என்று அபூ தாவூத் குறிப்பிட்டுள்ளார். ஹாகிமில் மேற்சொன்ன தாரிக் அபூ மூஸா(ரலி) வாயிலாக இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
496 ''பயணி மீது ஜும்ஆ (கடமை) இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். தபரானீ. இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
497 நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றுவிட்டால், நாங்கள் எங்கள் முகங்களை அவர்களை நோக்கி வைத்துக் கொள்வோம் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ
இது ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
498 497வது ஹதீஸிற்கு சாட்சியாக பராஉ(ரலி) வாயிலாக இப்னு குஸைமாவில் இடம் பெற்றுள்ளது.
499 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஜும்ஆவில் பங்கேற்றோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் தடி அல்லது வில்லைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என, ஹகீம் இப்னு ஹஸன்(ரலி) அறிவிக்கிறார். அபூ தாவூத்
அச்சத்தின் போது தொழும் தொழுகை
500 நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் தாத்துர் ரிகாஃ யுத்தத்தின் போது ஸலாத்துல் கவ்ஃப் (அச்சத் தொழுகை) தொழுதோம். அப்போது ஸஹாபாக்களின் ஒரு கூட்டம் ஸஃபை சரி செய்தது. மற்றொரு கூட்டம் எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் அந்தக் கூட்டத்திற்கு ஒரு ரக்அத் தொழுகை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் நின்றே இருந்தார்கள். பின்னர் அந்தக் கூட்டம் எழுந்து நின்று அவர்களாக மீதித் தொழுகையை நிறைவு செய்தார்கள். பின்னர், அவர்கள் எதிரிகள் முன்பு அணியாக நின்றார்கள். பின்னர், இரண்டாவது அணி தொழுகைக்கு வந்தது. அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் (முன்புள்ளவர்களுக்குத் தொழுகை நடத்தியது போன்றே) ஒரு ரக்அத் தொழ வைத்தார்கள். பின்னர் அமர்ந்து கொண்டார்கள். அவர்கள் தங்களது தொழுகையைப் பூர்த்தியாக்கிய பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தார்கள் என ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரலி) மற்றொரு ஸஹாபியிடமிருந்து அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது. ஸாலிஹ் இப்னு கவ்வாத்(ரலி) தன் தந்தையின் வாயிலாக இதை அறிவிப்பதாக இப்னு மன்தஹ் எனம் நூலில் 'ம்தாபுல் மஅரிஃபா' எனும் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
501 நஜ்து கூட்டத்தாருடன் நடந்த போரில் நபி(ஸல்) அவர்களோடு நான் பங்கு கொண்டேன். அப்போது நாங்கள் எதிரிகள் முன்பு நேருக்கு நேர் அணிவகுத்து நின்றோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் எழுந்து நின்று எங்கள் அணிக்குத் தொழுகை நடத்தினார்கள். மற்றோர் அணி எதிரிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. நபி(ஸல்) அவர்கள் தம்முடன் (தொழுகையில்) நின்றோருக்கு ஒரு ருகூஃ மற்றும் இரண்டு ஸஜ்தாக்களை நிறைவேற்றினார்கள். பின்னர் அந்த அணியினர் அதுவரை தொழாமலிருந்த அணியினாரின் இடத்திற்குச் சென்று விட்டனர். அடுதத அணியினர் வந்தனர். நபி(ஸல்) அவர்கள் அவர்களுக்கு ஒரு ருகூஉ மற்றும் இரண்டு ஸஜ்தாக்களை நிறைவு செய்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்னர் அவர்கள் எழுந்து நின்று தனித்தனியாக ஒரு ருகூஃ மற்றும் இரண்டு ஸஜ்தாக்கள் செய்து தொழுகையை நிறைவு செய்தனர் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியின் வாசகம் இடம்பெற்றுள்ளது.
