முஸ்லிம் சமூகத்தில் அண்மைக்காலமாக உருவாகிவரும் முஸீபத்துகளில் வீட்டில் நாய் வைத்திருப்பதும் ஒன்றாகும்.
மார்க்க தெளிவின்மையும்,பற்றின்மையும்,
மாற்றுமத கலாச்சார ஊடுருவலின் தாக்கமுமே இதற்குக் காரணம்..
நபியவர்கள் கூறுகின்றார்கள்..
யாரேனும் ஒருவர் வேட்டையாடல்,மந்தைக் காவல், தோட்டக்காவல் ஆகிய மூன்று நோக்கங்கள் அல்லாத வேறு காரணங்களுக்காக வீடுகளில் நாயை வைத்திருந்தால் அவனது நன்மைகளிலிருந்து தினமும் இரண்டு மலைகளின் அளவு நன்மைகள் குறைக்கப்பட்டு விடுகின்றன.
நூல் முஸ்லிம்.
முஸ்லிமில் இடம்பெறும் மற்றொரு ஹதீஸில்.. ஒருதடவை நபியவர்களிடம் வானவர் ஜிப்ரீல்(அலை ) மறுநாள் வருவதாக வாக்களித்தார்கள். ஆனால் மூன்று நாட்கள் கடந்தும் வரவில்லை. கலக்கமடைந்த நபியவர்கள் தன் கைத்தடி கீழே விழ அதை எடுப்பதற்காகக் கீழே குனிந்தபோது கீழே நாய்க்குட்டியொன்று படுத்திருக்கக் கண்டு அதை உடனே விரட்டியடித்ததும் உடனே அங்கே வானவர் ஜிப்ரீல் வருகை தந்தார்கள்.
நபியே " நாய் இருக்கும் வீட்டிலும் உருவப் படங்கள் தொங்கவிடப்பட்டிருக்கும் வீட்டிலும் மலக்குகளான நாங்கள் வரம்ட்டோம். உங்கள் வீட்டில் நாய் இருந்ததால் மூன்று நாட்களாக நாங்கள் உள்ளே வராமல் இருக்க வேண்டியதாயிற்று என்று கூறினார்கள்.
மேற்கத்தேய நாகரீக மோகத்திற்குள் வேகமாக அடித்துச் செல்லப்படும் எனது சோதரரே! விழித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ்வை அஞ்சி வாழுங்கள் . அவனது கோபத்திற்கு ஆளாகி விடாதீர்கள். அல்லாஹ்வின் பிடி மிகக் கடுமையானது. அவனது தண்டனை வந்துவிட்டால் எம்மால் தாங்க முடியாது. நாய்களை செல்லப்பிராணியாக ஜிம்மி, பப்பி என பெயர்சூட்டி அரவணைக்கும் கலாச்சாரம் திட்டமிட்டு நம் சமூகத்துக்குள் ஊடுருவுகின்றது.
நாய் ஒரு தொற்றுநோற் காவி என்று அறிவியலில் நிருபிக்கப்பட்டிருத்தும் அதை மேற்குலகு புறக்கணிப்பது அறியாமையா? அல்லது யூதர்களின் திட்டமிட்ட சதியா?
நாய்களை விற்பதும் வாங்குவதும் வீட்டில் வைத்திருப்பதும் ஹராமாகும்.இது அனைத்து இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும்.
அல்லாஹ்வை அஞ்சுங்கள் ..