அத்தியாயம் 65/5 திருக்குர்ஆன் விளக்கவுரை

ஸஹீஹுல் புகாரி
அத்தியாயம் 65

திருக்குர்ஆன் விளக்கவுரை 4848 - 4977

(50) ‘காஃப்’ அத்தியாயம்1 

(50:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரஜ்உம் பஈத்’ எனும் சொல்லுக்கு ‘மீண்டும் எழுப்பப்படுவது என்பது (பார)தூரமானது’ என்று பொருள். 

(50:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபுரூஜ்’ எனும் சொல்லுக்கு ‘பிளவுகள்’ என்று பொருள். இதன் ஒருமை ‘ஃபர்ஜ்’ என்பதாகும். 

(50:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மின் ஹப்லில் வரீத்’ எனும் சொற்றொடருக்கு ‘கழுத்து நரம்பைவிட’ என்று பொருள்; இவ்வாறு இரு கழுத்து நரம்புகள் உண்டு. 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(50:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா தன்குஸுல் அர்ளு மின்ஹும்’ எனும் சொற்றொடருக்கு, ‘‘அவர்களின் உடலிலுள்ள எலும்புகளை பூமி எந்த அளவு சாப்பிடுகின்றது என்பதை நாம் அறிந்துள்ளோம்” என்று கருத்து. 

(50:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தப்ஸிரா’ எனும் சொல்லுக்கு ‘அகப் பார்வை’ என்பது பொருள். 

(50:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹப்பல் ஹஸீத்’ (அறுவடைத் தானியம்) என்பது, மணிக்கோதுமையைக் குறிக்கும். 

(50:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பாஸிகாத்’ எனும் சொல்லுக்கு, ‘நீண்ட’ என்பது பொருள். 

(50:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃபஅயீனா’ எனும் சொல்லுக்கு ‘‘அது நமக்கு இயலாத காரியமாகிவிட்டதா?” என்று பொருள். 

(50:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கால கரீனுஹு’ (அவனுடைய கூட்டாளி கூறுவான்) என்பது, ஒவ்வொரு மனிதனுடனும் சாட்டப்பட்டுள்ள ஷைத்தானைக் குறிக்கிறது. 

(50:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப நக்கபூ’ எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் சுற்றித்திரிந்தார்கள்’ என்று பொருள். 

(50:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ் அல்கஸ் ஸம்அ’ (செவிதாழ்த்திக் கேட்பவன்) என்பதற்கு ‘வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் மன ஓர்மையுடன் இருப்பவன்’ என்று பொருள். 

(50:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃப அயீனா’ (நாம் இயலாதவர்களாய் இருந்தோமா என்ன’) என்பதற்கு, ‘உங்களை முதன்முதலாய் படைத்தபோது, அதாவது உங்களது மூலத்தை படைத்தபோது, நாம் இயலாதவர்களாய் இருந்தோமா என்ன?’ என்று பொருள். 

(50:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரகீபுன் அத்தீத்’ எனும் சொல்லுக்கு ‘எழுதிப் பாதுகாப்பதற்குத் தயாராக உள்ள ஒரு கண்காணிப்பாளர்’ என்று பொருள். 

(50:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாயிக்குன் வ ஷஹீத்’ எனும் சொற்றொடருக்கு, ‘விரட்டிக்கொண்டு வருபவரும் சாட்சி அளிப்பவருமான இரு வானவர்கள்’ என்று பொருள். 

(50:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷஹீத்’ எனும் சொல்லுக்கு ‘மன ஓர்மையுடன் கவனிப்பவர்’ என்று பொருள். 

(50:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லுஃகூப்’ எனும் சொல்லுக்கு ‘களைப்பு’ என்பது பொருள். 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(50:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தல்உன் நளீத்’ எனும் சொல்லுக்கு ‘குலைகள் ஒன்றன் மேலொன்றாய் அடுக்கடுக்காய்த் தொங்குகின்ற’ என்று பொருள். கனிகள் பாளைகளில் இருக்கும் வரைதான் அவற்றுக்கு ‘நளீத்’ என்று கூறப்படும். பாளைகளைவிட்டுக் கனிகள் வெளியேறிவிட்டால் அது ‘நளீத்’ எனும் பெயரைப் பெறாது. 

(50:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்பாரஸ் ஸுஜூத்’ எனும் வார்த்தையில் ‘அத்பார்’ என அகரத்திலும், 

(52:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்பாரந் நுஜூம்’ என்பதில் ‘இத்பார்’ என இகரத்திலும்தான் ஆஸிம் (ரஹ்) அவர்கள் ஓதுவார்கள். சிலர் இரண்டையும் இகரத்திலும் (இத்பார்), இன்னும் சிலர் இரண்டையும் அகரத்திலும் (அத்பார்) ஓதியுள்ளனர். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

(50:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யவ்முல் குரூஜ்’ (வெளிப்படும் நாள்) என்பது, மண்ணறைகளிலிருந்து மக்கள் வெளியேறும் நாளைக் குறிக்கும். 

பகுதி: 1 

‘‘இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும்” எனும் (50:30ஆவது) வசனத்தொடர் 

4848. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத்தால்) 'இன்னும் அதிகம் இருக்கிறதா?' என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தன்னுடைய பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, 'போதும்! போதும்!'' என்று கூறும். 2

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

4849. முஹம்மத் இப்னு சீரின்(ரஹ்) அறிவித்தார்

நரகத்திடம் 'உனக்கு வயிறு நிரம்பிவிட்டதா?' என்று கேட்கப்படும். அது, 'இன்னும் அதிகம் இருக்கிறதா?' என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தன்னுடைய பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது 'போதும்! போதும்!'' என்று கூறும்.

இதை அபூ ஹுரைரா(ரலி) நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்தார்கள். (ஆனால், இதன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ சுஃப்யான் அல்ஹிகியாரீ(ரஹ்) பெரும்பாலும் 'அபூ ஹுரைரா(ரலி) கூறினார்'' என்றே (மவ்கூஃபாக) அறிவிப்பார்கள்.

4850. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்துகொண்டன. அப்போது நரகம், 'பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன்'' என்று சொன்னது. சொர்க்கம், 'எனக்கு என்ன நேர்ந்தோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையினருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள்'' என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், 'நீ என்னுடைய அருள். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகிறேன்'' என்று கூறினான். நரகத்திடம் 'நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியார்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன்'' என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தன்னுடைய காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும்போது நரகம் 'போதும்! போதும்!'' என்று கூறும். அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க்கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

பகுதி 2

(நபியே!) சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் (எனும் (திருக்குர்ஆன் 50:39 வது வசனத் தெடர்.)

4851. ஜாரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

ஓர் இரவில் நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, 'இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் உங்களுடைய இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தெழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப்படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள்'' என்று கூறிவிட்டு, 'சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 50:39 வது) வசனத்தை ஓதினார்கள்.3

4852. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

எல்லாத் தெழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே 'சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்...'' எனும் (திருக்குர்ஆன் 50:40 வது) இறை வசனத்தின் கருத்தாகும்.

(51) ‘அத்தாரியாத்’ அத்தியாயம்1 

அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

(51:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாரியாத்’ (புழுதியைக் கிளப்பக்கூடியவை) என்பது, காற்றுகளைக் குறிக்கும். 

அலீ (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(இதன் வினைச்சொல்லும் 18:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) ‘தத்ரூஹுர் ரியாஹ்’ என்பதற்கு ‘காற்றுகள் சிதறடிக்கும்’ என்று பொருள். 

(51:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஃபீ அன்ஃபுஸிக்கும் அஃபலா துப்ஸிரூன்’ (உங்களுக்குள்ளேயும் (பல) சான்றுகள் இருக்கின்றன. (அவற்றை) நீங்கள் ஆராய்ந்துபார்க்க வேண்டாமா?) என்பதற்கு, ‘ஒரேயொரு துவாரத்தின் (வாயின்) வழியாகச் சாப்பிடுகிறாய்; குடிக்கிறாய்; ஆனால், அது இரு துவாரங்கள் வழியாக (கழிவாகி) வெளியேறிச் செல்கின்றன (இதை நீ ஆய்வு செய்து பார்க்க வேண்டாமா?)’ என்பது கருத்தாகும். 

(51:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபராஃக’ எனும் சொல்லுக்கு ‘பிறகு அவர் திரும்பிச் சென்றார்’ என்று பொருள். 

(51:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஸக்கத்’ (அவள் தன் முகத்தில் அடித்துக்கொண்டாள்) என்பதற்கு ‘தன் கை விரல்களை நெருக்கமாகச் சேர்த்துக்கொண்டு அதனால் தன் நெற்றியில் அவள் அறைந்துகொண்டாள்’ என்று பொருள். 

(51:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரமீம்’ எனும் சொல், காய்ந்து மிதிபட்டு சிதைந்துபோன சருகைக் குறிக்கும். 

(51:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல மூசிஊன்’ எனும் சொல்லுக்கு, ‘நாம் அதற்கான சக்தி உடையவராக இருக்கின்றோம்’ என்பது பொருள். இதைப் போன்று (2:236ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அலல் மூசிஇ கதருஹு’ (செல்வந்தன் அவனுக்குத் தக்க அளவும்) என்பதற்கு ‘வசதியுள்ளவன் தன் சக்திக்கேற்பவும்’ என்று பொருள். 

(51:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸவ்ஜைனி’ (இணைஇணையாய்) என்பதன் பொருளாவது: ‘நாம் எல்லாவற்றையும் ஆண், பெண் இணைகளாய்ப் படைத்துள்ளோம். இதைப் போன்றே நிறங்கள் மாறுபட்டிருப்பது, இனிப்பு, புளிப்பு (என சுவைகள் மாறுபட்டிருப்பது) ஆகியனவும் இணைகளே ஆகும். 

(51:50ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஃபிர்ரூ இலல்லாஹ்’ (எனவே, அல்லாஹ்வின் பக்கம் விரைந்துசெல்லுங்கள்) என்பதற்கு, ‘அல்லாஹ்வுக்கு மாறு செய்வதிலிருந்து (விலகி) அவனுக்குக் கீழ்ப்படிவதன் பக்கம் விரைந்து செல்லுங்கள்’ என்று பொருள். 

(51:56ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா லி யஅபுதூன்’ (என்னை அவர்கள் வழிபட வேண்டும் என்பதற்காகவே) என்பதன் கருத்தாவது: ஜின், மனிதன் ஆகிய இரு பிரிவினர்களில் நற்பேறுடையவர்களை நான் படைத்தது, அவர்கள் என் ஏகத்துவத்தை ஏற்று நடப்பதற்காகவே! 

(அறிஞர்களில்) சிலர் கூறுகிறார்கள்: (தன்னுடைய ஏகத்துவத்தை ஏற்று) செயல்பட வேண்டும் என்பதற்காகவே அனைவரையும் இறைவன் படைத்தான். ஆனால், சிலர் ஏற்றனர். இன்னும் சிலர் ஏற்கவில்லை. இந்த வசனத்தில், ‘கதரிய்யா’ எனும் பிரிவினருக்குச் சாதகமான எந்த ஆதாரமும் இல்லை.2 

(51:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதனூப்’ எனும் சொல்லுக்கு, (அகராதியில்) ‘மிகப்பெரிய வாளி’ என்று பொருள். 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

‘ஃதனூப்’ எனும் சொல்லுக்கு ‘பாதை’ என்று பொருள். 

(51:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸர்ரத்’ எனும் சொல்லுக்கு ‘சப்தம்’ என்று பொருள். ‘அகீம்’ எனும் சொல்லுக்கு ‘குழந்தைப் பேறற்றவள்’ என்று பொருள். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

(51:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹுபுக்’ என்பது, வானத்தின் சமன்பாட்டையும் அதன் ரம்மியமான தோற்றத்தையும் குறிக்கும். 

(51:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகம்ரா’ (அறியாமை) எனும் சொல், அவர்கள் வழிகேட்டில் நீடிப்பதைக் குறிக்கும். 

இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(51:53ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அ தவாஸவ்’ எனும் சொல்லுக்கு ‘இவர்கள் அனைவரும் தமக்குள் ஒருமித்த கருத்துக்கொண்டார்களா?’ என்பது பொருள். 

(51:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முசவ்வமா’ எனும் சொல்லுக்கு, ‘அடையாளமிடப்பட்ட’ என்பது பொருள். 

(51:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கு(த்)தில’ எனும் சொல்லுக்கு ‘சாபத்திற்குள்ளாகிவிட்டார்கள்’ என்பது பொருள். 

(52.) ‘அத்தூர்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(52:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்த்தூர்’ எனும் சொல்லுக்கு ‘எழுதப்பட்ட’ என்பது பொருள். 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(52:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தூர்’ எனும் சொல்லுக்கு ‘சிரியாக்’ மொழியில் ‘மலை’ என்று பொருள். 

(52:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரக்கிம் மன்ஷூர்’ எனும் சொல்லுக்கு ‘திறந்த புத்தகம்’ என்பது பொருள். 

(52:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸக்ஃபில் மர்ஃபூஉ’ (உயர்த்தப்பட்ட முகடு) என்பது, வானத்தைக் குறிக்கிறது. 

(52:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஸ்ஜூர்’ எனும் சொல்லுக்கு ‘பற்றி எரியும்’ என்பது பொருள். ‘‘கடலின் தண்ணீர் முழுவதும் வற்றிப்போய், ஒரு துளிகூட எஞ்சாதபோது அதனை எரியவிடப்படும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(52:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா அலத்னாஹும்’ எனும் சொல்லுக்கு ‘நாம் அவர்களுக்குக் குறைத்துவிடமாட்டோம்’ என்பது பொருள். 

முஜாஹித் (ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(52:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தமூரு’ என்னும் சொல்லுக்கு ‘அது துடிதுடித்து நடுங்கியவாறு சுழலும்’ என்று பொருள். 

(52:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹ்லாமுஹும்’ எனும் சொல்லுக்கு ‘அவர்களின் புத்திகள்’ என்று பொருள். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

(52:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்பர்ரு’ எனும் சொல்லுக்கு ‘அன்பு மிக்கவன்’ என்பது பொருள். 

(52:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கிஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘துண்டு’ என்பது பொருள். 

(52:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மனூன்’ (காலத்தின் சுழற்சி) எனும் சொல், மரணத்தைக் குறிக்கும். 

இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(52:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யத்தனாஸஊன’ எனும் சொல்லுக்கு ‘ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிக்கொள்வார்கள்’ என்று பொருள். 

பகுதி 1

4853. உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்

''நான் நோயுற்றுள்ளேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின்போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், 'நீ மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவாயாக!'' என்று கூறினார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அத்தூர்' எனும் (52 வது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தெழுதுகொண்டிருந்தார்கள்.2

4854. ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தெழுகையில் 'அத்தூர்' எனும் (52 வது) அத்தியாயத்தை ஓதக்கேட்டேன். '(படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்துவிட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கிறார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்வதில்லை. உங்களுடைய இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள் தாம் ஆதிக்கம் செலுத்துபவர்களா?' எனும் இந்த (திருக்குர்ஆன் 52:35-37ஆகிய) வசனங்களை நபி அவர்கள் ஓதியபோது, என் இதயம் பறந்துவிடுமளவுக்குப் போய்விட்டது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

''மஃக்ரிப் தெழுகையில் நபி(ஸல்) அவர்கள் 'அத்தூர்' அத்தியாயத்தை ஓதினார்கள்'' என்று முஹம்மத் இப்னு ஜுபைர்(ரஹ்) தம் தந்தை (ஜுபைர் இப்னு முத்யிம்)யிடமிருந்து அறிவித்தார்கள்'' என்பதை மட்டுமே ஸுஹ்ரி(ரஹ்) எனக்கு அறிவித்தார்கள். என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து செவியேற்கவில்லை.

(53) ‘அந்நஜ்ம்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(53:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதூ மிர்ரா’ எனும் சொல்லுக்கு ‘வலிமை வாய்ந்தவர்’ என்பது பொருள். 

(53:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காப கவ்சைன்’ (வில்லின் இரு முனைகளுக்குச் சமமான அளவு) என்பது, வில்லில் நாண் இருக்கும் இடத்தைக் குறிக்கிறது. 

(53:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளீஸா’ எனும் சொல்லுக்கு ‘வளைந்தது’ என்பது பொருள். 

(53:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அக்தா’ எனும் சொல்லுக்கு ‘மேலும் தான் கொடுப்பதை நிறுத்திக்கொண்டான்’ என்று பொருள். 

(53:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரப்புஷ் ஷிஅரா’ என்பதிலுள்ள ‘ஷிஅரா’ எனும் சொல், ‘மிர்ஸமுல் ஜவ்ஸாஉ’ எனும் நட்சத்திரத்தைக் குறிக்கும்.2 

(53:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்லஃதீ வஃப்பா’ (நிறைவேற்றிய அவர்) என்பது, ‘தம்மீது விதியாக்கப்பட்டிருந்த இறையாணைகளை நிறைவேற்றிய இப்ராஹீம் (அலை) அவர்களைக் குறிக்கும். (

53:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸிஃபத்தில் ஆஸிஃபா’ (வரவேண்டிய நேரம் நெருங்கி வந்துவிட்டது) எனும் வாக்கியத்திற்கு ‘மறுமை நெருங்கிவிட்டது’ என்று பொருள். 

(53:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாமிதூன்’ எனும் சொல்லுக்கு ‘ஆடிப்பாடி ஆர்ப்பாட்டம் செய்கிறீர்’ என்று பொருள். ‘‘யமன் நாட்டுப் பாடல்களைப் பாடி ஆரவாரம் செய்தனர் என்பதையே இந்த வசனம் குறிப்பிடுகிறது” என இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். 

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:3 

(53:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃபதுமாரூனஹு’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் அவருடன் தர்க்கம் செய்கிறீர்களா?’ என்று பொருள். (இதை) ‘அஃபதம்ரூனஹு’ என்று ஓதியவர்கள் ‘அவரை நீங்கள் ஏற்க மறுக்கிறீர்களா?’ என்று பொருள் கொள்கின்றனர். 

(53:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா ஸாஃகல் பஸர்’ (பார்வை விலகிவிடவுமில்லை) என்பதிலுள்ள பார்வை என்பது, முஹம்மத் (ஸல்) அவர்களின் பார்வையைக் குறிக்கும். ‘மா தஃகா’ எனும் சொல்லுக்கு ‘‘அவரது பார்வை, தான் கண்டதைக் கடந்துவிடவுமில்லை” என்று பொருள். 

(அடுத்த அத்தியாயத்தில் 54:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதமாரவ்’ எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் (எல்லா எச்சரிக்கைகளையும்) பொய்யனவை எனக் கருதினர்’ என்று பொருள். 

ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(53:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஃதா ஹவா’ எனும் சொல்லுக்கு ‘அது மறையும்போது’ என்று பொருள். 

(53:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃக்னா வ அக்னா’ எனும் வாக்கியத்திற்கு, ‘அவனே செல்வத்தை வழங்கித் தன்னிறைவு அடையச்செய்தான்’ என்று பொருள்

பகுதி 1

4855. மஸ்ரூக் இப்னு அஜ்த(ரஹ்) அறிவித்தார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'அன்னையே முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ் - விண்ணுலகப் பயணத்தின்போது நேரில்) பார்த்தார்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சிலிர்த்துவிட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின?) அவற்றை உங்களிடம் தெரிவிக்கிறவர் பொய்யுரைத்துவிட்டார். முஹம்மத்(ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார்'' என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக), 'கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கிறான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான்'' எனும் (திருக்குர்ஆன் 06:103 வது) வசனத்தையும், 'எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும், வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பிவைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகிறவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 42:51 வது) வசனத்தையும் ஒதினார்கள். மேலும், 'உங்களிடம் முஹம்மது(ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள்'' என்று சொல்கிறவரும் பொய்யே கூறினார்'' என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக,) 'எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை'' எனும் (திருக்குர்ஆன் 31:34 வது) வசனத்தை ஓதினார்கள். மேலும், 'உங்களிடம் முஹம்மத்(ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்துவிடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்துவிட்டார்கள்'' என்று சொன்னவரும் பொய்யே கூறினார்'' என்று கூறிவிட்டு, பிறகு (தம் கருத்திற்குச் சான்றாக) 'தூதரே! உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களின் மீது இறக்கி வைக்கப்பட்டவற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுங்கள்...'' (எனும் 5:67 வது) வசனத்தை ஓதினார்கள். 'மாறாக, முஹம்மத்(ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்களையே அவரின் (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள்'' என்று கூறினார்கள். 4

பகுதி 2

(வளைந்த) வில்லின் இருமுனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது (எனும் 53:9 வது இறைவசனம்.)

வில்லில் நாண் இருக்கும் இடத்தை இது குறிக்கும்.

4856. ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அறிவித்தார்

''(வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்'' எனும் (திருக்குர்ஆன் 53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்வூத்(ரலி) எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி(ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள். 5

பகுதி 3

''பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்'' எனும் (திருக்குர்ஆன் 53:10 வது) இறைவசனம்.

4857. அபூ இஸ்ஹாக் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார்

நான் ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அவர்களிடம், '(வளைந்த) வில்லின் இரண்டு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜீப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார்'' எனும் (திருக்குர்ஆன் 53:9, 10) வசனங்கள் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஜிப்ரீல் (அலை) அவர்களை அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரின் நிஜத் தோற்றத்தில்) முஹம்மத்(ஸல்) அவர்கள் கண்டார்கள்'' என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) எங்களிடம் தெரிவித்தார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 4

உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் (எனும் 53:18 வது இறைவசனம்.)

4858. அர்கமா இப்னு கைஸ் அந்நகஈ(ரஹ்) கூறினார்

''உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார்' எனும் (திருக்குர்ஆன் 53:18 வது) வசனத்தின் கருத்தாவது: அடிவானத்தை அடைத்திருந்த பச்சை விரிப்பு ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கண்டார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். 6

பகுதி 5

(நீங்கள் வழிபட்டுவரும் சிலைகளாகிய) 'லாத்' மற்றும் 'உஸ்ஸா' ஆகியன பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்துண்டா? (எனும் 53:19 வது இறைவசனம்.)

4859. அபுல் ஜவ்ஸா அவ்ஸ் இப்னு அப்தில்லாஹ் அர்ரப்ஈ(ரஹ்) கூறினார்

''லாத், உஸ்ஸா...'' எனும் (திருக்குர்ஆன் 53:19 வது) வசனத்திலுள்ள 'லாத்' என்பது, ஹாஜிகளுக்காக மாவு பிசைந்து தந்து கொண்டிருந்த ஒரு மனிதராவார் என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 7

4860. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! தம் நணபரிடம், 'வா சூது விளையாடுவோம்'' என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும். 8

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 6

மேலும், மூன்றாவதான 'மனாத்' (எனும் விக்ரகத்தைப்) பற்றியும் (நீங்கள் சிந்தித்ததுண்டா? எனும் 53:20 வது இறைவசனம்.)

4861. உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் (''ஹஜ்ஜில் ஸஃபா மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 02:158 வது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன?' என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், 'முஷல்லல் எனும் குன்றில் இருந்து 'மனாத்' எனும் சிலைக்காக 'இஹ்ராம்' கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில், சுற்றி வராமலிருந்தார்கள். அப்போதுதான் 'நிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (எனும் இரண்டு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்...'' எனும் (திருக்குர்ஆன் 02:158 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றி வந்தனர்'' என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்), 'மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) 'குதைத்' எனும் இடத்தில் 'முஷல்லல்' எனும் குன்றிலிருந்த சிலையாகும்'' என்று கூறினர்கள். ஆயிஷா(ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், 'இந்த (திருக்குர்ஆன் 02:158 வது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும், 'ஃகஸ்ஸான்' குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன் 'மனாத்' சிலைக்காக, இஹ்ராம் கட்டி வந்தனர்' என்று தெடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.

ஆயிஷா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், 'மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயிருந்த 'மனாத்' எனும் சிலைக்காக 'இஹ்ராம்' கட்டி வந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் இறைத்தூதர் அவர்களே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றிவராமலிருந்தோம்... என்று கூறினார்'' எனத் தெடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது. 9

பகுதி 7

எனவே, அல்லாஹ்விற்கு நீங்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்திடுங்கள்; அவனையே வழிபடுங்கள் (எனும் 53:62 வது இறைவசனம்.)

4862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (53 வது அத்தியாயமான) 'அந்நஜ்ம்' அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தெடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 10

இப்னு உலைய்யா(ரஹ்) தம் அறிவிப்பில் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை. 11

4863. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(ஓதலுக்குரிய) 'சஜ்தா' அருளப்பெற்ற முதல் அத்தியாயம் 'அந்நஜ்ம்' ஆகும். அதை ஓதியபோது இறைத்தூதர்(ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) 'சஜ்தா' செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர!

அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டு சென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை கண்டேன். பின்னர் அவன் (பத்ருப் போரின் போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை கண்டேன். அவன்தான் உமய்யா இப்னு கலஃப் ஆவான். 12

(54) ‘இக்தரபத்திஸ் ஸாஅத்’ (அல்கமர்) அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தமிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற’ என்பது பொருள். 

(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தஜர்’ எனும் சொல்லுக்கு ‘உச்சகட்ட எச்சரிக்கை’ என்பது பொருள். 

(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர்’ என்பதற்கு, ‘இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது’ என்று பொருள். 

(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஸுர் ‘ எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரி பாகங்களைக் குறிக்கும். 

(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிமன் கான குஃபிர்’ எனும் சொற்றொடருக்கு ‘அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது’ என்று பொருள். 

(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்தளர்’ எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வரவேண்டும்’ என்பதைக் குறிக்கும். 

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்திஈன’ (ஓடிக்கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவோரைக் குறிக்கும். 

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதஆத்தா’ எனும் சொல்லுக்கு ‘தமது கரத்தால் அறுத்துவிட்டார்’ என்பது பொருள். 

(54:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹ்தழிர்’ எனும் சொல்லுக்கு ‘கரிந்து போன மரத்துண்டைப் போல’ என்று பொருள். 

(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர’ எனும் சொல்லுக்கு ‘கண்டித்து விரட்டப்பட்டார்’ என்று பொருள். 

(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃபிர்’ (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம். 

(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தகிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலையான வேதனை’ என்று பொருள். 

(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷிர்’ எனும் சொல்லுக்கு ‘அகந்தையும் ஆணவமும்’ உள்ளவன்’ என்று பொருள். 

பகுதி: 1 

நிலவு பிளந்துவிட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்ன வெனில்), எந்தச் சான்றைப் பார்த் தாலும் புறக்கணிக்கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்) 

4864. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று கூறினார்கள்.2

4865. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி(ஸல்) அவர்கள் எங்களிடம், 'நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்'' என்று (இரண்டு முறை) கூறினார்கள்.

4866. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது. 3

4867. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

மக்காவாசிகள் (நபி(ஸல்) அவர்களிடம்) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டினார்கள். 4

4868. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களின் காலத்தில்) சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.

பகுதி 2

அவமரியாதை செய்யப்பட்டு வந்தவருக்குப் பிரதிபலனாக நம் கண்முன்னே அது (-மரக்கலம்-) மிதந்து சென்று கொண்டிருந்தது. அதனை நாம் (எதிர் காலத்திற்கு) ஒரு சான்றாக விட்டுவைத்தோம். (இதன் மூலம்) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:14, 15ஆகிய இறைவசனங்கள்.)

''நூஹ்(அலை) அவர்களின் மரக்கலத்தை அல்லாஹ் அப்படியேவிட்டுவைத்தான். அதனை இந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் கண்டனர்'' என்று கத்தாதா(ரஹ்) கூறினார்கள். 5

4869. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள 'ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்' எனும் தெடரைப் பிரபலமான முறைப்படி) 'ஃபஹ்ல் மின்(ம்) முத்தம்ர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். ('முஸ்தம்ர்' என்றோ, 'முஸ்ஸம்ர்' என்றோ ஓதவில்லை.)6

பகுதி 3

(மக்கள்) நல்லுணர்வு பெவறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:17, 22, 32, 40ஆகிய வசனங்கள்.)

''இந்த வசனத்தின் மூலத்திலுள்ள 'யஸ்ஸர்னா' எனும் சொல்லுக்கு 'இந்தக் குர்ஆனை ஓதுவதை நாம் எளிதாக்கியுள்ளோம்'' என்று பொருள்'' என முஜாஹித்(ரஹ்) கூறினார்கள்.

4870. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(குர்ஆனின் 54 வது அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ள 'ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்' எனும் தெடரைப் பிரபலமான முறைப்படி) 'ஃஹல் மின்(ம்) முத்தம்ர்' (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி(ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். ('முஸ்தம்ர்' என்றோ, 'முஸ்ஸம்ர்' என்றோ ஓதவில்லை.

பகுதி 4

வேரோடு வீழ்ந்த பேரீச்சமரங்களின் அடிப்பாகங்களைப் போல் (அக்காற்று) மனிதர்களைப் பிடுங்கி எறிந்துவிட்டது. (பார்த்தீர்களா?) நான் அனுப்பிய வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (எனும் 54:20, 21 ஆகிய வசனங்கள்.)

4871. அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ(ரஹ்) அறிவித்தார்

ஒருவர் அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அவர்களிடம் (54 வது) அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தெடரை) 'ஃபஹல் மின் (ம்) முத்தம்ர்' என்று ஓத வேண்டுமா? அல்லது 'முஃதக்கிர்' என்று ஓத வேண்டுமா? என்று கேட்டதற்குவர்கள், 'ஃபஹல் மின் முத்தம்ர்' என்றே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) ஓதக் கேட்டேன். மேலும், 'நபி(ஸல்) அவர்கள், 'ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்' என 'தால்' (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை கேட்டேன் என அப்துல்லாஹ் கூறினார்கள்'' என்று பதிலளித்தார்கள்.

பகுதி 5

உடனே அவர்கள், மிதிபட்ட காய்ந்த வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள். (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:31, 32 ஆகிய வசனங்கள்).