502 நபி(ஸல்) அவர்களுடன் நான் அச்சத் தொழுகையில் பங்கு கொண்டேன். அப்போது நாங்கள் இரண்டு அணிகளை அமைத்தோம். ஒன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்றது. அப்போது எதிரிகள் கிப்லாவிற்கும் எங்களுக்கும் இடையில் இருந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹு அக்பர்' என்று கூறினோம். பின்னர் நபி(ஸல்) அவர்கள் ருகூஃ செய்தார்கள். நாங்களும் ருகூஃ செய்தோம். பின்னர் அவர்கள் தம் தலையை உயர்த்தினார்கள். நாங்களும் தலையை உயர்த்தினோம். பின்னர் அவர்களும் அவர்களையடுத்திருந்த அணியினரும் ஸஜ்தா செய்தார்கள். மற்றோர் அணியினர் எதிரிகளின் நெஞ்சிற்கு முன் நின்றிருந்தனர். ஸஜ்தா முடிந்தவுடன் நபி(ஸல்) அவர்களுடனிருந்த அணியினர் எழுந்தனர் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) மற்றோர் அறிவிப்பின் படி பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தார்கள். முதல் அணியினரும் ஸஜ்தா செய்தனர். மற்றோர் அணியினர் எதிரிகளின் நெஞ்சிற்கு முன் நின்றிருந்தனர். ஸஜ்தா முடிந்தவுடன் நபி(ஸல்) அவர்களுடனிருந்த அணியினர் எழுந்தனர் என்று ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸ் சுருக்கம்) மற்றோர் அறிவிப்பின்படி பின்னர் நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தா செய்தார்கள். முதல் அணியினரும் ஸஜ்தா செய்தனர். அந்த முதல் அணியினர் எழுந்தவுடன் இரண்டாவது அணியினர் ஸஜ்தா செய்தனர். பின்னர், முதல் அணியினர் (தொழுகைக்காகப்) பின்தங்கிட இரண்டாவது அணி (போருக்காக) முன்னால் சென்றனர். அறிவிப்பாளர் இவ்வாறே அறிவித்தார். பின்னர் இறுதியில் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். நாங்களும் ஸலாம் கொடுத்தார்கள். முஸ்லிம்
503 அபூ அய்யாஷ் அஸ்ஸுரகீ(ரலி) வாயிலாக அபூதாவூதில் 502வது ஹதீஸ் போன்றே இடம் பெற்றுள்ளது. அந்தத் தொழுகை உஸ்ஃபான் எனும் இடத்தில் நடந்தது எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
504 ஜாபிர்(ரலி) வாயிலாக நஸயீயில் நபி(ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களில் ஒரு அணியினருக்கு இரண்டு ரக்அத்துக்கள் தொழவைத்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்னர் இரண்டாவது அணியினருக்கும் இரண்டு ரக்அத்துகள் தொழவைத்து விட்டு ஸலாம் கொடுத்தார்கள் என்று பதிவாகியள்ளது.
505 அபூ தாவூதில் 504வது ஹதீஸ் போன்றே அபூ பக்ரா(ரலி) அவர்கள் வாயிலாக இடம் பெற்றுள்ளது.
506 நபி(ஸல்) அவர்கள் அச்சத் தொழுகையை ணரு அணியினருக்கு ஒரு ரக் அத் தொழ வைத்தார்கள். மற்றோர் அணியினருக்கும் ஒரு ரக்அத் தொழ வைத்தார்கள். அவர்கள் தங்களது தொழுகையை (அதற்கு) மேல் பூர்த்தியாக்கவில்லை என ஹுதைஃபா(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத் மற்றும் நஸயீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
507 இப்னு அப்பாஸ்(ரலி) வாயிலாக 506வது ஹதீஸ் போன்றே இப்னு குஸைமாவில் இடம் பெற்றுள்ளது.
508 ''அச்சநிலைத் தொழுகை என்பது அத்திசை நோக்கியாவது ஒரு ரக்அத் தொழுவதாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். இது பஸ்ஸாரில் 'ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
509 ''அச்சநிலைத் தொழுகையில் ஸஜ்தா ஸஹ்வு இல்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர்(ரலி) வாயிலாக மர்ஃபூஃ எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தாரகுத்னீயில் ளயீஃப் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இருபெருநாட்கள் தொழுகை
510 ''எந்த நாளில் மக்கள் நோன்பை நிறைவு செய்து இஃப்தர் செய்கிறார்களோ, அதுவே ஈதல் ஃபித்ருடைய நாளாகும். எந்த நாளில் மக்கள் குர்பானி கொடுக்கிறார்களோ அதுவே குர்பானிப் பெருநாளாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்.
