இமாமுஸ் ஸுன்னா அஹ்மத் பின் ஹன்பல் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
அறிவைப்பற்றி ஹதீஸ் துறை அறிஞர்களை விட வேறு எவரும் மிகத்துல்லியமாக பேசியது கிடையாது.
இமாம் ஹதீப் அல்பக்தாதி ரஹிமஹுல்லாஹ்.
நூல் - ஷரபு அஸ்ஹாபில் ஹதீஸ் - 90
இமாம் அப்துர்ரஹ்மான் பின் யஸீத் அத்தாரானீ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
ஹதீஸ் கலையை தேடிப்படிப்பவர்களிடமிருந்து மாத்திரமே அறிவைப் படித்துக் கொள்ளுங்கள்.
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ்.
நூல் - ஸியரு அஃலாமிந் நுபலா - 7/177
அபூ ஸஅத் அஸ்ஸம்மான் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
ஹதீஸ் துறையை படிக்காதவர்களால் இஸ்லாத்தின் முழுமையான சுவையை சுவைத்திடவே முடியாது.
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ்.
நூல் - ஸியரு அஃலாமிந் நுபலா - 18/257
இமாம் ஷாபிஈ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
ஹதீஸ் துறை மேதைகளில் ஒருவரைக் காணும் போது நபித் தோழர்களில் ஒருவரைக் காண்பது போன்ற உணர்வு எனக்கு ஏற்படுகிறது, அல்லாஹ் அவர்களுக்கு உயர்ந்த கூலிகளை வழங்க வேண்டும், அவர்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படைகளை எமக்கு பாதுகாத்துத் தந்தவர்கள் எங்களை விடவும் அவர்கள் சிறந்தவர்களே.
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ்.
நூல் - ஸியரு அஃலாமிந் நுபலா - 10/59,60
இமாம் ஸஃபரானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுவதாக இப்ராஹீம் இப்னு யஹ்யா ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகிறார்கள்;
நபிகளாரின் வாழ்க்கையைத் தேடி அதனை எழுதிப் பாதுகாக்கும் ஹதீஸ் துறை அறிஞர்களை விட சிறந்தவர்கள் வேறு எவரும் இவ்வுலகில் கிடையாது.
இமாம் தஹபி ரஹிமஹுல்லாஹ்.
நூல் - ஸியரு அஃலாமிந் நுபலா - 12/263
-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.