இது ஒரு மனிதன் தான் செய்த நன்மைகள் மற்றும், தீமைகள் குறித்துத் தன்னைத்தானே கணக்கெடுத்துக் கொள்வதாகும்.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்:
"ஒவ்வொரு ஆத்மாவும், நாளை மறுமைக்காகத் தான் முற்படுத்தி வைத்திருப்பதை (செயல்களை) சிந்தித்துப் பார்க்கட்டும்." (அல்-ஹஷ்ர்: 18)
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
"புத்திசாலி என்பவன், தன் மனதைக் கட்டுப்படுத்தி (கணக்கெடுத்து), மரணத்திற்குப் பிந்தைய வாழ்விற்காகச் செயல்படுபவன் ஆவான்." (அதாவது, தன் செயல்களைத் தானே சரிபார்த்துக்கொள்பவன்).
ஹஸன் அல்-பஸரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் அடியான் தன் மனதிலிருந்தே ஒரு போதகனை (அறிவுரை கூறுபவனை) பெற்றிருக்கும் வரையிலும், சுயவிசாரணை செய்வதையே தனது முக்கிய நோக்கமாகக் கொண்டிருக்கும் வரையிலும் அவன் நன்மையில் தான் இருக்கிறான்."
ஹாஃபிழ் இப்னுல் கையிம் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் 'இகாதத்துல் லஹ்ஃபான்' நூலில் குறிப்பிடுகிறார்கள்:
"ஒருவரது உள்ளத்தின் சீர்திருத்தம் என்பது சுயவிசாரணையில் உள்ளது; உள்ளத்தின் சீர்கேடு என்பது, அதைக் கவனிக்காமல் அலட்சியப்படுத்தி, மனம் போன போக்கில் விட்டுவிடுவதில் உள்ளது."