511 நபி(ஸல்) அவர்களிடம் ஒரு சிறு பயணக் கூட்டத்தினர் வந்து தாங்கள் நேற்று இரவு பிறை தாங்கள் நேற்று இரவு பிறை பார்த்தாகச் சொன்னார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் நோன்பை விட்டுவிடுமாறும், மறுநாள் காலை தொழுமிடம் செல்லுமாறும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என, அபூ உமைர் இப்னு அனஸ் இப்னு மாலிக்(ரலி) நபித்தோழர்களாகத் திகழ்ந்த தன்னுடைய சிறிய, பெரிய தந்தையிடமிருந்து அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத்
இங்கு அபூ தாவூதின் வாசகம் இடம் பெற்றுள்ளது. மேலும் இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
512 நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் பேரீச்சம் பழங்கள் சிலவற்றை சாப்பிடாமல் (பெருநாள் தொழுகைக்குக்) காலையில் செல்ல மாட்டார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி
மற்றோர் அறிவிப்பின்படி இது முஅல்லக் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அவர்கள் உண்ணும் (பேரீச்சம்பழம்) ஒற்றைப்படையாக இருக்கும் என்று அஹ்மதில் உள்ளது.
513 நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளன்று சாப்பிடாமல் (தொழுகைக்காக) வெளியேற மாட்டார்கள். குர்பானிப் பெருநாளில் தொழாதவரை சாப்பிட மாட்டார்கள் என்று இப்னு புரைதா தன் தந்தையின் வாயிலாக அறிவிக்கிறார். அஹ்மத், திர்மிதீ
இது இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
514 பருவமடைந்த மற்றும் மாதவிலக்கான (அனைத்துப்) பெண்களையும் பெருநாள் தொழுகைக்கு வெளியே அனுப்புமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். நற்பணிகளில் மற்றும் முஸ்லிம்களுடைய துஆவில் அவர்கள் பங்கு பெறுவதற்காக. ஆனால், மாத விலக்கான பெண்கள், தொழும் இடத்தின் ஓரப்பகுதியில் இருக்க வேண்டும். என உம்மு அதிய்யா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
515 நபி(ஸல்) அவர்கள், அபூ பக்ர்(ரலி) மற்றும் உமர்(ரலி) ஆகியோர் உரை நிகழ்த்துவதற்கு முன்பு இரு பெருநாள்களிலும் தொழுது வந்தார்கள் என, இப்னு உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
516 நபி(ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்போ அல்லது அதற்குப் பின்போ (எதுவும்) தொழவில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ, திர்மிதீ மற்றும் முஸ்னத் அஹ்மத்
517 நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை பாங்கு மற்றும் இகாமத் இன்றி தொழுதார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இதன் மூலம் புகாரியில் உள்ளது.
