உமர் இப்னு கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு)

*பிறப்பு :* ஹிஜ்ரத்திற்கு முன் 41 மக்காவில்

*இறப்பு :* ஹிஜ்ரி 23 மதீனாவில் ஸஹீதாக மரணம்

*பரம்பரை :* குரைஷிகளில் உள்ள பனூ அதி கோத்திரம்

*சில சிறப்புகள்:*

- உமரைக் கண்டால் ஷைத்தான் விரண்டு ஓடுவான் என நபிகளார் கூறியுள்ளார்கள்.

- இஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபா.

- சொர்கத்திற்கு நன்மாராயம் கூறப்பட்ட 10 நபித்தோழர்களில் ஒருவர்.

- ரோம், பாரசீகம், பைத்துல் முகத்தஸ் இவரது ஆட்சியில் வெற்றிகொள்ளப்பட்டது.

- ஆரம்ப கால முஹாஜிரீன்களில் ஒருவர்.

- சத்தியத்தையும், அசத்தியத்தையும் சரியாக பிரித்து அறியக்கூடியவர் (ஃபாரூக்) என நபிகளாரால் நன்மாராயம் கூறப்பட்டவர்.

- முஃமீன்களின் தாய் அன்னை ஹப்ஸா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் தந்தை.
Previous Post Next Post