நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் :
" நீங்கள் ஷைத்தானை ஏசாதீர்கர். அவனது தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். "
இமாம் இப்னு உதைமீன் (றஹ்) அவர்கள் அளித்துள்ள விளக்கம்:
" மனிதன் ஷைத்தானை சபிக்குமாறு ஏவப்படவில்லை, அவனிடமிருந்து பாதுகாவல் தடுமாறி மனிதன் பணிக்கப்பட்டுள்ளான். இதுபற்றி வரும் அல்குர்ஆன் வசனம் :
"ஷைத்தான் உங்களைச் சோதித்தால் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருங்கள். நிச்சயமாக அவன் அனைத்தையும் செவியேற்பவன்; யாவற்றையும் அறிந்தவன்."
[அல் அஃறாப் : 200]