அல்லாஹ்வை அஞ்சகூடியவர்களுக்கு அல்லாஹ்வே அறிவை புகட்டுகிறான் என்று வாக்குறுதி அளிக்கிறான்.

தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; 

(இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, 

அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; 

எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. 

(அல்குர்ஆன் : 2:269)


முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

இது நபித்துவத்தைக் குறிக்காது; 

மாறாக, குர்ஆன், மார்க்க விளக்கம், கல்வியறிவு ஆகியவற்றைக் குறிக்கும். 

அபுல்ஆலியா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 இது இறையச்சதைக் குறிக்கும்.

 இறையச்சம்தான் ஒவ்வொரு ஞானத்திற்கும் தலையானது.

 நபி (ஸல்) அவர்கள், "ஞானத்தின் தலை இறையச்சமாகும்" என்று கூறினார்கள்.


'ஹிக்மத்' என்பது நபிவழியை (சுன்னத்) குறிக்கும் என அபூமாலிக் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

இது அறிவைக் குறிக்கும் என்று ஸைத் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: "ஹிக்மத் என்பது இறை மார்க்கம் தொடர்பான விளக்கத்தைக் குறிக்கும் என்றே எனது உள்ளத்தில் தோன்றுகிறது. மேலும், 

இது உள்ளங்களில் நுழைந்துவிட்ட அல்லாஹ்வின் அன்பும் அருளுமாகும்.

இந்த மார்க்க அறிவை,

தான் நாடி யோருக்கு மட்டுமே அல்லாஹ் வழங்குகிறான்.

 உதாரணமாக ஒருவர் உலக விஷயங்களில் சிறந்த அறிவாளியாக இருப்பார். 

மற்றொருவர் உலகவிஷயங்களில் குறைந்த அறிவுள்ளவராக இருந்தாலும் மார்க்கவிஷயத் தில் சிறந்த அறிவாளியாக, தெளிவான பார்வையுள்ளவராக இருப்பதைக் காணலாம்.

ஆக, ஒருவருக்கு அல்லாஹ் மார்க்க அறிவைக்கொடுக்கிறான்.

மற்றொருவருக்கு அதைக்கொடுப்பதில்லை. இதிலிருந்து, அல்லாஹ் (பொது அறிவைப் பலருக்கு வழங்கினாலும்) தான் நாடியவர்களுக்கு மட்டுமே மார்க்க அறிவை வழங்கு கிறான் என அறியலாம்.

நூல்: இப்னு கஸீர் 
Previous Post Next Post