யார் நின்று கொண்டு தலை முடி சீவுகிறாரோ அவர் அதிக கடன் தொல்லையால் பீடிக்கப்படுவார் என நபிகளார் கூறியதாக ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறுகின்ற அல் ஹரவி எனப்படுகின்ற ஜுவைபாரி என்பவரும் அபுல் பஹ்தரி எனப்படுகின்ற வஹப் பின் வஹப் என்பவரும் மிகப்பெரும் பொய்யர்களாவர். மேலும் இவ்விருவரும் அதிகமாக நபிகளாரின் பெயரில் ஹதீஸ்களை புனைந்துரைக்கக் கூடியவர்கள் என்பதாக இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் தமது "அல் மவ்ழூஆத்" என்ற கிரந்தத்தின் 3/54 ல் எழுதியுள்ளார்கள்.
இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஒரு செய்தியாகும். இதனை நபிகளாரோடு இணைத்துச் சொல்வது மிகப்பெரும் குற்றச் செயலாகும்.
முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி