அறிவுகளில் ஆகப் பிரதானமானது, அல்லாஹ்வைச் சரியாக அறிந்து கொள்ளும் அறிவாகும்

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

“அல்லாஹ்வை(ச் சரியாக) அறிந்து கொள்ளும் அறிவுதான்,  அவன் படைப்புகளை அறிந்து கொள்வதைவிட மிகச் சிறந்த அறிவாகும். இதனால்தான் 'ஆயதுல் குர்சீ', அல்குர்ஆனில் அதி சிறப்புக்குரிய ஆயத்தாக (வசனமாக) இருக்கின்றது! ஏனெனில், அல்லாஹ்வின் தன்மையை அது உள்ளடக்கியதாகக் காணப்படுகின்றது.

மேலும், 'குல் ஹுவல்லாஹு அஹத்' என்ற (அல்இஹ்லாஸ்) அத்தியாயம் அல்குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமானதாகும். காரணம், அல்குர்ஆன் மூன்று பகுதிகளை உள்ளடக்கியிருக்கின்றது. ஒரு பகுதி 'தவ்ஹீத்' எனும் ஏகத்துவத்தையும், மற்றொரு பகுதி வரலாறுகளையும், இன்னொரு பகுதி ஏவல்-விலக்கலையும் கொண்டிருக்கிறது. ஏகத்துவத்தை உள்ளடக்கியிருக்கக்கூடிய அந்த மூன்றில் ஒரு பகுதிதான் மற்ற இரு பகுதிகளைவிட அதிக சிறப்புக்குரியதாகும்”

{ நூல்: 'மஜ்மூஉல் fபதாவா', 02/206 }

               قال شيخ الإسلام إبن تيمية رحمه الله تعالى:-

            [ العلم بالله أفضل من العلم بخلقه؛ ولهذا كانت آية الكرسي أفضل آية في القرآن؛ لأنها صفة الله تعالى.

           وكانت « قل هوالله أحد » تعدل ثلث القرآن؛ لأن القرآن ثلاثة أثلاث: ثلث توحيد، وثلث قصص، وثلث أمر ونهي. وثلث التوحيد أفضل من غيره]
{ مجموع الفتاوى، ٢/٢٠٦ }
Previous Post Next Post