சந்தோஷம் மற்றும் வெற்றியின் அறிகுறிகள்

அல்-இமாம் இப்னு அல்-கைய்யிம் رحمه الله அவர்கள் கூறியதாவது:

" சந்தோஷம் மற்றும் வெற்றியின் அறிகுறிகளாவது:

நிச்சயமாக எப்பொழுதெல்லாம் (அல்லாஹ்-வின்) அடிமையின் அறிவு அதிகரிக்கிறதோ அப்பொழுது அவனுடைய பணிவும் (மக்களின் மீதுள்ள) கருணையும் அதிகரிக்கும்.

எப்பொழுதெல்லாம்  அவனுடைய அமல்கள் (செயல்கள்) அதிகரிக்கிறதோ அப்பொழுது அவனுடைய அச்சமும் (பாவத்தில் விழுவதிலிருந்தும், அல்லாஹ்வுக்கு கீழ்படியாமல் இருப்பதிலிருந்தும்) முன்னெச்சிரிக்கை பாதுகாப்பு அதிகரிக்கும்.

எப்பொழுதெல்லாம் அவனுடைய வயது அதிகரிக்கிறதோ அப்பொழுது அவனுக்கு (உலகத்தின் மீதுள்ள) ஆசைகள் குறையும்.

எப்பொழுதெல்லாம் அவனுடைய பணம் (சொத்து) அதிகரிக்கிறதோ அப்பொழுது அவனுக்கு பெருந்தன்மையும் தாராள மனப்பான்மையும் அதிகரிக்கும்.

எப்பொழுதெல்லாம் அவனுடைய அந்தஸ்தும் கெளரவமும் அதிகரிக்கிறதோ அப்பொழுது அவன் மக்களிடம் நெருங்குவதையும், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதையும், அவர்களோடு பணிவோடு இருப்பதையும் காண முடியும். "

- அல்-ஃபவாயித் (227)


  علامَات السعادةِ والفلاحِ

 قال الإمام ابنُ القيِّم رحمه الله: 

مِنْ علامَاتِ السعادةِ والفلاحِ:

أنَّ العبد كُلَّما زِيدَ في عِلمهِ زِيدَ في تَواضُعِه ورحمَتِه. 
وكلَّما زِيدَ في عَمَلهِ زِيدَ في خَوفهِ وحذَرِهِ.
وكلَّما زِيدَ في عُمُره نَقَص مِنْ حِرْصه. 
وكلَّما زِيدَ في مالِه زِيدَ في سخائه وبذلِه.
وكلَّما زِيدَ في قَدْره وجَاهِه زِيدَ في قُرْبه مِنَ النَّاس وقَضاءِ حَوائجهم والتواضعِ لهُم".

الفوائد (ص:٢٢٧).
Previous Post Next Post