518 நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு முன்பு எதுவும் தொழ மாட்டார்கள். அவர்கள் தமது இல்லத்திற்குத் திரும்பி விட்டால் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவார்கள் என அபூ ஸயீத்(ரலி) அறிவிக்கிறார். இப்னு மாஜா
இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
519 நோன்புப் பெருநாளிலும், குர்பானிப் பெருநாளிலும் நபி(ஸல்) அவர்கள் தொழுகை மைதானத்திற்கு செல்வார்கள். முதன் முதலில் தொழுகையைத் தான் தொடங்குவார்கள். பின்னர் எழுந்து, மக்களுக்கு முன்பு நிற்பார்கள். இன்னும் மக்கள் தங்களது வாரிசையிலேயே அமர்ந்திருப்பார்கள். அப்போது அவர்களுக்கு உரை நிகழ்த்தி கட்டளை இடுவார்கள் என, அபூ ஸயீத்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
520 ''நோன்புப் பெருநாள் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஏழு தக்பீரும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீரும் உள்ளது. அவை இரண்டிற்கும் பின்னரும் கிராஅத் (குர்ஆனை ஓதுதல்) உண்டு'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அம்ரு இப்னு ஷுஐப் தம் தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். இந்த ஹதீஸ் புகாரியில் உள்ளது. இது திர்மிதீயில் ஸஹீஹ் எனும் தரத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
521 நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் மற்றும் குர்பானிப் பெருநாளில் 'காஃப்' மற்றும் 'இக்தரபாத்' ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என, அபூவாகித் அல் லைஸி(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
522 நபி(ஸல்) அவர்கள் பெருநாளின் போது (செல்லும்) போதும், திரும்பும் போதும்) வெவ்வேறு வழிகளில் சென்று வருவார்கள் என ஜாபிர்(ரழி) அறிவிக்கிறார். புகாரி
523 இப்னு உமர் வாயிலாக அபூதாவூதில் 522-வது ஹதீஸ் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
524 நபி(ஸல்) அவர்கள் மதீனா வந்ததும் அவர்களுக்கு இரண்டு நாட்கள் இருந்தது. அதில் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது, ''அல்லாஹ் அவை இரண்டிற்கும் பதிலாக அவ்விரண்டையும் விடச் சிறந்தவற்றை அளித்து விட்டான். அவை குர்பானிப் பெருநாள் மற்றும் நோன்புப் பெருநாளாகும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என, அனஸ்(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், நஸயீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
525 பெருநாள் தொழுகைக்கு நடந்து செல்வது சுன்னத்தாகும் எ அலீ(ரலி) அறிவிக்கிறார். திர்மிதீ. இது ஹஸன் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
526 ஒரு பெருநாளில் மழை பொழிந்து, அன்று நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் தொழ வைத்தார்கள் என, அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத். இது லய்யின் (ளயீஃப்) எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கிரகணத் தொழுகை
527 நபி(ஸல்) அவர்களது காலத்தில் (அவர்களது மகன்) இப்ராஹீம் அவர்கள் மரணமடைந்த நாளன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது, ''இப்ராஹீமுடைய மரணத்தால் சூரிய கிரகணம் ஏற்பட்டு விட்டது'' என்று மக்கள் கூறலாயினர். அதற்கு, ''சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளில் இரண்டு அத்தாட்சிகளாகும். யாருடைய மரணத்திற்காகவும், வாழ்விற்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டுவிட்டால், அது உங்களை விட்டு விலக்கும் வரை அல்லாஹ்விடம் துஆ செய்யுங்கள்; தொழுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என முகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
புகாரியுடைய மற்றோர் அறிவிப்பில், ''அது வெளிச்சமாகும் வரை'' என்று இடம் பெற்றுள்ளது.
528 ''அது உங்கள் முன்பிருந்து தூரமாகும் வரை தொழுங்கள். இன்னும் துஆ செய்யுங்கள்'' எனும் வாசகம் அபூபக்ரா(ரலி) வாயிலாக புகாரியில் உள்ளது.
529 நபி(ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள். இரண்டு ரக்அத்தில் ஓதினார்கள். இரண்டு ரக்அத்தில் நான்கு ருகூஃவுகள் மற்றும் நான்கு ஸஜ்தாக்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமுடைய வாசகம் இடம் பெற்றுள்ளது. மற்றோர் அறிவிப்பில் ''நபி(ஸல்) அவர்கள் ஓர் அழைப்பாளரை அனுப்பினார்கள். அவர் 'ஜமாஅத் தொழுகை' உள்ளது என்று அழைப்பு விடுத்தார்'' என்று உள்ளது.