4872. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(54 வது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தெடரை) நபி(ஸல்) அவர்கள் 'ஃபஹல் மின்(ம்) முத்தம்ர்' என்றே ஓதினார்கள்.

பகுதி 6

அதிகாலையில் ஒரு நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது. அப்போது, நான் அனுப்பிய வேதனையையும் எச்சரிக்கையையும் சுவையுங்கள் (என்று நாம் கூறினோம் எனும் 54:38, 39ஆகிய வசனங்கள்).

4873. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (54 வது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தெடரை) 'ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர்' என்றே ஓதினார்கள்.

பகுதி..

உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கிறோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:51 வது இறைவசனம்.)

4874. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் முன்னிலையில் 'ஃபஹ்ல் மின்(ம்) முஸ்ஸம்ர்' என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், 'ஃபஹ்ல் மின்(ம்) முத்தம்ர் (என்றே ஓதுக!)'' என்றார்கள்.

பகுதி 7

''அதிவிரைவில் இக்குழுவினர் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவார்' எனும் (திருக்குர்ஆன் 54:45 வது) இறைவசனம்.

4875. பத்ருப் போரின்போது கூடாரமொன்றில் இருந்தபடி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறைவேற்றித்தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி), நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடி விட்டீர்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவசஉடையுடன் எழுந்து, 'இந்த (இறை நிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்'' எனும் (திருக்குர்ஆன் 54:45 வது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள். 8

பகுதி 8

''தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 54:46 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'அமர்ரு' (மிகவும் கசப்பானது) எனும் சொல், 'மர்ராரத்' (கசப்பு) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

4876. யூசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார்

நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா(ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், 'நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு, 'தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 54:46 வது) இறைவசனம் அருளப்பெற்றது'' என்று கூறினார்கள்.

4877. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் பத்ருப்போரின்போது தம் கூடாரமென்றில் இருந்தபடி, '(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப் போவதில்லை'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூ பக்ர்(ரலி) நபி(ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டு, 'போதும்! இறைத்தூதர் அவர்களே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்'' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, 'இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும்'' எனும் (திருக்குர்ஆன் 54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.9

(55) ‘அர்ரஹ்மான்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(55:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி ஹுஸ்பான்’ எனும் சொல்லுக்கு ‘சூரியனும் சந்திரனும் திரிகையைப் போல் (சுழன்றுகொண்டிருக்கின்றன)” என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘‘குறிப்பிட்ட கணக்கின்படி அவை இரண்டும் இயங்குகின்றன” என்ற பொருளும் உண்டு.) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(55:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அக்கீமுல் வஸ்ன’ (மேலும், நீதியோடு நிறுவையை மேற்கொள்ளுங்கள்) எனும் தொடரை ‘தராசின் முள்ளை (சரியாகக் கவனித்து நிறுங்கள்’ என்பதை)க் கருத்தில் கொண்டே இறைவன் குறிப்பிடுகின்றான். 

(55:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘பருவத்திற்குமுன் பறிக்கப்படும் பயிரின் தழை’ என்பது பொருள். அரபியரின் மொழிவழக்கில் ‘ரைஹான்’ எனும் சொல்லுக்கு ‘உணவு’ என்பது பொருள். ‘உணவு தானியங்களின் இலை’க்கும் ‘ரைஹான்’ என்பர். மனிதன் உணவாகக்கொள்கின்ற தானியங்களுக்கு ‘ஹப்பு’ என்பர். மற்ற (அறிஞர்) சிலர், உணவாக உட்கொள்ளப்படுகின்ற தானியங்களுக்கு ‘அஸ்ஃப்’ என்றும், பச்சையாக உண்ண முடியாதவற்றுக்கு ‘ரைஹான்’ என்றும் கூறினர். மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘கோதுமைப் பயிர்’ என்பது பொருள். ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள், ‘‘ ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘வைக்கோல்’ எனப் பொருள்” என்று கூறினார்கள். அபூமாலிக் அல்ஃகிஃபாரீ (ரஹ்) அவர்கள், ‘‘முதன் முதலாக முளைத்து வரும் நாற்றே ‘அல்அஸ்ஃப்’ ஆகும்; இதனை விவசாயிகள் ‘ஹபூர்’ என்றழைப்பர்” என்று கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள், ‘அல்அஸ்ஃப்’ என்பதற்கு ‘கோதுமைப் பயிர்’ என்பது பொருள்; ‘ரைஹான்’ என்பதற்கு, ‘உணவு’ என்பது பொருள்” என்று கூறுகிறார்கள். 

(55:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மாரிஜ்’ எனும் சொல், நெருப்புப் பற்ற வைக்கும்போது மேலேயெழுந்து பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் எரியும் தீச்சுவாலையைக் குறிக்கும். 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(55:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரப்புல் மஷ்ரிகைனி’ (இரு கீழ்த்திசைகளின் அதிபதி) என்பது, சூரியன் குளிர் காலத்தில் உதயமாகும் கிழக்கையும், கோடை காலத்தில் உதயமாகும் கிழக்கையும் குறிக்கும். இதைப் போன்றே ‘ரப்புல் மஃக்ரிபைனி’ (இரு மேல் திசைகளின் அதிபதி) என்பது, சூரியன் குளிர் காலத்தில் மறைகின்ற மேற்கையும், கோடை காலத்தில் மறைகின்ற மேற்கையும் குறிக்கும். 

(55:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யப்ஃகியானி’ எனும் சொல்லுக்கு, ‘அவை ஒன்றோடொன்று கலக்காது’ என்று பொருள். 

(55:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முன்ஷஆத்’ எனும் சொல், ‘ பாய் உயர்த்திக் கட்டப்பட்ட கப்பல்களைக் குறிக்கும். எந்தக் கப்பலின் பாய் உயர்த்திக் கட்டப்படுவதில்லையோ அந்தக் கப்பல் ‘அல்முன்ஷஅத்’ அன்று. 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(55:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல் ஃபக்கார்’ எனும் சொல்லுக்கு ‘சுட்ட மண்பாண்டம் தயாரிக்கப்படுவதைப் போன்று (இறைவன் முதல் மனிதரைப் படைத்தான்)’ என்று பொருள். 

(55:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்ஷுவால்’ எனும் சொல்லுக்கு ‘தீச்சுவாலை’ என்று பொருள். 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(55:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நுஹாஸ்’ எனும் சொல்லுக்கு ‘பித்தளை’ என்பது பொருள்; இதை உருக்கி நரகவாசிகளின் தலைகள்மீது ஊற்றி வேதனை செய்யப்படும். 

(55:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காஃப மகாம ரப்பிஹி’ (தம்இறைவன்முன் (விசாரணைக்காக) நிற்கவேண்டும் என்பதை அஞ்சியவருக்கு) என்பதன் கருத்தாவது: பாவம் செய்ய முற்படும்போது இறைவனை நினைத்து (அஞ்சி) அதைக் கைவிடுவதாகும். 

(55:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்ஹாம்மத்தானி’ (அடர்த்தியான பச்சை நிறமுடைய இரு சொர்க்கங்கள்) எனும் சொல், அடர்த்தி கூடிய காரணத்தால் கரும்பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் இரு சோலைகளைக் குறிக்கும். 

(55:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸல்ஸால்’ (தட்டினால் ஓசையெழுப்பக்கூடிய களிமண்) எனும் சொல், மணலோடு கலக்கப்பட்ட களிமண், சுட்ட மண்பாண்டங்களைப் போல் தட்டினால் ஓசையெழுப்புவதைக் குறிக்கும். ‘ஸல்ஸால்’ என்பதற்கு, ‘நாற்றமடிக்கும் களிமண்’ என்பது பொருள் என்றும் கூறப்படுகிறது. (‘ஸல்ல’ எனும் சொல்லுக்கும், ‘ஸல்ஸல’ எனும் சொல்லுக்கும் ஒரே பொருள் கொள்ளப்படுகிறது. இதைப் போன்றே ‘ஸர்ர’ எனும் சொல்லுக்கும், ‘ஸர்ஸர’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே.) ‘ஸர்ரல் பாப்’ எனும் வாக்கியத்திற்கு ‘பூட்டப்படும் போது கதவு ஓசையிட்டது’ என்று பொருள். ஸர்ஸரல் பாப் என்பதற்கும் இதுவே பொருள். ‘கப்கப’ எனும் சொல்லுக்கும் ‘கப்ப’ எனும் சொல்லுக்கும் ‘தலைகீழாகக் கவிழ்ந்தது’ என்ற ஒரே பொருள் இருப்பது போலவே (‘ஸல்ல’வும், ‘ஸல்ஸல’வும்) அமைந்துள்ளன. 

(55:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபாக்ஹித்துன் வ நஃக்லுன் வ ரும்மான்’ (ஏராளமான கனிகளும் பேரீச்சம்பழங்களும் மாதுளைகளும்) எனும் சொற்றொடரில் (அறிஞர்) சிலர், ‘‘பேரீச்சமும் மாதுளையும், ‘ஃபாக்கிஹத்’ (கனி) வர்க்கத்தில் கட்டுப்பட்டதல்ல” என்று கூறுகின்றனர். ஆனால், அவை இரண்டும் கனி வர்க்கத்தில் கட்டுப்பட்டதாகவே அரபியர் கருதுகின்றனர். (அப்படியானால், ‘கனிகள்’ (ஃபாக்கிஹத்) என்பதில் பேரீச்சமும் மாதுளையும் அடங்கிவிடுமே! இரண்டையும் தனியாகக் குறிப்பிடக்காரணம் என்ன? பதில்:) இது, 2:238ஆவது வசனத்தைப் போன்றதாகும். அதில் பொதுவாக எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழுதிடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டபிறகு, நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையைத் தனியாகக் குறிப்பிட்டு (அதன் சிறப்பைக் கருதி) வலியுறுத்தியுள்ளான். இதைப் போன்றே, 22:18ஆவது வசனத்தையும் குறிப்பிடலாம். இதில் ‘‘வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவர்கள் அல்லாஹ்விற்குச் சிரவணக்கம் (சஜ்தா) செய்கின்றனர்”எனப் பொதுவாகக் கூறிவிட்டு, இதில் அடங்குபவர்களான மனிதர்களை (அவர்களின் சிறப்பைக் கருதி) தனியாகக் குறிப்பிட்டுள்ளான்: மனிதர்களில் பலரும் அவனுக்குச் சிரவணக்கம் புரிகின்றனர். (இதைப் போன்றுதான், பேரீச்சம் பழத்தையும் மாதுளையையும் அவற்றின்சிறப்பைக் கருதித் தனியாகக் குறிப்பிட்டுள்ளான்.) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(55:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃப்னான்’ எனும் சொல்லுக்கு ‘பல கிளைகள்’ என்று பொருள். 

(55:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ ஜனல் ஜன்னத்தைனி தான்’ (இரு சோலைகளிலும் பறிப்பதற்கேற்பப் பழங்கள் அருகிலிருக்கும்) என்பதன் கருத்தாவது: பறிக்கப்படும் பழங்கள் (பறிப்போருக்கு வசதியாக) மிக அருகிலேயே இருக்கும். 

ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(55:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆலாஃ’ எனும் சொல்லுக்கு ‘இறைவனின் அருட்கொடைகள்’ என்பது பொருள். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘ரப்பிக்குமா துகஃத்திபான்’ (நீங்கள் எதனைப் பொய்யெனக் கூறுவீர்கள்?) எனும் சொற்றொடர், ஜின்கள் மற்றும் மனிதர்களை முன்னிலைப்படுத்திக் கூறப் பட்டுள்ளது. 

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

(55:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷஃன்’ (ஒவ்வொரு நாளிலும் அவன் தன் பொறுப்பில் இருக்கிறான்) என்பதன் கருத்தாவது: பாவங்களை மன்னிக்கின்றான்; துன்பங்களை அகற்றுகின்றான்; சிலருக்கு உயர்வைத் தருகின்றான்; சிலருக்குத் தாழ்வைத் தருகின்றான். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

(55:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பர்ஸக்’ எனும் சொல்லுக்கு ‘தடுப்பு’ என்பது பொருள். 

(55:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அநாம்’ எனும் சொல்லுக்கு ‘படைப்பினம்’ என்பது பொருள். 

(55:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நள்ளாகத்தான்’ எனும் சொல்லுக்கு ‘பீறிட்டுப் பொங்கிக்கொண்டிருக்கும்’ என்று பொருள். 

(55:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதுல் ஜலால்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புடையோன்’ என்று பொருள். 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(55:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மாரிஜ்’ எனும் சொல்லுக்கு, ‘(புகை கலக்காத) தூய நெருப்பு’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான ‘மரஜ’ எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. அவையாவன:) ‘மரஜல் அமீரு ரஇய்யத்தஹு’ என்பதற்கு, ‘அரசன், மக்களில் சிலர் சிலருக்கு அநீதியிழைக்க விட்டுவிட்டான்’ என்று பொருள். ‘மரஜ அம்ருந் நாஸ்’ என்பதற்கு ‘மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டனர்’ என்று பொருள். ‘மரீஜ்’ எனும் சொல்லுக்கு ‘குழப்பமான’ என்று பொருள். ‘மரஜல் பஹ்ரானி’ என்பதற்கு ‘இரு கடல்கள் சங்கமித்துவிட்டன’ என்று பொருள். ‘மரஜ்த்த தாப்பத்தக்க’ எனும் வாக்கியத்திற்கு, ‘ நீ உனது கால்நடையை (மேய்வதற்காக) விட்டுவிட்டாய்’ என்று பொருள். 

(55:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஃப்ருஃகு லக்கும்’ (அதிவிரைவில் நாம் உங்களுக்காக நேரம் எடுத்துக்கொள்வோம்) என்பதற்கு ‘உங்களைக் கேள்வி கணக்குக் கேட்போம்’ என்று பொருள். மற்றபடி, அல்லாஹ் ஒன்றைக் கவனிப்பதால், மற்றொன்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது என்பது பொருளாகாது. இது அரபியரின் வழக்கிலுள்ள ஒரு சொல்லாக்கம் ஆகும். எல்லா வேலையையும் விட்டுவிட்டு உனக்காக நேரம் எடுத்துக்கொள்கிறேன் என்பதைக் குறிக்க இதனை ஆள்வார்கள். நீ கவனமற்று இருப்பதால் உன்னை நான் (கடுமையாகப்) பிடிக்கப்போகிறேன் என்று கூறுவதுபோல் (ஓர் எச்சரிக்கையாகவே இதைக் கூறுவர்.)

பகுதி 1

('அவ்விரு சோலைகள் நீங்கலாக வேறிரு சோலைகளும் (அங்கு) இருக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 55:62 வது) இறைவசனம்.

இரண்டு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியினால் ஆனவை; (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும். 2 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது. 3

என அப்துல்லாஹ் இப்னு கைஸ்(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகைகளி)ல் தங்கவைக்கப்பெற்ற 'ஹூர்' எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72 வது இறைவசனம்).

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(இந்த வசனத்திலுள்ள) 'ஹூர்' எனும் சொல்லுக்குக் 'கன்னங்கரு விழியாள்'' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'மக்ஸூராத்' எனும் சொல்லுக்குத் 'தடுத்து வைக்கப்பட்டவர்கள்' என்று பொருள். அதாவது அவர்கள் தங்களின் பார்வையும், தங்களையும் தங்களின் துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டும் தடுத்துப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.

4879. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர். 4

4880. மேலும், இரண்டு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரண்டு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் தங்கத்தினால் ஆனவை. 'அத்ன்' எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள 'பெருமை' எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.

என அப்துல்லாஹ் இப்னு கைஸ் (அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அறிவித்தார். 5

(56.) ‘அல்வாகிஆ’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(56:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ருஜ்ஜத்’ எனும் சொல்லுக்கு ‘அதிரவைக்கப்படும்’ என்று பொருள். (56:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘புஸ்ஸத்’ (பொடிப்பொடியாக்கப்படும்) எனும் சொல்லுக்கு, ‘மலைகள் பொடிப்பொடியாக ஆக்கப்பட்டு, தண்ணீரில் மாவு குழைக்கப்படுவதைப் போன்று குழைக்கப்பட்டுவிடும்’ என்று பொருள். (56:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்ளூத்’ எனும் சொல்லுக்கு ‘குலைகளின் திரட்சியால் குனிந்து தொங்கும்’ என்றும், ‘முள் இல்லாத’ என்றும் (இரு) பொருள் கொள்ளப்படுகிறது. (56:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வதல்ஹிம் மன்ளூத்’ எனும் சொல்லுக்கு, ‘அடுக்கடுக்காய் குலைகள் கொண்ட வாழைகள்’ என்பது பொருள். (56:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உருப்’ எனும் சொல்லுக்கு ‘தம் துணைவர்மீது காதல் கொண்டவர்கள்’ என்பது பொருள். (56:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸுல்லத்’ எனும் சொல்லுக்கு, ‘உம்மத்’ (சமுதாயம்) என்று பொருள். (56:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஹ்மூம்’ எனும் சொல்லுக்கு ‘கரும் புகை’ என்று பொருள். (56:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஸிர்ரூன’ எனும் சொல்லுக்கு ‘நீடிப்பர்’ என்று பொருள். (56:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹீம்’ எனும் சொல்லுக்கு, ‘அடங்காத் தாகம் கொண்ட ஒட்டகம்’ என்று பொருள். (56:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல முஃக்ரமூன்’ என்பதன் கருத்தாவது: நாம் நிர்ப்பந்தத்திற்குள்ளாகிவிட்டோம். (‘நாம் கடன்காரர்களாகிவிட்டோம்’). (56:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரவ்ஹ்’ எனும் சொல்லுக்கு, ‘சுகம்’, ‘சொர்க்கம்’ ஆகிய பொருள்கள் உள்ளன. ‘ரைஹான்’ எனும் சொல்லுக்கு, (‘உயர்ரக) உணவு’ என்று பொருள். (56:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ நுன்ஷிஅக்கும் ஃபீ மா லா தஅலமூன்’ (நீங்கள் அறிந்திராத உருவில் உங்களை நாம் உண்டாக்க இயலும்) என்பதன் கருத்தாவது: நாம் நாடிய எந்த உருவத்திலும் உங்களைப் படைத்துவிடுவோம். 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: 

(56:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃபக்கஹூன்’ எனும் சொல்லுக்கு, ‘நீங்கள் வியப்படை(ந்து புலம்பு)வீர்கள்’ என்று பொருள். (56:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உருப்’ (காதல் கொண்டவர்கள்) எனும் சொல்லின் ஒருமை, ‘அரூப்’ என்பதாகும். ‘ஸுபுர்’ (என்பதன் ஒருமையாக) ‘ஸபூர்’ அமைந்திருப்பதுபோல. இத்தகைய பெண்ணை மக்காவாசிகள் ‘அரிபா’ என்றும், மதீனாவாசிகள் ‘ஃகனிஜா’ என்றும், இராக்வாசிகள் ‘‘கிலா’ என்றும் பெயரிட்டழைப்பர். (56:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காஃபிளா’ (தாழ்த்தக்கூடியது) எனும் சொல்லுக்கு, ‘மக்களில் ஒரு பிரிவினரை நரகத்திற்குத் தாழ்த்திவிடக்கூடியது’ என்று பொருள். ‘‘ராஃபிஆ’ (உயர்த்தக்கூடியதுமாகும்) எனும் சொல்லுக்கு ‘இன்னொரு பிரிவினரைச் சொர்க்கத்திற்கு உயர்த்திவிடக்கூடியதுமாகும்’ என்று பொருள். (56:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்ளூனத்’ எனும் சொல்லுக்கு, ‘நெய்யப்பட்ட’ என்று பொருள். இச்சொல்லிலிருந்தே ‘வளீன்’ (ஒட்டகத்தின் உடலில் பூட்டப்படும் சேனம்) எனும் சொல் உருவானது. (சேனங்களும் நெய்யப்பட்ட இழைகள்போல் காணப்படுவதால், அதனை ‘வளீன் - நெய்யப்பட்டது’ என்று அழைக்கின்றனர்.) (56:18-ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்வாப்’ (கோப்பைகள்) என்பது, ‘காதோ கைப்பிடியோ இல்லாத கோப்பைகள் ஆகும். ‘அபாரீக்’ (கிண்ணங்கள்) என்பது, ‘காதும் கைப்பிடியும் உள்ள கிண்ணங்களாகும். (56:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்கூப்’ எனும் சொல்லுக்கு (‘எப்போதும்) ஓடிக்கொண்டிருக்கும்’ என்று பொருள். (56:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ ஃபுருஷிம் மர்ஃபூஆ’ (உயர்ந்த விரிப்புகள்) என்பதற்கு ‘ஒன்றன் மேலொன்றாக அடுக்கிவைக்கப்பட்டுள்ள உயரமான விரிப்புகள்’ என்று பொருள். (56:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்ரிஃபீன்’ எனும் சொல்லுக்கு ‘சுகபோகிகள்’ என்று பொருள். (56:86ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மதீனீன்’ எனும் சொல்லுக்கு ‘கணக்குக் கேட்கப்படுபவர்கள்’ என்று பொருள். (56:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மா தும்னூன்’ எனும் சொல்லுக்கு ‘மனைவிமார்களின் கருவறைகளுக்குள் நீங்கள் செலுத்துகின்ற விந்துத் துளி’ என்று பொருள். (56:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முக்வீன்’ எனும் சொல்லுக்கு ‘பயணிகள்’ என்று பொருள். (இது ‘கிய்யு’ எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.) ‘கிய்யு’ எனும் சொல்லுக்கு, ‘மக்கள் வசிக்கும் குடியிருப்புகளற்ற காலி மனைகள்’ என்று பொருள். (56:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி மவாக்கிஇந் நுஜூம்’ எனும் சொல்லுக்கு, ‘(அவ்வப்போது அருளப்பெற்ற) பொருள் தெளிவான குர்ஆன் வசனங்கள்மீது சத்தியமாக’ என்று பொருள் எனவும், ‘நட்சத்திரங்கள் மறையும் இடங்கள்மீது சத்தியமாக’ என்று பொருள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. ‘‘(பன்மையான) ‘மவாகிஉந் நுஜூம்’ என்பதற்கும், (ஒருமையான) ‘மவ்கிஉந் நுஜூம்’ என்பதற்கும் பொருள் ஒன்றே. (56:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்ஹினூன்’ எனும் சொல்லுக்கு ‘பொய்யாக்குகின்றீர்’ என்று பொருள். (68:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லவ் துத்ஹினு ஃப யுத்ஹினூன்’ என்பதற்கு ‘நீங்கள் பொய் சொல்ல வேண்டும் என ஆசைப்பட்டு அவர்களும் பொய் சொல்கிறார்கள்’ என்பது பொருள். (56:91ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப சலாமுல் லக்க மின் அஸ்ஹாபில் யமீன்’ என்பதற்கு ‘உறுதியாக நீங்கள் வலப்பக்கத்தாருள் ஒருவர் என்றே முடிவு செய்யப்பட்டுளீர்கள்’ (முசல்லமன் அன்னக்க மின் அஸ்ஹாபில் யமீன்) என்று பொருள். (‘உறுதியாக’ எனும் பொருளைக் குறிக்கும்) ‘இன்ன’ எனும் இடைச்சொல் வாக்கியத்திலிருந்து அகற்றப்பட்டாலும் பொருளில் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு உதாரணமாக ஒன்றைக் கூறலாம்: ‘‘இன்னும் சற்று நேரத்தில் நான் பயணம் செய்யவிருக்கிறேன்” என்று ஒருவன் சொல்கிறான். உடனே, நீ ‘அன்த்த முஸத்தகுன் முசாஃபிருன் அன் கலீல்’ (நீ சற்று நேரத்தில் பயணம் செய்வது உறுதி) என்று (‘இன்ன’ எனும் இடைச்சொல் இல்லாமல் அதன் பொருளை மட்டும் கவனத்தில் கொண்டு) கூறுவாய். சில நேரங்களில் (‘உமக்கு சாந்தி உண்டாகட்டும்’ என்று) பிரார்த்தனையாகவும் (துஆ) பயன்படுத்தப்படும். மக்களுக்கு ‘தண்ணீர் கிடைக்கட்டும்’ என்பதற்கு ‘ஃப சக்யன்’ (இறைவன் உன் தாகத்தைத் தணிப்பானாக) என்று பிரார்த்தனை செய்யப்படுவதுபோல. (56:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தூரூன்’ எனும் சொல்லுக்கு ‘நீங்கள் நெருப்புப் பற்றவைக்கிறீர்கள்’ என்பது பொருள். (இதன் இறந்தகால தன்மை வினைச் சொல்லான) ‘அவ்ரய்த்து’ என்பதற்கு ‘நான் நெருப்புப் பற்றவைத்தேன்’ என்று பொருள். (56:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லஃக்வ்’ எனும் சொல்லுக்கு ‘வீண் பேச்சு’ என்பது பொருள். ‘தஃஸீம்’ எனும் சொல்லுக்கு ‘பொய்’ என்று பொருள். 

பகுது: 1 ‘‘(படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்” எனும் (56:30ஆவது) இறைவசனம் 

4881. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கிறது. அதன் நிழலில் (மிக வேகமாகப்) பயணிப்பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால், '(படர்ந்து விரிந்த) நீண்ட நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 56:30 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 2

(57) ‘அல்ஹதீத்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (57:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜஅலக்கும் முஸ்தக்லஃபீன’ (அவன் உங்களைப் பிரதிநிதிகளாக ஆக்கியிருக்கின்றான்) என்பதற்கு ‘அதில் குடியிருப்புகளை அமைத்து வாழ்வோராக ஆக்கியிருக்கின்றான்’ என்பது பொருள். (57:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மினழ்ழுலுமாத்தி இலந் நூர்’ (இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்) என்பதற்கு, ‘வழிகேட்டிலிருந்து நல்வழியின் பக்கம்’ என்று பொருள். (57:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ மனாஃபிஉ லிந்நாஸ்’ (மக்களுக்குப் பயன்கள்) எனும் சொல், கேடயத்தையும் ஆயுதத்தையும் குறிக்கின்றது. (57:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மவ்லாக்கும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களுக்குப் பொருத்தமானதாகும்’ என்று பொருள். (57:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிஅல்லா யஅலம அஹ்லுல் கிதாபி’ எனும் வாக்கியத்திற்கு ‘வேதக்காரர்கள் அறிந்துகொள்வதற்காக’ என்று பொருள். (57:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அழ்ழாஹிரு வல்பாத்தின்’ (வெளிப்படையானவனும் மறைவானவனும்) எனும் சொற்றொடருக்கு, ‘‘அவனது இருப்பைப் பற்றிய அறிவு எல்லாப் பொருட்களிலும் வெளிப்படையாக உண்டு; அவனது மெய்மை பற்றிய அறிவு அனைவருக்கும் மறைவானது” என்று பொருள். (57:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன்ழிரூனா’ எனும் சொல்லுக்கு ‘எங்களை எதிர்பாருங்கள்’ என்பது பொருள். 

(58.) ‘அல்முஜாதலா’ அத்தியாயம்1 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (58:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹாத்தூன’ எனும் சொல்லுக்கு ‘மோதுகின்றவர்கள்’ என்பது பொருள். ‘குபித்தூ’ எனும் சொல்லுக்கு ‘இழிவுக்கு ஆளாக்கப்படுவார்கள்’ என்பது பொருள். (58:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸ்த்தஹ்வத’ எனும் சொல்லுக்கு ‘ஆதிக்கம் செலுத்தி வென்றுவிட்டான்’ என்று பொருள். 

(59.) ‘அல்ஹஷ்ர்’ அத்தியாயம்1 

(59:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜலாஉ’ (நாடு கடத்தல்) எனும் சொல்லுக்கு ‘ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு வெளியேற்றுதல்’ என்று பொருள். 

பகுதி 1

4882. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) கூறினார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் 'அத்தவ்பா' எனும் (9 வது) அத்தியாயம் தெடர்பாகக் கேட்டேன். அவர்கள், 'அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூடவிட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள்'' என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம் , 'அல் அன்ஃபால்' எனும் (8 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பத்ருப்போர் குறித்து அது அருளப்பெற்றது'' என்று பதிலளித்தார்கள். நான் 'அல்ஹஷ்ர்' எனும் (59 வது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், 'பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது'' என்று பதிலளித்தார்கள்.

4883. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நான் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (59 வது அத்தியாயத்தின் பெயரை) 'அல்ஹஷ்ர்' அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். அவர்கள் 'அந்நளீர்' அத்தியாயம் என்று கூறுங்கள் என்றார்கள். 3

பகுதி2

''நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியது..'' எனும் (திருக்குர்ஆன் 59:5 வது) வசனத் தெடர்.

(இந்த வசனத்திலுள்ள மூலத்திலுள்ள) 'லீனத்' எனும் சொல் 'அஜ்வா' (எனும் அடர்த்தியான பேரீச்ச மரம்) மற்றும் 'பர்ணீ' (எனும் சிவப்பு - மஞ்சள் நிற பேரீச்ச) அல்லாத (மலிவான) பேரீச்ச மரத்தைக் குறிக்கும்.

4884. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'புவைரா' எனுமிடத்திலிருந்து 'பனூ நளீர்' குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும், (சிலவற்றை) வெட்டினார்கள். அப்போது அல்லாஹ், 'நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்)'' எனும் (திருக்குர்ஆன் 59:5 வது) வசனத்தை அருளினான்.4

பகுதி 3

அல்லாஹ் எச்செல்வத்தை அவர்களிடமிருந்து (விடுவித்து,) தன் தூதரின் பக்கம் திருப்பிக் கொடுத்தானோ (என்று தெடங்கும் 59:6 வது இறைவசனம்).

4885. உமர்(ரலி) அறிவித்தார்

பனூநளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்களின்) குதிரைகளையோ, ஒட்டகங்களையோ செலுத்திப் போரிட்டிருக்கவில்லை. எனவே, அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தம் ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை இறைவழியில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள். 5

பகுதி 4

''இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதைப் பெற்றுக்கொள்ளுங்கள்'' (எனும் 59:7 வது வசனத் தெடர்).

