வீடு கட்டுதல்

1. கலீஃபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் நபித்தோழர் ஸல்மானுல் ஃபார்ஸீ (ரலி) அவர்கள் ஷாமின் கவர்னராக இருந்த தருணம் அது.

தங்களுக்கென அது வரை எந்த ஒரு வீட்டையும் அவர்கள் கட்ட வில்லை. 

பெரும்பாலும் மரங்களின் நிழல்களிலும், 

மஸ்ஜித்களிலும் தங்கிக் கொள்வார்கள்.

மதாயின் பகுதியில் வசித்து வந்த ஸல்மான் (ரலி) அவர்களை ஒரு நாள் ஹுதைஃபா (ரலி) அவர்கள் சந்தித்து, 

தோழரே! நீங்கள் ஏன் உங்களுக்காக ஒரு வீட்டை கட்டிக் கொள்ளக் கூடாது? என்று கேட்டார்.

அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள் “எதற்காக வீட்டை கட்ட வேண்டும்? என்று கேட்டார்கள்.

அதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள் 

“ஓய்வெடுக்கவும் இன்ன பிற சுய தேவைகளுக்கும் உங்களுக்கு பயன் தருமல்லவா? என்று கூறினார்கள்.

அது கேட்ட ஸல்மான் அதைத் தான் மதாயின் நகர மரங்களின் நிழல்களில் பெற்றுக் கொள்கின்றேனே என்று கூறி மறுத்து விட்டார்கள்.

வற்புறுத்திக் கூறவே, 

வீடு கட்ட சம்மதித்து கொத்தனாரை வரவழைத்தார்கள்.

கொத்தனாரிடம் ஸல்மான் (ரலி) அவர்கள், எப்படி வீட்டைக் கட்டப் போகின்றாய்? என்று கேட்டார்கள்.

ஸல்மான் (ரலி) அவர்களின் உலகப் பற்றற்ற வாழ்வையும்,

 எளிமையையும் நன்கு விளங்கி வைத்திருந்த கொத்தனார் இப்படிக் கூறினார்.

“கவர்னர் அவர்களே! 

கவலை கொள்ளாதீர்கள்! 

நான் தங்களுக்காக கட்டித் தரப்போகும் வீடு வெயில் காலங்களில் நிழல் தரும், 

குளிர் காலங்களில் தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். 

நீங்கள் எழுந்து நின்றால் அதன் முகடு உங்கள் தலையின் உச்சியைத் தொடும், 

நீங்கள் படுத்திருந்தால் அதன் சுவர்கள் உங்களின் கால்களைத் தட்டும்!” என்றார் கொத்தனார்.

அவர் சொன்ன பதிலைக் கேட்டு, 

அகமகிழ்ந்தவராக “ஆம்!

 இப்படித்தான் என் இல்லம் அமைந்திருக்க வேண்டுமென்று நானும் விரும்பினேன்” என்றார்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரலி) அவர்கள்.

நூல்: ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் (ஸல்), இஸ்தீஆப், பாகம்:1, பக்கம்:336


2. மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் மிகப் பிரம்மாண்டமான முறையில், 

அதிக செலவில் ஓர் அரண்மனையைக் கட்டினார்கள்.

அந்த அரண்மனையைக் கண்டு அதிர்ந்து போன, 

அந்த காலத்தில் வாழ்ந்த மாமேதை புஹ்லூல் (ரஹ்) அவர்கள் அரண்மனையின் சுவரில்…

“ஹாரூனே!

 மண்ணை உயர்த்தி சத்திய சன்மார்க்கத்தை நீர் தாழ்த்தி விட்டீர்! 

வைரக் கல்லை உயர்த்தி சத்திய தீனின் நெறியான குர்ஆன் – ஹதீஸைத் தாழ்த்தி விட்டீர்!

”ஹாரூனே! 

அறிந்து கொள்ளுங்கள்! 

இந்த அரண்மனை சொந்த வருமானத்தில் கட்டப்பட்டிருந்தால் அது இஸ்ராஃப் – வீண் விரயமாகும். 

அல்லாஹ் வீண் விரயம் செய்பவர்களை ஒரு போதும் நேசிப்பதில்லை.”

அவ்வாறின்றி, 

பொதுச் சொத்திலிருந்து கட்டப்பட்டிருந்தால் அது அநியாயம் ஆகும்.

 அல்லாஹ் அநியாயம் செய்பவர்களையும் ஒரு போதும் நேசிப்பதில்லை.” என்று எழுதினார்கள்.

நூல்: தஃப்ஸீர் ரூஹுல் பயான், அந் நஹ்ல் 80 –வது வசனத்தின் விளக்கத்தில்


3. இமாம் அலீ (ரலி) அவர்கள் ஒரு நாள் மதீனாவின் வீதியில் வந்து கொண்டிருக்கும் போது, 

ஒருவர் தமது வீட்டை கட்டிக் கொண்டிருந்தார். 

அவரை அழைத்து அலீ (ரலி) அவர்கள் சொன்னார்களாம்.

 “ஓ! இன்னவரே! 

நீர் உயிரற்றவராய் இருந்தீர்! 

பின்பு நீர் உயிர் கொடுக்கப்பட்டீர்!

சில காலத்திற்குப் பின்னர் மீண்டும் உயிரற்றுப் போவீர்!

ஆனாலும், நீர்! 

அழியும் உலகில் வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கின்றீர்! 

அழியா உலகான மறுமையில் நீர் இன்பமாக இருப்பதற்காகவும் ஓர் வீட்டை உருவாக்கிக் கொள்வீராக!

ولقد مر الإمام علي بن أبى طالب -رضي الله عنه- على رجل يبني بيتًا، فقال له:

قَدْ كُنْتَ مَيْتا فَصِرْتَ حيّا وَعَنْ قَلِيْلٍ تَصِيْرُ مَيْتا
بنيت بدار الفناء بيتاً فَابْنِ بِدارِ البَقَاءِ بَيْتا


Previous Post Next Post