530 நபி(ஸல்) அவர்களது காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் (அது நீங்குவதற்காக) தொழுதார்கள். சூரத்துல் பகரா ஓதும் அளவுள்ள நேரம் வரை நீண்ட நேரம் நின்றார்கள். பின்னர் ஒரு நீண்ட ருகூஃ செய்தார்கள். பின்னர் தலையை உயர்த்தி நீண்டநேரம் நின்றார்கள். அது முதலில் நின்றது போல் (நீண்டு) இருந்தது. பின்னர் ஸஜ்தா செய்தார்கள். பின்னர் எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். அது முதலில் நின்ற நேரத்துக்கும் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்டதொரு ருகூஃ செய்தார்கள். அது ருகூஃ உடைய நேரத்தை விடக் குறைவானதாக இருந்தது. பின்னர் தலையை உயர்த்தி நீண்ட நேரம் நின்றார்கள். அது முதலில் நின்ற நேரத்தை விடக் குறைவானதாக இருந்தது. பின்னர் நீண்டதொரு ருகூஃ செய்தார்கள். அது முதல் ருகூஃவுடைய நேரத்தை விடக் குறைவானதாக இருந்தது. பின்னர் தம் தலையை உயர்த்தி, பின்னர் ஸஜ்தா செய்தார்கள். பின்னர் முடித்துக் கொண்டார்கள். அப்போது சூரியன் வெளிச்சமாம் இருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். புகாரி, முஸ்லிம்
இங்கு புகாரியீன் வாசகம் இடம் பெற்றுள்ளது.
முஸ்லிமுடைய மற்றோர் அறிவிப்பில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது ''நபி(ஸல்) அவர்கள் எட்டு ருகூஃவுகளுடனும், நான்கு ஸஜ்தாக்களுடனும் தொழுதார்கள் என்று உள்ளது.
531 அலீ(ரலி) வாயிலாக 530 வது ஹதீஸ் போன்றே அறிவிக்கப்பட்டுள்ளது.
532 ஆறு ருகூஃவுகளுடனும் தொழுதார்கள் என ஜாபிர்(ரலி) வாயிலாக முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது.
533 நபி(ஸல்) அவர்கள் ஐந்து ருகூவுடகளுடனும் நான்கு ஸஜ்தாக்களுடனும் தொழுதார்கள். இரண்டாவது ரக்அத்திலும் அவ்வாறே செய்தார்கள் என உபய்இப்னு கஅப்(ரலி) வாயிலாக அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
534 பலத்த காற்று வீசும் போது நபி(ஸல்) அவர்கள், மண்டியிட்டு அமர்ந்து கொண்டு , ''யா அல்லாஹ்! இதை (எங்களுக்குக்) கருணையாக ஆக்கியருள்! தண்டனையாக ஆக்கிவிடாதே!''என்று பிரார்த்திப்பார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்.
அமர்ந்து கொண்டு, ''யா அல்லாஹ்! இதை (எங்களுக்குக்) கருணையாக ஆக்கியருள்! தண்டனையாக ஆக்கிவிடாதே!'' என்று பிரார்த்திப்பார்கள் என, இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஷ்ஷாஃபிஈ, தப்ரானீ
நபி(ஸல்) அவர்கள் நில நடுக்கத்தின் போது இரண்டு ரக்அத்திலும், ஆறு ருகூவுகளுடனும் தொழுதார்கள். இன்னும், அத்தாட்சிகளுக்கான தொழுகை இவ்வாறு தான்'' என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ
மேற்கண்டவாறே அலீ இப்னு அபீ தாலிப் வாயிலாக ஷாஃபிஈயில் இடம் பெற்றுள்ளது. அதில் கடைசி வாசகம் மட்டும் இல்லை.