4886. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள்.6 இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!'' என்று கேட்டதற்கு அவர்கள், 'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள். அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)'' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்'' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்'' என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!'' என்று கூறினார்கள். எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்'' என்று கூறினார்கள்.

4887. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) கூறினார்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடமிருந்து உம்மு யஅகூப் எனும் பெண்மணி அறிவித்த இந்த ஹதீஸை நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

பகுதி 5

மேலும், (அச்செல்வம்) இந்த முஹாஜிர்களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் பூமியில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும் என்று தெடங்கும் 59:9 வது இறைவசனம்.

4888. அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார்

('அபூ லுஃலுஆ ஃபைரோஸ்' என்பவனால் கத்தியால் குத்தப்பட்ட பிறகு) உமர்(ரலி), '(இஸ்லாத்தில்) முன்னவர்களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து (அவர்களின் கண்ணியத்தைக் காத்துக்) கொள்ளவேண்டும் என்று (எனக்குப் பின்னர் வரவிருக்கும்) 'கலீஃபா'வுக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், நபி(ஸல்) அவர்கள் (மற்றும் நபித்தோழர்கள்) 'ஹிஜ்ரத்' செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு இறைநம்பிக்கையை (உறுதியாகப்) பற்றிக் கொண்ட அன்சாரிகளில் நன்மை புரிபவரிடமிருந்து (அவரின் நன்மையை) ஏற்று, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்திட வேண்டும் என்று நான் அந்த கலீஃபாவுக்கு உபதேசம் செய்கிறேன்'' என்றார்கள்.7

பகுதி 6

''மேலும், தமக்கே தேவையிருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 59:9 வது) வசனத்தெடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'கஸாஸா' (தேவை) எனும் சொல்லுக்கு 'வறுமை' என்று பொருள்.

'முஃப்லிஹூன்' (வெற்றியாளர்கள்) எனும் சொல்லுக்கு, நிரந்தர வெற்றியாளர்கள்' என்று பொருள். (இதன் வேர்ச் சொல்லான) 'ஃபலாஹ்' என்பதற்கு, 'நிரந்தர வாழ்க்கை' என்று பொருள். (தெழுகை அழைப்பில் இடம் பெற்றுள்ள) 'ஹய்ய அலல் ஃபலாஹ்' என்பதற்கு 'நிரந்தரத்தை நோக்கி விரைந்து வாருங்கள்' என்று பொருள்.

ஹஸன் அல்பஸாரீ(ரஹ்), '(இதே வசனத்தின் தெடக்கத்தில் இடம் பெற்றுள்ள) 'ஹாஜத்' (தேவை) எனும் சொல்லுக்கு 'பொறாமை' என்று பொருள்'' எனக் கூறினார்கள்.

4889. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது, 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), 'இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான்'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), இறைத்தூதர் அவர்களே!'' என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, '(இவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக்கொள்ளாதே!'' என்று கூறினார்.

அதற்கு அவர் மனைவி, 'அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை'' என்று பதிலளித்தார். அவர், '(நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்துவிடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்துவிட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்துவிடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்துவிட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம்'' என்று கூறினார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் 'வியப்படைந்தான்' அல்லது (மகிழ்ச்சியால்) 'சிரித்துக்கொண்டான்'' என்று கூறினார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'தமக்கே தேவை இருந்தும கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள்.''. எனும் (திருக்குர்ஆன் 59:9 வது) வசனத்தை அருளினான்.8

(60) ‘அல்மும்தஹினா’ அத்தியாயம்1 

(60:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தஜ்அல்னா ஃபித்னா’ (எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே) என்பதற்கு, ‘இறைமறுப்பாளர்களின் கரங்களால் எங்களை வேதனை செய்துவிடாதே! அப்போது அவர்கள், ‘‘உண்மையில் இந்த முஸ்லிம்கள் சத்தியத்தின் மீதிருந்திருந்தால் அவர்களுக்கு இத்துன்பம் நேர்ந்திராது” என்று கூறி (தங்களின் தவறான வழியில் தொடர்ந்து இருந்து)விடுவார்கள். (இதனால்நாங்கள் அவர்களுக்கு ஒரு சோதனையாகிவிடுவோம். அப்படி ஆக்கிவிடாதே) என்பது பொருள். (60:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி இஸமில் கவாஃபிரி’ (இறைநம்பிக்கை கொள்ளாத பெண்களின் திருமண உறவு) எனும் சொற்றொடர் ‘மக்காவில் இறைமறுப்பாளர்களாகவே நீடித்திருக்கும் தங்கள் மனைவியரை மணவிலக்குச் செய்துவிட வேண்டுமென நபித்தோழர்களுக்குக் கட்டளையிடப்பட்டதைக் குறிக்கின்றது. 

பகுதி: 1 

(இறைநம்பிக்கை கொண்டவர்களே!) எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளாதீர்கள் (எனும் 60:1ஆவது வசனத் தொடர்) 

4890. அலீ(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், மிக்தாத் இப்னு அஸ்வத் அவர்களையும் 'நீங்கள் 'ரவ்ளத்துகாக்' எனுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு 'ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ' நம்முடைய இரகசியத் திட்டங்களை எழுதித் தெரிவித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்!'' என்று கூறியனுப்பினார்கள்.

உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த 'ரவ்ளத்து காக்' எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், 'கடிதத்தை வெளியே எடு!'' என்று சொன்னோம். அதற்கு அவள், 'என்னிடம் கடிதம் ஏதுமில்லை'' என்று பதிலளித்தாள். நாங்கள், 'ஒன்று, நீயாயக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உன்னுடைய) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும்'' என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தன்னுடைய சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம்.

அதில் 'ஹாத்திப் இப்னு அபீ பல்தஆ(ரலி) மக்காவாசிகளான இணைவைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'ஹாத்திபே! என்ன இது?' என்று கேட்டார்கள். ஹாத்திப்(ரலி) (தம் குற்றத்தை ஒப்புக்கொண்டு), 'இறைத்தூதர் அவர்களே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்துவந்த) ஒருவனாகவே இருந்தேன்.

தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களின் வீட்டாரையும், சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கிறார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிசளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்றவேண்டும் என்று விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை'' என்று (காரணம்) கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி(ஸல்) அவர்கள், 'இவர் உங்களிடம் உண்மையே கூறினார்'' என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி) இறைத்தூதர்! என்னை விடுங்கள்; (சதி வேலைகளை செய்த) இவரின் கழுத்தைக் கொய்து விடுகிறேன்'' என்று கூறினார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர் பத்ருப் போரில் பங்கெடுத்தார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப்போரில் பங்கேற்றவர்களிடம் 'நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்துவிட்டேன்' என்று கூறிவிட்டிருக்கலாம்'' என்று கூறினார்கள்.

'ஹாத்திப் இப்னு அபீ பல்த்தஆ'(ரலி) விஷயத்தில்தான் 'இறைநம்பிக்கையாளர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்'' என்று தெடங்கும் (திருக்குர்ஆன் 60:1 வது) வசனம் அருளப்பட்டது என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் இப்னு தீனார்(ரஹ்) கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:) இந்த இறைவசனம் (அலீ(ரலி) அவர்களின்) அறிவிப்பிலேயே உள்ளதா? அல்லது அம்ர் இப்னு தீனார் அவர்களின் (அறிவிப்பின்போது வந்த) சொல்லா என்று எனக்குத் தெரியாது. 2

அலீ இப்னு அல்மதீனீ(ரஹ்) கூறினார்

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) அவர்களிடம், 'ஹாத்திப் இப்னு அபீ பல்த்த ஆ(ரலி) தெடர்பாகத்தான் இவ்வசனம் (திருக்குர்ஆன் 60:01) இறங்கிற்றா?' என்று கேட்கப்பட்டது. சுஃப்யான்(ரஹ்), 'இப்படித்தான் மக்களின் அறிவிப்புகளில் காணப்படுகிறது. இந்த அறிவிப்பை நான் அம்ர் இப்னு தீனார்(ரஹ்) அவர்களிடமிருந்து செவியேற்றேன். அதில் ஒரு வார்த்தையைக் கூட நான்விட்டுவிடவில்லை. நான் அல்லாத வேறு யாரும் அம்ர் அவர்களிடமிருந்து இதனை நன்கு நினைவில் நிறுத்திக் கொண்டதாக நான் கருதவில்லை'' என்று கூறினார்கள்.

பகுதி 2

இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் (நாடு துறந்து) ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (என்று தெடங்கும் 60:10 வது இறைவசனம்.)

4891. நபி(ஸல்) அவர்கள் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்

இந்த (திருக்குர்ஆன் 60:10-12 வது வசனங்களின் ஆணைக்கேற்ப இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்தனையை இறைநம்பிக்கை கொண்ட பெண்களில் ஏற்றுக் கொண்டவரிடம் 'உன் நம்பிக்கைப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று பேச்சால் மட்டுமே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்களின் கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும்போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தெட்டதில்லை. பெண்களிடம், 'நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக்கொண்டேன்'' என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிரமாணம் வாங்கியதில்லை. 3

இது இன்னும் பல அறிவிப்பாளர் தெடர்வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 3

நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தெடங்கும் 60:12 வது இறைவசனம்.)

4892. உம்மு அத்திய்யா(ரலி) அறிவித்தார்

நாங்கள் (மகளிர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்கமாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 60:12 கூது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழ வேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்கை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தம் கையை பின்வாங்கினார். மேலும், அவர் 'இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன்'' என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரிவைத்து)விட்டுத் திரும்பி நபி(ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவர்களிடமிருந்து நபி(ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.

4893. இக்ரிமா(ரஹ்) அறிவித்தார்

''எந்த ஒரு நற்செயலிலும், (நபியே!) உங்களுக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தி)ன், விளக்கவுரையி)ல், 'இதுவும் பெண்களின் மீது அல்லாஹ் விதித்த நிபந்தனைகளில் ஒன்றாகும்' என இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 4

4894. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்கள், 'அல்லாஹ்விற்கு எதையும் இணை கற்பிக்கமாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?' என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.

சுஃப்யான் இப்னு உயையனா(ரஹ்) அவர்களின் அதிகமான அறிவிப்பில் 'அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள்'' என்றே காணப்படுகிறது. ('பெண்கள் பற்றிய வசனம்' என்று காணப்படவில்லை) தெடர்ந்து நபி(ஸல்) அவர்கள், 'உங்களில் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்று கூறினார்கள். 5

இது மற்றோர் அறிவிப்பாளர் தெடர் வழியாகவும் வந்துள்ளது.

4895. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடனும். அபூ பக்ர், உமர், உஸ்மான்(ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெருநாள் தெழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன் தெழுபவர்களாக இருந்தனர். அதன் பிறகே உரை நிகழ்த்துவார்கள். (உரை முடிந்த பின்) நபி(ஸல்) அவர்கள் (மிம்பர் - மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தம் கையால் அமரச் செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பது போல் உள்ளது. பிறகு ஆண்(களின் வரிசை)களைப் பிளந்துகொண்டு பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள்.

அப்போது 'நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்கமாட்டார்கள் என்றும், திருடமாட்டார்கள் என்றும், விபசாரம் செய்யமாட்டார்கள் என்றும், தம் குழந்தைகளைக் கொல்லமாட்டார்கள் என்றும், தங்கள் கை கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்டமாட்டார்கள் என்றும், எந்த ஒரு நற்செயலிலும் உமக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிடமிருந்து விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். திண்ணமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், கருணைபுரிபவனுமாய் இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 60:12 வது) இறைவசனம் முழுவதையும் ஓதிமுடித்துவிட்டு, 'இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா?' என்று கேட்டார்கள்.

ஒரேயொரு பெண்மணி மட்டும், 'ஆம் (நீடிப்போம்), இறைத்தூதர் அவர்களே!'' என்றார். அவரைத் தவிர வேறெவரும் நபி(ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. அந்தப் பெண் யாரென்று (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஹஸன் இப்னு முஸ்லிம்(ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை - அப்பெண்களை நோக்கி நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் தர்மம் செய்யுங்கள்!'' என்று கூறினார்கள். பிலால்(ரலி) தம் ஆடையை விரித்தார்கள். அப்போது மோதிரங்களையும் மெட்டிகளையும் அப்பெண்கள் பிலால்(ரலி) அவர்களின் ஆடையில் போடலானார்கள்.

(61) 'அஸ்ஸஃப்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 61:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மன் அன்சாரீ இலல்லாஹ்' (இறைவனின் பக்கம் எனக்கு உதவி புரிபவர் யார்?) என்பதன் கருத்தாவது: இறைவழியில் என்னைப் பின்பற்றி நடப்பவர் யார்?

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 61:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மர்ஸூஸ்' எனும் சொல்லுக்கு 'ஒன்றோடொன்று (வலுவுடன்) இணைக்கப்பட்டது'' என்று பொருள். மற்றவர்கள் கூறுகிறார்கள். 'மர்ஸூஸ்' என்பதற்கு 'ஈயத்தால் வார்க்கப்பட்டது' என்று பொருள்.

பகுதி 1

''எனக்குப் பிறகு 'அஹ்மத்' எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈசா கூறினார்)'' எனும் (திருக்குர்ஆன் 61:6 வது) வசனத்தெடர்.

4896. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

எனக்குப் பல பெயர்கள் உண்டு. நான் 'முஹம்மது' (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் 'அஹ்மத்' (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் 'மாஹீ' (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் 'ஹாஷிர்' (ஒருங்கிணைப்பாவர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் 'ஆகிப்' (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.

என ஜுபைர் இப்னு முதஇம்(ரலி) அறிவித்தார்.2

(62) 'அல்ஜுமுஆ' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

பகுதி 1

''இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)'' எனும் (திருக்குர்ஆன் 62:3 வது) வசனத்தெடர்.

(திருக்குர்ஆன் 62:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள 'ஃபஸ்அவ் இலா ஃதிக்ரில்லாஹ்' -அல்லாஹ்வை நினைவுகூர விரையுங்கள் என்பதை) உமர்(ரலி), 'ஃபம்; இலா ஃதிக்ரில்லாஹ்' (அல்லாஹ்வை நினைவுகூரச் செல்லுங்கள்) என்று ஓதினார்கள்.

4897. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு 'அல்ஜுமுஆ' எனும் (62 வது) அத்தியாயத்தில் 'இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்)'' எனும் (3 வது வசனம் அருளப்பெற்றது. அப்போது, 'அந்த (ஏனைய) மக்கள் யார்? இறைத்தூதர் அவர்களே!'' என்று கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ(ரலி) இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் சல்மான் மீது தம் கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறைநம்பிக்கை இருந்தாலும் 'சில மனிதர்கள்' அல்லது 'இவர்களில் ஒருவர்' அதனை அடைந்தே தீருவார்' என்று கூறினார்கள். 2

4898. அபுல் ஃகைஸ் சாலிம்(ரஹ்) அறிவித்தார்

அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், 'இவர்களில் சில மனிதர்கள் இதனை அடைந்தே தீருவர்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

பகுதி 2

அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ பார்த்துவிட்டால், அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர் (எனும் 62:11 வது வசனத் தெடர்).

4899. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தெழுகையில்) இருந்தபோது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிருந்த மக்கள்) கலைந்து சென்றார்கள். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போதுதான் 'அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின்றனர்'' எனும் (திருக்குர்ஆன் 62:11 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். 3

(63) 'அல்முனாஃபிகூன்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

பகுதி 1

''(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது, 'திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கிறோம்' என்று கூறுகின்றனர். திண்ணமாக, நீங்கள் தன்னுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 63:1 வது) இறைவசனம்.

4900. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்

ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன். 2 அப்போது, (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை என்பவன் 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள்'' என்று கூறிவிட்டுத் தெடர்ந்து, 'நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்'' என்று கூறினான். அவன் கூறியதை '(நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம்' அல்லது 'உமர்(ரலி) அவர்களிடம்' கூறினேன். அவர் அதை நபி(ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி(ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்தபோது) அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) 'நாங்கள் அதைச் சொல்லவேயில்லை'' என்று அவர்கள் சாதித்தார்கள்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நான் சொன்னதை நம்ப மறுத்துவிட்டார்கள்; அப்துல்லாஹ் இப்னு உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ்நாளில் ஒருபோதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்துகொண்டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை'' என்று கூறினார்கள். அப்போது, 'இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிற போது'' என்று தெடங்கும் இந்த (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே, நபி(ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்)'' என்று கூறினார்கள்.

பகுதி 2

இவர்கள் தாங்கள் செய்யும் சத்தியங்களை (தங்களைத் தற்காத்துக் கொள்ளும்) கேடயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் (எனும் 63:2 வது வசனத் தெடர்).

4901. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பான், 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரைவிட்டும்) விலகிச் சென்றுவிடுவார்கள்' என்று சொல்வதையும், மேலும், 'நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணியவான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகாரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள்'' என்று கூறுவதையும் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். எனவே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, 'நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை'' என்று சத்தியம் செய்தனர். எனவே, அவர்களை நம்பிவிட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்துவிட்டார்கள். (என் வாழ்நாளில் அதற்கு முன்) இதுபோன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. எனவே, நான் என்னுடைய வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், '(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது'' என்று தெடங்கி 'ஆயினும், நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள்'' என்று முடியும் (திருக்குர்ஆன் 63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான்'' என்று கூறினார்கள்.

பகுதி 3

''இவை (அனைத்துக்கும் காரணம்,) இவர்கள் (முதலில்) நம்பிக்கை கொண்டு பின்னர் மறுத்துவிட்டதுதான். இதனால் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்துகொள்ள மாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 63:3 வது) இறைவசனம்.

4902. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்

(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவழிக்காதீர்கள்'' என்றும், 'நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால்,... 'என்றும் கூறியபோது, அதனை நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது என்னை அன்சாரிகள் கண்டித்தார்கள். அப்துல்லாஹ் இப்னு உபை, தான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தான். எனவே, நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அழைத்தார்கள் (எனத் தகவல் வந்தது). உடனே, நான் அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், '(ஸைதே!) அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான்'' என்று கூறினார்கள். மேலும், 'இவர்கள் தாம் 'இறைத்தூதருடன் இருப்பவர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்' என்று கூறினார்கள்...'' எனும் (திருக்குர்ஆன் 63:7 வது) வசனமும் அருளப்பெற்றது.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தெடர் வழியாகவும் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 4

(நபியே!) நீங்கள் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடல் அமைப்பு உங்களை வியப்பில் ஆழ்த்தும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் இவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டே இருந்துவிடுவீர்கள். ஆனால், உண்மையில் இவர்கள் (சுவரில்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள் தாம் (கடும்) பகைவர்கள்; இவர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருங்கள். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனர்? (எனும் 63:4 வது இறைவசனம்.)

4903. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை தம் நண்பர்களிடம், 'அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் செல்வார்கள்'' என்றும், 'நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர்'' என்றும் சொன்னான். நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் இப்னு உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான். அன்சாரிகள், 'இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார்'' என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.

அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் '(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது...'' என்று தெடங்கும் (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பினார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள 'குஷுபும் முசன்னதா' (சாய்த்துவைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்டமானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.

பகுதி 5

''வாருங்கள், இறைத்தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால், (அவர்கள்) தங்களின் தலையைத் திருப்பிக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் பெரும் ஆணவத்தால் அலட்சியப்படுத்துவதை (நபியே!) நீங்கள் காண்பீர்கள்' எனும் (திருக்குர்ஆன் 63:5 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'லவ்வவ்' (தலையைத் திருப்பினார்கள்) எனும் சொல், 'தங்கள் தலையை அசைத்த வண்ணம் அவர்கள் நபியைப் பரிகாசம் செய்ததைக் குறிக்கிறது. (இதே சொல்லை இன்னோர் ஓதலில்) 'லவய்த்து' எனும் வினைச்சொல்லிருந்து அழுத்தமில்லாமல் ('லவவ்' என்று) ஓதப்படுகிறது.

4904. ஸைத் இப்னு அர்கம்(ரலி) அறிவித்தார்

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல் என்பான், 'அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்றுவிடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம், வெளியேற்றிவிடுவர்'' என்று கூறுவதை கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ்வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். அவர்கள் வந்து, 'நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை'' என்று சத்தியம் செய்தனர். (அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நம்பினார்கள்.) என்னை நம்ப மறுத்துவிட்டார்கள். என் வாழ்நாளில், அதற்கு முன் இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட்கொண்டது. எனவே, நான் என்னுடைய வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), 'நபி(ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபமடையும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், '(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகிறபோது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கிறோம் என்று கூறுகின்றனர்'' எனும் (திருக்குர்ஆன் 63:1 வது) வசனத்தை அருளினான். உடனே, எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு, 'ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான்'' என்று கூறினார்கள். 3

பகுதி 6

''(நபியே!) நீங்கள் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் கோராவிட்டாலும் இவர்களைப் பொறுத்துச் சமம் தான். அல்லாஹ் இவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் ஒருபோதும் நேர்வழியில் செலுத்தமாட்டான்'' எனும் (திருக்குர்ஆன் 63:6 வது) இறைவசனம்.

4905. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் 'ஒரு போரில்' அல்லது 'ஒரு படையில்' இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். 4அப்போது (அடி வாங்கிய) அன்சாரி 'அன்சாரிகளே! (உதவுங்கள்.)'' என்று கூறினார். அந்த முஹாஜிர் 'முஹாஜிர்களே! உதவுங்கள்!'' என்று கூறினார்.

இந்தப் பேச்சை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செவியேற்று, 'இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், இறைத்தூதர் அவர்களே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார்'' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை'' என்று கூறினார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இதைக் கேட்டுவிட்டு 'இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்'' என்று (அன்சாரிகளுக்குப் பரிந்துகொண்டு) கூறினான். நபி(ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர்(ரலி) எழுந்து, 'என்னை விடுங்கள் இறைத்தூதர் அவர்களே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது'' என்று கூறினார்கள். மக்காவாசிக(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளை விட அதிகமானார்கள்.

மற்றோர் அறிவிப்பில், 'நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம்'' என ஜாபிர்(ரலி) கூறினார் எனக் காணப்படுகிறது.

பகுதி 7

''அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்குச் செலவழிப்பதை நிறுத்திவிடுங்கள். (அவரிடமிருந்து) அவர்கள் விலகிச் செல்வார்கள் என்று சொல்கிறவர்கள் இவர்கள்தாம். உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ்வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்துகொள்ளமாட்டார்கள்'' எனும் (திருக்குர்ஆன் 63:7 வது) இறைவசனம்.

(இதன் மூலத்தில் இடம் பெற்றுள்ள) 'யன்ஃபள்;' எனும் சொல்லுக்குப் 'பிரிந்து விடுவார்கள்' என்று பொருள்.

4906. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

அல்ஹர்ராப் போரில் கொல்லப்பட்டோருக்காக, நான் (பெரிதும்) துக்கப்பட்டேன். 5 நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் இப்னு அர்கம்(ரலி) அவர்களுக்கு எட்டியபோது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக'' என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.

அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி(ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா? இல்லையா என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் இப்னு ஃபள்ல்(ரஹ்) தெரிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தபோது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் இப்னு அர்கம் பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ்(ரலி) '(நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்துவிட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளியபோது) 'இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்துவிட்டான்' என்று இவர் தெடர்பாகத்தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என பதிலளித்தார்கள்.

பகுதி 8

மேலும் அவர்கள் 'நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், கண்ணியவான்கள் அங்கிருந்து இழிந்தோரை வெளியேற்றி விடுவர்'' என்றும் கூறுகிறார்கள். ஆயினும், கண்ணியம் என்பது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாளருக்குமே உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறியமாட்டார்கள் (எனும் 63:8 வது இறைவசனம்).

4907. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நாங்கள் ஒரு போரில் இருந்துகொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, 'அன்சாரிகளே! (உதவுங்கள்)'' என்று கூறினார். முஹாஜிர், 'முஹாஜிர்களே! (உதவுங்கள்)'' என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்துவிட்டான். நபி(ஸல்) அவர்கள், 'இது என்ன?' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், 'முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்துவிட்டார். உடனே, அன்சாரி 'அன்சாரிகளே, (உதவுங்கள்)' என்று கூற, முஹாஜிரும், 'முஹாஜிர்களே, (உதவுங்கள்)'' என்று கூறினார்'' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்துவிட்டார்கள். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை 'இப்படியா அவர்கள் செய்துவிட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர்'' என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் இப்னு கத்தாப்(ரலி), 'என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறறேன், இறைத்தூதர் அவர்களே!'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அவரைவிட்டு விடுங்கள். 'முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார்' என்று மக்கள் பேசி விடக்கூடாது'' என்று கூறினார்கள். 6

(64) 'அத்தஃகாபுன்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

''(திருக்குர்ஆன் 64:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வமய் யுஃமின் பில்லாஹி யஹ்தி 'கல்பஹு' (எவரேனும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தால், அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் வழி காட்டுதல் வழங்குகிறான்) என்பது, தமக்குத் துன்பம் நேரும்போது, அதைத் தாங்கி, திருப்தியடைந்து, அது அல்லாஹ்வின் தரப்பிலிருந்தே தமக்கு வந்தது என்று எண்ணும் இறை நம்பிக்கையாளரையே குறிக்கிறது'' என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார் என அல்கமா(ரஹ்) கூறினார்கள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 64:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தஃகாபுன்' என்பதற்கு, 'நரகவாசிகளுடன் சொர்க்கவாசிகள் போட்டியிடல்' என்று பொருள்.

(65) 'அத்தலாக்' அத்தியாயம் 1

(திருக்குர்ஆன் 65:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இனிர் தப்த்தும்' (உங்களுக்குச் சந்தேகம் வந்தால்) என்பதற்கு, '(உங்கள் பெண்ணுக்கு) மாத விலக்கு நின்றுவிட்டதா, இல்லையா என உங்களுக்குத் தெரியவில்லையென்றால்' என்று பொருள்.

இந்த வசனம், மாதவிலக்கு நின்றுவிட்ட பெண்ணுக்கும், எந்தப் பெண்ணுக்கும் இதுவரை மாதவிலக்கு வரவில்லையோ அவளுக்கும் 'இத்தா' காலம் மூன்று மாதங்களாகும் என்று குறிப்பிடுகிறது.

பகுதி 1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 65:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வபால்' (விளைவு) எனும் சொல்லுக்கு 'தண்டனை' என்று பொருள்.

4908. சாலிம்(ரஹ்) அறிவித்தார்

(என் தந்தை) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) தம் துணைவியாரை விவாகரத்துச் செய்துவிட்டார்கள். அப்போது அவர்களின் துணைவியாருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்தது. எனவே, (என் பாட்டனார்) உமர்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இதைத்) தெரிவித்தார்கள். (இதைக்கேட்ட) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மிகவும் கோபப்பட்டார்கள். பிறகு, 'அவர் (அப்துல்லாஹ் இப்னு உமர்) தம் மனைவியைத் திரும்ப அழைத்து, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் வரைத் தம் மனைவியாகவே வைத்துக் கொள்ளட்டும்! பிறகு, (மீண்டும்) அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டு (அதிலிருந்து) தூய்மையும் அடைந்தால், அப்போது அவருக்குத் தோன்றினால் விவாகரத்துச் செய்யட்டும்! அதுவும் தாம்பத்திய உறவுக்கு முன்னால். (மாதவிலக்கிலிருந்து தூய்மையாகியிருக்கும்) இந்தக் காலமே, (பெண்களை விவாகரத்துச் செய்ய) ஆண்களுக்கு இறைவன் உத்தரவிட்ட காலமாகும்'' என்றும் கூறினார்கள்.2

பகுதி 2

மேலும், கர்ப்பிணிகளுக்கான 'இத்தாக்' காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறவரின் காரியத்தை அவன் எளிதாக்குகிறான் (எனும் 65:4 வது வசனத் தெடர்.)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'உலாத்துல் அஹ்மால்' (கர்ப்பிணிகள்) என்பதன் ஒருமை 'ஃதாத்து ஹமல்' (கர்ப்பிணி) என்பதாகும்.

4909. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான் இப்னி அவ்ஃப்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஒருவர் வந்தார். அப்போது அவர்களுக்கு அருகில் அபூ ஹுரைரா(ரலி) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். (அங்கு வந்த) அந்த மனிதர், 'தன் கணவன் இறந்து நாற்பது நாள்களுக்குப் பின் பிரசவித்த ஒரு பெண்(ணின் 'இத்தா' பிரசவத்தோடு முடிந்துவிடுமா என்பது) பற்றி எனக்குத் தீர்ப்பு வழங்கிடுங்கள்'' என்று கேட்டதற்கு இப்னு அப்பாஸ்(ரலி), 'இரண்டு தவணைகளில் பிந்தியது'' என்று கூறினார்கள். 3

உடனே நான் (இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம்,) 'கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தை பெற்றெடுக்கும் வரையிலாகும்'' (என்று குர்ஆன் 65:4 வது வசனம் கூறுகிறதே!) என்று கேட்டேன்.

அப்போது அபூ ஹுரைரா(ரலி), 'நானும் என் சகோதரர் மகன் அபூ ஸலமா(வின் கருத்துடன்) உடன்(பட்டு) இருக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது, இப்னு அப்பாஸ்(ரலி) தம் பணியாளர் 'குரைப்' என்பவரை, (இது குறித்து) கேட்பதற்காக உம்முஸலமா(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதற்கு உம்மு ஸலமா(ரலி) (பின்வருமாறு) பதிலளித்தார்கள்:

சுபைஆ (பின்த் அல்ஹாரிஸ்) அல் அஸ்லமிய்யா கர்ப்பிணியாக இருந்த சமயத்தில், அவரின் கணவர் (ஸஅத் இப்னு கவ்லா (ரலி) இறந்துவிட்டார். அவர் இறந்து நாற்பது நாள்களுக்குப் பின்னால், சுபைஆ குழந்தை பெற்றெடுத்தார். உடனே, அவரைப் பெண் பேசப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்குத் திருமணம் முடித்து வைத்தார்கள். அவரைப் பெண் கேட்டவர்களில் அபுஸ் ஸனாபில் இப்னு பஅக்கக்(ரலி) அவர்களும் ஒருவராவார். (எனவே, கர்ப்பிணிக்கு 'இத்தா' பிரசவம் வரையில்தான்.)

