கஷ்டத்தை முறையிடுவதை விட்டு விட்டு, உன் மீது அல்லாஹ் அருளியிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளை நினைத்துப் பார்

யூனுஸ் இப்னு உபைத் (றஹிமஹுல்லாஹ்) [மரணம்: ஹி139] அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தனது நெருக்கடியான நிலையை முறையிட்டார். அப்போது அவரிடம் யூனுஸ் (றஹிமஹுல்லாஹ்), 'உனது பார்வையை இழப்பதற்கு பகரமாக ஒரு இலட்சம் வெள்ளி நாணயங்கள் கிடைப்பது உனக்கு மகிழ்ச்சி அளிக்குமா? என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் இல்லை என்று கூறினார். அப்படியானால் உனது இரு கைகளுக்குப் பகரமாக ஒரு இலட்சம்? என்று கேட்டார்கள். அதற்கும் அம்மனிதர் இல்லை என்றார். அப்படியானால் உனது இரு கால்களுக்கும் பகரமாக? என்றார்கள். அதற்கும் அம்மனிதர் இல்லை என்றார். இவ்வாறு அல்லாஹ் அவருக்குச் செய்திருக்கும் பல அருட்கொடைகளை நினைவுபடுத்திவிட்டு, உன்னிடம் பல இலட்சங்கள் இருப்பதை நான் பார்க்கிறேன், நீரோ உனது தேவையை முறையிட்டுக் கொண்டிருக்கிறீர்! என்று கூறினார்கள்.


நூல்:

[الشكر لابن أبي الدنيا (١٠١)]


‏جاء رجل إلى يونس بن عبيد يشكو ضيق حاله، فقال له يونس: أيسُرُّك ببصرك هذا الذي تُبصِر به مائة ألف درهم؟ قال الرجل: لا، قال: فبيديك مائة ألف؟ قال الرجل: لا، قال: فبرجليك؟ قال الرجل: لا، -فذكَّره بنعم ﷲ عليه- وقال: أرى عندك مئين ألوف وأنت تشكو الحاجة!


-Sunnah Academy


Previous Post Next Post