மழை வேண்டித் தொழுகை
535 நபி(ஸல்) அவர்கள் எளிய உடையணிந்து, பணிவானவர்களாக, நிதானமான நடையுடன், இறைவனிடம் மன்றாடியவர்களாக (மதீனா நகரை விட்டு) வெளியே சென்றார்கள். மேலும், பெருநாள் தொழுகை தொழுவது போன்று (மழை வேண்டி பிரார்த்தித்தவர்களாக) இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். உங்களது இந்த உரை போன்று உரையாற்றவில்லை என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார். அஹ்மத், அபூ தாவூத், நஸயீ, திர்மிதீ, மற்றும் இப்னு மாஜா
இது திர்மிதீ, அபூ அவானா மற்றும் இப்னு ஹிப்பானில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
536 நபி(ஸல்) அவர்களிடம் மக்கள் மழை பொழியாதிருப்பதைப் பற்றி எடுத்துரைத்தனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுமிடத்திலுள்ள மிம்பருக்கு அனைவரையும் மறுநாள் ஒன்று சேர்க்குமாறு கட்டளையிட்டார்கள். இன்னும் மக்கள் மறுநாள் வெளியேற வேண்டுமென நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். சூரியன் ஓரத்தில் வெளிப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். பின்னர் தக்பீர் கூறினார்கள். இறைவனைப் புகழ்ந்தார்கள். பின்னர், ''மக்களே! நீங்கள் உங்கள் நகரத்தின் வறட்சியைப் பற்றி முறையிட்டீர்கள். அல்லாஹ் அவனிடம் துஆ கேட்குமாறு உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளான். அவன் உங்கள் வேண்டுதலை அங்கீகரித்துக் கொள்வான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர், ''அனைத்துப் புகழும் இறைவனுக்கே! அவன் அம்லங்களின் இரட்சகனாவான். அளவற்ற அருளாளன். நிகரில்லாக் கிருபையுடையவன். தீர்ப்பு நாளின் அதிபதி. வணக்கத்திற்குரியவன் அவனைத் தவிர வேறு யாருமில்லை. அவன் நாடியதைச் செய்வான். எங்கள் இரட்சகனே! நீயே அல்லாஹ்! வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. நீயோ தேவையற்றவன். நாங்களோ (உன்பக்கம்) தேவையுடையவர்கள். எங்கள் மீது மழையைப் பொழியச் செய்வாயாக! நீ எங்கள் மீது இறக்கக் கூடியதை எங்களுக்கு சக்தியாகவும், முழுமையானதாகவும் ஆக்குவாயாக!'' என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர், தமது இரு கரங்களையும் உயர்த்தினார்கள். அவர்களது அக்குளின் வெண்மை தெரியும் அளவு அது மெதுவாக உயர்ந்து கொண்டே போனது. பின்னர். மக்களின் பால் தமது முதுமைகத் திருப்பிக் கொண்டு தம்முடைய போர்வையைத் திருப்பிப் போட்டார்கள். அப்போதும் அவர்கள் தமது இரு கரங்களையும் உயர்த்தியே வைத்திருந்தார்கள். பின்னர், மக்களின் பால் திரும்பி, மிம்பரை விட்டு இறங்கினார்கள். பின்னர் இரு ரக்அத்துக்ள் தொழ வைத்தார்கள். அப்போது அல்லாஹ் வானத்தில் மேகத்தை உண்டாக்கினான். அதில் இடியுடன் சேர்ந்த மின்னலுமிருந்தது. பின்னர் மழை பொழியத் தொடங்கியது என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
537 அப்துல்லாஹ் இப்னு ஸைத் அவர்கள் அறிவித்துள்ள ஸஹீஹ் புகாரியின் ஹதீஸில போர்வை மாற்றிப் போட்ட சம்பவம், ''நபி(ஸல்) அவர்கள் துஆ செய்தவர்களாக கிப்லாவை முன்னோக்கினார்கள். பின்னர், இரண்டு ரக்அத்துக்கள் சத்தமிட்டு ஓதித் தொழ வைத்தார்கள்'' என்று உள்ளது.
