சிறிய அமல் என்று சாதாரணமாக எடை போடாதே...!

இப்னு அப்தில் பர் (رحمه الله) அவர்கள் (ஸஹீஹான அறிவிப்பாளர்கள் தொடர்) மூலம்  அறிவிப்பதாவது :


ஒரு தடவை இமாம் அபூ தாவூத் (رحمه الله) அவர்கள் கப்பலில் (ஆற்றங்கரையோரப் பகுதி) சென்று கொண்டிருந்த போது கரையோரத்தில் ஒருவர் தும்மிவிட்டு (الحمد لله) என்று சொல்வதை செவிமடுத்தார். 


உடனடியாக ஓர் படகை ஒரு திர்ஹத்திற்கு வாடகை பிடித்து தும்மியவரிடம் சென்று (يرحمك الله ) என்ற பதிலைக் கூறிவிட்டு கப்பலுக்கு சென்றார். 


இதைப்பற்றி கப்பலில் வந்த சிலர் இமாம் அவர்களிடம் காரணத்தை வினவியபோது, 

இமாம் அபூ தாவூத் (رحمه الله) அவர்கள் 

"அந்த நபர் துஆ அங்கீகரிக்கப்படும் நபர்களில் உள்ளவராக இருக்கலாமே" என பதிலளித்தார். 


பின்னர் ஒருவர், கப்பலில் சென்ற பிரயாணிகள் அனைவரும் உறங்கிய போது, கப்பலில் இருக்கும் அனைவரையும் விழித்து "அபூ தாவூத் சுவனத்தை ஒரு திர்ஹம் கொடுத்து வாங்கி விட்டார்." என்று அறிவிப்பு செய்தார்.


இப்னு ஹஜர் (رحمه الله) அவர்கள் இந்த செய்தியை பதிவு செய்து விட்டு; "சிறிய அமல் தானே என்று நினைத்து விட்டுவிடாமலும், சிறிய பாவம் தானே என்று செய்துவிடாமலும் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் பொருத்தமும் கோபமும் எதில் இருக்கின்றது என்று தெரியாதல்லவா...!!!" என்று கூறிவிட்டு அடிக்குறிப்பு எழுதியுள்ளார்.



நூல் : பfத்ஹுல் பாரி (10/610)


தமிழில்: அஹ்ஸன் இப்னு அஸ்மன் முஹாஜிரி


Previous Post Next Post