4910. முஹம்மத் இப்னு சீரீன்(ரஹ்) அறிவித்தார்

நான் (மார்க்க அறிஞர்) அப்துர்ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) இருந்த அவையில் இருந்துகொண்டிருந்தேன். அவரின் நண்பர்கள் அவரைக் கண்ணியப்படுத்திவந்தனர். (அப்போது அன்னரின் நண்பர்களில் ஒருவர், கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியின் 'இத்தா' காலம் குறித்துப் பேசினார்.) அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்), 'இரண்டு தவணைகளில் பிந்தியது'' என்று கூறினார்கள். உடனே நான், 'அப்துல்லாஹ் இப்னு உத்பா(ரஹ்) வாயிலாகக் கிடைத்த 'சுபைஆ பின்த் அல்ஹாரிஸ்'(ரலி) அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைச் சொன்னேன். அப்துர் ரஹ்மான் இப்னு அபீ லைலா(ரஹ்) அவர்களின் நண்பர்களில் சிலர் என்னை நோக்கி (அமைதியாக இருக்கும்படி) சைகை செய்தனர்.

அதைச் சட்டெனப் புரிந்து கொண்டேன். எனவே, நான் 'அப்துல்லாஹ் இப்னு உத்பா (தற்போது) 'கூஃபா'வில் தான் இருக்கிறார். (அவர் சொல்லாத ஒன்றை) அவரின் மீது நான் பொய்யாகச் சொல்வதானால் நான் துடுக்கானவன் ஆவேன்'' என்று சொன்னேன். உடனே (என்னைப் பேசாமலிருக்கும்படி சைகை செய்தவர்) கூச்சப்பட்டார். மேலும், அப்துர் ரஹ்மான்பின் அபீ லைலா அவர்கள் 'ஆனால், அப்துல்லாஹ் இப்னு உத்பா அவர்களின் தந்தையின் சகோதரர் (இப்னு மஸ்வூத்) அவர்கள் அப்படிக் கூறவில்லையே!'' என்று கூறினார். எனவே, நான் அபூ அத்திய்யா மாலிக் இப்னு ஆமிர்(ரஹ்) அவர்களைச் சந்தித்து இது குறித்துக் கேட்டேன். அவர்களும் சுபைஆ அவர்களின் (நிகழ்ச்சி குறித்த) அறிவிப்பைக் கூறலானார்கள். நான் (அவர்களிடம்), 'இது குறித்து அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் ஏதேனும் கேட்டுள்ளீர்களா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்.

(கணவர் இறந்து கர்ப்பிணியாக இருக்கும் ஒரு பெண் விஷயத்தில் 'இத்தா' காலத்தை நீட்டித்து) அவளுக்குச் சிரமத்தை அளிக்கிறீர்களா? அவளுக்குச் சலுகை காட்டக்கூடாதா? (உண்மை என்னவென்றால்,) பெண்கள் தெடர்பான ('அத்தலாக்' எனும்) சிறிய அத்தியாயம், பெண்கள் தெடர்பான ('அல்பகரா' எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பின்னரே அருளப்பெற்றது. (பின்னால் அருளப்பெற்ற அந்த வசனம் இதுதான்;) 'மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம், அவர்கள் குழந்தை பெற்றெடுப்பது (வரையில்) ஆகும்'' (திருக்குர்ஆன் 65:04)4

(66) 'அத்தஹ்ரீம்' அத்தியாயம் 1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

பகுதி 1

நபியே! உங்களுடைய துணைவியரின் திருப்தியை எதிர்பார்த்து, அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்துள்ள ஒன்றை நீங்கள் ஏன் விலக்கிகொள்கிறீர்கள்? அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபை மிக்கவனாகவும் இருக்கிறான் (எனும் 66:1 வது இறைவசனம்.)

4911. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) '(ஒருவர் அனுமதிக்கப்பட்ட ஒன்றை சத்தியமிட்டு) விலக்கிக்கொள்ளும் பட்சத்தில், (சத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான) பரிகாரத்தை அவர் செய்யவேண்டும்'' என்று கூறிவிட்டு, 'உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது'' எனும் (திருக்குர்ஆன் 33:21 வது) இறைவசனத்தை ஓதினார்கள். 2

4912. ஆயிஷா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களிடம், (அவர்களின் அறையில்) தேன் சாப்பிட்டுவிட்டு, அவரிடம் (அதிகநேரம்) தங்கிவிடுவார்கள். (இது பிடிக்காமல் நபியவர்களுடைய துணைவியரான) நானும் ஹஃப்ஸாவும் இவ்வாறு கூடிப் பேசி முடிவு செய்துகொண்டோம்: (தேன் சாப்பிட்ட பின்,) நம்மவரில் எவரிடம் நபி(ஸல்) அவர்கள் முதலில் வருவார்களோ அவர், நபி(ஸல்) அவர்களிடம் 'கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? உங்களிடமிருந்து, பிசினின் துர்வாடை வருகிறதே'' என்று கூறிட வேண்டும்.

(வழக்கம் போல் ஸைனபின் வீட்டிலிருந்து தேன் சாப்பிட்டுவிட்டு, நபி(ஸல்) அவர்கள் வந்தபோது நாங்கள் பேசி வைத்திருந்த பிரகாரம் கூறியதற்கு) அவர்கள், 'இல்லை (நான் பிசின் சாப்பிடவில்லை). ஸைனப் பின்த் ஜஹ்ஷிடம் (அவரின் அறையில்) தேன் குடித்து வந்தேன். (இனிமேல்,) நான் ஒருபோதும் அதைக் குடிக்கமாட்டேன்; நான் சத்தியமும் செய்து விட்டேன்'' என்று கூறிவிட்டு, 'இது குறித்து எவரிடமும் தெரிவித்துவிடாதே!'' என்றும் கூறினார்கள். (இது குறித்தே மேற்கண்ட 66:1 வது இறைவசனம் அருளப்பெற்றது.)

பகுதி 2

அல்லாஹ் நீங்கள் செய்யும் சத்தியத்தி(ன் கட்டுப்பாட்டி)லிருந்து விடுபடுவதற்கான வழியை உங்களுக்கு நிர்ணயித்துள்ளான். அல்லாஹ் உங்கள் பாதுகாவலன். மேலும், அவன் யாவும் அறிந்தவன்; நுண்ணறிவாளன் (எனும் 66:2 வது இறைவசனம்).

4913. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காணரமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.

(ஒரு முறை) உமர்(ரலி) ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் இருந்தோம். அப்போது உமர்(ரலி) தம் (இயற்கைத்) தேவை ஒன்றிற்காக 'அராக்' மரத்தை நோக்கி ஒதுங்கிச் சென்றார்கள். அவர்கள், தம் தேவையை முடித்துக்கொண்டு வரும் வரை நான் அவர்களை எதிர்பார்த்தபடி அவர்களுக்காக நின்றுகொண்டிருந்தேன். பிறகு அவர்களுடன் செல்லலானேன். அப்போது நான் அவர்களிடம், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நபி(ஸல்) அவர்களின் துணைவியரில், (நபியவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிக் செயல்பட்ட இருவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் அந்த இருவர்'' என்று பதிலளித்தார்கள். 3

உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரு வருட காலமாக இது குறித்து உங்களிடம் கேட்க வேண்டுமென்று நான் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், உங்களின் மீது (எனக்கு) உள்ள (மரியாதை கலந்த) அச்சம் காரணமாக எனக்குத் தைரியம் வரவில்லை'' என்று சொன்னேன். அப்போது '(இப்படிச்) செய்யாதீர்கள். என்னிடம் ஓர் அறிவு இருப்பதாக நீங்கள் எண்ணினால் என்னிடம் கேட்டுவிடுங்கள். (உண்மையிலேயே) அவ்வறிவு என்னிடம் இருக்குமானால், அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன்'' என்று கூறிய உமர்(ரலி), பிறகு (பின் வருமாறு) தெரிவித்தார்கள். 'அல்லாஹ்வின் மீதாணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதியதில்லை. அவர்(களின் உரிமை)கள் தெடர்பாக, தான் அருளிய (சட்டத்)தை அல்லாஹ் அருளும் வரையிலும், அவர்களுக்குரிய (செலவுத் தெகை, சொத்துரிமை ஆகிய பங்கு)தனை அவன் நிர்ணயிக்கும் வரையிலும் (இந்நிலை நீடித்தது.)

(ஒரு நாள்) நான் ஒரு விவகாரம் குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தபோது என் மனைவி, 'நீங்கள் இப்படிச் செய்யலாமே'' என்று (என்னிடம் ஆலோசனை) கூறினார். அதற்கு நான் அவரிடம், 'உனக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? நான் தீர்மானிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் உன் தலையீடு எதற்கு?' என்று கேட்டேன். அதற்கு அவர் என்னிடம், 'கத்தாபின் புதல்வரே! (இப்படிச் சொன்ன) உங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களுடன் விவாதிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை. ஆனால், உங்களுடைய புதல்வி (ஹஃப்ஸாவோ தம் துணைவர்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் விவாதித்தால் அன்றைய நாள் முழுக்க இறைத்தூதர் கோபமாக இருந்தார்கள்'' என்று கூறினார்.

உடனே நான் எழுந்து, அதே இடத்தில் என்னுடைய மேலங்கியை எடுத்துக்கொண்டு, ஹஃப்ஸாவிடம் சென்று, 'என் அருமை மகளே! நீ இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் வாதம் புரிந்து, அதனால் அவர்கள் அன்றைய தினம் கோபமாக இருந்தார்களாமே! (உண்மையா?)'' என்று கேட்டேன். அதற்கு ஹஃப்ஸா, 'அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிகளாரின் துணைவியரான) நாங்கள் நபியவர்களுடன் விவாதிப்பதுண்டு'' என்றார். அதற்கு நான், 'அல்லாஹ்வின் தண்டனையையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் கோபத்தையும் பற்றி உனக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன். அருமை மகளே! தன்னுடைய அழகும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் மீது கொண்டுள்ள அன்பும் எவரைப் பூரிப்படைய வைத்துள்ளதோ அவரை - ஆயிஷாவை-ப் பார்த்து நீயும் துணிந்து விடாதே!'' என்று (அறிவுரை) சொன்னேன்.

பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டு, (நபி(ஸல்) அவர்களின் மற்றொரு துணைவியாரான) உம்மு ஸலமாவிடம் (அறிவுரை கூறச் சென்றேன். ஏனெனில், அவர் (என் தாய்வழி) உறவினராவார். 4

இது குறித்து அவரிடமும் நான் பேசினேன். அப்போது உம்மு ஸலமா, 'கத்தாபின் புதல்வரே! உம்மைக் கண்டு நான் வியப்படைகிறேன். எல்லா விஷயங்களிலும் தலையிட்டு வந்த நீங்கள் இப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கும் அவர்களின் துணைவியருக்கும் இடையேயும் தலையிடும் அளவிற்கு வந்துவிட்டீர்கள்'' என்று கூறினார். அல்லாஹ்வின் மீதாணையாக! உம்மு ஸலமா (தம் பேச்சால்) என்னை ஒரு பிடி பிடித்துவிட்டார். எனக்கு ஏற்பட்டிருந்த பாதி(கோப உணர்ச்சி)யை உடைத்தெறிந்துவிட்டார். எனவே, நான், அவரிடமிருந்து வெளியேறி (வந்து) விட்டேன்.

மேலும், அன்சாரிகளில் எனக்கொரு நண்பர் இருந்தார். நான் (நபி(ஸல்) அவர்களின் அவையில்) இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை அவர் எனக்குத் தெரிவிப்பதும், அவர் இல்லாதபோது கிடைக்கும் செய்திகளை நான் அவருக்குத் தெரிவிப்பதும் வழக்கம்.

(அந்தக் காலக்கட்டத்தில் ஷாம் நாட்டு) 'ஃகஸ்ஸான்' வமிச மன்னர்களில் ஒருவனைப் பற்றிய அச்சம் எங்களுக்கு இருந்துவந்தது. அவன் எங்கள் (மதீனா) மீது படையெடுக்க விரும்புவதாக எங்களிடம் சொல்லப்பட்டிருந்தது. இதனால், அவனைப் பற்றிய அச்சம் எங்கள் நெஞ்சங்களில் நிரம்பியிருந்தது. இந்நிலையில், (ஒரு நாள்) அந்த அன்சாரி நண்பர் (என் வீட்டுக்) கதவைத் தட்டினார். 'திறங்கள், திறங்கள்'' என்று கூறினார். (கதவைத் திறந்த) நான், 'ஃகஸ்ஸானிய மன்னன் (படையெடுத்து) வந்துவிட்டானா?' என்று கேட்டேன். அதற்கவர், 'அதைவிடப் பெரியது நடந்துவிட்டது; இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியரைவிட்டு விலகிவிட்டார்கள்'' என்றார்.

உடனே நான், 'ஹஃப்ஸா, ஆயிஷா ஆகியோரின் மூக்கு மண்ணைக் கவ்வட்டும்!'' என்று கூறிவிட்டு, என்னுடைய உடையை எடுத்து (அணிந்து) கொண்டு புறப்பட்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தபோது அவர்கள் தமக்குரிய (மாடி) அறையொன்றில் (தங்கி) இருந்தார்கள். ஏணிப்படி வழியாக மேலே அந்த அறைக்குச் செல்ல முடியும். அங்கே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் கறுப்பு நிற அடிமை ஒருவர் ஏணியின் மேற்படியில் இருந்தார். அவரிடம் நான், 'இந்த உமர் இப்னு கத்தாபுக்காக (அல்லாஹ்வின் தூதரிடம் அனுமதி) கேள்!'' என்றேன். (அவர் உள்ளே சென்று அனுமதி கேட்டார்.) அவர்களும் எனக்கு அனுமதி அளித்துவிட்டார்கள். (நான் உள்ளே சென்று) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (எனக்கும் அவர்களின் துணைவியருக்குமிடையே நடைபெற்ற) இந்த உரையாடல்களை எடுத்துரைத்தேன். உம்மு ஸலமாவின் பேச்சு வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புன்னகைத்தார்கள். அப்போது அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களின் தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்களின் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்களின் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தெங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்களின் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுதுவிட்டேன்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஏன் அழுகிறீர்கள்?' என்றார்கள். அதற்கு நான், 'இறைத்தூதர் அவர்களே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் (தாரளமான உலகச் செல்வங்களைப் பெற்று) வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே!'' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அ(ம்மன்ன)வர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். 5

பகுதி 3

நபி தம் துணைவியரில் ஒருவரிடம் ஒரு விஷயத்தை இரகசியமாகச் சொல்லியிருந்தார். (ஆனால்,) அதை அந்தத் துணைவி (மற்றொரு துணைவிக்கு) தெரிவித்துவிடவே, நபிக்கு அல்லாஹ் அதை வெளிப்படுத்தினான். அப்போது, நபி அதில் சிலவற்றை (அந்தத் துணைவியிடம்) சொல்லிக்காட்டிவிட்டு சிலவற்றைச் சொல்லாமல்விட்டுவிட்டார். இவ்வாறு (இரகசியம் வெளிப்பட்டது பற்றி) நபி தம் துணைவியிடம் தெரிவித்தபோது) 'தங்களுக்கு இதனைத் தெரிவித்த யார்?' என்று அந்தத் துணைவி கேட்டதற்கு நபி 'அனைத்தையும் அறிந்தவனும் நன்கு தெரிந்தவனும் தான் எனக்கு அறிவித்தான்'' என்று பதிலளித்தார் (எனும் 66:3 வது இறைவசனம்.)

இது குறித்து நபி(ஸல்) அவர்களிடமிருந்து, ஆயிஷா(ரலி) அறிவிப்புச் செய்துள்ளார்கள். 6

4914. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நான் உமர்(ரலி) அவர்களிடம் (ஒரு வசனம் குறித்து) கேட்க நினைத்துக் கொண்டிருந்தேன். எனவே, (வாய்ப்புக் கிடைத்தபோது அவர்களிடம்) 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இறைத்தூதர்(ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)களின் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல்பட்ட இரண்டு துணைவியர் யார்?' என்று கேட்டேன். என் பேச்சை நான் முடிப்பதற்குள் 'ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம்'' என்று உமர்(ரலி) பதிலளித்தார்கள். 7

பகுதி 4

''நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், (அது உங்களுக்குச் சிறந்ததாகும். ஏனெனில்,) உங்களிருவரின் இதயங்களும் நேரிய வழியிலிருந்து பிறழ்ந்து விட்டிருக்கின்றன'' எனும் (திருக்குர்ஆன் 66:4 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஸஃகத்' எனும் சொல்லுக்கப் 'பிறழ்தல்' என்று பொருள். (இதன் தன்மை வினைச் சொற்களான) 'ஸஃகவ்த்து' மற்றும் 'அஸ்ஃகைத்து' ஆகியவற்றுக்கு 'நான் சாய்ந்தேன்' என்று பொருள். (திருக்குர்ஆன் 06:113 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லி தஸ்ஃகா' எனும் சொல்லுக்கு 'அவை சாய்வதற்காக' என்று பொருள். 'தழாஹரூன' எனும் சொல்லுக்குக் 'கூடிப் பேசிச் செயல்படுதல்' என்று பொருள். 'ழஹீர்' எனும் சொல்லுக்கு 'உதவியாளர்' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

''(திருக்குர்ஆன் 66:6 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கூ அன்ஃபுசக்கும் வஅஹ்லீக்கும்' (உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள்) என்பதன் கருத்தாவது: இறையச்சத்தைக் கைக்கொள்ளுமாறு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நீங்கள் அறிவுரை பகர்வதுடன், அவர்களுக்கு ஒழுக்கத்தையும் கற்பியுங்கள்.

4915. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்(களைச் சங்கடப்படுத்தும் வகையில், அவர்)களின் விஷயத்தில் கூடிப் பேசிச் செயல்பட்ட இரண்டு துணைவியர் யார்? என்பது பற்றி உமர்(ரலி) அவர்களிடம் கேட்க வேண்டும் என்று (நெடுநாள்களாக) எண்ணிக்கொண்டிருந்தேன். இவ்வாறு ஓராண்டு காலம் இருந்து விட்டேன். அதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்க்கவில்லை. (இந்நிலையில் ஒரு முறை) நான் ஹஜ்ஜுக்காக உமர்(ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் '(மர்ருழ்) ழஹ்ரான்' எனுமிடத்தில் இருந்தபோது உமர்(ரலி) தம் இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோது 'உளூ (அங்கசுத்தி) செய்வதற்கான தண்ணீரை என்னிடம் கொண்டுவாருங்கள்'' என்று கூறினார்கள். எனவே, நான் அவர்களுக்காக தண்ணீர்க் குவளையை எடுத்து வந்து அவர்களுக்குத் தண்ணீரை ஊற்றலானேன். நான் (நினைத்திருந்ததைக் கேட்பதற்கு இதுதான்) சந்தர்ப்பம் எனக் கருதினேன். உடனே நான், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இறைத்தூதர்(ஸல்) அவர்களைச் சங்கடப்படுத்தும் வகையில்) கூடிப் பேசிச் செயல்பட்ட அந்த இரண்டு துணைவியர் யார்?' என்று கேட்டேன். நான் என் பேச்சை முடிப்பதற்குள், 'ஆயிஷாவும் ஹஃப்ஸாவும் தாம் (அவர்கள் இருவரும்)!'' என்று உமர்(ரலி) பதிலளித்தார்கள்.

பகுதி 5

நபி (தம் துணைவியராகிய) உங்களை விவாகரத்துச் செய்துவிடுவாராயின், உங்களுக்கு பதிலாக உங்களைவிடவும் சிறந்த துணைவியரை அவரின் இறைவன் அவருக்கு வழங்கிட முடியும். அவர்கள் (வாய்மையான) முஸ்லிம்களாய், இறைநம்பிக்கையுள்ளோராய், கீழ்ப்படிபவர்களாய், பாவமன்னிப்புக் கோருபவர்களாய், அடிபணிந்து வணங்குபவர்களாய், நோன்பு நோற்பவர்களாய்த் திகழ்வார்கள்; அவர்கள் விதவைகளாயும், கன்னிகளாயும் இருப்பார்கள் (எனும் 66:5 வது இறைவசனம்.)

4916. உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களின் துணைவியர் அனைவரும் சேர்ந்துகொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்து கொண்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் உங்களை விவாக விலக்குச் செய்தால் உங்களைவிடவும் சிறந்த துணைவியரை உங்களுக்கு பதிலாக இறைவன் அவர்களுக்குத் தர முடியும்'' என்று சொன்னேன். அப்போது (நான் கூறியவாறு) இந்த (திருக்குர்ஆன் 66:5 வது) இறைவசனம் அருளப்பட்டது. 8

(67) ‘அல்முல்க்’ அத்தியாயம்1 

(67:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தஃபாவுத்’ எனும் சொல்லுக்கும், (மற்றொரு வாய்பாட்டில் அமைந்த) ‘தஃபவ்வுத்’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. அதாவது ‘முரண்பாடு’ அல்லது ‘மாற்று’. (67:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தமய்யஸு’ எனும் சொல்லுக்கு ‘அது வெடித்துவிட’ என்று பொருள். (67:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மனாகிபிஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் பல பகுதிகளுக்கு’ என்று பொருள். (67:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தத்தஊன்’ (நீங்கள் வற்புறுத்திக் கூறினீர்களோ) எனும் சொல்லுக்கும் ‘தத்ஊன’ என்பதற்கும் பொருள் ஒன்றே. (67:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யக்பிள்ன’ எனும் சொல்லுக்கு ‘சிறகடி(த்துப் பற)க்கும்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸாஃப்பாத்’ எனும் சொல்லுக்கு ‘தம் இறகுகளை விரித்து’ என்பது பொருள். (67:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ நுஃபூர்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியத்தை மறுப்பதிலும்’ என்பது பொருள். 

(68) ‘அல்கலம்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (68:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யத்தஃகாஃப்பத்தூன’ எனும் சொல்லுக்கு ‘இரகசியமாகப் பேசிக்கொண்டு போனார்கள்’ என்று பொருள். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (68:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹர்த்’ எனும் சொல்லுக்கு ‘மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டு’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (68:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல ளால்லூன’ எனும் சொல்லுக்கு ‘நமது தோட்டமிருந்த இடத்தை நாம் தவற விட்டுவிட்டோம்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (68:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸ்ஸரீம்’ எனும் சொல்லுக்கு ‘இரவிலிருந்து பிரிந்து வந்த அதிகாலைபோல; பகலிலிருந்து பிரிந்த இரவைப் போல’ என்று பொருள். மேலும், மணல் குவியலிலிருந்து பிரிந்துவந்த ஒவ்வொரு மணல் துகளுக்கும் ‘ஸரீம்’ என்று கூறப்படுவதுண்டு. பாடம்: 1 (அவன்) இரக்கமற்ற கொடுமைக் காரனாகவும், இத்தனைக்கும் பிறகு இழிபிறவியாகவும் இருக்கின்றான். (இவன் போன்றவனுக்கெல்லாம் நபியே! நீர் அடங்கிவிடாதீர் (எனும் 68:13ஆவது இறைவசனம்) 

4917. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 68:13 வது வசனத்தின் விளக்கத்தில்) இப்னு அப்பாஸ்(ரலி), 'அவன் குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாவான். ஆட்டிற்கு (வேறுபடுத்திக் காட்டும்) ஓர் அடையாளம் (காதணி) இருப்பதுபோல், அவனுக்கும் (அவனுடைய கழுத்தில் ஓர்) அடையாளம் உள்ளது'' என்று கூறினார்கள். 2

4918. ஹாரிஸா இப்னு வஹ்ப் அல் ஃகுஸாஈ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின் வருமாறு) கூறக் கேட்டேன்: சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்,) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால் அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான்.

(இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் தெரிவிக்கவா? அவர்கள் இரக்கமற்றவர்கள்; (அதிகமாகச் சாப்பிட்டு) உடல் கொழுத்தவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

பகுதி 2

காலின் திரை அகற்றப்ப(ட்)டு (இறைவன் காட்சியளிக்கு)ம் அந்த (மறுமை) நாளில் (மக்களெல்லாம் தாமாகவே) சிரவணக்கம் செய்ய நிர்ப்பந்திக்கப்படும்போது கூட (இறைமறுப்பாளர்களான) இவர்கள் (அதற்கு) சக்திபெறமாட்டார்கள் (எனும் 68:42 வது இறைவசனம்).

4919. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெளிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறை நம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காவும், மக்களின் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தெழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களின் முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

இதைஅபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

(69) ‘அல்ஹாக்கா’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

(69:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஈஷத்துர் ராளியா’ (திருப்தியான வாழ்க்கை) என்பதன் கருத்தாவது: அந்த வாழ்க்கையில் அவர் திருப்தியைக் காண்பார். (69:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்காளியா’ (முடிந்துபோனதாக) எனும் சொல், மறுமையில் எழுப்பப்படுவதற்குமுன் ஏற்படும் மரணத்தைக் குறிக்கும். (அந்த மரணத்தோடு எல்லாம் முடிந்திருக்கக்கூடாதா எனப் புலம்புவான்.) (69:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹத்’ (எவரும்) எனும் சொல் ஒருமை, பன்மை ஆகிய இரண்டு நிலையிலும் பிரயோகிக்கப்படுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (69:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வத்தீன்’ எனும் சொல்லுக்கு ‘நாடி நரம்பு’ என்பது பொருள். (69:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃகா’ எனும் சொல்லுக்கு ‘அதிகமானது’என்று பொருள். (69:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாஃகியா’ எனும் சொல்லுக்கு ‘(எல்லை மீறிய) அட்டூழியம்’ என்று பொருள். (‘தாஃகியா’ என்பதற்கு ‘புயல்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.) அந்தப் புயல் வானவர்களால்கூடக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மிகக் கடுமையாக வீசியது. இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் சமூகத்தார்மீது பெருவெள்ளம் மிகக் கடுமையாகப் பாய்ந்ததுபோல் இந்த (‘ஸமூத்’ மற்றும் ‘ஆத்’ சமூகத்தினருக்கும்) வேதனை எற்பட்டது. 

(70). ‘அல்மஆரிஜ்’ அத்தியாயம்1 

(70:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஸீலத்திஹி’ (அவனுடைய நெருங்கிய உறவினர்) எனும் சொல், ஒரு மனிதனின் குடும்ப உறவு எந்தத் தந்தை மற்றும் பாட்டனார் மூலம் வந்து சேர்கிறதோ அத்தகைய நெருக்கமான மூதாதையரைக் குறிக்கும். (70:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிஷ்ஷவா’ எனும் சொல், இரண்டு கைகள், இரண்டு கால்கள், மற்றும் உடலின் அனைத்து பாகங்களையும், தலையின் சருமத்தையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. எந்த உறுப்பைத் துண்டிப்பதால் மனிதன் இறந்துவிடமாட்டானோ அதுவும் ‘ஷவா’ என்று சொல்லப்படுகிறது. (70:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஸீன்’ எனும் சொல்லுக்கு, ‘கூட்டம் கூட்டமாக’ என்பது பொருள். ‘இஸத்’ (கூட்டம்) என்பது அதன் ஒருமையாகும். 