538 அபூ ஜஅஃபர் அல் பாம்ர்(ரலி) வாயிலாக தாரகுத்னீயில் ''அவர்கள் தமது போர்வையை பஞ்சம் மாற வேண்டும் என்பதற்காகத் திருப்பிப் போட்டார்கள்'' என்று முர்ஸல் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
539 வெள்ளிக்கிழமையன்று நபி(ஸல்) அவர்கள் நின்று உரையாறிக் கொண்டிருந்த போது பள்ளிவாசலினுள் ஒரு மனிதர் நுழைந்து, ''அல்லாஹ்வின் தூதர் அவர்களே! சொத்துக்கள் நாசமடைந்து விட்டன. வழிகள் அடைக்கப்பட்டு விட்டன. தாங்கள் துஆ செய்யுங்கள்! அல்லாஹ் எங்கள் மீது மழையை இறக்கட்டும்!'' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தமது இரு கரங்களையும் உயர்த்தினார்கள். பின்னர், ''அல்லாஹ்வே! எங்கள் மீது மழையைப் பொழிவாயாக! இரட்சகனே! எங்கள் மீது மழை பொழிவாயாக! என்று கூறினார்கள்'' என, அனஸ்(ரலி) அறிவிக்கிறார். (ஹதீஸின் சுருக்கம்) இதில் மழையை நிறுத்தும்படிப் பிரார்த்தித்ததும் இடம் பெற்றுள்ளது என அறிவிப்பாளர் கூறுகிறார். புகாரி, முஸ்லிம்
540 உமர்(ரலி) அவர்களது காலத்தில் பஞ்சம் ஏற்பட்டால் அப்பாஸ் இப்னு அப்தில் முத்தலிப்(ரலி) அவர்களை மழைக்கு துஆ செய்யுமாறு உமர்(ரலி) அவர்கள் வேண்டுவார்கள். இன்னும், ''அல்லாஹ்வே! நபி(ஸல்) (அவர்களது காலத்தில்) அவர்களின் துஆ மூலம் உன்னிடம் மழையை வேண்டுவோம். நீ எங்களுக்கு மழை பொழிவாய்! இப்போது நாங்கள் நபி(ஸல்) அவர்களின் சிறிய தந்தை வாயிலாகக் கேட்கிறோம் எங்கள் மீது மழையைப் பொழிவாயாக!'' என்றும் கூறுவார்கள். ''அப்போது எங்கள் மீது மழை பொழியப்படும்'' என, அனஸ்(ரழி) அறிவிக்கிறார். புகாரி
541 மழை பொழிந்த போது நாங்கள் நபி(ஸல்) அவர்களுடனிருந்தோம். அப்போது அவர்கள் தமது (மேல்) ஆடையைக் களைந்தார்கள். அவர்களது உடலில் நீர் பட்டது. மேலும், ''இது அல்லாஹ்வுடைய புதிய அன்பாளிப்பாகும்'' என்றும் கூறினார்கள் என அனஸ்(ரழி) அறிவிக்கிறார்கள். முஸ்லிம்
542 நபி(ஸல்) அவர்கள் மழை பொழிவதைக் கண்டால், ''அல்லாஹ்வே! எங்களுக்குப் பலன் தரக்கூடிய மழையைப் பொழிவாயாக!'' என்று கூறுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
புகாரி, முஸ்லிம்
543 நபி(ஸல்) அவர்கள் மழைக்காகப் பிரார்த்தனை செய்யும் போது, ''இரட்சகனே! எங்களுக்காக அடர்த்தியான, இடி இடிக்கக் கூடிய, விரைந்து வரக் கூடிய, சிரித்தவாறு (ரஹ்மத்தாக) வரக் கூடியதைக் கொண்டு வருவாயாக! அதன் மூலம் இலேசான, நீர் அதிகம் வரக் கூடிய மழையைப் பொழியச் செய்வாயாக! நீயே கண்ணியமிக்கவன், கொடையாளன்'' என்று கூறினார்கள் என ஸஅத்(ரலி) அறிவிக்கிறார். அபூ அவானா
இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
544 சுலைமான்(அலை) அவர்கள் மழை பொழிய வேண்டுவதற்காக நகரை விட்டு வெளியேறினார்கள். அப்போது ஓர் எறும்பு மல்லாக்காகப்படுத்துக் கொண்டு தன்னுடைய கால்களை வானத்தின் பால் தூக்கிய நிலையில், ''இரட்சகனே! நாங்கள் உன்னுடைய படைப்புகளில் ஒரு படைப்பாக உள்ளோம். உன் மழை எங்களுக்கு அவசியம் தேவை'' என்று கூறிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள். பின்னர், ''நீங்கள் எல்லோரும் திரும்பிச் செல்லுங்கள். நீங்கள் அல்லாத ஒருவரது துஆவினால் நீர் புகட்டப்பட்டு விட்டீர்கள்'' என்று சுலைமான்(அலை) அவர்கள் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். அஹ்மத்
இது ஹாகிமில் 'ஸஹீஹ்' எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
545 நபி(ஸல்) அவர்கள் மழைக்காக துஆ செய்த போது வானத்தை நோக்கித் தமது பின்னங் கால்களை உயர்த்தினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
ஆடைகள்
546 ''என்னுடைய சமுதாயத்தில் சில கூட்டத்தார், வெட்கத்தலத்தையும், பட்டாடையையும் ஹலால் (அனுமதிக்கப்பட்டது) என எண்ணுவர். (ஆனால், அவையோ விலக்கப்பட்டவை)'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஆமிர் அல் அஷ் அரி(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத்
இதன் மூலம் புகாரியில் உள்ளது.
