இளம் தம்பதிகளும் விவாகரத்தும்

.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று முஸ்லிம் இளம் தம்பதிகளிடம் விவாகரத்து அதிகரித்துச் செல்கின்றன. 

இந்த நவீன உலக ஒழுங்கின் முதலாழித்துவ நுகர்வுக்கலாசாரத்தின் பக்கவிளைவுகளினால் எமது இளம் முஸ்லிம் சமுதாயத்தின் நிலை அதோ பரிதாபம். திருமணம் முடிக்க இருக்கும் எமது சகோதர சகோதரிகளின் குடும்ப வாழ்கை பற்றிய இஸ்லாமிய அறிவுரைகளும் , வழிகாட்டல்களும் காலத்தின் இன்றியமையாத தேவை.

எமது சமூகத்தில் இளம் தம்பதிகள் எளிதில் தீர்க்க முதியுமான பிரச்சினைகளுக்கு Qazi court சென்று instant Divorced கேட்க்கும் அளவுக்கு மிகவும் கவலையான நிகழ்வுகள் நடை பெறுவதை பார்க்கிறோம்.

இது அவர்களிடத்தில் குடும்ப வாழ்க்கை பற்றிய போதிய அறிவு, அனுபவங்கள் இல்லாமையும் மற்றும் பெற்றோர்களின் முறையான அறிவுரைகள் இல்லாமையே…!!! என்பது கசப்பான உண்மை.

கணவன் மனைவிக்கிடையில் தோன்றும் பிரச்சினைகளுக்கு சில சமகால conflicts களை பின்வருமாறு கூறலாம்.

1. கணவன் மனைவிக்கிடையே போதிய matured understand இல்லாமை.
2. பெற்றோர்களின் பக்கச் சார்பான அறிவுரைகள்.
3. பெற்றோரகள் தாங்கள் வாழ்நாள் முழுவதிலும் பெற்ற அனுபவங்களை பிள்ளைகளின் ஒளிமயமான எதிர்கால வாழ்க்கைக்கு வழங்காமை. அல்லது பெற்றோர்களின் எதிர்பார்ப்பு வித்தியாசங்கள்.
4. கணவனுக்கு கட்டுப்பட வேண்டிய விதத்தில் கட்டுப்படாமை.
5. குடும்ப ஆதரவின்மை.
6. பொருளாதார அழுத்தம்/ மன அழுத்தம்.
7. உலக ஆசை/மிகை நுகர்வு.
8. பிரயோசனம் இல்லாத வாதங்கள்.
இப்படி அடிக்கொண்டே போகலாம். இவ்வாறான முரண்பாடுகள் வெறுமனே இரு தம்பதிகளுக்கிடையில் மட்டும் சுருங்கி விடுவதில்லை. ஒரு சமூகத்தையே ஆட்டங்கான செய்யும் கொடிய வைரஸாகும். ஏனெனில் சிறந்த சமூகத்தின் அடிப்படை ஆரோக்கியமான குடும்பமாகும். ஆரோக்கியமான பல குடும்பங்கள் நாகரீகமான சமூகத்தை உருவாகின்றது. நாகரீகமான சமூகம் பலத்த சமூக - அரசியல் - பொருளாதார கொள்கைகளை வகுத்து வழி நடாத்தும். நிற்க, மனித வரலாற்றில் தம்பதிகளுக்கிடையில் பிணக்குகள் ஏற்படாத குடும்பங்கள் என்று சொல்லும் அளவுக்கு ஒரு குடும்பம் இருக்கவே முடியாது. ஏனெனில் இந்த உலக வாழ்க்கையானது சோதனைகளும் துன்பங்களும் நிறைந்த களமாகும். இந்த சோதனையில் யார் நல்லமல்கள் செய்து வெற்றி பெறுவாரோ அவரே அல்லாஹ்வின் திருப்பொருத்தை பெற்றவராவார். அதனாலேயே திருமறை பின்வருமாறு கூறுகின்றது.

اۨلَّذِىْ خَلَقَ الْمَوْتَ وَالْحَيٰوةَ لِيَبْلُوَكُمْ اَيُّكُمْ اَحْسَنُ عَمَلًا
உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.
(அல்குர்ஆன் : 67:2)

செயல்களில் மிகவும் அழகானவர் என்பது மேற்கூறிய, தனிநபர் , குடும்ப , சமூக , அரசியல், பொருளாதாரம் என்று பல மட்டங்களிலும் பிரதிபலிப்பவை.

தம்பதிகளிடையே சின்னஞ்சிறு  பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. இது தான் யதார்த்தம். பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வாழ்க்கையின்  தத்துவங்களையும் படிப்பினைகளையும் பக்குவமாக கற்றுக் கொடுப்பது "குடும்ப வாழ்க்கையை பாதுகாத்தல்"  என்கிற அம்சம் இருக்க வேண்டுமே தவிர  பெற்றோர்களின் மாறாத சாராம்சப் பண்பாக அதனை முன்வைத்திட கூடாது. இதுவே சிறந்த வழிகாட்டலாகும்.

ஏனெனில், நாம் (பெற்றோர்கள்) தமது கடந்த கால வாழ்க்கை பற்றி சிறிது நேரம் சிந்தித்தால் அது தெளிவை ஏற்படுத்தும்.

நாளை சிறந்த ஆசிரியர்கள் , வைத்தியர்கள் , பொருளியலாளர்கள் , கணக்காளர்கள், வழக்கறிஞர்கள் சமூகத் தலைவர்கள் என அவர்களின் பொருளாதார நலனிற்காக பல திறமையாளர்களை  உருவாக்குவதற்கு, 
O/L and A/L பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக day and night seminars and classes களை இலவசமாகவோ அல்லது கட்டணம் செலுத்தப்பட்டதாகவோ நடத்துகிறோம். 

எனில், சமூகத்தின் முதுகெலும்பான குடும்ப ஸ்திரத்தன்மையை பேணவேண்டிய தம்பதிகளின் வாழ்க்கைக்கான seminars and classes களை ஏன் செய்யகூடாது?

"உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே" (அல்ஹதீஸ்)

சில முக்கியமான வழிகாட்டல்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

1. கணவன் - மனைவி இருவர்களுக்குமிடையில் உள்ள வித்தியாசங்கள்.
Ex: Abilities difference 
 Thinking patterns difference 
 Behaviors difference
 Capacities difference
 Responsibilities difference 
2. குடும்பம் என்றால் என்ன? அதன் நோக்கம்/ இலக்குகள் என்ன? 
3. முரண்பாடுகள் ஏற்படும் போது இருவரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? முரண்பாடுகளின் காரணத்தை எவ்வாறு இணங்கான்பது? 
4. பிரச்சினைகளின் போது இஸ்லாம் வழிகாட்டும் தீர்வுகள் யாவை? அவற்றை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதற்கான methodologies என்ன? 
5. கணவன் மனைவிகளுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்த சைத்தான் மேற்கொள்ளும் தந்திரமான வழிகளை observation செய்து அவற்றின் கதவுகளை அடைப்பதற்கு அல்லாஹ்வின் உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கல். 

மேற்படி திருமணம் முடிக்க இருப்பவர்களுக்கும், இளம் தம்பதிகளுக்கும் இந்த வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
Previous Post Next Post