بسم اللــــه الرحمـــــــــن الرحيم
கணக்கீட்டு முறைப்படி ரமழான் நோன்பை துவங்குவதன் மார்க்கச் சட்டம் என்ன?
கணக்கீட்டு முறையில் நோன்பை ஆரம்பம் செய்வதோ, பெருநாளை எடுப்பதோ பிழையான நடைமுறையாகும்.
பிறையை பார்த்தே நோன்பையும், பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும்
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள் :
"பிறை பார்த்து நோன்பு வையுங்கள்; (மறு)பிறை பார்த்து நோன்பை விடுங்கள்; (மேக மூட்டத்தால்) உங்களுக்கு பிறை தென்படவில்லையானால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்.
- இதை அபூஹுரைரா (ரலியல்லாஹு 'அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1974
இந்த ஹதீஸின் விளக்கமாக ஸவூதி நாட்டு முன்னாள் தலைமை முஃப்தி இமாம் அப்துல் அஸீஸ் பின் பாஸ் رحمه الله கூறுவதாவது ... :
பிறையை பார்த்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிப்பது கட்டாயக் கடமையாகும்; பிறை மறைக்கப்பட்டால் மாதத்தை 30-ஆக பூர்த்திசெய்ய வேண்டும்.
முன்கூட்டிய தீர்மானம் அல்லது கணக்கீட்டின் அடிப்படையில் நோன்பை ஆரம்பிக்க கூடாது.
இதுதான் அல்லாஹு தஆலா சட்டமாக இறக்கிய விடயமாகும்.
கணக்கீட்டின் அடிப்படையில் ரமழானுடைய நோன்பை ஆரம்பிப்பது கூடாத காரியம் என்பதில் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவருக்கும் ஒருமித்த கருத்தில் (إجماء) உள்ளார்கள்; (அவர்களில் யாரிடத்திலும் மாற்றுக்கருத்து இல்லை).
பார்க்க : அல்-இஃப்ஹாம் ஃபீ ஷர்ஹு உம்ததில்-அஹ்காம்; பக்கம் (389 –390).
ஸவூதி நாட்டு மார்க்க தீர்ப்பு மற்றும் ஆய்வுக்குழு கூறுவதாவது :
"சந்திர மாதங்களை உறுதி செய்வதின் பால் மீளுகின்ற வேளையில் நட்சத்திர சாத்திரத்தை மையமாக வைத்து வணக்கங்களின் ஆரம்பத்தையும் அவைகளில் இருந்து மீளுவதையும் (சந்திரனை) நேரடியாகப் பார்க்காமல் தீர்ப்பெடுப்பது எவ்வித நலவுமில்லாத பித்அத்களில் உள்ளதாகும். மேலும், அதற்கு மார்க்கத்தில் எவ்வித அடிப்படையும் இல்லை."
பார்க்க : ஃபதாவா லஜ்னா அத்-தாயிமா (இல: 386).