மறுமை நாளைக் கண்கூடாகக் காண விரும்புபவர் .

இப்னு உமர் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :

" மறுமை நாளைக் கண்கூடாகக் காண விரும்புபவர், ' இதஷ் ஷம்சு குவ்விரத் ' ( சூரியன் சுருட்டப்படும்போது -81),'இதஸ் ஸமா உன் ஃபத்தரத்' ( வானம் வெடித்துவிடும் போது -82 ) ' இதஸ் ஸமா உன் ஷக்கத் ( வானம் பிளக்கும்போது -84) ஆகிய அத்தியாயங்களை  ஒதிக்கொள்ளட்டும் " என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்.

மேலும் ,நபியவர்கள் (மேற்கண்ட அத்தியாயங்களுடன்) ' ஹூத் (11) அத்தியாயத்தையும் (சேர்த்து) குறிப்பிட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.364

நூல் : முஸ்னத் அஹ்மத் தமிழாக்கம் 4575 (பாகம் 5 பக்கம் 248)

விளக்கக் குறிப்புகள்:

364. திருக்குர் ஆனில் இந்த மூன்று (81;82;84) அத்தியாயங்களிலும் மறுமை நாளின் அமளிதுமளிகள் குறித்து அந்த அளவிற்குத் தத் ரூபமாக உயர்ந்தோன் அல்லாஹ் எடுத்துரைக்கின்றான்.

அக்காட்சிகளை அப்படியே மனத்திரையில் ஓடவிட்டுப் பார்த்தால் அந்நாளைக் கண்கூடாகக் காண்பது போன்றே இருக்கும்.

அவ்வாறே, ஹூத்(11) அத்தியாயத்தின் 98 ஆம் வசனத்திலும் மறுமை நாள் குறித்து அல்லாஹ் பேசுவான்.( ஹாஷியத்துஸ் ஸின்தீ .இந்த அத்தியாயங்களின் விளக்கத்திற்கு காண்க : தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் பாகம் -10)

அடுத்து இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மூன்றாமவராக இடம்பெறும் அப்துல்லாஹ் பின் பஹீர் அஸ்ஸன் ஆன என்பார் விமர்சனத்திற்குரியவர் அவர்.

ஆனால் ஹாகிம் ( ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸை சரிகாண்கிறார்கள்( துஹ்ஃபத்துல் அஹ்வதீ)

அஹ்மத் ஷாகிர், ஷுஜப் அல் அர்னாவூத் ( ரஹ் ) ஆகியோரும் அவ்வாறே சரிகண்டுள்ளனர்.
أحدث أقدم