ثَقِيلًا (ஸகீலன் / கனமானது, பாரமானது)

அல்குர்ஆனில் ثَقِيلًا (ஸகீலன் / கனமானது, பாரமானது) என்ற சொல் இரண்டு இடங்களில் மட்டுமே வந்துள்ளது.

ஒன்று மறுமை நாளைக் குறிக்கும் வசனம்:

إِنَّ هَٰؤُلَاءِ يُحِبُّونَ الْعَاجِلَةَ وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا
"நிச்சயமாக இவர்கள் இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர்; தங்களுக்குப் பின்னால் வரவிருக்கும் பாரமான (கடினமான) ஒரு நாளை (மறுமை நாளை) புறக்கணிக்கின்றனர்."
( 76:27)

மற்றொன்று அல்குர்ஆனைக் குறிக்கும் வசனம்:

إِنَّا سَنُلْقِي عَلَيْكَ قَوْلًا ثَقِيلًا
"நிச்சயமாக நாம் உம்மீது மிகப் பாரமிக்க (மகத்தான பொறுப்புள்ள) ஒரு வாக்கை (அல்குர்ஆனை) இறக்கவிருக்கிறோம்."
(73:5)

சிந்திக்க வேண்டிய செய்தி:

குர்ஆன் "பாரமான வாக்கு" (قَوْلًا ثَقِيلًا) என்று வர்ணிக்கப்படுகிறது.
மறுமை நாள் "பாரமான நாள்" (يَوْمًا ثَقِيلًا) என்று வர்ணிக்கப்படுகிறது.
எனவே, "பாரமான நாளில்" (يَوْمًا ثَقِيلًا) வெற்றி பெற விரும்புபவர், "பாரமான வாக்கை" (قَوْلًا ثَقِيلًا) உறுதியாகப் பற்றிப் பிடிக்க வேண்டும்.

அல்குர்ஆனைப் பற்றிப் பிடிப்பவரே, மறுமையின் பாரமான நாளில் அல்லாஹ்வின் அருளால் வெற்றியடைவார்.

اللَّهُمَّ اجْعَلِ الْقُرْآنَ رَبِيعَ قُلُوبِنَا، وَنُورَ صُدُورِنَا، وَنَجَاتَنَا يَوْمَ الْقِيَامَةِ. 
யா அல்லாஹ்! குர்ஆனை எங்கள் இதயங்களின் வசந்தமாகவும், எங்கள் உள்ளங்களின் ஒளியாகவும், மறுமை நாளில் எங்களுக்கு மீட்சிக்கான காரணமாகவும் ஆக்குவாயாக! 

- எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி
أحدث أقدم