உஸ்மான் இப்னு அஃப்ஃபான் (ரழியல்லாஹு அன்ஹு)*

*பிறப்பு :* ஹிஜ்ரத்திற்கு முன் 47 மக்காவில்

*இறப்பு :* ஹிஜ்ரி 35 மதீனாவில் ஸஹீதாக மரணம்

*பரம்பரை :*
 குரைஷிகளில் உள்ள பனூ உமைய்யா கோத்திரம்

*சில சிறப்புகள்:*

- இஸ்லாத்தின் மூன்றாவது நேர்வழி பெற்ற கலீஃபா மற்றும் நீண்ட காலம் (கிட்டதட்ட 12ஆண்டுகள்) ஆட்சி செய்தவர்.

- சொர்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபித்தோழர்களில் ஒருவர்.

- இவரது ஆட்சியில் இஸ்லாம் வட ஆப்பிரிக்கா, சைப்பிரஸ், துருக்கி (ஆர்மீனியா, அஜர்பைஜான்), பாரசீகத்தின் மேற்கு பகுதிகள் (ஈரான்) மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை வெற்றிகரமாகக் கைப்பற்றின.

- முதல் இஸ்லாமிய கடற்படையை அமைத்தவர்.

- அபிஸீனியா,மதீனா இரு இடங்களுக்கும் ஹஜ்ரத் செய்தவர்.

- அல்லாஹுவின் பாதையில் அள்ளி கொடுக்கும் தாராளமாக ஈகை குணம் கொண்டவர். தமாமாவின் கிணற்றை வாங்கி முஸ்லிம்களின் பயன்பாட்டிற்கு கொடுத்தார்.

- ஆரம்ப கால முஹாஜிரீன்களில் ஒருவர்.

- இவரது காலத்தில் தான் அல்குர்ஆன் முழுமையாக தொகுக்கப்பட்டது.

- மலக்குமார்கள் வெட்கப்படும் அளவிற்கு பேணுதல் உள்ளவர்.

- நபி அவர்களின் இரு மகள்களான ருகைய்யா மற்றும் உம்மு குல்தூம் ஆகியோரை மணந்தமையால், "துன்-நூரைன்" (இரு ஒளிகளின் உரிமையாளர்) என்ற சிறப்புப் பட்டத்தைப் பெற்றார்.
أحدث أقدم