(71). ‘நூஹ்’ அத்தியாயம்1 

(71:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்வார்’ எனும் சொல்லுக்கு ‘மாறுபட்ட பல்வேறு நிலைகள்’ என்பது பொருள். (இதன் ஒருமையான ‘தவ்ர்’ எனும் சொல்லுக்கு ‘அளவு’, ‘வரம்பு’ எனப் பொருள் கூறப்படுவதுண்டு. இதன்படி) ‘அதா தவ்ரஹு’ எனும் வாக்கியத்திற்குத் ‘தனது வரம்பை அவன் மீறிவிட்டான்’ என்று பொருள் கொள்ளப்படுகிறது. (71:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குப்பார்’ எனும் சொல்லுக்கு ‘மிகப் பெரியது’ என்று பொருள். ‘குபார்’ (பெரிய) என்பதைவிட, ‘குப்பார்’ (மிகப் பெரிய) எனும் சொல், மிகைச் சொல்லாகும். இதைப் போன்றே ‘ஜுமால்’ (அழகிய) என்பதைவிட ‘ஜும்மால்’ (மிக அழகிய) என்பது மிகைச் சொல்லாகும். ‘குபார்’ என்பதற்கு ‘கபீர்’ (பெரியவன்) என்றும் பொருளுண்டு. ‘குபார்’ என்று (அழுத்தல் குறியின்றியு)ம் ஓதப்பட்டுள்ளது. ‘அழகிய மனிதன்’ என்பதைச் சுட்ட அரபியர், ‘ரஜுலுன் ஹுஸ்ஸானுன்’, ‘ரஜுலுன் ஜும்மாலுன்’, (என அழுத்தல் குறியுடனும்) ‘ரஜுலுன் ஹுஸானுன்’, ‘ரஜுலுன் ஜுமாலுன்’ என (அழுத்தல் குறியின்றியும்) குறிப்பிடுகின்றனர். (71:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தய்யார்’ எனும் சொல், ‘தவ்ர்’ எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். (‘தவ்ர்’ என்பதற்கு ‘குடியிருப்பு’ என்று பொருள்) ‘தய்யார்’ எனும் பதத்தின் வாய்ப்பாடு, ‘ஃபஹ்ஹால்’ எனும் வாய்பாட்டில் அமைந்துள்ளது. ‘அல்கய்யூம்’ என்பதை ‘அல்கய்யாம்’ என்றே உமர் (ரலி) அவர்கள் ஓதியுள்ளார்கள். (அதைப் போன்றே இதுவும் அமைந்துள்ளது.) மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘தய்யார்’ எனும் சொல்லுக்கு ‘எவரையும்’ என்று பொருள். (71:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தபார்’ எனும் சொல்லுக்கு ‘அழிவு’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (71:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மித்ரார்’ எனும் சொல்லுக்கு ‘தொடர்ந்து பெய்யும் மழை’ என்று பொருள். (71:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வகார்’ எனும் சொல்லுக்கு ‘மாண்பு’ என்பது பொருள். பாடம்: 1 (உங்கள் தெய்வங்களாகிய) வத்து, சுவாஉ, யஃகூஸ், யஊக் மற்றும் நஸ்ர் ஆகியவற்றை(க் கேட்பாரற்று) விட்டுவிடாதீர்கள் என்று அவர்கள் சொல்லிக்கொண்டனர் (எனும் 71:23ஆவது இறைவசனம்) 

4920. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:  இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்களின் (காலத்து) மக்களிடையே (வழிபாடு செய்யப்பட்டுக்கொண்டு) இருந்த சிலைகள், பின்பு அரபியரிடையே இருந்தன. ‘வத்து’ என்பது, ‘தூமத்துல் ஜந்தல்’ எனும் இடத்திலிருந்த ‘கல்ப்’ குலத்தாரின் சிலையாகும்.2 ‘சுவாஉ’ என்பது ‘பனூ ஹுஃதைல்’ குலத்தாரின் சிலையாகும்.3   ‘யஃகூஸ்’ என்பது ‘பனூ முராத்’ குலத்தாரின் சிலையாக இருந்தது. பின்னர், ‘சபஉ’ சமுதாயத்தாருக்கு அருகில் (யமனிலுள்ள) ‘ஜவ்ஃப்’ எனுமிடத்தில் வசித்துவந்த ‘பனூ ஃகுதைஃப்’ குலத்தாருக்குச் சொந்தமானது. ‘யஊக்’ என்பது ‘பனூ ஹம்தான்’ குலத்தாரின் சிலையாகும். ‘நஸ்ர்’ என்பது (யமனின் பழங்குடியரான) ‘ஹிம்யர்’ மக்களின் சிலையாகும். இவர்கள் ‘துல்கிலாஉ’ என்பவருடைய சந்ததியினராவர்.  (தெய்வச் சிலைகளாகக் கற்பிக்கப்பட்ட) இவை (ஐந்தும்) நூஹ் (அலை) அவர்களின் காலத்தில் வாழ்ந்த ஐந்து நல்ல மனிதர்களின் பெயர்களேயாகும். பின்னர் இவர்கள் மரணமடைந்தபொழுது இவர்களுடைய மக்களின் மனத்தில் ஷைத்தான், ‘‘அ(ந்த நல்ல)வர்கள் அமர்ந்துவந்த அவைகளில் சிலைகளை நிறுவுங்கள். (அவர்களின் நினைவாக) அவற்றுக்கு அவர்களின் பெயர்களையே சூட்டுங்கள்!” என்று எண்ணச் செய்தான்.   (அதன்படியே) அவர்களும் செய்தனர். அப்போது அந்தச் சிலைகள் வழிபாடு செய்யப்படவில்லை. ஆனால், (தங்களின் பெரியவர்களை நினைவுகூர்வதற்காகச் சிலை நிறுவிய) அந்த மக்களும் இறந்து, (அந்தச் சிலைகள் நிறுவப்பட்டதற்கான காரணம் குறித்த) அறிவும் மங்கிவிட்டபோது அச்சிலைகள் வழிபாடு செய்யப்படத் தொடங்கின.

(72.) ‘அல்ஜின்’ அத்தியாயம்1 

பகுதி: 1 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (72:19ஆவது வசனத் தின் மூலத்திலுள்ள) ‘லிபத்’ எனும் சொல்லுக்கு ‘உதவியாளர்கள்’ என்பது பொருள் 

4921. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் 'உக்காழ்' எனும் சந்தையை நோக்கிச் சென்றார்கள். (இந்த நேரத்தில்) ஷைத்தான்களுக்கும் வானுலகச் செய்திகளுக்குமிடையே திரையிடப்பட்டு (அச்செய்திகளைக் கேட்கவிடாமல் ஷைத்தான்களைத் தடுக்கப்பட்டு)விட்டது. (வானுலகச் செய்திகளை ஒட்டுக் கேட்கச் சென்ற) ஷைத்தான்களின் மீது தீப்பந்தங்கள் ஏவிவிடப்பட்டன. (ஒட்டுக் கேட்கச் சென்ற) அந்த ஷைத்தான்கள் (ஒரு செய்தியும் கிடைக்காமல் தம் தலைவர்களிடம்) திரும்பி வந்தன. அப்போது தலைவர்கள், 'உங்களுக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். ஷைத்தான்கள், 'வானத்துச் செய்திகளுக்கும் எங்களுக்குமிடையே திரையிடப்பட்டுவிட்டது; எங்களின் மீது தீப்பந்தங்கள் ஏவி விடப்பட்டன'' என்று பதிலளித்தனர். 'புதியதெரு நிகழ்ச்சி ஏதேனும் சம்பவித்திருக்கும். அதுவே, உங்களுக்கும் வானத்துச் செய்திகளுக்குமிடையே தடையாக அமைந்திருக்கவேண்டும். எனவே நீங்கள், பூமியின் கீழ்த்திசை, மேல்திசை (என நாலா பாகங்களிலும்) சென்று புதிதாகச் சம்பவித்துவிட்ட இந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயுங்கள்'' என்றனர். உடனே ஷைத்தான்கள் பூமியின் கீழ்த்திசை, மேல்திசை எங்கும் பயணம் செய்து தங்களுக்கும் வானுலகச் செய்திகளுக்கும் இடையே தடுப்பாய் அமைந்த அந்த நிகழ்ச்சி என்னவென்று ஆராயலாயினர்.

'திஹாமா' எனும் (மக்கா) பகுதியை நோக்கி ஷைத்தான்கள் வந்தபோது 'உக்காழ்' சந்ததையை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'நக்லா' எனுமிடத்தில் தம் தோழர்களுக்கு 'ஃபஜ்ரு'த் தெழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள் அப்போது ஓதப்பட்ட குர்ஆன் வசனங்களை அந்த ஷைத்தான்கள் கேட்டபோது அதைக் கவனமாகச் செவிகொடுத்துக் கேட்டனர். அப்போது ஷைத்தான்கள் (தங்களுக்கிடையில்) 'வானத்துச் செய்திகளை (கேட்கமுடியாமல்) உங்களைத் தடுத்தது இதுதான்'' என்று கூறிவிட்டு, தம் கூட்டத்தாரிடம் சென்று, 'எங்கள் கூட்டத்தாரே! நிச்சயமாக நாங்கள் ஆச்சரியமானதெரு குர்ஆனை செவிமடுத்தோம். அது நேர் வழியைக் காட்டுகிறது. எனவே, நாங்கள் அதை விசுவாசித்தோம். எங்கள் இறைவனுக்கு (இனி) நாங்கள் ஒருபோதும் யாரையும் இணையாகக் கருதமாட்டோம்'' என்று கூறினர். (இதையொட்டி) மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் தன் தூதருக்கு, '(நபியே!) நீர் கூறுக: வஹீ (இறைச்செய்தி) மூலம் எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது: மெய்யாகவே ஜின்களில் சிலர் (இவ்வேதத்தைச்) செவியேற்றனர்...'' என்று தெடங்கும் இந்த (72 வது) அத்தியாயத்தை அருளினான்.

ஜின்கள் (தம் கூட்டத்தாரிடம்) கூறியதைப் பற்றி 'வஹி'யின் மூலம் தான் நபி(ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. 2

(73) 'அல்முஸ்ஸம்மில்' அத்தியாயம்1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 73:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தபத்தல்' எனும் சொல்லுக்குக் 'கலப்பற்ற முறையில் அவனுக்காகவென்றே ஆகிவிடுங்கள்' என்று பொருள்.

ஹஸன் அல்பஸாரீ(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 73:12 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அன்கால்' எனும் சொல்லுக்கு '(கை) விலங்குகள்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 73:18 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முன்ஃபதிருன் பிஹி' எனும் சொல்லுக்கு 'அதன் பளுவால் தகர்ந்துவிடும்' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 73:14 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கஸீபம் மஹீலா' எனும் சொல்லுக்குச் 'சிதறிய மணற் குவியலாய்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 73:16 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வபீலா' எனும் சொல்லுக்குக் 'கடுமையாக' என்று பொருள்.

(74) 'அல்முத்தஸ்ஸிர்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

(திருக்குர்ஆன் 74:9 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அசீர்' எனும் சொல்லுக்கு 'மிகக் கடுமையான' என்று பொருள்.

(74:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கஸ்வரா’ எனும் சொல்லுக்கு ‘மனிதர்களின் கூச்சல், கூக்குரல்கள்’ என்பது பொருள். சிங்கத்திற்கும், ஒவ்வொரு கடினமான பொருளுக்கும் ‘கஸ்வரா’ என்றும், ‘கஸ்வர்’ என்றும் பெயர் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(திருக்குர்ஆன் 74:50 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முஸ்தன்ஃபிரா' எனும் சொல்லுக்கு 'மிரண்டு வெருண்டோடுகின்ற' என்று பொருள்.

பகுதி 1

4922. யஹ்யா இப்னு அபீ கஸீர்(ரஹ்) அறிவித்தார்

நான் அபூ ஸலமா இப்னு அப்திர்ரஹ்மான்(ரஹ்) அவர்களிடம் முதன்முதலாக அருளப்பெற்ற திருக்குர்ஆன் வசனம் குறித்துக் கேட்டேன். அதற்கு அன்னார் 'போர்த்தியிருப்பவரே!'' (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்றார்கள். நான் '(நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக!'' (இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லஃதீ கலக்) எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் என்றல்லவா மக்கள் கூறுகிறார்கள் என்றேன். அதற்கு அபூ ஸலமா அவர்கள், 'நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம் இது குறித்துக் கேட்டேன். நீங்கள் (என்னிடம்) கேட்டது போன்றே நானும் அவர்களிடம் கேட்டேன். அதற்கு ஜாபிர்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களுக்குச் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் சொல்லப்போவதில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் ஹிரா மலைக் குகையில் தங்கியிருந்தேன். பிறகு என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கினேன்.) அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டு நான் என் வலப் பக்கத்தில் பார்த்தேன். அங்கு எதையும் நான் காணவில்லை. என் இடப்பக்கத்தில் பார்த்தேன். அங்கும் எதையும் நான் காணவில்லை. எனவே, நான் என் தலையை உயர்த்திப் பார்த்தேன். அங்கு ஒன்றை கண்டேன். 2 எனவே, நான் (என் துணைவியாரான) கதீஜாவிடம் சென்று, 'எனக்குப் போர்த்திவிடுங்கள். குளிர்ந்த நீரை என் மீது ஊற்றுங்கள்!'' என்று கூறினேன். அவர்கள் எனக்குப் போர்த்தியும்விட்டார்கள்; என் மீது குளிர்ந்த நீரை ஊற்றவும் செய்தார்கள். அப்போது, 'போர்த்திக்கொண்டு (படுத்து) இருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 74:1-3) வசனங்கள் அருளப்பெற்றன. 3

பகுதி 2

''எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 74:2 வது) இறைவசனம்.

4923. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

நான் 'ஹிரா' மலைக் குகையில் தங்கியிருந்தேன். (எனத் தெடங்கி) மேற்கண்ட ஹதீஸ் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தெடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 3

உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்திடுங்கள் (எனும் 74:3 வது இறைவசனம்.)

4924. யஹ்யா இப்னு அபீ கஸீர்(ரஹ்) அறிவித்தார்

நான் அபூ ஸலமா(ரஹ்) அவர்களிடம் 'முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?' என்று கேட்டேன். அதற்கு அன்னார், 'போர்த்தியிருப்பவரே!'' (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்றார்கள். அப்போது நான், '(நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக!'' (இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லஃதீ கலக்) எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூ ஸலமா(ரஹ்), 'நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம், 'முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்'' எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், 'இக்ரஃ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக்'' எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் தான் (முதன் முதலில் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் சொன்னதைத் தவிர வேறெதையும் உங்களுக்கு நான் தெரிவிக்கப்பபோவதில்லை. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நான் 'ஹிரா' மலைக் குகையில் தங்கியிருந்தேன். நான் என் தங்குதலை முடித்துக்கொண்டு (மலையிலிருந்து) இறங்கி அங்கிருந்த பள்ளத்தாக்கின் நடுவே வந்து சேர்ந்திருப்பேன். அப்போது என்னை அழைக்கும் குரலைக் கேட்டேன். உடனே நான் எனக்கு முன்புறத்திலும் எனக்குப் பின்புறத்திலும் எனக்கு வலப்பக்கத்திலும் எனக்கு இடப்பக்கத்திலும் பார்த்தேன். அப்போது அவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். உடனே நான் கதீஜாவிடம் சென்று 'எனக்குப் போர்த்திவிடுங்கள்! என் மீது குளிர்ந்த நீரை ஊற்றுங்கள்!'' என்று கூறினேன். மேலும், எனக்கு, 'போர்த்திக் கொண்டு (படுத்து) இருப்பவரே, எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். மேலும், உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 74:1-3) இறைவசனங்கள் அருளப்பெற்றன. 4

பகுதி 4

மேலும், உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள் (எனும் 74:4 வது இறைவசனம்).

4925. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின் வருமாறு) கூறினார்கள்:

நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் 'ஹிரா'வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், 'எனக்குப் போர்த்திவிடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், 'போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களைத் தெழுகை கடமையாக்கப்படுவதற்கு முன்னர் அருளினான். 5

(மேற்கண்ட 74:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்ருஜ்ஸ்' (அசுத்தம்) என்பது சிலைகளைக் குறிக்கும்.

பகுதி 5

அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள் (எனும்) 74:5 வது இறைவசனம்.)

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்ருஜ்ஸ்' எனும் சொல்லுக்கும் 'அர்ரிஜ்ஸ்' எனும் சொல்லுக்கும் 'வேதனை' என்று பொருள் என்று கூறப்படுகிறது.

4926. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

வஹீ (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானை நோக்கி என் பார்வையை உயர்த்தினேன். அங்கு, 'ஹிரா' குகையில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு (கீழே) பூமியில் விழுந்து விட்டேன். அப்போது நான் (நடுக்கமுற்றவனாக) என் வீட்டாரிடம் (திரும்பி) வந்து (கதீஜாவிடம்), 'எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்றேன். அப்போது, 'போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 74:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்ருஜ்ஸ்' (அசுத்தம்) எனும் சொல், சிலைகளைக் குறிக்கும். (மேற்கண்ட வசனம் அருளப்பெற்ற) பின்னர் 'வஹீ' தெடர்ந்து அதிகமாக வரலாயிற்று.6

75 'அல்கியாமா' அத்தியாயம் 1

பகுதி 1

(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் (எனும் 75:16 வது இறைவசனம்.)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 75:36 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சுதா' எனும் சொல்லுக்கு, 'வெறுமனே' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 75:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லி யஃப்ஜுர அமாமஹு' (எதிர்காலத்திலும் தீமை செய்துகொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான்) என்பதற்கு, 'வெகு விரைவில் பாவமன்னிப்புக் கோருவேன்; நல்லறங்கள் புரிவேன் என்று சொல்லிக் கொண்டே பாவங்களைக் செய்ய விரும்புகிறான்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 75:11 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லா வஸர' எனும் சொல்லுக்கு, 'எந்தப் புகலிடமும் இருக்காது' என்று பொருள்.

4927. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

தம் மீது 'வஹீ' (வேத அறிவிப்பு) அருளப்படும்போது, நபி(ஸல்) அவர்கள் (தாம் இதனை எங்கே மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தினால் வேக வேகமாக ஓதி,) தம் நாவை அசைப்பவர்களாக இருந்தார்கள். -அருளப்படும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்கள்- அப்போது, '(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) வசனத்தை அல்லாஹ் அருளினான். 2

பகுதி 2

அதனை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும் (எனும் 75:17 வது இறைவசனம்).

4928. மூஸா இப்னு அபீ ஆயிஷா(ரஹ்) அறிவித்தார்

நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், '(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறை வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: தம்மீது 'வஹீ' (வேத அறிவிப்பு) அருளப்படும்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி(ஸல்) அவர்களுக்கு 'வஹீ அருளப்படும்போது அவசர அவசரமாக உங்கள் நாவை அசைக்காதீர்கள்' என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம் மீது அருளப்படும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி(ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

''அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்'' எனும் (திருக்குர்ஆன் 75:17 வது) வசனத்திற்கு 'நாமே உங்களின் நெஞ்சத்தில் அதனை(ப் பதியச் செய்து,) ஒன்று சேர்ப்போம். நீங்கள் அதனை ஓதும்படி செய்வோம்' என்று பொருள்.

''நாம் இதனை ஓதிவிட்டோமாயின்..'' எனும் (திருக்குர்ஆன் 75:18 வது) வசனத்திற்கு, 'ஜிப்ரீல் மூலமாக உங்களுக்கு என் வசனங்கள் அருளப்பட்டு விடுமாயின்..' என்று பொருள்.

''நீங்கள் ஓதுவதைத் தெடருங்கள். பின்னர் அ(தன் கருத்)தை விளக்குவதும் நம்முடைய பொறுப்பாகும்'' (எனும் (திருக்குர்ஆன் 75:19 வது) வசனத்திற்கு, 'உங்களுடைய நாவினால் பிறருக்கு விளக்கிக்கொடுக்கச் செய்வதும் எம்முடைய பொறுப்பேயாகும்'' என்று பொருள்.

பகுதி 3

(நபியே! நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தெடருங்கள் (எனும் 75:18 வது இறைவசனம்.)

இப்னு அப்பாஸ்(ரலி), 'நாம் இதனை விவரிக்கும்படி அதன்படி செயல்படுங்கள்' என்று இவ்வசனத்திற்குப் பொருள்'' என்று கூறினார்கள்.

4929. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

''(நபியே!) இந்த வஹியை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்'' எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) வசனம் குறித்து இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் தம்மிடம் 'வஹீ'யைக் கொண்டுவரும்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் வதனத்திலேயே காணப்படலாயிற்று. எனவே, அல்லாஹ், 'லா உக்ஸிமு பி யவ்மில் கியாமா'' என்று தெடங்கும் (75 வது அத்தியாயத்திலுள்ள) 'இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக, உங்கள் நாவை அசைக்காதீர்கள். அதை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எம்முடைய பொறுப்பாகும்'' எனும் (திருக்குர்ஆன் 75:16,17) வசனங்களை அருளினான்.

அதாவது, 'உங்கள் நெஞ்சத்தில் பதியச் செய்வதும் அதை உங்கள் நாவால் ஓதும்படிச் செய்வதும் எம்முடைய பொறுப்பாகும்'' என்று இறைவன் கூறினான். மேலும், 'நாம் இதனை ஓதிவிட்டோமாயின், நீங்கள் ஓதுவதைத் தெடருங்கள்'' என்ற (திருக்குர்ஆன் 75:18 வது) வசனத்தையும் அருளினான். அதாவது, 'நாம் (வானவர் மூலம்) அருளும்போது, அதனைக் கவனத்துடன் கேளுங்கள்'' என்று கூறினான். 'பின்னர், அதனை விளக்குவதும் எம்முடைய பொறுப்பாகும்'' எனும் (திருக்குர்ஆன் 75:19 வது) வசனத்தையும் அருளினான். அதாவது, 'உங்கள் நாவினால் அதனை(ப் பிறருக்கு) விளக்கித் தரும்படி உங்களை (ஆயத்தம்) செய்வது நம்முடைய பொறுப்பாகும்' என்று கூறினான்.

(இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர்) தம்மிடம் ஜிப்ரீல்(அலை) அவர்கள் ('வஹீ' கொண்டு வரும்போது,) தலையைத் தாழ்த்தி (அருளப்படுவதை நபி(ஸல்) அவர்கள் மௌனத்துடன் கேட்டு)க் கொண்டிருப்பார்கள். (வசனங்களை அருளிவிட்டு) ஜிப்ரீல்(அலை) அவர்கள் சென்றுவிடும்போது, அல்லாஹ் வாக்களித்த பிரகாரம் நபி(ஸல்) அவர்கள் அவற்றை ஓதினார்கள்.

''(மனிதனே! இது) உனக்குக் கேடுதான்! கேடேதான்'' எனும் (திருக்குர்ஆன் 75:34 வது வசனம் ஓர் எச்சரிக்கையாகும்.

(76) ‘அத்தஹ்ர்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

(76:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹல் அத்தா அலல் இன்சான்’ எனும் சொற்றொடருக்கு ‘மனிதன் குறிப்பிடத்தக்க ஒரு பொருளாக இல்லாதிருந்த ஒரு காலம் நிச்சயம் அவன்மீது சென்றுவிட்டது’ என்று பொருள். இதிலுள்ள ‘ஹல்’ எனும் (வினா) இடைச்சொல் சிலவேளை ஒன்றை மறுக்கும் தொனியில் வினவுவதற்காக வரும். இன்னும் சில சமயம் (நடப்பைக் குறிக்கும்) செய்தியாகவும் வரும். இங்கே செய்தியாகவே வந்துள்ளது. அதாவது (ஆரம்பத்தில்) மனிதன் ஒரு பொருளாக இருந்தான். ஆனால், இன்ன பொருள் என்று குறிப்பட்டுச் சொல்லும் நிலையில் அவன் இருக்கவில்லை. இந்த வசனம் (முதல்) மனிதரைக் களிமண்ணினால் படைத்து, அவருக்குள் உயிர் ஊதப்படும் வரையிலுள்ள கால வரம்பைக் குறிக்கின்றது. (76:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அம்ஷாஜ்’ எனும் சொல்லுக்கு ‘கலக்கப்பட்ட’ என்பது பொருள். அதாவது, ஆணின் நீர் (விந்து உயிரணு) மற்றும் பெண்ணின் நீர் (கருமுட்டை) மூலம் (கலக்கப்பட்ட ஓர் இந்திரியத் துளியிலிருந்து மனிதனைப் படைத்தோம்). பிறகு, அது (படிப்படியாக) இரத்தக் கட்டியாக, சதைப் பிண்டமாக மாறியது. ஒரு பொருள் இன்னொரு பொருளோடு கலக்கும்போது, கலக்கப்பட்ட பொருள் (‘மஷீஜ்’) என்று சொல்லப்படுகிறது. (மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘அம்ஷாஜ்’ எனும் சொல், ‘மஷீஜ்’ எனும் சொல்லின் பன்மையாகும்). இதற்கு ‘மம்ஷூஜ்’ (கலக்கப்பட்டது) என்று பொருள். (76:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சலாசில வ அஃக்லால்’ (சங்கிலிகளையும் விலங்குகளையும்) எனும் சொல்லை ‘சலாசிலன் வ அஃக்லாலன்’ என்று சிலர் ஓதினர். ஆனால், மற்றவர்கள் இதை அனுமதிக்கவில்லை. (‘சலாசில வ அஃக்லால்’ என்றே ஓத வேண்டும் என்று கூறுகின்றனர்). (76:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்த்ததீர்’ எனும் சொல்லுக்கு ‘துன்பங்கள் நீண்ட’ என்பது பொருள். (76:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கம்தரீர்’ எனும் சொல்லுக்கு ‘கடுமையானது’ என்று பொருள். ‘யவ்முன் கம்தரீர், யவ்முன் குமாதிர்’ ஆகிய சொற்களைக் கடும் துன்ப நாளைக் குறிக்க (அரபியர்) பயன்படுத்துகின்றனர். ‘அல்அபூஸ்’, ‘அல்கம்தரீர்’, ‘அல்குமாதிர்’, ‘அல்அஸீப்’ ஆகிய சொற்கள் கடுமையான துன்ப நாளைக் குறிக்கும். அபூஉபைதா மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (76:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஷதத்னா அஸ்ரஹும்’ எனும் வாக்கியத்திற்கு ‘அவர்களை வலுவாகப் படைத்தோம்’ என்பது பொருள். (‘அசிர’ எனும் இறந்தகால வினைச்சொல்லுக்கு ‘இறுக்கமாகக் கட்டினான்’ என்பது பொருள். இந்த வகையில்,) எதையெல்லாம் மனிதன் இறுக்கமாகக் கட்டுவானோ அதற்கு ‘மஅஸூர்’ (இறுக்கமாகக் கட்டப்பட்டது) என்று கூறப்படும். உதாரணமாக, ஒட்டகத்தின் சிவிகையைக் கூறலாம். (அதை ஒட்டகத்தின் மீது இறுக்கமாகவே கட்டிவைக்கப்படுகிறது). 

(77) ‘அல்முர்சலாத்’ அத்தியாயம்1 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (77:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஜிமாலாத்’ எனும் சொல் ‘ஜுமாலாத்’ என்றும் ஓதப்பட்டுள்ளது. இந்த) ‘ஜுமாலாத்’ எனும் சொல்லுக்கு, ‘கப்பலின் கயிறுகள்’ என்று பொருள். (77:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இர்கஊ’ (குனிந்து ருகூஉ செய்து வழிபடுங்கள்) எனும் சொல்லுக்கு ‘தொழுகையை நிறைவேற்றுங்கள்’ என்பது பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்கஊன்’ (அவர்கள் குனிந்து ருகூஉ செய்து வழிபடுவதில்லை) எனும் சொல்லுக்கு, ‘அவர்கள் தொழுவதில்லை’ என்பது பொருள். (77:35ஆவது வசனத்தில்) ‘‘இந்த மறுமை நாளில் அவர்கள் எதுவும் பேசமாட்டார்கள்” என்றும், (6:23ஆவது வசனத்தில்) ‘‘எங்கள் இறைவனாகிய அல்லாஹ்வின் மீதாணையாக,! நாங்கள் ஒருபோதும் இணைவைப்போராக இருக்கவில்லை (என்று பொய் சொல்வார்கள்)” என்றும், (36:65ஆவது வசனத்தில்) ‘‘(மறுமை நாள்) அன்று அவர்களுடைய வாய்களுக்கு முத்திரை வைத்துவிடுவோம். (அவர்களது வாய் பேசாது)” என்றும் (முரண்பாடு இருப்பதுபோல்) காணப்படுகிறதே என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘(இணைவைப்பாளர்களுக்கு மறுமை நாளில்) பல்வேறு கட்டங்கள் உண்டு. சில சந்தர்ப்பங்களில் அவர்கள் பேசுவார்கள்; இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவர்களால் பேச முடியாதவாறு அவர்களது வாய்க்கு முத்திரை வைக்கப்படும்” என்று பதிலளித்தார்கள்.2 

பகுதி 1

4930. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, 'வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)'' எனும் (77 வது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள்.3

4931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு, 'வல் முர்சலாத்தி (ஒன்றின் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)'' எனும் (77 வது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் 'அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள்'' என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு (தன்னுடைய புற்றுக்குள் புகுந்து)விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தெடர் வழியாகவும் வந்துள்ளது.

பகுதி 2

''அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 77:32 வது) இறைவசனம்.

4932. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அறிவித்தார்

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள 'கஸ்ர்' எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

நாங்கள் குளிர்காலத்தில் குளிர் காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்துவருவோம். அவற்றுக்கு நாங்கள் 'கஸர்' எனப் பெயரிட்டழைத்துவந்தோம். 4

பகுதி 3

''அது (குமுறி எழும்போது) மஞ்சள் நிற ஒட்டகங்களைப் போல் இருக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 77:33 வது) இறைவசனம்.

4933. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அறிவித்தார்

''அந்த நெருப்பு, மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும்'' எனும் (திருக்குர்ஆன் 77:32 வது) இறைவசனத்திற்கு விளக்கம் கூறுகையில், இப்னு அப்பாஸ்(ரலி) (பின்வருமாறு) கூறக்கேட்டேன்.

நாங்கள் மூன்று முழம், அல்லது அதைவிட அதிகமான அளவிலுள்ள மரக்கட்டைகளை நாடிச் செல்வோம். அவற்றைக் குளிர்காலத்திற்காக நாங்கள் எடுத்து வைப்போம். அவற்றுக்கு 'அல்கஸர்' எனப் பெயரிட்டு அழைத்து வந்தோம்.

(திருக்குர்ஆன் 77:33 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஜுமாலத்துன் ஸுஃபர்' எனும் சொல், மரக்கலங்களைக் கட்டும் கயிறுகளைக் குறிக்கும். அக்கயிறுகள் மனிதர்களின் இடுப்புகளைப் போல் (பருமனாக) மாறும் அளவிற்கு திரிக்கப்படும்.

பகுதி 4

இது, அவர்கள் (ஏதும்) பேச முடியாத நாளாகும் (எனும் 77:35 வது இறைவசனம்).

4934. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்

நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள) ஒரு குகையில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது அவர்களுக்கு, 'வல் முர்சலாத்தி'' (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!) எனும் (77 வது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை நபி(ஸல்) அவர்கள் ஓதிக்கொண்டிருந்தார்கள். நான் அதை அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதிதாகச் செவியேற்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு பாம்பு (புற்றிலிருந்து) எங்களை நோக்கித் துள்ளி வந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதைக் கொல்லுங்கள்'' என்றார்கள். அதை நோக்கி போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது (தன்னுடைய புற்றுக்குள் ஓடிப்) போய் (நுழைந்து)விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளரான உமர் இப்னு ஹஃப்ஸ்(ரஹ்) கூறினார்.

''இந்நிகழ்ச்சி மினாவிலிருந்த ஒரு குகையில் நடந்தது'' என்று என் தந்தையாரிடமிருந்து (கேட்டு) நான் மனனமிட்டுள்ளேன்.

