உலக பற்றின்மை

இப்னு உயய்னா ரஹிமஹுல்லாஹ்
(ம -ஹிஜ்ரி 198 - பிஃக்ஹு துறை வல்லுநர்) கூறுகிறார்கள்...

உமைய்யா கலீபாஃவாகிய ஹிஷாம் பின் அப்துல் மலிக் (ம - ஹிஜ்ரி 125 ) கஃபா ஆலயத்தில் பிரவேசிக்கிறார், அங்கு ஸாலிம் பின் அப்துல்லாஹ் (ம - ஹிஜ்ரி 106 உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பேரப்பிள்ளை தலைசிறந்த ஹதீஸ் கலை வல்லுநர்) இருந்தார்கள்.

கலீபாஃ அவரிடம் "என்னிடத்தில் உமது தேவையை கேட்பீராக ",என்று கேட்கிறார்கள்.

அல்லாஹ்வின் இல்லத்தில் இருந்து கொண்டு வேறொருவரிடம் கேட்பதை நான் வெட்கப்படுகிறேன் என்று பதில் கூறினார்கள்.

அங்கிருந்து வெளியான பின்பு கலீபாஃ இப்பொழுதாவது என்னிடம் உங்கள் தேவையை கேளுங்கள் என்று கேட்க , அதற்கு இமாம் அவர்கள் உலக தேவையா மறுமை பற்றிய தேவையா என்று கேட்கிறார்கள் !!!

உலக விடயத்தில் என்று கலீபாஃ பதில் கூற...

இந்த  உலகத்தை தன் வசம் வைத்திருப்பவனிடம் நான் உலகத்தைப் பற்றி கேட்கவில்லை இவ்வாறு இருக்க இவ்வுலகத்தை சொந்தம் கொள்ளாத ஒருவரிடம் எவ்வாறு அதை கேட்க முடியும் !!? என்று இமாம் அவர்கள் பதில் கூறுகிறார்கள்.

நூல் - ஸியர் அஃலாமின் நுபலா-4/466 

-தமிழில்
உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி 

படிப்பினை-
நமது முன்னோர்களிடம்  செல்வங்களும் சுகபோகங்களும் தானாக அவர்களிடம் வந்த பொழுதும் அதில் பற்றற்ற தன்மையுடன் இருந்தார்கள்,
நாம் இன்று அந்த துனியாவின் பின் இரவும் பகலுமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்.

அதன் காரணமாகத்தான் நம்மிடத்தில் இறையச்சமும் கல்வியின் மீது ஆர்வமும் இல்லாமல் இருக்கிறது, அவர்களிடத்தில் இறையச்சமும் கல்வியின் மீது பேரார்வம் இருந்தது சமூகத்தில் மறுமலர்ச்சியை கொண்டு வந்தார்கள்.

قال ابن عيينة ـ رحمه الله ـ:

دخل هشامٌ الكعبة، فإذا بسالم بن عبد الله فقال: «سَلْنِي حاجةً»
قال: «إنِّي أستحي مِن الله أن أسأل في بيته غيرَه»، فلمَّا خرج قال: «الآن فسَلْني حاجةً» فقال له سالمٌ: «مِن حوائج الدنيا أم مِن حوائج الآخرة؟» فقال: «مِن حوائج الدنيا»، 
قال: «واللهِ ما سألتُ الدنيا مَن يملكها، فكيف أسأل مَن لا يملكها».

[«سير أعلام النبلاء» للذهبي (٤/ ٤٦٦)]
Previous Post Next Post