அல்லாஹுவின் பாதையில் அள்ளிக்கொடுக்கும் வள்ளல்
*பிறப்பு:*
ஹிஜ்ரத்திற்கு முன் 43ல் மக்காவில்.
*பரம்பரை:*
குரைஷ் கோத்திரத்தின் பனூ ஸுஹ்ரா கிளையைச் சேர்ந்தவர்.
*மறைவு:* ஹிஜ்ரி 32 ஆம் ஆண்டில் மதீனாவில்.
*சிறப்புகள் & பங்களிப்புகள்:*
*சுவன நன்மாராயம்: *
சொர்க்கத்திற்கு நற்செய்தி கூறப்பட்ட பத்து தோழர்களில் ஒருவர்!
*ஹிஜ்ரத்:*
மக்காவிலிருந்து அபிசீனியா (2முறை) & பின்னர் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்த தியாகி!
*போர்க்கள நாயகர்:*
- பத்ர், உஹத், அகழ்ப்போர் போன்ற முக்கியப் போர்களில் துணிச்சலுடன் பங்கேற்ற வீரர்!
- உஹத் போரில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பாதுகாக்கப் பெரும் பங்காற்றினார்.
- தபூக் போரில் ஒரு படையணிக்குத் தலைமை தாங்கினார்.
- அப்போரில் 200 ஒக்கியா தங்கம், 500 குதிரைகள், 1500 ஒட்டகங்கள் என வாரி வழங்கினார்!
- நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே ஒரு தொழுகைக்கு இமாமாக நின்று தொழுகை நடத்திய பாக்கியசாலி!
- தூமதுல் ஜந்தல் படைப்பிரிவுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
*வியாபார மேதை & கொடையாளி: *
- தனது உழைப்பால் பெரும் செல்வம் ஈட்டி, இஸ்லாமிய சமுதாயத்திற்குப் பல கொடைகளை வாரி வழங்கியவர்!
- மரணத்திற்கு முன், பத்ர் போரில் பங்கேற்ற ஒவ்வொரு தோழருக்கும் 400 ஒக்கியா தங்கத்தை தர்மம் செய்தார்!
*தலைமைத்துவம்: *
மூன்றாவது கலீஃபாவைத் தேர்ந்தெடுக்கும் ஆறு பேர் கொண்ட குழுவில் ஒருவராக இருந்தார்.
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை, வீரம், தியாகம், மற்றும் இஸ்லாமியப் பணிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்!
அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! ஆமீன்! ✨