இஸ்லாத்தில் பெயரால் பராஅத் இரவு எனும் பித்அத் தோன்றிய வரலாறு

 இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் ஏராளம் உள்ளது! அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து உள்ளது! அதில் ஒன்று தான் இந்த பராஅத் இரவு ஆகும்!

சட்டம் & அமல்கள் பொறுத்த வரை அதை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு! இதை தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ உரிமை கிடையாது! ஆனால் அல்லாஹ் பாதுகாக்கணும் துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக முஸ்லீம்கள் இடையே காண முடிகிறது!

முதலில் அல் குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ பராஆத் என்றே பெயர் எதிலும் கிடையாது!

ஆனால் பராஅ இரவு கொண்டாட  கூடியவர்கள் இதற்கு வைத்த பெயர்கள்  லைலத்துல் முபாரக்கா (பரக்கத் செய்யப்பட்ட இரவு), லைலத்துர் ரஹ்மா (ரஹ்மத் செய்யப்பட்ட இரவு), லைலத்துல் பராஅத் (நரக விடுதலை பெறும் இரவு) இப்படி பல பெயர்கள் இவர்களே வைத்து கொண்டார்கள் ஆனால் இதற்கு எந்த வித அடிப்படை ஸஹீஹான ஆதாரமும் கிடையாது!

இரண்டாவது இந்த பராஅத் இரவு சிறப்புகள் அந்த இரவை சிறப்பித்து கொண்டாடும் வழிமுறையை ‘ பராமிகாக்கள் ’ (நெருப்பு மூட்டி) களிடம் இஸ்லாத்தில் கொண்டு வந்தார்கள்! இவர்கள் ஆரம்பம் செய்யும் வரை வரலாற்றில் இவ்வாறு ஒன்று கிடையாது!

பராஅத் இரவு :

இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களில் ஒரு கூட்டம் விஷேசமாக கொண்டாடுவார்கள்! அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்வார்கள்!

இன்னும் அன்றைய இரவில் பள்ளி வாசல்களில் தொழுகை நேரம் மாற்றப்படும் - விசேடமான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்படும்! இன்னும் அன்றைய நாளில் வீடுகளில் அழகாரம் செய்யப்படும் விஷேச உணவுகள் ஏற்படாது செய்யப்படும்! ஆனால் இவ்வாறு ஒரு வழிமுறை நபி (ஸல்) அவர்கள் காலத்திலோ அல்லது ஸஹாபாக்கள் காலத்திலோ கிடையாது! 

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள்! இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை!

(நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது : 7 / 246)

ஷாபான் 15 தும் பராஅத் இரவு தோன்றிய வரலாறும் :

பராஆத் இரவு என்ற பெயர் அல் குர்ஆனிலோ அல்லது ஸஹீஹான ஹதீஸ்களிலோ அல்லது இஸ்லாமிய வரலாற்றிலோ கிடையாது!

ஷாபான் 15 த்தாம் நாளை பராஆத் இரவு என்று பெயர் வைத்து ஒரு கொண்டாட்ட தினமாக குறிப்பாக அறிமுகப்படுத்தியவர்கள் ‘ பராமிகாக்கள் ’ (நெருப்பு மூட்டி) ஆவார்கள்!

அல்ஹாபிழ் அபுல் கத்தாப் இப்னு தஹிய்யா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :

இஸ்லாத்தை சார்ந்த சில பித்அத்வாதிகள், மஜுஸி நெருப்பு வணங்கிகளின் வழிமுறைகளை பின்பற்றினார்கள்! அது மட்டும் அல்லாமல் அவர்களின் கொள்கைகளை தூய இஸ்லாமிய மார்க்கத்தில் கொண்டு வந்து அல்லாஹ்வின் மார்க்கத்தை  வீணாகவும் விளையாட்டாகவும் எடுத்து கொண்டார்கள்!

