அன்னார் படைக்கப்படுவதற்கு முன்பே நபியென எழுதப்பெற்றது பற்றிய குறிப்பு.

مسند أحمد بن حنبل - 20927
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ  ، حَدَّثَنَا مَنْصُورُ بْنُ سَعْدٍ  ، عَنْ بُدَيْلٍ  ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ  ، عَنْ مَيْسَرَةَ الْفَجْرِ  ، قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، مَتَى كُتِبْتَ نَبِيًّا ؟ قَالَ : " وآدَمُ بَيْنَ الرُّوحِ وَالْجَسَدِ ". 

شعيب الأرنؤوط: إسناده صحيح

مسند أحمد تخريج شعيب الأرنؤوط: (202/34)

மைசரா அல் ஃபஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இறைத்தூதராக எப்போது (தீர்மானிக்கப்பெற்று) எழுதப் பெற்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "(முதல் மனிதர்) ஆதம் (அலை) அவர்கள் உயிருக்கும் உடலுக்குமிடையே இருந்தபோது (நான் நபியாகத் தீர்மானிக்கப்பெற்று) எழுதப்பட்டேன்" என பதிலளித்தார்கள்.

 நூல் : முஸ்னத் அஹ்மத் 20927

ஹதீஸ்யின் தரம் : 

மேற்கண்ட ஹதீஸ்யை ஹதீஸ் துறை வல்லுநர் இமாம் ஷுஹப் அல் -அர்னாவூத் தம்முடைய மேலாய்வில் இது ஸஹீஹான அறிவிப்பாளர் தொடரை கொண்ட செய்தி என்று பதிவு செய்துள்ளார்கள்.

ஹதீஸ்யின் விளக்கம் : 

இந்த நிலையில் நான் இருந்தபோது நபியாக பதிவு செய்யப்பட்டேன்
என்பது விதியை நம்புவது தொடத்
பாக வந்துள்ள மற்ற ஆதாரங்களுக்கு எதிரான
தல்ல. அதே போன்று உலகில் நிகழப் போகும்
அனைத்தும் முன்பே லவ்ஹுல் மஹ்ஃபூழ்
எனும் ஏட்டில் எழுதப்பட்டுவிட்டது என்பதற்கும்
எதிரானதன்று. முன்பே எழுதப்பட்டிருந்தாலும்
மீண்டும் ஒரு முறை தம்முடைய நுபுவ்வத்
பற்றி எழுதப்பட்டது இன்று இந்த ஹதீஸிற்குப் பொருள் கொள்ள. வேண்டும் என இந்த ஹதீஸ் தெரிவிக்கிறது. (தஹாவியின்
முஷ்கிலுல் ஆஸார் 9/6349)

(''ஆதம் உயிருக்கும் உடலுக்கும் இடையே இருந்தபோது'' என்பதன் பொருள்:) ஆதம் அலை அவர்கள் களிமண்ணில் பொம்மையாக இருந்தபோதே நான் நபியாக பதிவு செய்யப்பட்டேன் .

 மனிதர்களின் சரீரங்கள் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களின் உயிர்கள் படைக்கப்பட்டுவிட்டன அந்த ஆன்ம உலகிலேயே நான் நபியாக  தீர்மானிக்கப்பட்டு எழுதப்பட்டுவிட்டேன்'' என்பதாகும்.

 (அபூபக்ர் பின் அல் கல்லால் அவர்களின் அஸ்ஸுன்னா, ஹதீஸ்: 200 )

மனிதர்கள் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களின் உயிர்கள் படைக்கப்பட்ட விட்டன என்பதை குர்ஆன் உணர்த்துகிறது.

 ''உம்முடைய இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களின் வழித்தோன்றல்களை வெளிப்படுத்தியதை நினைவூட்டுவீராக! ''நான் உங்களுடைய இறைவனல்லவா?'' என்று (கேட்டு) அவர்களுக்கு அவர்களையே சாட்சியாக்கினான். ''ஆம்; நாங்கள் சாட்சியமளிக்கிறோம்'' என்று அவர்கள் கூறினர். (7:171)

 அதே போன்று நபிகளார் பிறப்பதற்கு முன்பே முந்தைய நபிமார்கள் அனைவரிடமும் இறுதி இறைத் தூதர் வருகை குறித்து தெரிவிக்கப்பட்டு அவர் வந்துவிட்டால் அவரை ஏற்க வேண்டும் அவருக்கு உதவ வேண்டும் என முன்பே வாக்குறுதி பெறப்பட்டதாகவும் குர்ஆன் கூறுகிறது:

 ''நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் வழங்கி பின்னர் உங்களில் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை கட்டாயம் நம்பி அவருக்கு உதவ வேண்டும் என்று நபிமார்களிடம் உறுதிமொழி எடுத்து, ஒப்புக் கொண்டீர்களா? இதன் மீது என் உடன் படிக்கையை எடுத்துக்கொண்டீர்களா? என்று கேட்டபோது ''நாங்கள் ஒப்புக்கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர்.     (3:81)

ஆக, இறைத்தூதரின் வருகை குறித்து முன்பே பேசப்பட்டது என்பதை இந்த வசனம் தெரிவிக்கிறது. ஏற்கெனவே பாதுகாக்கப்பெற்ற பலகையான லவ்ஹுல் மஹ்ஃபூழில் பதிவு செய்யப்பட்ட விஷயம் மீண்டும் பதிவு செய்யப்படுவது என்பது அசாத்தியமான ஒன்றல்ல; வழக்கத்தில் உள்ளதுதான் என மற்றொரு வசனம் தெளிவுபடுத்துகிறது:

'' அறிவுரைக்குப்பின் ஸபூர் வேதத்தில் 'என் நல்லடியார்கள் பூமிக்கு உரிமையாளர் ஆவார்கள்' என நாம் எழுதியிருந்தோம்'' ( 21:105)

 இதில் அறிவுரை என்பதைக் குறிக்க மூலத்தில் 'அத்திக்ர்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இந்த அறிவுரை என்பது  மூலப்பதிவேட்டைக் குறிக்கும் என முஜாஹித் (ரஹ்). அப்துர் ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் (ரஹ்),  சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்)  ஆகியோர் கூறியுள்ளனர். (தப்ஸீர் இப்னு கஸீர்) 

இதன்படி லவ்ஹுல் மஹ்ஃபூழில் எழுதப்பட்ட விஷயம் மறுபடியும் ஸபூர் வேதத்தில் எழுதப்பட்டது என்று தெரிவிக்கின்றான். இதுபோல பாதுகாக்கப்பெற்ற பலகையில் எழுதப்பட்ட நபிகளாரின் நுபுவ்வத் பற்றிய செய்தி மறுபடியும் ஆதம் உயிர் ஊதப்படாமல் வெறும் சரீரமாக இருந்தபோது எழுதப்பட்டது எனக் கொள்க. 

 நூல் : தஹாவியின் ஷர்ஹு மஆனில் ஆஸார் (15/ 271)

---------------------------------

மொழிப்பெயர்ப்பு : அப்துல்லாஹ் பப்ளிகேஷன்ஸ் மொழிப்பெயர்ப்பு குழு.
Previous Post Next Post