*பிறப்பு :* ஹிஜ்ரத்திற்கு முன் 23 மக்காவில்
*இறப்பு :* ஹிஜ்ரி 40 கூஃபாவில் ஸஹீதாக மரணம்
*பரம்பரை :* குரைஷிகளில் உள்ள பனூ ஹாஷிம் குலம்
*சில சிறப்புகள் :*
- இஸ்லாத்தின் நேர்வழி பெற்ற நான்காவது கலீஃபா.
- சொர்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 தோழர்களில் ஒருவர்.
- சிறுவர்களில் முதலாவதாக இஸ்லாத்தை ஏற்றவர்.
- ஆரம்ப கால முஹாஜிரீன்களில் ஒருவர்.
- வீரம்,பிக்ஹ்,ஹதீஸ் என இஸ்லாமிய கல்வியில் சிறந்து விளங்கியவர்.
- நபி அவர்களால் அபூ துராப் என சிறப்பித்து அழைக்கப்பட்டவர்.
- மூஸா (அலை) அவர்களுக்கு ஹாரூன் (அலை) அவர்கள் எவ்வாறு இருந்தார்களோ, அவ்வாறே தனக்கு அலி இருக்கிறார் என்று நபியவர்கள் கூறினார்கள்.
- நபி அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்தபோது, குறைஷிகள் நபியவர்களைக் கொல்ல திட்டமிட்டனர். அலி சிறிதும் அஞ்சாமல் நபியவர்களின் படுக்கையில் உறங்கி, நபி அவர்கள் பாதுகாப்பாக வெளியேற உதவினார்.
- நபி அவர்களின் மகளான சொர்க்கத்தின் தலைவி ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் முடித்தவர்.
- சொர்கத்து இளைஞர்களின் தலைவர்களான ஹஸன், ஹுஸைன் ரழியல்லாஹு அன்ஹும் இருவரின் தந்தை.