இந்த ஷாபான் மாதத்தில் 15 ஆம் நாளை சிறப்பு நாளாக பராமிக்காக்களின் காலத்தில் முதன் முதலில் தான் ஏற்படுத்தினார்கள்! அவர்கள் தான் நெருப்பு வணக்கத்தின் அடிப்படைகளை இஸ்லாத்தில் புகுத்தினார்கள்!

ஷியா கொள்கை கொண்ட முஹம்மத் பின் அலீ பின் ஹலப் ஆபூ காலிப் என்பவன் முதன் முதலில் ஷாபான் நடுப்பகுதியை வித்தியாசமான முறையில் இனிப்பு பண்டங்கள் - உணவுகள் மூலமாக பண்டிகைத் போன்று உருவாக்கினான்!

(நூல் : அல்கயாத் அல்முஹ்தனவா வ மவ்ப்புல் இஸ்லாம் மீஹைா : 210)

ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கும் ஏற்றால் போல் ஷாபான் நடுப்பகுதியை வித்தியாசமாக கொண்டாட ஆரம்பம்பித்தார்கள்!

 ஆரம்ப காலத்தில் ஷாபான் 15 ம் நாளை மெழுகுவர்த்திகள், தீப்பந்தங்கள், பள்ளிவாயல்களில் விளக்குகள் பற்றவைத்து கொண்டாடினார்கள்!

இந்த இரவில் மட்டும் அமல் செய்யவும் அல்லாஹ்வை ஞாபக மூட்டுவதற்காகவும் என்று மக்கள் ஒன்று கூட ஆரம்பம் செய்தார்கள்! அதனுடன் சேர்த்து கப்ருகளையும் ஜியாரத் செய்யவும் ஆரம்பம் செய்தார்கள்!

வீடுகளில் இந்த தினத்தில்
இனிப்புப்பண்டங்களும், சிறப்பு உணவு சமைத்தல், அந்த நாளுக்குகேன்று வீட்டை அழங்காரம் செய்ய ஆரம்பம் செய்தார்கள்!

(நூல் : இக்திழாஉ அஸ்சிராத்தல் முஸ்தகீம் : 12/128)

ஆனால் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலம் முதல் மரணம் அடையும் காலம் வரை இப்படி எந்த ஒன்றையும் ஷஃபான் 15 இரவில் செய்தது கிடையாது!

நபி (ஸல்) அவர்கள் மரணம் அடைந்த பின்பு ஸஹாபாக்கள் காலத்திலும் சரி அவர்களுக்கு பின்னால் வந்த தாபியீன்கள் தபா தாபியீன்கள் காலத்திலும் இப்படி எந்த ஒன்றையும் ஷஃபான் 15 இரவில் செய்தது கிடையாது!

ஷஃபான் இரவு சிறந்த இரவாக இருந்தால் அந்த இரவில் என்ன அமல் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் செய்து இருப்பார்கள் அல்லது பிறறை செய்ய சொல்லி இருப்பார்கள்!

ஆனால் இவர்கள் ஷஃபான் 15 ம் இரவில் செய்வது விஷேச தொழுகை உணவுகள் நோன்பு என எதையும் நபி (ஸல்) அவர்கள் சொல்லவும் இல்லை பிறரை செய்ய சொல்லவும் இல்லை!

மிகவும் பின்னால் வந்த வழிகேடர்கள் தான் மிகவும் பலகீனமான ஹதீஸ்களையும் பொய்யான செய்திகளையும் வைத்து ஷஃபான் 15 ம் இரவை சிறப்பு இரவாக கொண்டாட ஆரம்பம் செய்தார்கள்!