547 நாங்கள் தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் உண்ண வேண்டாமென்றும், பருக வேண்டாமென்றும், பட்டாடைகள் அணிய வேண்டாமென்றும், அதன் மீது நாங்கள் உட்கார வேண்டாம் என்றும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள் என ஹுதைபா(ரலி) அறிவிக்கிறார். புகாரி
548 இரண்டு விரற்கடை அல்லது மூன்று அல்லது நான்கு விரற்கடைகள் அளவு பட்டுத்துணி சேர்ந்த மற்ற துணிகளைத் தவிர (முழுக்க முழுக்க)பட்டினால் ஆன ஆடைகளையணிவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என உமர்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
549 ஒரு பயணத்தில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் மற்றும் ஸுபைர்(ரலி) ஆகிய இருவருக்கும் நோய் இருந்த காரணத்தினால் பட்டுச்சட்டை அணிவதற்கு நபி(ஸல்) அவர்கள் சலுகையளித்தார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
550 நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஒரு பட்டாடை கொடுத்தார்கள். நான் அதை அணிந்து கொண்டு வெளியில் வந்தபோது நபி(ஸல்) அவர்களது முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் கண்டேன். உடனே நான் அதைக் கிழித்து என் வீட்டுப் பெண்களுக்குப் பங்கிட்டு விட்டேன் என அலீ(ரலி) அறிவிக்கிறார். புகாரி, முஸ்லிம்
இங்கு முஸ்லிமின் வாசகம் இடம் பெற்றுள்ளது.
551 ''தங்கமும், பட்டும் என்னுடைய சமுதாயத்தின் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு விலக்கப்பட்டுள்ளன'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமூஸா(ரழி) அறிவிக்கிறார். அஹ்மத், நஸயீ மற்றும் திர்மிதீ. இது ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
552 ''அல்லாஹ் தன்னுடைய அடியான் மீது அருள்செய்தால், அவனிடம் அந்த அருளின் அடையாளத்தைக் காண விரும்புகிறான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவிக்கிறார். பைஹகீ
553 (எகிப்து மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தயாரிக்கக் கூடிய) ஒருவகைப் பட்டாடையையும், காவி நிற ஆடையையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என அலீ(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
554 நபி(ஸல்) அவர்கள் என்னுடைய உடலில் இரண்டு காவியாடைகளைக் கண்டதும் (கோபத்தால்), ''இதை அணிவதற்கு உன்னுடைய தாயா உனக்குக் கட்டளையிட்டான்?'' என்று கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம்
555 (சட்டையிலுள்ள) பை மற்றும் காலரில் பட்டுத் துணியால் இரண்டு ஒட்டுப் போடப்பட்டிருந்த நபி(ஸல்) அவர்களது ஜிப்பா ஒன்றை அஸ்மா பின்த்து அபீபக்ர்(ரலி) எடுத்தார்கள். அபூதாவூத்
இதன் மூலம் முஸ்லிமில் உள்ளது.
அது ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்தது. அவர் இறந்தபின் நாங்கள் அதைப் பெற்றுக் கொண்டோம். அதை நபி(ஸல்) அவர்கள் அணிவார்கள். அதை நாங்கள் நோய் நிவாரணம் தேடுவதற்காகத் தண்ணீரில் அலசிக் கொள்வோம் என்றும் அஸ்மா பின்த்து அபீபக்ர்(ரலி) வாயிலாகவே முஸ்லிமில் உள்ளது.
''அவர்கள் அதை வெள்ளிக் கிழமையன்றும், தூதுக் குழுவினர் எவரேனும் வரும் போதும் அணிந்து கொள்வார்கள்'' என புகாரி தனது அல் அதபுல் முஃப்ரத் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.