*பிறப்பு :* ஹிஜ்ரத்திற்கு முன் 28 மக்காவில்
*இறப்பு :* ஹிஜ்ரி 36 மதீனாவில் ஜமல் யுத்தத்தில் ஸஹீதாக மரணம்
*பரம்பரை :* குரைஷிகளில் உள்ள பனூ அஸத் குலம்
*சில சிறப்புகள் :*
- மூன்றாவது கலீபாவாக தேர்வு செய்யப்பட இருந்த குழுவில் ஆறு பேரில் இவரும் ஒருவர்.
- சொர்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 பேர்களில் ஒருவர்.
- மிகச்சிறந்த குதிரை வீரராக அறியப்பட்டவர். இஸ்லாமிய வரலாற்றின் அனைத்து முக்கியப் போர்களிலும் (பத்ரு, உஹத், அகழ், கைபர், மக்கா வெற்றி) கலந்துகொண்டு வீரத்துடன் போர் புரிந்தார். யர்மூக் போரில் ரோம பைசாந்தியப் படைகளை எதிர்த்து தைரியமாகப் போர் புரிந்தார்.
- அபிஸீனியா,மதீனா இரு இடங்களுக்கும் ஹஜ்ரத் செய்தவர்.
- ஆரம்ப கால முஹாஜிரீன்களில் ஒருவர்.
- தாய் மற்றும் தந்தை இருவரின் வழியிலும் நபிகளாருக்கு மிக நெருக்கமான உறவுக்காரர்.
- அபூபக்கர் அவர்களின் மகள் அஸ்மா அவர்களை மணமுடித்தார். ஹிஜ்ரத்திற்கு பிறகு இவர்களுக்கு தான் முதல் குழந்தை பிறந்தது.
- இவரது பிள்ளைகள் வீரம் மற்றும் இஸ்லாமிய கல்வியில் சிறந்தவர்களாக விளங்கினார்கள்.
- "ஒவ்வொரு நபிக்கும் சில சீடர்கள் (ஹவாரிய்யீன்கள்) உள்ளார்கள். என்னுடைய ஹவாரி (சீடர்) ஸுபைர் இப்னு அவ்வாம்" என நபிகளார் கூறியுள்ளார்கள்.