இறை திருப்திக்காக உதவி செய்தல்


«تفسير ابن كثير - ت السلامة» (8/ 287):
«إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلا شُكُورًا (9)»

“உங்களுக்கு நாங்கள் உணவளிப்பதெல்லாம், அல்லாஹ்வின் முகத்திற்காக (அவன் திருப்பொருத்தத்திற்காக); உங்களிடமிருந்து பிரதிபலனையோ (அல்லது நீங்கள்) நன்றி செலுத்த வேண்டுமென்பதையோ நாங்கள் நாடவில்லை” (என்று அவர்கள் கூறுவர்).

அல் குர்ஆன் 76:9

விளக்கம் : 

உங்களிடமிருந்து எந்தெவொரு கைம்மாறையும், நன்றியையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால் எந்த உதவியின் மூலம் நீங்கள் எங்களுக்கு கைம்மாறு வழங்குவீர்களோ அந்த உதவியையும் ,எங்களிடமிருந்து நாங்கள் கோரவில்லை.

மக்களின் முன்னிலையில் எங்களுக்கு நீங்கள் நன்றி செலுத்த வேண்டும் என்பதையும் நாங்கள் வேண்டவில்லை என்று பொருள்.

«تفسير ابن كثير - ت السلامة» (8/ 289):
«قَالَ مُجَاهِدٌ وَسَعِيدُ بْنُ جُبَيْرٍ: أَمَا وَاللَّهِ مَا قَالُوهُ بِأَلْسِنَتِهِمْ، وَلَكِنْ عَلِمَ اللَّهُ بِهِ مِنْ قُلُوبِهِمْ، فَأَثْنَى عَلَيْهِمْ بِهِ لِيَرْغَبَ فِي ذَلِكَ رَاغِبٌ.»

முஜாஹித் ( ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அறிந்துகொள்ளவும் அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! அவர்கள் தங்களின் நாவால் அவ்வாறு சொல்லவில்லை.ஆனாலும் அவர்களின் உள்ளங்களில் இருந்து அல்லாஹ் அதனை அறிந்துகொண்டான். அதன் பேரில் அவர்களின் மீது புகழ் மாலை சூட்டினான். அதன்  நோக்கம் அவ்விஷயத்தில் ஆர்வம் கொள்பவர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதே.

பார்க்க :இப்னு கஸீர்( 8/289 )
أحدث أقدم