(78) ‘அந்நபஉ’ அத்தியாயம்1 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (78:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யர்ஜƒன ஹிசாபா’ (அவர்கள் விசாரணையை நம்பக்கூடியவர்களாக இருக்கவில்லை) என்பதன் கருத்தாவது: அதைப் பற்றிய அச்சம் அவர்களுக்கு இருக்கவில்லை. (78:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யம்லிகூன மின்ஹு கிதாபா’ (அவனிடம் பேச அவர்களுக்கு அதிகாரம் கிடையாது) என்பதன் கருத்தாவது: இறைவன் அனுமதித்தாலன்றி அவனிடம் அவர்கள் பேச முடியாது. (78:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸவாப்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியத்தைப் பேசி அதன் வழி நடத்தல்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (78:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஹ்ஹாஜ்’ எனும் சொல்லுக்கு ‘ஒளிர்கின்ற’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகிறார்கள்: (78:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகஸ்ஸாக்’ எனும் சொல்லுக்கு, ‘வழிகின்ற (சீழ்)’ என்பது பொருள். (இதன் வினைச்சொல்லான) ‘ஃகஸகத் அய்னுஹு’ எனும் வாக்கியத்திற்கு ‘அவனது கண்ணிலிருந்து (பீளை) வழிந்தது’ என்பது பொருள். ‘யஃக்ஸிகுல் ஜுர்ஹு’ என்பதற்கு ‘காயத்திலிருந்து (சீழ்) வழிகின்றது’ என்பது பொருள். (78:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அத்தாஅன் ஹிசாபா’ எனும் சொல்லுக்கு ‘போதிய வெகுமதி’ என்று பொருள். ‘அஃதானீ மா அஹ்சபனீ’ எனும் வாக்கியத்திற்கு (வழக்கில்) ‘போதிய அளவுக்கு எனக்கு வழங்கினான்’ என்று பொருள். 

பகுதி1 

‘ஸூர்’ எனும் எக்காளம் ஊதப்படும் நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக (கிளம்பி) வருவீர்கள் (எனும் 78:18ஆவது இறைவசனம்) இதன் மூலத்திலுள்ள ‘அஃப்வாஜ்’ எனும் சொல்லுக்கு ‘கூட்டங்கள்’ என்பது பொருள். 

4935. அபூ சாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) அறிவித்தார்

''(உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும், பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும்) இரண்டு எக்காளத்திற்கும் (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். (அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் நண்பர்கள்,) '(அபூ ஹுரைரா அவர்களே!) நாள்களில் நாற்பதா?' என்று கேட்டனர். அபூ ஹுரைரா(ரலி), '(நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து) நான் விலகிக் கொள்கிறேன்'' என்று கூறினார்கள். (நண்பர்களான) அவர்கள், 'நாற்பது மாதங்களா?' என்று கேட்டனர். அதற்கும் 'நான் விலகிக் கொள்கிறேன்'' என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 'ஆண்டுகள் நாற்பதா?' என்று கேட்டனர். அப்போதும் அபூ ஹுரைரா(ரலி), 'நான் விலகிக் கொள்கிறேன்'' என்று கூறினார்கள். பின்னர், 'வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான். அப்போது (மண்ணறைக்குள் உக்கிப்போயிருக்கும் மனித சடலங்கள்) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள். மனிதனிலுள்ள (உறுப்புகள்) அனைத்துமே (மண்ணுக்குள்) உக்கிக்போகாமல் இருப்பதில்லை. ஆனால், ஒரேயோர் எலும்பதை; தவிர! அதுதான் (முதுகந் தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும்) மறுமை நாளில் உருவாக்கப்படும்'' என்று மேலும் கூறினார்கள். 3

(79) 'அந்நாஸிஆத்' அத்தியாயம்1

முஜாஹித்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 79:20 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் ஆயத்துல் குப்ரா' (பெரும் சான்று) எனும் சொல், மூஸா(அலை) அவர்களின் கைத்தடியையும் (அற்புதமாகப் பிரகாசித்த) அன்னரின் கரத்தையும் குறிக்கும்.

பகுதி 1

4936. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

தம் நடுவிரலையும், பெருவிரலை அடுத்துள்ள (ஆட்காட்டி) விரலையும் இணைத்தவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'நானும் மறுமை நாளும் இதோ இந்த இரண்டு விரல்கள் போல் (நெருக்கமாகவே) அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று கூறக்கேட்டேன்.

(திருக்குர்ஆன் 79:34 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத்தாம்மா' (அமளி) எனும் சொல்லுக்கு 'அனைத்துப் பொருள்களையும் துவம்சம் செய்யக்கூடியது' என்று பொருள்.

(80)‘அபச’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

(80:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அபச வத்தவல்லா’ எனும் வாக்கியத்திற்கு ‘அவர் கடுகடுத்தார்; மேலும் முகத்தைத் திருப்பிக்கொண்டார்’ என்பது பொருள். (80:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முதஹ்ஹரா’ (பரிசுத்தமான ஏடுகள்) என்பதன் கருத்தாவது: தூய்மையானவர்களாகிய வானவர்களைத் தவிர வேறு எவராலும் தொட முடியாத (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ் எனும்) ஏடுகள். இந்த வசனம்,”முந்திச் செல்பவர்(களான வானவர்)கள்மீது சத்தியமாக” எனும் (79:5ஆவது) வசனத்தைப் போல அமைந்துள்ளது. (உண்மையில், ‘முந்திச் செல்லல்’ என்பது வானவர்களைச் சுமந்து செல்லும் குதிரைகளின் தன்மையாகும்; ஆனால், வானவர்களின் தன்மைபோல் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.) வானவர்களையும் அந்த ஏடுகளையும் பரிசுத்தமானவை என்று இறைவன் கூறுகின்றான். ஏனெனில், பரிசுத்தம் என்பது (வேத) ஏடுகளால் கிடைக்கிறது. ஆகவே, அந்த ஏடுகளைச் சுமப்பவர்க(ளான வானவர்க)ளுக்கும் பரிசுத்தம் கிடைக்கும். (80:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சஃபரா’ (சமாதானத் தூதர்கள்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது. ‘சஃபரா’ என்பதன் ஒருமை ‘சாஃபிர்’ என்பதாகும். ‘சஃபர்த்து’ எனும் (தன்மை வினைச்)சொல்லுக்கு ‘அவர்களுக்கிடையே சமாதானம் செய்துவைத்தேன்’ என்பது பொருள். இறைவனின் ‘வஹீ’யைப் பெற்றுக்கொண்டு, அதை இறைத்தூதர்களிடம் சேர்ப்பதற்காக இறங்கிவரும் வானவர்கள் மக்களிடையே சமாதானம் செய்துவைக்கும் தூதர்களைப்போல் உள்ளனர். (80:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஸத்தா’ எனும் சொல்லுக்கு ‘அலட்சியம் செய்தார்’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (80:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லம்மா யக்ளீ’ எனும் சொற்றொடருக்கு ‘தமக்கு இறைவனால் ஏவப்பட்டதை ஒருவரும் நிறைவேற்றுவதில்லை’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (80:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தர்ஹகுஹா’ எனும் சொல்லுக்கு ‘அதில் கடுமையாகக் கப்பியிருக்கும்’ என்று பொருளாகும். (80:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்ஃபிரா’ எனும் சொல்லுக்கு ‘இலங்கிக்கொண்டிக்கும்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (80:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி அய்தீ சஃபரா’ எனும் சொற்றொடருக்கு ‘எழுதுபவர்களின் கைகளால்’ என்று பொருள். ‘அஸ்ஃபார்’ எனும் (பன்மைச்) சொல்லுக்கு ‘ஏடுகள்’ என்பது பொருள். இதன் ஒருமை ‘சிஃப்ர்’ என்று கூறப்படுகிறது. (80:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தலஹ்ஹா’ எனும் சொல்லுக்கு ‘பாராமுகமாக இருந்துவிடுகிறீர்கள்’ என்று பொருள். 

4937. ' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதிவருபவர் கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திராவிட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தெடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு.

என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(81) ‘அத்தக்வீர்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

(81:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இன்கதரத்’ எனும் சொல்லுக்கு ‘உதிர்ந்துவிடும்’ என்று பொருள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (81:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சுஜ்ஜிரத்’ எனும் சொல்லுக்கு ‘ஒரு துளி கூட எஞ்சாமல் (கடல்) வற்றிவிடும்போது’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (52:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஸ்ஜூர்’ எனும் சொல்லுக்கு ‘நிரப்பப்பட்டது’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: ‘சுஜிரத்’ எனும் சொல்லுக்கு ‘பல கடல்கள் ஒன்றோடொன்று சங்கமமாக்கப்பட்டு ஒரே கடலாய் மாறிவிடும்’ என்று பொருள். (81:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்குன்னஸ்’ எனும் சொல்லுக்கு ‘தன் பாதையில் பின்னோக்கி வரக்கூடியது’ என்று பொருள். ‘தக்னிஸு’ என்பதற்கு ‘மான்கள் (புதர்களுக்குள்) மறைவதுபோல மறைகிறது’ என்று பொருள். (81:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘அல்குன்னஸ்’ என்பதன் வினைச்சொல்லே ‘தக்னிஸு’ ஆகும்.) (81:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தநஃப்பச’ எனும் சொல்லுக்கு ‘பகல் புலரும்’ என்று பொருள். (81:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளனீன்’ எனும் சொல்லுக்கு ‘கருமி’ என்பது பொருள். (வேறோர் ஓதல் முறையில் அமைந்த) ‘ழனீன்’ எனும் சொல்லுக்கு ‘சந்தேகத்திற்கிடமானவர்’ என்று பொருள். (81:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அந்நுஃபூசு ஸுவ்விஜத்’ (உயிர்கள் ஒன்றிணைக்கப்படும்போது) எனும் வசனத்தில் உமர் (ரலி) அவர்கள், ‘‘சொர்க்கவாசிகளான ஆண்களுக்கு அவர்களுக்கு இணையான சொர்க்கவாசிப் பெண்களையும், நரகவாசிகளான ஆண்களுக்கு அவர்களுக்கு நிகரான நரகவாசிப்பெண்களையும் (மறுமையில்) இணைகளாக வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகின்றான்”என்று சொல்லிவிட்டு, ‘‘அக்கிரமம் இழைத்துக்கொண்டிருந்தவர்களையும், அவர்களுடைய இணைகளையும், அவர்கள் வழிபட்டுக்கொண்டிருந்த தெய்வங்களையும் ஒன்றுதிரட்டிக் கொண்டுவாருங்கள்” எனும் (37:22ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (81:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்அஸ’ எனும் சொல்லுக்கு (‘விடைபெற்றுத்) திரும்பிச் செல்லக்கூடியது’ என்று பொருள். 

(82.) ‘அல்இன்ஃபித்தார்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

ரபீஉ பின் குஸைம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (82:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபுஜ்ஜிரத்’ எனும் சொல்லுக்கு ‘பொங்கி வழியும்’ என்பது பொருள். (82:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள பதத்தை) ‘ஃப அதலக்’ என்று அஃமஷ் (ரஹ்) அவர்களும், ஆஸிம் (ரஹ்) அவர்களும் ஓதினார்கள். ஆனால், ஹிஜாஸ்வாசிகள் அந்தப் பதத்தை அழுத்தல் குறியுடன் ‘ஃபஅத்தலக்’ என்று ஓதினர். இதன்படி, ‘(மனிதனே!) உன்னை உருவக் குறைகள் ஏதுமின்றி இறைவன் செம்மைப்படுத்தினான்’ என்று பொருளமையும். (அழுத்தல் குறியில்லாமல்) ஓதியவர்களின் வாய்பாட்டின்படி, ‘தான் நாடிய கோலத்தில் சிலரை அழகுடனும் சிலரை அழகில்லாமலும் சிலரை உயரமாகவும் சிலரைக் குட்டையாகவும் இறைவன் படைத்தான்’ என்று பொருள் வரும். 

(83.) ‘அத்தத்ஃபீஃப்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (83:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பல் ரான’ எனும் சொல்லுக்கு, ‘அவர்களின் உள்ளங்களில் தீமைகள் ஆழமாகப் பதிந்துவிட்டன’ என்பது பொருள். (83:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸுவ்விப’ எனும் சொல்லுக்கு ‘பிரதிபலன் கொடுக்கப்பட்டது’ என்பது பொருள். (83:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ரஹீக்’ எனும் சொல்லுக்கு ‘(தரமான) மது பானம்’ என்பது பொருள். (83:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகிதாமுஹு மிஸ்க்’ எனும் தொடருக்கு ‘அந்தச் சொர்க்கத்தின் மண் கஸ்தூரியாகும்’ என்பது பொருள். (83:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஸ்னீம்’ எனும் சொல்லுக்கு ‘சொர்க்கவாசிகளின் பானங்களில் மேலானது’ என்பது பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (83:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்தஃப்பிஃப்’ எனும் சொல்லுக்கு ‘பிறருக்கு அளவையை நிறைவு செய்யாதோர்’ என்று பொருள். பாடம்: 1 (அது) அகிலத்தாரின் அதிபதிமுன் மக்களெல்லாரும் நிற்கும் நாள் (எனும் 83:6 ஆவது இறை வசனம்) 

4938. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள், '(அது) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள்'' எனும் (திருக்குர்ஆன் 83:6 வது) இறை வசனத்தை ஓதிவிட்டு, 'அன்று தம் இரண்டு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தம் வேர்வையில் அவர்களில் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார்'' என்று கூறினார்கள். 2

(84.) ‘அல்இன்ஷிகாக்’ அத்தியாயம்1 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (84:10ஆவது வசனத்தின் கருத்துக்கு ஒத்த 69:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்தாபஹு பி ஷிமாலிஹி’ (தமது இடக் கரத்தில் வினைப் பதிவேடு கொடுக்கப்படுவார்) என்பதற்கு ‘தமது வினைப்பதிவேட்டை முதுகிற்குப் பின்னாலிருந்து (இடக் கையால்) வாங்குவார்’ என்பது பொருள். (84:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வசக’ எனும் சொல்லுக்கு ‘அது ஒன்றுதிரட்டி வைத்துக்கொண்டிருக்கும் உயிரினங்கள்மீது சத்தியமாக’ என்பது பொருள். (84:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ழன்ன அன் லய் யஹூர்’ எனும் வாக்கியத்திற்கு ‘(இறைவனின் பக்கம்) ஒருபோதும் திரும்பி வரப்போவதில்லை என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான்’ என்று பொருள். 

பகுதி: 1 

எவரது வினைப்பதிவேடு அவரது வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவர் எளிதான முறையில் விசாரணைக்குள்ளாக்கப்படுவார் (எனும் 84:8ஆவது இறைவசனம்) 

4939. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(மறுமை நாளில்) கணக்கு வாங்கப்படும் எவரும் அழிந்தே போய்விடுவார்'' என்று கூறினார்கள். நான், 'இறைத்தூதர் அவர்களே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்கட்டும்!

''எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக்கரத்தில் வழங்கப்படுமோ, அவரிடம் எளிதான முறையில் கணக்கு வாங்கப்படும்'' என்றல்லவா அல்லாஹ் (திருக்குர்ஆன் 84:8 வது வசனத்தில்) கூறுகிறான்?' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'இது (கேள்வி கணக்கு தெடர்பானது அன்று மாறாக, மனிதர்கள் புரிந்த நன்மை தீமைகளின் பட்டியலை) அவர்களுக்கு முன்னால் சமர்ப்பிக்கப்படுதலாகும்; கேள்வி கணக்கின்போது எவன் துருவித் துருவி விசாரிக்கப்படுவானோ, அவன் அழிந்தான்'' என்று கூறினார்கள்.2

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தெடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதி 2

திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்வீர்கள் (எனும் 84:19 வது இறைவசனம்.)

4940. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி), '(திருக்குர்ஆன் 84:19 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தபக்கன் அன் தபக்கின்' எனும் சொற்றொடருக்குத் 'திண்ணமாக, நீங்கள் படிப்படியாக ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குக் கடந்து செல்ல வேண்டியதுள்ளது'' என்று பொருள்'' என்று கூறிவிட்டு, 'இந்த வசனம் உங்களுடைய நபி(ஸல்) அவர்களையே முன்னிலைப்படுத்திப் பேசுகிறது'' என்று கூறினார்கள். 3

(85.) ‘அல்புரூஜ்’ அத்தியாயம்1 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (85:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உக்தூத்’ எனும் சொல்லுக்கு ‘பூமியிலுள்ள அகழ், அல்லது குண்டம்’ என்பது பொருள். (85:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபத்தனூ’ எனும் சொல்லுக்கு ‘வேதனை செய்தார்கள்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (85:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வதூத்’ எனும் சொல்லுக்கு ‘அன்பு செலுத்துபவன்’ என்பது பொருள். (85:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்மஜீத்’ எனும் சொல்லுக்கு ‘மேன்மை மிக்கவன்’ என்பது பொருள். 

(86.) ‘அத்தாரிக்’ அத்தியாயம்1 

(86:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தாரிக்’ எனும் சொல், இரவில் தோன்றும் விண்மீன்களைக் குறிக்கும். இரவில் (திடீரென) வரும் ஒவ்வொன்றுக்கும் ‘தாரிக்’ என்பர். (86:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அந்நஜ்முஸ் ஸாகிப்’ எனும் சொல்லுக்கு ‘ஒளிரும் நட்சத்திரம்’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (86:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாத்திர் ரஜ்இ’ எனும் சொல்லுக்கு ‘மழையைத் திரும்பத் தரும் மேகம்’ என்று பொருள். (86:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தாத்திஸ் ஸத்இ’ எனும் சொல்லுக்கு ‘தாவரங்கள் முளைக்கின்றபோது பிளந்துவிடுகின்ற பூமி’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (86:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல கவ்லுன் ஃபஸ்லுன்’ எனும் சொல்லுக்கு ‘சத்தியமான சொல்’ என்று பொருள். (86:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லம்மா அலைஹா ஹாஃபிழ்’ எனும் சொற்றொடருக்கு ‘பாதுகாப்பவன் இல்லாத எந்த ஓர் உயிருமில்லை’ என்பது பொருள். (மூலத்திலுள்ள ‘லம்மா’ எனும் இடைச்சொல்லுக்கு ‘இல்லா’ எனும் இடைச் சொல்லின் பொருளாகும்.) 

(87.) ‘அல்அஃலா’ அத்தியாயம்1 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (87:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கத்தர’ (அவனே விதியை நிர்ணயித்தான்) எனும் சொல்லுக்கு ‘மனிதனின் நற்பேறு மற்றும் துர்பேற்றை நிர்ணயித்தான்’ என்று பொருள். (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப ஹதா’ (வழிகாட்டினான்) எனும் சொல்லுக்கு ‘கால்நடைகளுக்கு, அவற்றின் மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல வழிகாட்டினான்’ என்று பொருள். 

4941. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நபித்தோழர்களில் (நாடு துறந்து மதீனாவிற்கு 'ஹிஜ்ரத்' செய்து) எங்களிடம் முதலில் வந்தவர்கள் 'முஸ்அப் இப்னு உமைர்'(ரலி) அவர்களும், 'இப்னு உம்மி மக்தூம்'(ரலி) அவர்களும் தாம்.

அவர்களிருவரும் (மதீனாவாசிகளான) எங்களுக்குக் குர்ஆனைக் கற்றுத் தந்தார்கள். பிறகு, அம்மார்(ரலி), பிலால்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் வந்தனர். அதன் பின்னர் இருபது பேர் (கொண்ட குழு) உடன் உமர் இப்னு கத்தாப்(ரலி) வந்தார்கள். அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் வருகை புரிந்தார்கள். நபி(ஸல்) அவர்கள(து வருகையா)ல், மதீனாவாசிகள் மகிழ்ச்சியடைந்ததைப் போன்று வேறெதற்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடைந்ததை நான் கண்டதில்லை. எந்த அளவிற்கென்றால், (மதீனாவிலுள்ள) சிறுமியரும் சிறுவர்களும், 'இதோ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வந்துவிட்டார்கள்'' என்று கூறி (மகிழலாயி)னர். நான், 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' எனும் (87 வது) அத்தியாயத்தை, அது போன்ற (மற்ற முஃபஸ்ஸல்) அத்தியாயங்களுடன் ஓதும் வரையில் நபி(ஸல்) அவர்கள் (மதீனாவிற்கு) வருகை தரவில்லை.2

(89) ‘அல்ஃகாஷியா’ அத்தியாயம்1 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (88:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆமிலத்துந் நாஸிபா’ (அந்நாளில் சில முகங்கள் கடுமையான சிரமத்தை மேற்கொண்டிருக்கும்; களைத்துப் போயிருக்கும்) எனும் சொற்றொடர், கிறித்தவர்களையே குறிக்கின்றது. முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (88:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அய்னின் ஆனியா’ (கொதிக்கும் நீரூற்று) எனும் சொல், அதன் கொதிநிலை உச்சகட்டத்தை அடைந்து, அதைக் குடிக்கும் தருணம் நெருங்கிவிட்ட நிலையிலுள்ள நீரைக் குறிக்கும். (இதைப் போன்றே,) 55:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹமீமின் ஆன்’ எனும் சொல்லுக்கும் ‘கொதிநிலையின் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்ட நீர்’ என்றே பொருள். (88:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லாஃகியா’ (வீண் வார்த்தை ) எனும் சொல்லுக்கு ‘ஏச்சு’ என்பது பொருள். (88:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அள்ளரீஉ’ எனும் சொல்லுக்கு ‘அஷ்ஷிப்ரிக்’ எனப்படும் ஒரு செடி என்று பொருள். இதை ஹிஜாஸ்வாசிகள் ‘அள்ளரீஉ’ என்று பெயரிட்டழைக்கின்றனர்; காய்ந்துவிட்டால் இதுவே நஞ்சாகும். (88:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி முசைத்திர்’ எனும் சொல்லுக்கு ‘நிர்ப்பந்திப்பவர்’ என்பது பொருள். (இது ‘ஸாத்’ உடனும் ‘சீன்’ உடனும்) ‘முஸைத்திர்’ என்றும் ‘முசைத்திர்’ என்றும் (இரு விதமாக) ஓதப்படுகிறது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (88:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இயாபஹும்’ எனும் சொல்லுக்கு ‘(மரணத்துக்குப்பின்) அவர்கள் திரும்புவது’ என்று பொருள். 

(89.) ‘அல்ஃபஜ்ர்’ அத்தியாயம்1 

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (89:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வித்ர்’ (ஒற்றை) எனும் சொல், அல்லாஹ்வைக் குறிக்கிறது. (89:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இரம ஃதாத்தில் இமாத்’ எனும் சொல், பண்டைய கால மக்களான ‘ஆத்’ கூட்டத்தாரைக் குறிக்கிறது. ‘அல்இமாத்’ எனும் சொல், (எந்த ஊரிலும் நிலையாகத் தங்காத) கூடாரவாசி(களான நாடோடி)களைக் குறிக்கும். (‘உயரமான தூண்களை உடையவர்கள்’ என்றும் இச்சொல்லுக்குப் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (89:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சவ்த்த அஃதாப்’ (வேதனையின் சாட்டை) எனும் சொல், (ஆத் கூட்டத்தாரான) அவர்கள் எதன் மூலம் தண்டிக்கப்பட்டனரோ அந்தச் சோதனையைக் குறிக்கும். (89:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அக்லல் லம்மா’ எனும் சொல்லுக்கு ‘சுருட்டி விழுங்குகின்றீர்கள்’ என்பது பொருள். (89:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜம்மா’ எனும் சொல்லுக்கு ‘அளவு கடந்து’ என்று பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள், (89:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஷ்ஷஃப்இ வல்வத்ர்’ என்பதன் விளக்கவுரையில், ‘‘இறைவன் படைத்த எல்லாப் பொருள்களும் இரட்டையாகும். (பூமியுடன்) வானமும் இரட்டைதான்; உயர்வான அல்லாஹ் ஒருவனே ஒற்றை” என்று கூறினார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (89:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சவ்த்த அஃதாப்’ (வேதனையின் சாட்டை) எனும் சொல், எல்லா விதமான வேதனைகளைக் குறிப்பதற்காகவும் அரபியர் பயன்படுத்தும் சொல்லாகும். இதில் சாட்டையும் அடங்கும். (89:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லபில் மிர்ஸாத்’ எனும் சொல்லுக்கு, ‘அவனிடம்தான் (அனைவரது) மீட்சியும் உள்ளது’ என்பது பொருள். (89:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா தஹாள்ளூன்’ எனும் சொல்லுக்கு, ‘ஏழைக(ளின் உரிமைக)ளைப் பேணுவதில்லை’ என்று பொருள். (மற்றோர் ஓதல் முறையில் வந்துள்ள) ‘லா தஹுள்ளூன்’ எனும் சொல்லுக்கு ‘(ஏழைகளுக்கு) உணவளிக்குமாறு தூண்டுவதில்லை’ என்று பொருள். (89:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முத்மயின்னா’ எனும் சொல்லுக்கு ‘(அல்லாஹ் வழங்கும்) பிரதிபலனை நம்பக்கூடியது’ என்று பொருள். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘யா அய்யத்துஹந் நஃப்சுல் முத்மயின்னா’ (அமைதியடைந்த ஆத்மாவே) எனும் இவ்வசனத்தின் கருத்தாவது: (இறைவன்) இந்த ஆத்மாவைக் கைப்பற்றும்போது அது இறைவனைக் குறித்து நிம்மதி கொள்கிறது. இறைவனும் அதைக் குறித்து நிம்மதி கொள்கிறான். அது இறைவனைக் குறித்து திருப்தியடைகிறது. இறைவனும் அதைக் குறித்து திருப்தி அடைகிறான். ஆகவே, அந்த ஆத்மாவைக் கைப்பற்ற உத்தரவிட்டு, அதைச் சொர்க்கத்திற்கு அனுப்புகிறான். மேலும், அதைத் தன்னுடைய (நல்ல) அடியார்களுடன் சேர்க்கவும் செய்கிறான். ஹசன் அல்பளி (ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்: (89:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜாபூ’ எனும் சொல்லுக்கு ‘குடைந்(து வசித்துக்கொண்டிருந்)தனர்’ என்பது பொருள். இச்சொல் ‘ஜீபல் கமீஸு’ (தைப்பதற்காகச் சட்டை வெட்டப்பட்டது) எனும் சொல்லிலிருந்து பிறந்தது. (இதன் எதிர்கால வினைச்சொல் இடம்பெற்றுள்ள) ‘யஜூபுல் ஃபலாத்’ எனும் சொல்லுக்கு, ‘அவன் காடுகளை வெட்டுவான்’ என்று பொருள். (89:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லம்மு’ (சுருட்டி விழுங்குதல்) எனும் சொல்(லின் இறந்த கால வினைச்சொல்) இடம்பெற்றுள்ள ‘லமம்த்துஹு அஜ்மஅ’ எனும் வாக்கியத்திற்கு, ‘அதன் இறுதிவரை வந்துவிட்டேன் (ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் காலியாக்கிவிட்டேன்)’ என்பது பொருள். 

(90.) ‘அல்பலத்’ அத்தியாயம்1 

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (90:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி ஹாஃதல் பலத்’ (இந்த நகரம்) எனும் சொல், மக்காவையே குறிக்கின்றது. (90:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘வ அன்த்த ஹில்லுன்- நீர் அனுமதிக்கப்பட்டுள்ளீர்’ என்பதற்கு) ‘(இறைவனின் ஆணைப்படி இந்நகரில் போர் புரிவதில்) மற்ற மக்களின் மீதுள்ள குற்றம் உமக்கில்லை’ என்று பொருள். (90:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ வாலித்’ (பெற்றோர்மீதும்) எனும் சொல், (மனித குலத்தின் தந்தையான) ஆதம் (அலை) அவர்களைக் குறிக்கின்றது. (90:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லுபத்’ எனும் சொல்லுக்கு ‘ஏராளமானது’ என்பது பொருள். (90:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வந்நஜ்தைனி’ (இரு வழிகள்) எனும் சொல், நன்மை மற்றும் தீமையைக் குறிக்கின்றது. (90:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸ்ஃகபா’ எனும் சொல்லுக்கு ‘பசி’ என்பது பொருள். (90:16ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மத்ரபா’ எனும் சொல்லுக்கு ‘மண்ணில் விழுந்து கிடப்பவன்’ என்பது பொருள். (90:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபலக்த்தஹமல் அகபத்த’ எனும் வாக்கியத்திற்கு ‘இந்த உலகில் அவன் ‘அகபா’வைக் கடக்கவில்லை’ என்பது பொருள். பிறகு ‘அகபா’ என்றால் என்னவென்று இறைவன் விவரிக்கின்றான்: ‘‘ ‘அகபா’ என்ன என்று நீர் அறிவீரா? அதுதான், ஓர் அடிமையை விடுதலை செய்வது. அல்லது உறவினர்களில் பசித்த ஓர் அநாதைக்கோ, அல்லது மண்ணைக் கவ்விக் கிடக்கும் ஓர் ஏழைக்கோ பசித்திருக்கும் ஒரு நாளில் ஆகாரமளிப்பதாகும்” (90:12-16). (90:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கபத்’ எனும் சொல்லுக்கு ‘கஷ்டம்’ என்பது பொருள். 

(91.) ‘அஷ்ஷம்சு’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (91:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளுஹாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் ஒளி’ என்பது பொருள். (91:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இஃதா தலாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதைத் தொடர்ந்து வரும்போது’ என்று பொருள். (91:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வமா தஹாஹா’ எனும் சொல்லுக்கு ‘அதை விரித்தவன்மீதும் சத்தியமாக!’ என்று பொருள். (91:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஸ்ஸாஹா’ (புதைத்துவிட்டான்) எனும் சொல்லுக்கு ‘பாவத்தில் செலுத்தினான்’ என்பது பொருள். (91:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப அல்ஹமஹா’ (அதற்கு உணர்த்தினான்)எனும் சொல்லுக்கு ‘பாவம் புண்ணியத்தை அதற்கு அறிவித்தான்’ என்று பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (91:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி தஃக்வாஹா’ எனும் சொல்லுக்கு ‘தங்களுடைய பாவங்களின் காரணத்தால்’ என்று பொருள். (91:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வலா யகாஃபு உக்பாஹா’ எனும் வாக்கியத்திற்கு ‘யாரும் (தன்னைப்) பழிவாங்கிவிடுவார்களென்று இறைவன் பயப்படவில்லை’ என்று பொருள். 