பராஅத் இரவும் மத்ஹபுகளும் :

இஸ்லாம் வரலாற்றில் தோன்றிய சிறந்த இமாம்களில் இமாம் ஷாபிஈ (ரஹ்) இமாம் ஹனபி (ரஹ்) இவர்களும் ஆவார்கள்! இவர்கள் மத்ஹப்பை உருவாக்க வில்லை என்றாலும் பின்னால் வந்த மக்கள் இவர்கள் கூறிய சட்டங்களையும் கூடுதலாக இவர்களாக சில சட்டங்களையும் உருவாக்கி கொண்டார்கள் இதில் அல்குர்ஆன் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு பல மாற்றமான கருத்துகள் இருந்தாலும் இதையும் பெரும்பாலான மக்கள் பின் பற்றுகிறார்கள்! நவுதுபில்லாஹ்!

ஒரு வாதத்திற்கு மத்ஹப்யை கூட ஆதாரமாக வைத்து பராஅத் இரவை பார்த்தோம் என்றால் மத்ஹபில் கூட பராஅத் இரவு அல்லது ஷாஅபன் 15 நாளை அல்லது இரவை சிறப்பித்து அமல் செய்வதை கண்டித்தே உள்ளது!

ஷாபிஈ மத்ஹபில் :

1) ஷஅபான் மாதத்தில் நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும்! இதை செய்யக் கூடியவர் பாவியாவார்! இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்!

(நூல் : ஷாபிஈ மத்ஹப் : இஆனதுல் தாலிபீன் 1 /  27)

2) மக்களிடம் அறிமுகமான ஷஅபான் பிறை 15ல் (இவர்களால் உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும் அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளாகும்.

(நூல் : ஷாஃபி மத்ஹப் : பத்ஹுல் முயீனில் 1 / 27)

ஹனஃபி மத்ஹப் :

பராஅத் இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது (பித்அத்) அனாச்சாரமாகும்!

(நூல் : ஹனஃபி மத்ஹப் : பஹ்ருர் ராஹிக் : 5 / 232)

மத்ஹப்களை ஆதரிக்கும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்றுவதில்லை? இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மாறாக கண்மூடி தனமாக மனஇச்சைகளை தான் பற்றுகிறார்கள்!

பராஆத் இரவு கொண்டாட கூடியவர்கள் காட்டும் ஆதாரங்கள் :

ஷஃபான் 15 ம் நாளை சிறப்பித்து அல்லது அந்த இரவை சிறப்பித்து சில ஹதீஸ்கள் உள்ளன இதை அடிப்படையாக வைத்து பலர் பராஆத் இரவு கொண்டாடுகிறார்கள் இதை பற்றி பார்ப்போம்!

ஷஃபான் 15 ம் நாளை சிறப்பித்து அல்லது அந்த இரவை சிறப்பித்து இப்னு மாஜா திர்மிதி பைஹகி ஆகிய ஹதீஸ் நூல்களில் சில செய்திகள் இடம் பெற்று உள்ளன ஆனால் இதில் நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது அந்த ஹதீஸ்களை பற்றி கூற கூடியவர்கள் யாரும் அதன் தரம் பற்றி கூறுவது கிடையாது!

ஷஃபான் 15 ம் இரவை அல்லது நாளை சிறப்பித்து வர கூடிய அனைத்து ஹதீஸ்களும் அந்த ஹதீஸ்களை பதிவு செய்த ஹதீஸ்கலை இமாம்கள் இப்னு மாஜா மற்றும் திர்மிதி போன்றவர்கள் அந்த ஹதீஸின் கீழயே இது பலகீனமான ஹதீஸ் இது இட்டுக்கட்டபட்ட செய்தி இதனை அறிவிப்பாளர் யார் என்றே தெரியாதவர் என்று அவர்களே ஹதீஸ் கீழ் குறிப்பிட்டு உள்ளார்கள்!

ஆனால் சில வழிகேடர்கள் மற்றும் பித்அத் வாதிகள் இதனை மறைத்து ஹதீஸ்களை மட்டும் மக்களுக்கு எடுத்து கூறி வருகிறார்கள்! 

-அல்லாஹ் போதுமானவன்
Previous Post Next Post