அல்குர்ஆன் : 10:87 - விளக்கம்

மேலும், மூஸாவுக்கும், 

அவருடைய சகோதரருக்கும் 

“நீங்கள் இருவரும் உங்களுடைய சமூகத்தாருக்காக “மிஸ்ரில்” பல வீடுகளை அமைத்துக் கொடுங்கள்,  

*உங்களுடைய (அவ்) வீடுகளை கிப்லாவாக (-பள்ளிகளாக)வும் ஆக்குங்கள்,*

(அவற்றில் தவறாது) தொழுகையையும்,
 
நிறைவேற்றுங்கள், 

(அப்போது நீங்கள் வெற்றியடைந்து விடுவீர்கள், 

என்று) விசுவாசங் கொண்டோர்க்கு நீர் நன்மாராயமும் கூறுவீராக” 

என்று நாம் வஹீ அறிவித்தோம்.
 
(அல்குர்ஆன் : 10:87)


கொத்தடிமைகளாக இருந்த இஸ்ரவேலர்களுக்குத் தனிப்பட்ட குடியிருப்புகள்கூட இல்லாமலிருந்தது.

கொடுங் கோலன் ஃபிர்அவ்னுக்கு அஞ்சி, 

வெளிப்படையாகத் தொழுகையை நிறைவேற்ற இயலாதவர்களாகவும் அவர்கள் இருந்தனர்.

இதனால், அவர்கள் குடியிருக்க வீடுகளை அமைத்துக்கொடுக்குமாறும், 

அந்த வீடுகளிலேயே தொழுமிடங்களை அமைத்துத் தொழுகையை நிறைவேற்ற ஏற்பாடு செய்யுமாறும் நபி மார்களான மூசாவுக்கும் ஹாரூனுக்கும் அல்லாஹ் கட்டளையிட்டான்.

இதிலிருந்து, மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் அவர்களின் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்வதும் இறைத்தூதர்களின் பணிகளாக இருந்துள்ளன என அறிய முடிகிறது.) 

குடிமக்களுக்குக் குடியிருப்புகள் இங்கு உயர்ந்தோன் அல்லாஹ் இஸ்ரவேலர்களை ஃபிர்அவ்னிடமி ருந்தும் அவனுடைய சமூகத்தாரிடமிருந்தும் காப்பாற்றியதன் காரணத்தையும் அவர்களிடமிருந்து இஸ்ரவேலர் கள் விடுவிக்கப்பட்ட விதத்தையும் நினைவூட்டுகின்றான்.

அதாவது மூசா (அலை) அவர்களும் அவர்கள் தம் சகோதரர் ஹாரூன் (அலை) அவர்களும் தம் சமூக மக்களுக்காக எகிப்தில் வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு அவ்விருவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் கட்டளையிட்டான்.

அடுத்த தொடரில், 

"உங்கள் வீடு களையே தொழுமிடங்களாக (கிப்லா) ஆக்கிக்கொள்ளுங்கள்"

 என்று கட்டளையிட்டதாக அல்லாஹ் தெரிவிக்கின்றான்.

கிப்லா-இங்கு

பொருள் என்ன?

இத்தொடரின் பொருள் தொடர்பாக விரிவுரையாளர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்,

 "வீடுகளையே தொழுமிடங்களாக ஆக்கிக்கொள்ளுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டது" என்றே பொருள் கூறினார்கள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

இஸ்ரவேலர்கள் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமூகத்தாரைப் பற்றி) அஞ்சிக்கொண்டிருந்தார்கள். 

எனவே, வீடுகளிலேயே தொழுதுகொள்ளுமாறும் அதிகமாகத் தொழு(து அல்லாஹ்விடம் வேண்டு) மாறும் அவர்கள் கட்டளையிடப்பட்டார்கள்.


மற்றொரு வசனத்தில், 

"இறை நம்பிக்கைகொண்டோரே! 

நீங்கள் பொறுமை, 

தொழுகை ஆகியவற்றின் மூலம் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள்" (2:153) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

ஒரு ஹதீஸில் வந்துள்ளதாவது:

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஒரு பிரச்சினையால் துயரம் ஏற்பட்டால்,

 உடனே தொழு(கைக்கு விரைந்து செல்)வார்கள். 

இதனாலேயே இங்கு உயர்ந்தோன் அல்லாஹ், 

"உங்கள் வீடுகளையே தொழுமிடங்களாக ஆக்கிக்கொண்டு, 

தொழுகையைக் கடைப்பிடியுங்கள் என்றும்,

இறைநம்பிக்கையாளர்களுக்கு நன்மையும் விரைவான வெற்றியும் கிடைக்கும் என-நற்செய்தி கூறுவீராக என்றும் நாம் அறிவித்தோம்" எனத் தெரிவிக்கின்றான். 

மற்றோர் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியிருப்பதாவது:

இஸ்ரவேலர்கள், 

"இந்த ஆணவக் காரர்கள் முன்னிலையில் வெளிப்படையாக நாங்கள் தொழுகையை நிறைவேற்ற இயலாது" 

என்று மூசா (அலை) அவர்களிடம் கூறியபோது, 

அவர்களின் இல்லங்களிலேயே தொழுகையை நிறைவேற்றிக்கொள்ள அவர்களுக்கு அல்லாஹ் அனுமதி வழங்கி, 

அதற்கு வசதியாக அவர்களின் வீடுகளைக் கிப்லாவின் திசையில் அமைத்துக் கொண்டனர்.

நூல்: இப்னு கஸீர்
Previous Post Next Post