4942. அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார்

(ஒரு சமயம்) நபி(ஸல்) அவர்கள் உரையாற்றியதை செவியுற்றேன். அப்போது அவர்கள், '(இறைத்தூதர் ஸாலிஹ்(அலை) அவர்களின் தூதுவத்திற்குச் சான்றாகப் பாறையிலிருந்து வெளிப்பட்ட) ஒட்டகத்தையும் (அதன் கால் நரம்புகளை) அறுத்துக் கொன்றவனையும் நினைவு கூர்ந்தார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , 'அவர்களிலுள்ள துர்பாக்கியசாலி ஒருவன் முன்வந்தபோது...'' எனும் (திருக்குர்ஆன் 91:12 வது) இறைவசனத்தைக் கூறிவிட்டு, 'அபூ ஸம்ஆவைப் போன்று ஸாலிஹ்(அலை) அவர்களின் சமுதாயத்தில் மதிப்புமிக்கவனும் ஆதிக்கவாதியும் பராக்கிரமசாலியுமான ஒருவன் அந்த ஒட்டகத்(தைக் கொல்வ)துக் காக முன் வந்தான்'' என்று கூறினார்கள்.2

மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பெண்க(ளின் உரிமைக)ள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

உங்களில் ஒருவர் தம் மனைவியை, அடிமையை அடிப்பது போல் அடிக்க முற்படுகிறார். (ஆனால்,) அவரே அந்நாளின் இறுதியில் (இரவில்) அவளுடன் (தாம்பத்திய உறவுக்காக) படுக்க நேரலாம். (இது முறையா?). பிறகு, (உடலிலிருந்து பிரியும்) வாயு காரணமாக மக்கள் சிரிப்பது குறித்து, '(அப்படிச் சிரிக்க வேண்டாமெனக் குறிப்பிடும் வகையில்) 'உங்களில் ஒருவர் தாம் செய்யும் ஒரு செயலிற்காக (அதே செயலைப் பிறர் செய்யும்போது) ஏன் சிரிக்கிறார்?' என்று கேட்டபடி உபதேசித்தார்கள்.

இன்னோர் அறிவிப்பில், '(ஒட்டகத்தைக் கொன்றவன்) ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களின் தந்தையின் சகோதரர் அபூ ஸம்ஆவைப் போன்று (செல்வாக்குமிக்கவனாக) இருந்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னதாக (அறிவிப்பாளர்) அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ(ரலி) கூறினார்.

(92) ‘அல்லைல்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (92:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பில்ஹுஸ்னா’ (நல்லறம்) எனும் சொல்லுக்கு ‘(நல்வழியில் செலவிட்ட தனது செல்வத்திற்கு) ‘அழகிய பிரதி’(பலனை இறைவன் வழங்குவான் என்று உறுதியாக அவன் நம்புவதில்லை)’ என்று பொருள். 

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

(92:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தரத்தா’ (வீழ்ந்தான்) எனும் சொல்லுக்கு ‘இறந்தான்’ என்பது பொருள். (இப்பொருளின்படி இவ்வசனத்திற்கு ‘அவன் இறக்கும் போது அவனது பொருள் அவனுக்கு யாதொரு பயனுமளிக்காது’ என்று பொருள் வரும். இதற்கு ‘நரகத்தில் வீழும்போது’ என்றும் சிலர் பொருள் கொண்டுள்ளனர்.) (92:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தலழ்ழா’ எனும் சொல்லுக்கு ‘கொழுந்து விட்டெரிந்தது’ என்று பொருள். (இதே சொல்லை) உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் ‘தத்தலழ்ழா’ (கொழுந்து விட்டெரியும்) என்று ஓதினார்கள். பாடம்: 1 ஒளிரும் பகலின் மீது சத்தியமாக! (எனும் 92:2ஆவது இறை வசனம்) 

பகுதி 1

ஒளிரும் பகலின் மீது சத்தியமாக! (எனும் 92:2 வது இறைவசனம்).

4943. அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் (மாணவ) சகாக்கள் சிலருடன் (அன்றைய) ஷாம் நாட்டிற்குச் சென்றேன். அப்போது, நாங்கள் (அங்கு) வந்திருப்பது பற்றிக் கேள்விப்பட்டு, (எங்களைச் சந்திப்பதற்காக,) அபுத்தர்தா(ரலி) வந்தார்கள். அப்போது '(குர்ஆனை) ஓதத் தெரிந்தவர்கள் உங்களிடையே உண்டா?' என்று கேட்டார்கள். நாங்கள், 'ஆம்'' என்று சொன்னோம். 'சரி, உங்களில் (குர்ஆனை) நன்கு ஓதத் தெரிந்தவர் யார்?' என்று கேட்டார்கள். அப்போது தோழர்கள், என்னை நோக்கி சைகை செய்தார்கள். அபுத்தர்தா(ரலி), 'ஓதுங்கள்!'' என்று (என்னிடம்) கூறினார்கள்.

உடனே நான், 'வல்லைலி இஃதா யஃக்ஷா, வந்நஹாரி இஃதா தஜல்லா, வஃத்தகாரி வல் உன்ஸா'' என்று (92 வது அத்தியாயத்திலிருந்து) ஓதினேன். அபுத்தர்தா(ரலி), 'இதை உங்கள் தோழர் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் வாயிலிருந்து நீங்கள் செவியேற்றீர்களா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்'' என்று கூறினேன்.

''(இப்படித்தான்) நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து நான் ஓதக் கேட்டுள்ளேன். ஆனால், இவர்கள் (ஷாம்வாசிகள்) நான் கூறுவதை மறுக்கிறார்கள். (பிரபல ஓதலிலுள்ள 'வமா கலக்கஃத் தகர வல் உன்ஸா'' என்றே ஓத வேண்டும் என்று கூறுகிறார்கள்)'' என்று கூறினார்கள்.2

பகுதி 2

ஆணையும், பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக! (எனும் 92:3 வது இறைவசனம்.)

4944. இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அறிவித்தார்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் தோழர்கள் (ஷாம் நாட்டிலிருந்து அபுத்தர்தா(ரலி) அவர்களிடம் (அவர்களைக் காண) வந்தனர். (அதற்குள் அவர்கள் வந்துள்ள செய்தியறிந்து,) அபுத்தர்தா(ரலி) தோழர்களைத் தேடிவந்து சந்தித்தார்கள்.

பிறகு, 'அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறைப்படி உங்களில் ஓதத் தெரிந்தவர் யார்?' என்று அபுத்தர்தா(ரலி) கேட்டார்கள். அதற்கு நாங்கள், 'நாங்கள் அனைவரும் தாம்'' என்று பதிலளித்தோம். அபுத்தர்தா(ரலி), '(இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களின் ஓதல் முறையை) நன்கு மனனமிட்டிருப்பவர் உங்களில் யார்?' என்று கேட்டார்கள். தோழர்கள், அல்கமா(ரஹ்) அவர்களை நோக்கி சைகை செய்தார்கள். 'வல்லைலி இஃதா யஃக்ஷா'' எனும் வசனத்தில் இப்னு மஸ்வூத்(ரலி) எவ்வாறு ஓதக் கேட்டீர்கள்? என்று கேட்டார்கள். அல்கமா(ரஹ்), 'வஃத்தகாரி வல் உன்ஸா' என்றே ஓதினார்கள்'' என்று பதிலளித்தார்கள். அபுத்தர்தா(ரலி), 'நான் சாட்சியம் கூறுகிறேன்: நபி(ஸல்) அவர்களும் இவ்வாறு ஓதவே கேட்டுள்ளேன். இந்த மக்கள் (ஷாம்வாசிகள்) 'வமா கலக்கஃத் தக்கர வல் உன்ஸா' என்றே நான் ஓதவேண்டுமென விரும்புகிறார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவர்களைப் பின்பற்றமாட்டேன்'' என்று கூறினார்கள். 3

பகுதி 3

''(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்'' எனும் (திருக்குர்ஆன் 92:5-7) இறை வசனங்கள்.

4945. அலீ(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருநாள்) ஒரு ஜனாஸாவிற்காக நபி(ஸல்) அவர்களுடன் 'பகீஉல் ஃகர்கதி (எனும் மதீனாவின் பொது மையவாடியி)ல்' இருந்து கொண்டிருந்தோம். அப்போது நபியவர்கள், 'சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை'' என்று கூறினார்கள். உடனே மக்கள், 'அல்லாஹவின் தூதரே! நாங்கள் (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்து விடமாட்டோமா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். பிறகு, '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சிவாழ்ந்து, நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம். உலோபித்தனம் செய்து, (அல்லாஹ்வையும்) பொருட்படுத்தாது, (இம்மார்க்கதிலுள்ள) நல்லறங்களையும் பொய்யாக்கி விடுகிறவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்கிவைப்போம்'' எனும் (திருக்குர்ஆன் 92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள். 4

பகுதி 4

''மேலும், நல்லறங்களை மெய்ப்பிக்கிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்'' எனும் (திருக்குர்ஆன் 92:6,7) இறைவசனங்கள்.

..அபூ அப்திர் ரஹ்மான் அஸ்ஸுலமீ(ரஹ்) கூறினார்

அலீ(ரலி), 'நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம்'' என்று தெடங்கி, மேற்கண்ட (4945 வது) ஹதீஸைக் கூறினார்கள்.

பகுதி 5

அவருக்கு, இலகுவான வழியில் செல்வதற்கு நாம் வகைசெய்வோம் (எனும் 92:7 வது இறைவசனம்).

4946. அலீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவிற்காக (வருகை தந்து) இருந்தார்கள். அப்போது நபியவர்கள் குச்சியொன்றை எடுத்துத தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருந்தார்கள். பின்னர், 'தம் இருப்பிடம் நரகத்திலா, அல்லது சொர்க்கத்திலா என்று எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் (இதன்மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) இருந்துவிடமாட்டோமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும் வழி) எளிதாக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். பிறகு, '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவருக்கு, சுலபமான வழியில் செல்ல நாம் வகை செய்வோம்'' எனும் (திருக்குர்ஆன் 95:5-10) இறைவசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

பகுதி 6

''கஞ்சத்தனம் செய்து, (தம் இறைவனைப்) பொருட்படுத்தாமல் நடந்துகொண்டு நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகிறவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்குவோம்'' எனும் (திருக்குர்ஆன் 92:8-10) வசனங்கள்.

4947. அலீ(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) நாங்கள் ('ஜனாஸா') ஒன்றிற்காக) நபி(ஸல்) அவர்களுடன் ('பகீஉல் ஃகர்கத்' எனும் மதீனாவின் பொது மையவாடியில்) அமர்ந்திருந்தோம். அப்போது நபியவர்கள், 'சொர்க்கத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ, நரகத்திலுள்ள தம் இருப்பிடத்தையோ எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை'' என்று கூறினார்கள். உடனே நாங்கள், 'இறைத்தூதர் அவர்களே! (இதன் மீதே) நம்பிக்கை கொண்டு (நல்லறங்கள் ஏதும் செய்யாமல்) நாங்கள் இருந்துவிடமாட்டோமா?' என்று கேட்டோம். (அதற்கு,) நபி(ஸல்) அவர்கள், 'இல்லை! நீங்கள் செயலாற்றுங்கள். (நல்லார், பொல்லார்) எல்லாருக்கும் (அவரவர் செல்லும்வழி) எளிதாக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். பிறகு, '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவருக்கு சுலபமான வழியில் செல்ல நாம் வகைசெய்வோம்'' எனும் (திருக்குர்ஆன் 92:5-10) இறைவசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

பகுதி 7

''நல்லறங்களைப் பொய்யாக்கிவிடுகிறவர்...'' எனும் (திருக்குர்ஆன் 92:9 வது) இறைவசனம்.

4948. அலீ(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருநாள்) மதீனாவிலுள்ள பொது மையவாடியான) 'பகீஉல்' ஃகர்கதில்' ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். நபியவர்களுடன் ஓர் ஊன்றுகோல் இருந்தது. அவர்கள் (தம் தலையைக்) கவிழ்த்தவாறு ஊன்றுகோலை(த் தரையில்) குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். பிறகு, 'உங்களில் எவரும், பிறந்துவிட்ட எந்த உயிரும் தம் இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா, அது துர்பாக்கியசாலியா, அல்லது நற்பாக்கியசாலியா என்று எழுதப்பட்டிராமல் இல்லை'' என்று கூறினார்கள். ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தலை) எழுத்தின் மீது நாங்கள் பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் செய்யாமல் இருந்துவிடமாட்டோமா? எங்களில் யார் (விதியின்படி) நற்பாக்கியம் பெற்றவரோ அவர் நற்பாக்கியசாலியாக மாறுவார். எங்களில் யார் (விதிப்படி) துர்பாக்கியசாலியோ அவர் துர்பாக்கியசாலிகளின் செயலுக்கு மாறுவார்'' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் '(இதோ பாருங்கள்!) நல்லவருக்கு நல்லவர்களின் செயலைப் புரிய வகைசெய்யப்படும். கெட்டவருக்குக் கெட்டவர்களின் செயலைச் செய்ய வகை செய்யப்படும்'' என்று கூறினார்கள். பிறகு '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்கிறவர்...'' எனும் (திருக்குர்ஆன் 92:5-10) வசனங்களை ஓதினார்கள்.

பகுதி 8

அவருக்குக் கஷ்டத்திற்குரிய (நரகத்தின்) வழியைத்தான் நாம் எளிதாக்குவோம் (எனும் 92:10) வசனங்களை ஓதினார்கள்.

4949. அலீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ('பகீஉல் ஃகர்கத்' மையவாடியில்) ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது அன்னார் ஒரு பொருளை எடுத்து அதனைத் தரையில் குத்தியபடி (ஆழ்ந்த சிந்தனையில்) இருக்கலானார்கள். மேலும் அவர்கள், 'தம் இருப்பிடம் நரகத்திலா அல்லது கொர்க்கத்திலா என்று (விதியில்) எழுதப்பட்டிராத எவரும் உங்களில் இல்லை'' என்று கூறினார்கள். மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! (அவ்வாறாயின்,) எங்கள் (தலை) எழுத்தின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, நல்லறங்கள் புரிவதைக் கைவிட்டுபிடமாட்டோமா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் செயலாற்றுங்கள். (உங்களில்) ஒவ்வொருவருக்கும், அவர் படைக்கப்பட்ட (நோக்கத்)தை அடைய வகை செய்யப்படும். நல்லவர்களில் உள்ளவருக்கு நல்லோரின் செயலைப் புரியவும், கெட்டவர்களில் உள்ளவருக்குக் கெட்டோரின் செயலைச் செய்யவும் வழி காணப்படும்'' என்று கூறிவிட்டு, '(இறைவழியில்) வழங்கி, (இறைவனை) அஞ்சி வாழ்ந்து, நல்லறங்களை மெய்யாக்குகிறவர்...'' எனும் (திருக்குர்ஆன் 92:5-10) வசனங்களை ஓதிக் காட்டினார்கள். 5

(93) 'அள்ளுஹா' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 93:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'இஃதா சஜா' எனும் சொல்லுக்கு 'அது (பகலுக்குச்) சமமாகும் போது' என்று பொருள்.

முஜாஹித்(ரஹ்) அல்லாதோர் கூறுகிறார்கள்:

(இச்சொல்லுக்கு) இருட்டிவிடும்போது, (உறக்கம் வந்து) அமைதியடையும்போது என்று பொருள்.

(திருக்குர்ஆன் 93:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆயில்' என்னும் சொல்லுக்குக் 'குழந்தை குட்டிகள் உடையவர்' (குடும்பஸ்தர்) என்று பொருள்.

பகுதி 1

(நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை (எனும் 93:3 வது இறைவசனம்).

4950. ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான்(ரலி) அறிவித்தார்

(ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது 'இரண்டு இரவுகள்' அல்லது 'மூன்று இரவுகள்' (இரவுத் தெழுகைக்காகக் கூட) அவர்கள் எழவில்லை. அப்போது ஒரு பெண் வந்து, 'முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டான் என நினைக்கிறேன். (அதனால்தான்) 'இரண்டு இரவுகளாக' அல்லது 'மூன்று இரவுகளாக' உம்மை ஷைத்தான் நெருங்கி வந்ததை நான் பார்க்கவில்லை'' என்று கூறினாள். 2 அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'முற்பகலின் மீது சத்தியமாக! மேலும் இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 93:1-3) வசனங்களை அருளினான்.3

பகுதி2

(நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 93:3 வது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள சொல்லை) 'மா வத்தஅக்க' என அழுத்தத்துடனும், 'மா வதஅக்க' என அழுத்தமின்றியும் ஓதப்படுகிறது. பொருள் ஒன்றே! 'உங்களைக் கைடவிடவுமில்லை.''

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(இந்த வசனத்தின் பொருளாவது:) உங்களை உங்களுடைய இறைவன் கைவிடவுமில்லை; உங்களின் மீது கோபங்கொள்ளவுமில்லை.

4951. ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் அல்பஜலீ(ரலி) கூறினார்

ஒரு பெண், 'இறைத்தூதர் அவர்களே! தங்கள் நண்பர் (வானவர் ஜிப்ரீல்) தங்களிடம் தாமதமாகத்தான் வந்துள்ளார் என்று கருதுகிறேன்'' என்று கூறினார்.4 அப்போதுதான், '(நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை'' எனும் (திருக்குர்ஆன் 93:3 வது) இறைவசனம் அருளப்பட்டது.

(94) 'அலம் நஷ்ரஹ்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்.

(திருக்குர்ஆன் 94:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'விஸ்ரக்க' (உம்முடைய சுமை) எனும் சொல், அறியாமைக் காலத்து (பாவ)ச் சுமைகளைக் குறிக்கும்.

(திருக்குர்ஆன் 94:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அன்கள' எனும் சொல்லுக்கு 'அழுத்திக் கொண்டிருந்தது' என்று பொருள்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 94:6 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மஅல் யுஸ்ரா' எனும் சொற்றொடருக்கு 'அந்தச் சிரமத்துடன் இன்னோர் இலகுவும் இருக்கிறது' என்று பொருள்.

இந்த வசனம், 'எங்களின் விஷயத்தில் இரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர வேறு எதனை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?' எனும் (திருக்குர்ஆன் 09:52 வது) இறைவசனத்தின் கருத்தில் அமைந்துள்ளது. 2

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 94:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபன்ஸப்' எனும் சொல்லுக்கு 'உம்முடைய தேவைகளுக்காக உம்முடைய இறைவனிடத்தில் (கோரி) முயல்வீராக' என்று பொருள்.

'(நபியே!) நாம் உங்களுடைய இதயத்தை உங்களுக்காக விரிவாக்கித் தரவில்லையா?' எனும் (திருக்குர்ஆன் 94:1 வது) வசனத்தி(ன் விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ்(ரலி), 'இஸ்லாத்துக்காக அவர்களின் இதயத்தை இறைவன் விரிவாக்கினான்'' என்று சொன்னதாகக் கூறப்படுகிறது.

(95) 'அத்தீன்' அத்தியாயம்1

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

அந்த (திருக்குர்ஆன் 95:1 வது) வசனம், மக்கள் உட்கொள்ளும் அத்திப்பழத்தையும் ஆலிவ் பழத்தையுமே குறிக்கிறது.

(திருக்குர்ஆன் 95:7 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபமா யுகஃத்திபுக்க' (உம்மை யாரால் பொய்யாக்க முடியும்) எனும் சொற்றொடருக்கு 'மக்கள் (மறுமை நாளில்) தங்கள் (நல்ல, கெட்ட) செயல்களுக்கேற்ப பிரதிபலன் வழங்கப்படுவார்கள் எனும் உங்களின் கூற்றை எவரால் பொய்யாக்க முடியும்?' என்று பொருள். 'நற்பலன், அல்லது தண்டனை வழங்கப்படும் விஷயத்தில் உம்மை பொய்யர் என்று கூற எவருக்குத் துணிவுண்டு?' என்று கூறுவது போன்றுள்ளது.

பகுதி 1

4952. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தார்கள். அப்போது இஷாத் தெழுகையின் இரண்டு ரக்அத்களில் ஒன்றில் (95 வது அத்தியாயமான) 'வத்தீனி வஸ்ஸைத்தூனி'யை ஓதினார்கள்.2

(திருக்குர்ஆன் 95:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தக்வீம்' எனும் சொல்லுக்குப் 'படைப்பு' என்று பொருள்.

(96.) ‘அல்அலக்’ அத்தியாயம்1 

ஹசன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: திருக்குர்ஆனின் ஆரம்பத்தில் (‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்திற்கு முன்பாக), ‘‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமை” எழுதுங்கள். பிறகு, ஒவ்வோர் இரு அத்தியாயங்களுக்கிடையேயும் (பிரித்துக் காட்டும் அடையாளமாக) ஒரு கோடு வரைந்துகொள்ளுங்கள்.2 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (96:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நாதியஹு’ எனும் சொல்லுக்கு ‘அவனுடைய உற்றார் உறவினர்’ என்று பொருள். (96:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸபானியா’ (நரகத்தின் காவலர்களை) எனும் சொல், வானவர்களைக் குறிக்கிறது. அபூஉபைதா மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (96:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ருஜ்ஆ’ எனும் சொல்லுக்கு ‘மீட்சி’ என்பது பொருள். (96:15ஆவது வசனத்திலுள்ள) ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல்லுக்கு ‘நிச்சயமாக நாம் பிடித்து இழுப்போம்’ என்று பொருள். ‘ல நஸ்ஃபஅன்’ எனும் சொல் ‘சஃபஉத்து பி யதிஹி’ எனும் (வினைச்)சொல்லிலிருந்து வந்ததாகும். இதற்கு, ‘நான் அவனை எனது கையால் பிடித்தேன்’ என்பது பொருள். 

பகுதி 1

4953. நபி(ஸல்) அவர்களின் துணைவியரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து தூக்கத்தில் கண்ட உண்மைக் கனவுகளாகவே இருந்தது. அப்போது அவர்கள் எந்தக்கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போல் (தெளிவாக) இருக்கும். பின்னர் தனிமையிலிருப்பது அவர்களுக்கு விருப்பமாயிற்று. எனவே, அவர்கள் 'ஹிரா'க் குகைக்குச் சென்று அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள். (இவ்வாறு) தம் குடும்பத்தாரிடம் திரும்புவதற்கு முன் பல இரவுகள் (அங்கு தங்கி) இருந்துவந்தார்கள். அதற்காக (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைத் தம்முடன் கொண்டு செல்வார்கள். பிறகு (அந்த உணவு முடிந்ததும்) மீண்டும் (தம் துணைவியார்) கதீஜாவிடம் திரும்பச் சென்று அது போன்று (பல நாள்களுக்கு வேண்டிய) உணவைக் கொண்டு செல்வார்கள். இந்நிலை, ஹிராக் குகையில் அவர்களுக்கு சத்திய(வேத)ம் வரும் வரை நீடித்தது. ஒரு நாள் அவர்களிடம் அந்த வானவர் (ஜிப்ரீல்) வந்து, 'ஓதும்!'' என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நான் ஓதத் தெரிந்தவனில்லையயே!'' என்றார்கள். (பின்பு நடந்தவற்றை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (பின்வருமாறு எடுத்துக்) கூறினார்கள்:

அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு என்னை இறுகக் கட்டியணைத்தார். பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்!' என்றார். அப்போதும் 'நான் ஓதத்தெரிந்தவனல்லவே!'' என்றேன். உடனே அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்கமுடியாத அளவிற்கு இரண்டாவது முறையாக இறுகக் கட்டியணைத்தார். பிறகு, என்னைவிட்டுவிட்டு, 'ஓதும்!' என்று கூறினார். அப்போதும் 'நான் ஒதத் தெரிந்தவனல்லவே!'' என்று கூறினேன். உடனே, அவர் என்னைப் பிடித்து என்னால் தாங்க முடியாத அளவிற்கு மூன்றாவது முறையாக என்னை இறுகத் தழுவினார். பின்னர் என்னைவிட்டுவிட்டு, 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்'' எனும் (திருக்குர்ஆன் 96:1-5) இறைவசனங்களை அவர் ஓதினார்.

பிறகு, அசல் வசனங்களுடன், தம் கழுத்து சதைகள் (அச்சத்தால்) படபடக்க திரும்பி வந்து, (தம் துணைவியார்) கதீஜாவிடம் நபியவர்கள் நுழைந்தார்கள். 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே கதீஜாவும் அவர்களுக்குப் போர்த்திவிட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. கதீஜா அவர்களிடம் (நடந்தவற்றைத் தெரிவித்துவிட்டு,) 'கதீஜா! எனக்கென்ன நேர்ந்தது? எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு கதீஜா(ரலி), 'அப்படியொன்றும் ஆகாது. நீங்கள் ஆறுதலைடையுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான்; ஏனெனில் அல்லாஹ்வின் மீதாணை(யிட்டுச் சொல்கிறேன்)! நீங்கள் உறவுகளைப் பேணி நடந்துகொள்கிறார்கள்; உண்மையே பேசுகிறீர்கள்; (சிரமப்படுவோரின்) பாரத்தை சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்படுவோருக்கு சகாயம் செய்கிறீர்கள். (அதனால் நீங்கள் சஞ்சலப்பட வேண்டியதில்லை)'' என்று (ஆறுதல்) கூறினார்கள்.

பிறகு நபி(ஸல்) அவர்களை அழைத்துக் கொண்டு தம் தந்தையின் சகோதரரான 'வரக்கா இப்னு நவ்ஃபல்' என்பரிடமும் சென்றார்கள். -'வராக்க' அறியாமைக் காலத்திலேயே கிறித்தவ சமயத்தைத் தழுவியராக இருந்தார். அவர் அரபு மொழியில் எழுதத் தெரிந்தவராயிருந்தார்; இன்ஜீல் வேதத்தை (ஹீப்ரு மொழியிலிருந்து) அரபு மொழியில் அல்லாஹ் நாடிய அளவு எழுதுபவராயிருந்தார்; மேலும் அவர் கண் பார்வையிழிந்த முதியவராகவும் இருந்தார். அவரிடம் கதீஜா அவர்கள், 'என் தந்தையின் சகோதரர் புதல்வரே! உங்களுடைய சகோதராரின் புதல்வர் (முஹம்மது) இடம் (அவர் கூறுவதைக்) கேளுங்கள்!'' என்றார்கள். அப்போது அவர் (நபியவர்களிடம்), 'என் சகோதரர் புதல்வரே! நீங்கள் என்ன பார்த்தீர்கள்?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் தாம் பார்த்தவற்றின் செய்தியை அவரிடம் தெரிவித்தார்கள். இதைக்கேட்ட 'வரக்கா', '(நீர் கண்ட) இவர் தாம் (இறைத்தூதர்) மூஸாவிடம் (இறைவனால்) அனுப்பப்பட்ட வானவர் (ஜிப்ரீல்) ஆவார்'' என்று கூறிவிட்டு, (மகனே!) உம்மை உம் சமூகத்தார் உம்முடைய நாட்டிலிருந்து வெளியேற்றும்) அந்தச் சமயத்தில் நான் திடகாத்திரமானவனாக இருந்தால் நன்றாயிருக்குமே! நான் அந்தச் சமயத்தில் உயிருள்ளவனாய் இருந்தால் நன்றாயிருக்குமே!'' என்று சொல்லி வேறு சில வார்த்தைகளையும் கூறினார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(என் சமூக) மக்கள் என்னை (நாட்டைவிட்டும்) வெளியேற்றவா செய்வார்கள்?' என்று கேட்க, 'வரக்கா', 'ஆம். நீங்கள் பெற்றிருக்கிற (உண்மையான வேதம் போன்ற)தைப் பெற்ற (இறைத்தூதர்) எவரும் (மக்களால்) துன்புறுத்தப்படாமல் இருந்ததில்லை. உம்முடைய (பிரசாரம் பரவுகின்ற) நாளில் நான் (உயிருடன்) இருந்தால் உமக்குப் பலமான உதவிபுரிவேன்'' என்று கூறினார். அதன் பின்னர் 'வரக்கா' நீண்ட நாள் உயிருடன் இராமல் இறந்துவிட்டார். (இந்த முதலாவது வேத அறிவிப்புடன்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) (சூவத அறிவிப்பு) வருவது சிறிது காலம் நின்று போயிற்று. அதனால் அவர்கள் கவலைப்பட்டார்கள். 3

4954. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

வேத அறிவிப்பு (வஹீ) நின்றுபோயிருந்த இடைக்காலம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நான் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது ஆகாயத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய பார்வையை உயர்த்தினேன். அங்கே, நான் 'ஹிரா'வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன். உடனே நான் (என் துணைவியார் கதீஜாவிடம்) திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்றேன். அவர்களும் எனக்குப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், 'போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்'' எனும் (திருக்குர்ஆன் 74:1-5) வசனங்களை அருளினான்.

-(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா(ரஹ்) கூறினார்: (மேற்கண்ட 74:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அர்ருஜ்ஸ்' (அசுத்தம்) என்பது, அறியாமைக் கால மக்கள் வழிபட்டுவந்த சிலைகளைக் குறிக்கும்.

இதன் பின்னர் வேத அறிவிப்பு (வஹீ) தெடரலாயிற்று.4

பகுதி 2

''அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான்'' எனும் (திருக்குர்ஆன் 96:2 வது) இறைவசனம்.

4955. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்) பெயரால் ஓதும்! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கக் கற்பித்தான்'' எனும் (திருக்குர்ஆன் 96:1-5) இறைவசனங்களை ஓதினார். 5

பகுதி 3

''(நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி'' எனும் (திருக்குர்ஆன் 96:3 வது) இறைவசனம்.

4956. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வந்த(வேத அறிவிப்பான)து உண்மைக் கனவுகளே ஆகும். அப்பால் அந்த வானவர் (ஜிப்ரீல்) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'படைத்த உம்முடைய இறைவனின் (திருப்)பெயரால் ஓதும்! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். (நபியே!) நீர் ஓதுக! உம்முடைய இறைவன் மாபெரும் கொடையாளி; அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்குக் கற்பித்தான்'' எனும் (திருக்குர்ஆன் 96:1-5) இறைவசனங்களை ஓதினார்.

