மார்க்க கல்வி கற்பதற்கான நற்கூலி


عَنْ أَبِي أُمَامَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يَعْلَمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحِجَّةِ».

அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) கூறியதாக அபூஉமாமா (ரலி) அறிவிக்கிறார்கள்:

 யார் ஒருவர் காலையில், கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும். 

யார் ஒருவர் மாலையில், கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஹஜ் செய்த நன்மை கிடைக்கும். 

நூல் : ஹாகிம் 311 தரம் : ஹசன்

விளக்கம் :

"யார் ஒருவர், நாள்தொடக்கத்தில் (அதாவது, காலையில்) பள்ளிவாசலுக்குச் செல்கிறாரோ, அவர் மக்களுக்கு ஒரு நன்மையை அறிந்து கொள்வதைத் தவிரவோ அல்லது ஒரு நன்மையை கற்றுக் கொடுப்பதைத் தவிரவோ வேறு எதையும் நாடவில்லை என்றால், அவருக்கு ஒரு முழுமையான உம்ராவை அதன் கடமைகள் மற்றும் சுன்னத்துகளுடன் நிறைவேற்றிய கூலியைப் போன்ற கூலி கிடைக்கும்."

"யார் ஒருவர், நாளிறுதியில் (அதாவது, மாலையில்) பள்ளிவாசலுக்குச் செல்கிறாரோ, அவர் ஒரு நன்மையை அறிந்து கொள்வதைத் தவிரவோ அல்லது ஒரு நன்மையை மக்களுக்கு கற்றுக் கொடுப்பதைத் தவிரவோ வேறு எதையும் நாடவில்லை என்றால், அவருக்கு ஒரு முழுமையான, நிறைவான ஹஜ்ஜை நிறைவேற்றிய கூலியைப் போன்ற கூலி கிடைக்கும்."

இது அல்லாஹ்வின் அடியார்கள் மீது அவன் கொண்டிருக்கும் அருட்கொடைகளில் ஒன்றாகும். நாளிறுதி என்பது வேலைகளை முடித்துவிட்டு, ஓய்வு தேடித் திரும்பும் நேரமாக இருப்பதால், அந்நேரத்தில் கற்றுக் கொடுப்பவருக்கும், கற்றுக் கொள்பவருக்கும் உள்ள கூலி அதிகமாகும். 

ஏனெனில், அவர் ஓய்வை விட அறிவைத் தேடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
Previous Post Next Post