அப்துல்லாஹ் இப்னுல் முபாரக் (ரஹ்) கூறுகிறார்கள்: "நான் ஷாம் தேசத்தில் ஒருவரிடம் எழுதுகோலை வாங்கியிருந்தேன். (பிறகு மறந்துவிட்டேன்.) ஷாமை விட்டுக் கிளம்பி மர்வு நகரத்திற்கு வந்த நிலையில், அந்த எழுதுகோல் என்னிடம் இருப்பதைக் கண்டேன். இதனால் நான் மறுபடியும் ஷாமுக்குத் திரும்பிச் சென்று அந்த உரிமையாளரிடம் அதை ஒப்படைத்தேன்."
(இமாம் தஹபீயின் சியர் அஃலாம் அந்நுபலா 8/395)
ஷாம் எனும் சிரியாவுக்கும் துர்க்மெனிஸ்தானில் மர்வு நகரத்திற்கும் இடையே சுமார் 6000 கிலோமீட்டர் பயணத் தூரம் உள்ளது.
தமிழில்: உஸ்தாத் MF அலீ