ஐவர் முகத்தில் அறைந்ததைப் போல நடந்து கொள்

ஐவர் முகத்தில் அறைந்ததைப் போல நடந்து கொள் என்ற தலைப்பில் :
أحمد السلطان
அஹ்மத் அஸ்ஸுல்தான் என்பவர் தனது டுவிட்டர் இணைய தளத்தில் தந்த ஐந்து அம்சங்கள்:

1) தனக்கு  ஏற்பட்ட கஷ்டமான நிகழ்வு ஒன்றை சோதனையாகவும்  உனக்கு ஏற்பட்டதை இறை தண்டனையாகவும் எண்ணுபவன்,

2) பிழையான தனது இஜ்திஹாதை மாத்திரம் கூலிக்குரியதாகவும் பிழையான உனது இஜ்திஹாதை விமர்சனத்துக்குரியதாகவும் நினைப்பவன்,

3) உனக்கு தவறு செய்து விட்டு நீ அவனிடம் மன்னிப்புக் கோர வேண்டியவன் என எதிர்பார்ப்பவன்,

4) அவனைப் பயந்தே நீ மன்னித்தாய்  என தன்னைக் காட்டிக் கொள்பவன்,

5) உனக்கு குற்றம் செய்தவனை நீ கண்டு கொள்ளாமல் இருப்பதால்; நீ புத்தி பேதலித்தவன் என தப்பெண்ணம் கொண்டவன் ஆகிய ஐவர் என முடித்துள்ளார்.

-ரிஸ்வான் மதனி
Previous Post Next Post