-மெளலவி ஏ.ஜி.எம் ஜலீல் மதனி.
ஆம்! எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது.. வாசித்து முடிக்கும் வரைக்கும்..
அல்லாமா ஷைக் இப்னுபாஸ்(றஹ்) அவர்கள் தனது மஜ்மூஉ பதாவா நூலில் குறிப்பிடுகின்றார்கள்..
ஒரு பெண்மணிக்கு வலது பகுதியில் மார்புப் புற்றுநோய் ஏற்பட்டது. மருத்துவர்கள் வலது மார்பகத்தை முற்றாக நீக்கிட முடிவுசெய்து அறுவைச் சிகிச்சையும் முடிவுற்றது.
சில நாட்களின் பின் இடது மார்புப் பகுதி வலித்தது. சோதித்துப் பார்த்த போது இடது மார்பகத்திலும் பெற்றுதான் பரவியுள்ளதால் அதையும் அகற்றிட முடிவு செய்தனர்.
அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் குர்ஆனை ஓதி சிகிச்சையளித்த போது அவளின் நாவின் மூலமாக ஜின் இவ்வாறு பேசியதாம்...
இப்பெண் செய்த சில ஷைத்தானிய காரியங்களில் தான் இவளைக் கவர்ந்ததாகவும் இவளது ஒவ்வொரு உறுப்பாக புற்றுநோயை ஏற்படுத்தி துன்புறுத்தி ரசிக்க திட்டமிட்டிருந்ததாகவும் கூறியது.. பின்னர் தொடர்ச்சியாக பலநாட்கள் அவள் முன்னிலையில் குர்ஆன் ஓதப்பட்டதன் பின் பரிசோதனை செய்து பார்த்தபோது புற்றுநோய்க்கலன்கள் எதுவுமின்றி முற்றாகக் குணமடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பாவ காரியங்களில் ஈடுபடுதலும் மோசமான சொல் செயல்களும் சினிமா, இசை, ஆபாச காட்சிகளை ரசித்தல் போன்றவை சைத்தான்-கெட்ட ஜின்களின் தொடர்பை ஏற்படுத்தும் காரியங்களாகும். சைத்தான்கள் மனிதனுக்கு கெடுதல் செய்து துன்புறுத்தும் இயல்புள்ளவையாதலால் இவ்வாறான சேஷ்டைகளில் அவை ஈடுபடுகின்றன.
ஆதாரம் : மஜ்மூஉல் பதாவா 8/364
ஷைக் ஸாலிஹ் அல் உதைமீன் கூறுகின்றார்கள்..
மனிதர்களுக்கு இறை பாதுகாப்பை ஈட்டித்தரும் அன்றாட இறை திக்ர் குர்ஆன் திலாவத் இதர வணக்கங்களை அவர்கள் புறக்கணித்து பாவங்களிலும் ஈடுபடும் போது கெட்டஜின்கள் அவர்களை ஆக்கிரமித்து தமது சேஷ்டைகளை ஆரம்பித்து விடுவர். அதனால் சாதாரண வலி தொடக்கம் பாரிய நோய்வரை வரை வியாபிக்க வாய்ப்புள்ளது.
லிகாஉல் பாப் மப்தூஹ் 197 எனும் சவூதி வானொலி பத்வா நிகழ்ச்சியிலிருந்து....
لقاء الباب المفتوح197)