بسم اللــــه الرحمـــــــــن الرحيم
- அஷ்ஷெய்க். முஹம்மது ரம்ஸான் அல்-ஹாஜிரீ (حفظه الله)
விளக்கம் :
நபி ﷺ அவர்கள் கூறியதாவது :
وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ " الْجَمَاعَةُ"
"என்னுடைய ஆன்மா யாருடைய கையில் இருக்கிறதோ, அவன் மீது சத்தியம் செய்கிறேன், என் சமுதாயம் 73 பிரிவுகளாகப் பிரியும், அதில் ஒன்று சொர்க்கத்திலும் 72 நரகத்திலும் இருக்கும். "அல்லாஹ்வின் தூதரே, அந்த ஒரு கூட்டத்தினர் யார்?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள் கூறினார்: "அல்-ஜமாஆ".
[நூல் : இப்னு மாஜா 3992, அபூதாவூத் 4597; தரம் : ஸஹீஹ்]
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு ஹதீஸில் 'அந்த ஒரு கூட்டம் யாரென்றால், "நானும், என் தோழர்கள் எந்த வழிமுறையில் இருந்தோமோ அதனை பின்பற்றுவோர்தாம்" என்று நபியவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. (பார்க்க : திர்மிதீ 2641; இமாம் அல்பானி, இமாம் இராக்கி رحمهما الله போன்றோர் இச்செய்தியை 'ஸஹீஹ்' என்கிறார்கள்).
எனவே, ஹதீஸில் வரும் 'ஜமாஆ' என்பது நபி ﷺ அவர்களும், அவர்களது தோழர்களும் எந்த வழிமுறையில் இருந்தார்களோ அதுவே ஆகும். நிச்சயமாக அதுதான் நேரான வழியாகும்.
மேலும் அல்லாஹு தஆலா கூறுவதாவது :
وَمَن يُشَاقِقِ ٱلرَّسُولَ مِن بَعۡدِ مَا تَبَيَّنَ لَهُ ٱلۡهُدَىٰ وَيَتَّبِعۡ غَيۡرَ سَبِيلِ ٱلۡمُؤۡمِنِينَ نُوَلِّهِۦ مَا تَوَلَّىٰ وَنُصۡلِهِۦ جَهَنَّمَ وَسَآءَتۡ مَصِيرًا
எவனொருவன் நேர்வழி இன்னது என்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும்.
(அல்குர்ஆன் 4:115)
وَأَنَّ هَٰذَا صِرَٰطِي مُسۡتَقِيمًا فَٱتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُواْ ٱلسُّبُلَ فَتَفَرَّقَ بِكُمۡ عَن سَبِيلِهِۦ ذَٰلِكُمۡ وَصَّىٰكُم بِهِۦ لَعَلَّكُمۡ تَتَّقُونَ
நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான்.
(அல்குர்ஆன் 6:153)
மேற்சொல்லப்பட்ட 'ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின்' வழிமுறையை தவிர மீதமுள்ள அனைத்து வழிமுறைகளும் வழிகேடாகும்; யார் இதர வழிமுறையின் பக்கம் மக்களை அழைப்பாரோ அவர் பிரிவினையையே ஏற்படுத்துகிறார்.
- Rayyan