பகுதி 4

அவன்தான் எழுதுகோல் மூலம் (எழுதக்) கற்றுக்கொடுத்தான் (எனும் 96:4 வது) இறைவசனம்.

4957. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (ஹிராக் குகையிலிருந்து, கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்பி வந்து, 'எனக்குப் போர்த்திவிடுங்கள்; எனக்குப் போர்த்திவிடுங்கள்'' என்று கூறினார்கள். பிறகு இந்த ஹதீஸை (மேற்கண்ட படி முழுதுவமாக) அறிவிப்பாளர் குறிப்பிடுகிறார்.

பகுதி 5

''அவ்வாறன்று! அவன் (இந்த நடத்தையிலிருந்து) விலம்க் கொள்ளவில்லையெனில், திண்ணமாக, அவனுடைய நெற்றிமுடியைப் பற்றி இழுப்போம்; கடும் தவறிழைத்த பொய்யுரைத்த அந்த நெற்றியை!'' எனும் (திருக்குர்ஆன் 96:15,16ஆகிய) இவைசனங்கள்.

4958. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

'கஅபா' அருகில் முஹம்மது தெழுது கொண்டிருப்பதை நான் கண்டால் அவரின் கழுத்தின் மீது நிச்சயமாக மிதிப்பேன் என்று அபூ ஜஹ்ல் சொன்னான். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, 'அவன் மட்டும் அப்படிச் செய்தால், வானவர்கள் அவனைக் கடுமையாகப் பிடி(த்துத் தண்டி)ப் பார்கள்'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தெடர் வழியாகவும் வந்துள்ளது.

(97) 'அல்கத்ர்' அத்தியாயம் 1

(திருக்குர்ஆன் 97:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மத்லஉ' எனும் சொல்லுக்கு 'உதயமாகுதல்' என்று பொருள். (மற்றோர் ஓதலில் வந்துள்ள இதே சொல்லான) 'மத்லிஉ' என்பதற்கு 'உதயமாகுமிடம்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 97:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அன்ஸல்னாஹு' என்பதிலுள்ள 'ஹு' எனும் பிரதிப் பெயர்ச்சொல், குர்ஆனையே சுட்டுகிறது.

(குர்ஆனை) அருளியவன் அல்லாஹ் ஒருவனாயிருக்க (நான் இதனை இறக்கி வைத்தேன் என்பதற்குப் பிரதியாக) நாம் இ(ந்)த(குர்ஆ)னை இறக்கி வைத்தோம்' என்று பன்மையாகக் குறிப்பிட்டதற்குக் காரணம், (பொதுவாக) அரபுகள் ஒருமை வினையை வலியுறுத்த பன்மையைப் பயன்படுத்துவர். இதன் மூலம் அச்சொல் ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக ஆகும்.

(98) 'அல்பய்யினா' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

(திருக்குர்ஆன் 98:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'முன்ஃபக்கீன்' எனும் சொல்லுக்கு 'விலகிக் கொள்வோர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 98:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்கய்யிமா' எனும் சொல்லுக்கு 'நிலையானது' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 98:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'தீனுல் கய்யிமா' (நிலையான மார்க்கம்) என்பதில், 'தீன்' எனும் (ஆண்பால்) சொல்லை 'அல்கய்யிமா' எனும் பெண்பால் சொல்லுடன் இறைவன் இணைத்துள்ளான். ('தீன்' எனும் ஆண்பால் சொல்லை 'அல்மில்லத்' (மார்க்கம்) எனும் பெண்பால் சொல்லாலும் அழைப்பதே காரணம்.)

பகுதி 1

4959. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்கு 'லம் யகுனில்லஃதீன கஃபரூ' எனும் (98 வது) அத்தியாயத்தை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் என்னைப் பணித்துள்ளான்'' என்று கூறினார்கள். உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரைச் குறிப்பிட்டா (அப்படிச்) சொன்னான்?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளிக்க, (ஆனந்த மிகுதியால்) அப்போது உபை(ரலி) அழுதார்கள். 2

பகுதி 2

4960. அனஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்குக் குர்ஆனை ஓதிக்காட்டுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்'' என்று கூறினார்கள். உபை(ரலி), 'அல்லாஹ் என் பெயரைத் தங்களிடம் குறிப்பிட்டானா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், '(ஆம்), அல்லாஹ் உங்கள் பெயரைக் குறிப்பிட்டான்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), (ஆனந்த மேலீட்டால்) அழலானார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்), 'உபை இப்னு கஅப்(ரலி) அவர்களுக்கு 'லம் யகுனில்லஃதீன கஃபரூ' எனும் (98 வது) அத்தியாயத்தை நபி(ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள் என எனக்குச் செய்தி எட்டியுள்ளது'' என்றார்கள்.

பகுதி 3

4961. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம், 'உங்களுக்கு நான் குர்ஆனை ஓதிக்காட்ட வேண்டுமென எனக்கு அல்லாஹ் உத்தரவிட்டுள்ளான்'' என்று கூறினார்கள். உபை(ரலி), 'என் பெயரை அல்லாஹ் தங்களிடம் குறிப்பிட்டானா?' என (பெருமிதத்துடன்) கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உபை(ரலி), 'அகிலத்தாரின் அதிபதியிடம் நான் பிரஸ்தாபிக்கப்பட்டேனா?' என்று (மீண்டும்) கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'ஆம்' என்று கூறினார்கள். இதைக்கேட்ட (உபை) அவர்களின் கண்கள் (ஆனந்தத்தால்) கண்ணீரை உகுத்தன.

(99) 'அஸ்ஸில்ஸால்' அத்தியாயம்1

பகுதி 1

''எனவே, ஓர் அணுவளவு நன்மை செய்தவர் (மறுமையில்) அதனையும் கண்டுகொள்வார்'' எனும் (திருக்குர்ஆன் 99:7 வது) இறைவசனம்.

(திருக்குர்ஆன் 99:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அவ்ஹா லஹா' (வஹீ மூலம் அதற்கு அறிவித்தான்) எனும் (சொல்லின் நான்கெழுத்து) வினைச்சொல்லும், 'அவ்ஹா இலைஹா' எனும் சொல்லும், (மூன்றெழுத்து வினைச் சொற்களான) 'வஹா லஹா', 'வஹா இலைஹா' ஆகியனவும் (பொருளில்) ஒன்றேயாகும்.

4962. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

குதிரை (வைத்திருப்பது) மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்.) ஒரு மனிதருக்கு நற்பலன் பெற்றுத் தருவதாகும். மற்றொரு மனிதருக்குப் (பொருளாதாரப்) பாதுகாப்பளிக்கக் கூடியதாகும். இன்னொரு மனிதருக்கு பாவச் சுமையாகும்.

அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகப் பசுமையான ஒரு 'வெட்ட வெளியில்' அல்லது 'தோட்டத்தில்' ஒரு நீண்ட கயிற்றால் கட்டிவைத்துப் பராமரிக்கும் மனிதருக்கு அது (மறுமையில்) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டிவைத்திருக்கும்) கயிற்றின் நீளத்திற்கேற்ப எந்த அளவிற்கு 'அந்தப் பசும் புல்வெளியில்' அல்லது 'அந்தத் தோட்டத்தில்' மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றினைத் துண்டித்துக் கொண்டு ஓரிருமுறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகளும், கெட்டிச் சாணங்களும் கூட அவருக்கு நன்மைகளாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (குதிரையின் உரிமையாளரான) அவருக்கு இல்லாமலிருந்தாலும் அதுவும் (அவர் புகட்டியதாகவே கருதப்பட்டு) அவருக்குரிய நன்மையாகவே ஆகும்.

இன்னொருவர் தம் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவராவார். மேலும், அதனுடைய பிடரியின் (ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும் (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவராவார். இப்படிப்பட்டவருக்கு, (அவருடைய) இந்தக் குதிரை (வறுமையிலிருந்து அவரைக் காக்கும்) திரையாகும்.

மற்றொருவன் பெருமைக்காகவும் பகட்டுக்காகவும் (சன்மார்க்கத்தாருடன்) பகைமை பாராட்டுவதற்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கிறவன் ஆவான். அதன் காரணத்தால், அது அவனுக்குப் பாவச் சுமையாக மாறிவிடுகிறது.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், 'அவற்றைக் குறித்து எந்தக் கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை'' 'அணுவளவு நன்மை செய்தவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், அணுவளவு தீமை புரிந்தவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டு கொள்வார்' எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (திருக்குர்ஆன் 99:7,8) வசனங்களைத் தவிர'' என்று கூறினார்கள். 2

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

பகுதி 2

ஓர் அணுவளவு தீமை செய்தவர் அதனையும் கண்டுகொள்வார் (எனும் 99:8 வது இறைவசனம்).

4963. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், 'இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை'' என்று கூறிவிட்டு, 'அணுவளவு நன்மை செய்தவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், அணுவளவு தீமை செய்தவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்' எனும் (திருக்குர்ஆன் 99:7,8) இறை வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

(100) 'அல்ஆதியாத்' அத்தியாயம்1

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 100:6 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கநூத்' எனும் சொல்லுக்கு 'நன்றி கெட்டவன்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 100:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃபஅஸர்ன பிஹி நக்ஆ' எனும் வாக்கியத்திற்கு 'அதனால் புழுதியைக் கிளப்புகிறவற்றின் மீது சத்தியமாக' என்று பொருள் எனக் கூறப்படுகிறது.

(திருக்குர்ஆன் 100:8 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லி ஹுப்பில் கைரி ல ஷதீத்' என்பதன் பொருளாவது: செல்வத்தை அவன் நேசிப்பவன் காரணத்தால் கருமியாக இருக்கிறான். கருமிக்கு 'ஷதீத்' எனச் சொல்லப்படுவதுண்டு.

(திருக்குர்ஆன் 100:10 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹுஸ்ஸில' எனும் சொல்லுக்குப் 'பகுத்து ஆயப்படும்' என்று பொருள்.

(101) 'அல்காரிஆ' அத்தியாயம்1

(திருக்குர்ஆன் 101:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கல் ஃபராஷில் மப்ஸுஸ்' எனும் (தெடருக்கு 'ஒன்றன் மீது ஒன்றாக வீழ்ந்து போகும் திக்குத் தெரியாத வெட்டுக்கிளிகள் போல், (அந்நாளில்) மனிதர்கள் ஒருவரை ஒருவர் சுற்றி வருவர்'' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 101:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'கல் இஹ்ன்' எனும் சொல்லுக்குப்' பல் வேறு நிறங்களைக் கொண்ட பஞ்சுகள் போன்று' என்று பொருள். (இந்த வசனத்தில்) அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ('கல் இஹ்ன் என்னுமிடத்தில்) 'கஸ்ஸூஃப்' (கம்பளியைப் போன்று) என்று ஓதியுள்ளார்கள்.

(102) 'அத்தாகாஸுர்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 102:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அத் தகாஸுர்' எனும் சொல்லுக்கு 'வசதி வாய்ப்புகளையும் குழந்தை குட்டிகளையும் கூடுதலாகப் பெறவேண்டுமென்ற ஆசை' என்று பொருள்.

(103) 'அல்அஸ்ர்' அத்தியாயம் 1

யஹ்யா இப்னு ஸியாத் அல்ஃபர்ராஉ(ரஹ்) கூறினார். 2

(திருக்குர்ஆன் 103:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'வல் அஸ்ரி' எனும் சொல்லில், இறைவன் காலத்தின் மீது சத்தியமிட்டுக் கூறுகிறான்.

(104) 'அல்ஹுமஸா' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

(திருக்குர்ஆன் 104:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் ஹுத்தமா' என்பது, 'சகர்', 'லழா' ஆகியன போன்று நரகத்தின் பெயராகும்.

(105) 'அல்ஃபீல்' அத்தியாயம்1

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார். (திருக்குர்ஆன் 105:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அலம் தர' எனும் சொற்றொடருக்கு, 'நீர் அறியவில்லையா?' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 105:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அபாபீல்' எனும் சொல்லுக்குச் 'சாரைசாரையாக கூட்டங்கூட்டமாக' என்று பொருள்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 105:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சிஜ்ஜீல்' எனும் சொல், 'சன்கி கில்' எனும் (பாரசீகச்) சொல்லின் மருவலாகும். (பொருள்: களிமண் கற்கள்.)

(106) 'குறைஷ்' அத்தியாயம் 1

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 106:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லி ஈலாஃபி குறைஷ்' (குறைஷியரைப் பழக்கப்படுத்துவதற்காக) என்பதன் கருத்தாவது: கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் (வணிகப்) பயணம் மேற்கொள்வதைக் குறைஷியர் பழக்கப்படுத்திக்கொண்டனர். எனவே, அது அவர்களுக்குச் சிரமம் அளிக்கவில்லை.

(திருக்குர்ஆன் 106:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஆமனஹும்' (அவர்களுக்கு அபயமளித்தான்) எனும் சொல்லுக்கு 'ஹரம் - புனித எல்லா எதிரிகளின் அச்சத்திலிருந்தும் அவர்களுக்கு அபயமளித்தான்' என்று பொருள்.

சுஃப்யான் இப்னு உயைனா(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 106:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'லி ஈலாஃபி குறைஷ்' எனும் சொற்றொடருக்குக் 'குறைஷியருக்கு நான் அருள்புரிந்ததற்காக' என்று பொருள்.

(107) 'அல்மாஊன்' அத்தியாயம்1

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 107:2 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யதுஃஉ' எனும் சொல்லுக்கு 'அவர்களின் உரிமையைத் தருவதில்லை' என்று பொருள். இச்சொல் 'தஅஉத்து (நான் மறுத்தேன்) எனும் (வினைச்) சொல்லிலிருந்து வந்ததாகும்.

(திருக்குர்ஆன் 52:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'யுதஃஊன எனும் சொல்லுக்கு' விரட்டியடிக்கப்படுவர்' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 107:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'சாஹூன்' எனும் சொல்லுக்கு '(அலட்சியத்தினால்) பாழாக்குபவர்கள்' என்று பொருள்.

இக்ரிமா(ரஹ்) கூறினார்.

மாஊனில் உயர்ந்தது கடமையாக்கப்பட்ட 'ஸகாத்' ஆகும். அதில் மிகத் தாழ்ந்தது (ஊசி போன்ற சிறு) பொருட்களை இரவலாக வழங்குவதாகும்.

(108) 'அல்கவ்ஸர்' அத்தியாயம்1

பகுதி 1

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

(திருக்குர்ஆன் 108:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஷானிஅக்க' எனும் சொல்லுக்கு 'உங்களுடைய பகைவன்' என்று பொருள்.

4964. தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், 'ஜிப்ரீலே, இது என்ன?' என்று கேட்டேன்.

''இது அல்கவ்ஸர்'' என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

4965. அபூ உபைதா ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னி மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம்,

''(நபியே!) நாம் உங்களுக்கு அல்கவ்ஸரை அருளினோம்'' எனும் (திருக்குர்ஆன் 108:1 வது) இறை வசனம் தெடர்பாகக் கேட்டேன். அவர்கள், '(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தெடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4966. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 108:1 வது வசனத்தில் இடம் அப்பாஸ்(ரலி) கூறுகையில், 'அது, நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்'' எனத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூ பிஷ்ர்(ரஹ்) கூறினார்:

நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், 'மக்கள் 'அல்கவ்ஸர்' என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'நபி(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்'' என்று கூறினார்கள்:

(109) ‘அல்காஃபிரூன்’ அத்தியாயம்1 

(109:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லக்கும் தீனுக்கும்’ (உங்களுடைய மதம் உங்களுக்கு) என்பதன் கருத்தாவது: இறைமறுப்பு உங்களுக்கு. ‘வலிய தீன்’ (எனது மார்க்கம் எனக்கு) என்பதன் கருத்தாவது: இஸ்லாம் எனக்கு. இதில், ‘எனது மார்க்கம்’ என்று குறிப்பிட, ‘தீனீ’ என்று (தன்னிலைப் பிரதிப் பெயர்ச்சொல்லுடன் இணைத்து) அல்லாஹ் கூறவில்லை. காரணம், இந்த (அத்தியாயத்திலுள்ள) எல்லா வசனங்களும் ‘னகர’ ஒலியுடன் (நூனில்) முற்றுப்பெற்றுள்ளன. எனவேதான் (‘தீனீ’ என்பதிலுள்ள) யகரம் நீக்கப்பட்டது. அல்லாஹ், (‘யஹ்தீனீ’ என்பதற்குப் பதிலாக) ‘யஹ்தீன்’ என்றும் (‘யஷ்ஃபீனீ’ என்பதற்குப் பதிலாக) ‘யஷ்ஃபீன்’ என்றும் கூறியிருப்பதைப் போல. (காண்க: குர்ஆன் மூலம்: 26:78,80) 

மற்றவர்கள் கூறுகிறார்கள்: 

(109:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா அஉபுது மா தஉபுதூன்’ என்பதற்கு ‘நீங்கள் வழிபட்டுக்கொண்டிருப்பவற்றை தற்போதும் நான் வழிபடமாட்டேன்; என் ஆயுளில் எஞ்சிய நாட்களிலும் அதற்கு இணங்கமாட்டேன்’ என்பது பொருள். ‘நான் வழிபடுபவனை நீங்களும் வழிபடுபவர்கள் அல்லர்’ எனும் (109:5ஆவது) வசனத்தில் குறிப்பிடப்பட்டிருப்போர் தொடர்பாகவே இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்: உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (இவ்வேதமான)துஅவர்களில் பெரும்பாலோருக்கு அட்டூழியத்தையும் இறைமறுப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்திவருகிறது. ஆகவே, இறைமறுப்பாளர்களான இம்மக்களுக்காக நீர் கவலை கொள்ளாதீர். (5:68) 

(110.) ‘அந்நஸ்ர்’ அத்தியாயம்1 

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

பகுதி 1

4967. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

''(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து...'' எனும் (110 வது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின் 'சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ'' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தெழுகையில் கூறாமல் எந்தவொரு தெழுகையையும் நபி(ஸல்) அவர்கள் தெழுததில்லை.

பகுதி 2

4968. ஆயிஷா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குர்ஆனின் (110 வது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தம் (தெழுகையின்) ருகூஉவிலும் சுஜுதிலும் அதிகமாக 'சுப்ஹானக்க ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள். 2

பகுதி 3

மேலும், (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும்போது (எனும் 110:2 வது இறைவசனம்.)

4969. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி), '(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து..'' எனும் (110 வது) அத்தியாயம் குறித்து (பத்ருப் போரில் கலந்துகொண்ட) நண்பர்களிடம் கேட்டார்கள். நண்பர்கள் 'பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றிகொள்வது (குறித்துத்தான் இந்த வசனம் முன்னிறிவிப்புச் செய்கிறது)'' என்று கூறினர். 'இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று உமர்(ரலி) (என்னிடம்) கேட்டார்கள். '(இது,) இறைத்தூதர்(ஸல்) அவர்களின் ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களின் இறப்புச் செய்தி முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது'' என்று (விளக்கம்) கூறினேன். 3

பகுதி 4

''உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதியுங்கள்! (மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் பாவமன்னிப்பைப் பெரிதும் ஏற்பவனாக இருக்கிறான்'' எனும் (திருக்குர்ஆன் 110:3 வது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'தவ்வாப்' எனும் சொல்லுக்கு, அடியார்களின் பாவமன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன்' என்று பொருள். மக்களில் பாவமன்னிப்புக் கோருபவருக்கும் 'தவ்வாப்' என்று கூறப்படுவதுண்டு.

4970. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

உமர்(ரலி) பத்ருப்போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, 'எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச்செய்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி), 'அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால் தான்'' என்றார்கள். பின்னர் ஒருநாள் (எங்களை) உமர்(ரலி) (அவைக்கு) அழைத்தார்கள். அப்போதும் என்னை அவர்களுடன் அமரச் செய்தார்கள். அவர்களுக்கு (என் தகுதியினை உணர்த்திக்) காட்டுவதற்காகவே அன்று என்னை அழைத்தார்கள் என்றே கருதினேன். (எனவே, அனைவரும் வந்ததும் அவர்களிடம்) உமர்(ரலி), 'அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்..'' எனும் (திருக்குர்ஆன் 110:1 வது) இறைவசனம் குறித்து நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் சிலர், 'நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படுமபோது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் பணிக்கப்பட்டுள்ளோம்'' என்று (அவ்வசனத்திற்கு விளக்கம்) கூறினர். அவர்களில் இன்னும் சிலர் ஏதும் சொல்லாமல் அமைதியாயிருந்தனர். அப்போது உமர்(ரலி) என்னிடம், 'இப்னு அப்பாஸே! நீங்களும் இவ்வாறுதான் கூறுகிறீர்களா?' எனக் கேட்டார்கள். நான், 'இல்லை'' என்றேன். 'அவ்வாறாயின், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், 'அது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டதைக்) குறித்து (முன்) அறிவிப்புச் செய்ததாகும். 'இறைவனின் உதவியும் வெற்றியும் வந்துவிட்டால்'.. அதாவது இது, உங்களின் ஆயுட்காலம் (முடிந்துவிட்டது) பற்றிய அறிகுறியாகும். எனவே, உங்களுடைய இறைவனைப் புகழ்ந்து, அவனுடைய தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் பாவமன்னிப்பை ஏற்றுக்கொள்பவன் ஆவான் (என்பதே இதன் விளக்கமாகும்)'' என்று பதிலளித்தேன். அப்போது உமர்(ரலி), 'நீங்கள் கூறுகிற விளக்கத்தையே இ(ந்த அத்தியாயத்)திலிருந்து நானும் அறிகிறேன்'' என்று கூறினார்கள். 4

பகுதி 1

(111) ‘அல்லஹப்’ அத்தியாயம்1  

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)  

(111:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘தப்ப’ எனும் சொல்லின் வேர்ச்சொல்லும், 40:37ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றதுமான) ‘தபாப்’ எனும் சொல்லுக்கு ‘இழப்பு’ என்பது பொருள்.   

(11:101ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தத்பீப்’ எனும் சொல்லுக்கு ‘சீரழிவு’ என்று பொருள். 

4971. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

''(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!'' (அதாவது,) 'தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!') எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப்பட்டபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று 'ஸஃபா' (மலை) மீதேறி உரத்த குரலில், 'யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)'' என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், 'யார் இவர்?' என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?' என்று கேட்டார்கள். மக்கள், 'உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)'' என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கை செய்கிறேன்'' என்றார்கள். (அப்போது நபியவர்களைப் பார்த்து) அபூ லஹப், 'உமக்கு அழிவுண்டாகட்டும்! இதற்காகத்தான் எங்களை ஒன்றுகூட்டினாயா?' என்று கேட்டான். பின்னர் நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அப்போது 'அழியட்டும் அபூ லஹபின் இரண்டு கரங்கள்; அவனுமே அழியட்டும்'' எனும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது. இந்த (திருக்குர்ஆன் 111:1 வது) வசனத்தை (அதன் இறுதியில் 'கத்' எனும் இடைச் சொல்லை இணைத்து) 'வ கத் தப்ப' (அவன் அழிந்தும்விட்டான்) என்றே அப்போது (அறிவிப்பாளர்) அஃமஷ்(ரஹ்) ஓதினார்கள். 2

பகுதி 2

அவனும் நாசமாகிவிட்டான். அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கா (எனும் 111:2 வது இறைவசனம்).

4972. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள 'ஸஃபா' எனும்) அந்த மலை மீதேறி, 'யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே, அவர்களிடம் குறைஷியர் குழுமினர். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நான் உங்களிடம் 'காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள்' என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்!'' என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், 'ஆம் (நம்பவே செய்வோம்)'' என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என உங்களை எச்சரிக்கை செய்கிறேன்'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூ லஹப், 'உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான் எங்களை ஒன்று திரட்டினாயா?' என்று கேட்டான். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், 'அழியட்டும் அபூ லஹபின் இரண்டு கரங்கள்'' என்று தெடங்கும் (111 வது) அத்தியாயத்தை அருளினான்.

பகுதி 3

''அவன் கொழுந்துவிட்டெரியும் நெருப்பில் நுழைவான்'' எனும் (திருக்குர்ஆன் 111:3 வது) இறைவசனம்.)

4973. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

'உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்று கூட்டினாய்!'' என்று (நபி(ஸல்) அவர்களைப் பார்த்து) அபூ லஹப் கேட்டான். அப்போது 'அழியட்டும், அபூ லஹபின் இரண்டு கரங்கள்..'' எனும் (111 வது) அத்தியாயம் அருளப்பெற்றது.

பகுதி 4

அவனுடன் அவன் மனைவியும் (அழியட்டும்) அவளோ விறகு சுமப்பவள் (எனும் 111:4 வது இறைவசனம்.)

முஜாஹித்(ரஹ்) கூறினார்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஹம் மாலத்தல் ஹதப்' எனும் சொல்லுக்குப் 'புறம் பேசித் திரிகிறவள்' (முஸ்லிம்களுக்கும் இணைவைப்பாளர்களுக்குமிடையே பகைமையை வளர்ப்பவள்) என்று பொருள்.

(திருக்குர்ஆன் 111:5 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'மசத்' எனும் சொல், பனைமர நாருக்குச் சொல்லப்படும். இதுவே (மறுமையில்) நரகத்தின் சங்கிலியைக் குறிக்கும்.

(112) 'அல்இக்லாஸ்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

(திருக்குர்ஆன் 112:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அஹத்' எனும் சொல்லை ('அஹதுன்' என்று 'தன்வீன்') 'னகர ஒலி இணை'யுடன் வாசிக்கப்படாது என்று சொல்லப்படுகிறது. பொருள்: ஒருவன்.

பகுதி1

4974. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த பிறகு) அவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவதைவிட, அவனை ஆரம்பமாகப் படைத்தது சுலபமன்று. (அதையே செய்துவிட்ட எனக்கு மீண்டும் உயிர் கொடுப்பது கடினமல்ல.) 'அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக்கொண்டான்' என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும். ஆனால், நானோ ஏகன்; (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை.2

பகுதி 2

''அல்லாஹ் (எவரிடமும்) எத்தேவையுமில்லாதவன்'' எனும் (திருக்குர்ஆன் 112:2 வது) இறைவசனம்.

அரபுகள் தங்களின் பிரமுகர்களை 'அஸ்ஸமத்' என்று அழைக்கின்றனர்.

அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) கூறினார்: எவரிடம் தலைமைப் பதவி போய்முடிகிறதோ அத்தகைய (உயர் மட்டத்) தலைவரே 'அஸ்ஸமத்' எனப்படுவார்.

4975. 'என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். 'அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான்' என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும. ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (அல்லாஹ் கூறினான்:) 'அவன் (எவரையும்) பெற்றவனுமல்லன்; (யாருக்கும்) பிறந்தவனுமல்லன். (எனவே, அவனுக்குப் பெற்றோருமில்லை; பிள்ளைகளுமில்லை) தவிர, அவனுக்கு நிகராகவும் யாருமில்லை'' (திருக்குர்ஆன் 112:3,4)

(திருக்குர்ஆன் 112:4 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'குஃப்வ்' எனும் சொல்லும், கஃபீஃ, கிஃபாஉ ஆகிய சொற்களும் ('நிகரானவன்' என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.

(113) 'அல்ஃபலக்' அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் இப்னு ஜப்ர்(ரஹ்) கூறினார்:

(திருக்குர்ஆன் 113:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல் ஃபலக்' எனும் சொல்லுக்கு 'வைகறை' என்று பொருள்.

(திருக்குர்ஆன் 113:3 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'ஃகாஸிக்' (இருள் கப்பியது) எனும் சொல் இரவைக் குறிக்கிறது.

(இதே வசனத்திலுள்ள) 'வகப' (அது படர்ந்தது) எனும் சொல், சூரிய அஸ்தமனத்தைக் குறிக்கிறது.

(பொதுவாக அரபுகளின் வழக்கில்) 'அப்யனு மின் ஃபரக்கி வ ஃபலக்கிஸ் ஸுப்ஹி' (அது வைகறையை விடத் தெளிவானது) என்று ('ஃபரக்' எனும் சொல்லையும் 'ஃபலக்' எனும் சொல்லையும் ஒரே பொருளில் ஆண்டு) வழங்குகின்றனர். 'ஒரு பொருள் மற்றொரு பொருளுக்குள் முழுவதுமாக நுழைந்து, இருள் கப்பிக்கொள்ளும்போது, 'வகப' என்பர்.

4976. ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) அறிவித்தார்

நான் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் 'முஅவ்வஃதத்தைனி' (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா? என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இது குறித்து நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'என்னிடம் (நபியே!) கூறுக: நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்'' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ருபின் ஹுபைஷ்(ரஹ்) கூறினார்:)

எனவே, நாங்களும் (நானும் உபை இப்னு கஅபும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம். 2

(114) 'அந்நாஸ்' அத்தியாயம்1

(திருக்குர்ஆன் 114:1 வது வசனத்தின் மூலத்திலுள்ள) 'அல்வஸ்வாஸ்' எனும் சொல்லி(ன் (விளக்கவுரையி)ல் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்

குழந்தை பிறந்தால் அக்குழந்தையை ஷைத்தான் தீண்டுகிறான். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ்(வின் பெயர்) கூறப்பட்டால், அவன் போய்விடுகிறான்; அல்லாஹ்(வின் பெயர்) கூறப்படவில்லையாயின், அக்குழந்தையின் இதயத்தின் மீதே அவன் நிலைகொண்டு விடுகிறான்.

4977. ஸிர்ரு இப்னு ஹுபைஷ்(ரஹ்) கூறினார்

நான் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களிடம் 'அபூ முன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்வூத்(ரலி) இப்படி இப்படி சொல்கிறாரே?' என்று கேட்டேன். 2 அதற்கு உபை(ரலி), 'நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், 'என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும் 'நபியே! கூறுக: பாதுகாப்புக் கோருகிறேன்' என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன்'' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:)

எனவே, நாங்கள் (நானும் உபை அவர்களும்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.3


 
Previous Post Next Post