இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் வாழ்கை ஓர் பார்வை

தொகுப்பு -உஸ்தாத் SM.இஸ்மாயில் நத்வி

பிறப்பு:-

இமாம் ஷாஃபி அவர்கள் ஷாம் (சிரியா) நாட்டிலுள்ள "கஸ்ஸா' என்ற ஊரில் ஹிஜிரி150ஆம் வருடம் பிறந்தார்கள். 

இவர்களுடையஇயற்பெயர்:-முஹம்மத், 

தந்தையார் பெயர் :-
இத்ரீஸ் என்பதாகும். 

ஷாஃபிஇமாம் அவர்களின் பரம்பரை :-
நபி (ஸல்) அவர்களுடைய பாரம்பரியமாகிய "குஸை' என்றகிளையாரிடமிருந்து ஆரம்பித்ததாகும்.
இமாம் ஷாஃபி அவர்கள் நபி (ஸல்) அவர்களோடு "அப்து மனாஃப்' கோத்திரத்தில்இணைகிறார்கள். 

1-இளமைப் பருவமும்  கல்வி கற்றலும்:-

இமாம் ஷாஃபி அவர்களுக்கு இரண்டுவயதான போது இமாமவர்களின் தாயார்மக்கமா நகரத்திற்குக் குடிபெயர்ந்தார். 

இன்னும்குர்ஆனை ஓதினார்கள். இமாம் அவர்கள்"ஹுதைல்' எனும் கோத்திரத்தாரிடம்பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள் அரபி மொழிப்புலமையையும், கவிதைகளையும் கற்றுக்கொண்டார்கள். 

இமாம் ஷாஃபி அவர்கள் "ஃபிக்ஹ்' எனும்மார்க்கச் சட்டக் கலையை அன்றையசூழ்நிலையில் மக்காவில் மார்க்கத் தீர்ப்புவழங்கும் முஃப்தியாக இருந்த அறிஞர் "முஸ்லிம்பின் ஹாலித் அஸ்ஸன்ஜி' என்பவரிடம்கற்றார்கள்.

பிறகு மதீனாவிற்குப் பயணம் செய்துஅங்கு இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம்மாணவராகச் சேர்ந்தார்கள். அவர்களிடமிருந்து"முஅத்தா' என்ற நூலைப் பாடம் பயின்று அதைமுழுவதுமாக மீண்டும்  அவர்களிடம் படித்துக்காட்டினார்கள். 

ஹிஜிரி 184ம் வருடம் யமன் நாட்டின் ஒருபகுதியில் இமாம் ஷாஃபி அவர்கள் பணியாற்றும்பொறுப்பை ஏற்றார்கள்.

பிறகு மீண்டும் மக்கமா நகரத்திற்குவந்தார்கள். கல்விக்காக இராக்கிற்கும், ஹிஜாஸ் பகுதிக்கும் இடையே எண்ணற்றதடவை பயணம் மேற் கொண்டார்கள்.

பிறகுஹிஜிரி 199ம் ஆண்டிலிருந்து எகிப்து தேசத்தில்தங்கியிருந்தார்கள். அங்கு தான் அவர்கள்தங்களது மார்க்கப் பணியைத் துவக்கினார்கள். இமாம் அவர்களின் ஆய்வுகளும், கருத்துக்களும் உலகெங்கும் பரவியது. அவர்களிடம் கல்வி பயின்ற தலைசிறந்தமாணவர்களும் உருவானார்கள்.

2-இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின்
பணிகள்:-

இமாம் ஷாஃபி அவர்கள் ஃபிக்ஹ்துறையில் மட்டுமின்றி ஹதீஸ் கலைதொடர்பான விஷயங்களிலும் மிகவும் தேர்ச்சிபெற்றவர்களாகவும், சிந்தனைமிக்கவர்களாகவும் விளங்கினார்கள்.

நபியவர்கள் கூறியதாக வரக்கூடியஹதீஸ் உறுதியான அறிவிப்பாளர்கள் மூலம், அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்புவிடுபடாமல் வருமென்றால் அதை யார்செய்திருந்தாலும்,  செய்யா விட்டாலும்நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது இமாம்ஷாஃபி அவர்களின் உறுதியான கருத்தாகும்.

ஆனால் இமாம் மாலிக் தன்னுடையஆசிரியராக இருந்தாலும், இமாம் அபூஹனீஃபா தனக்கு முந்திய கால அறிஞராகஇருந்தாலும் அவர்களுடைய கருத்து தவறுஎன்பதைத் தெளிவு படுத்தி அதற்கு மாற்றமானதன்னுடைய கருத்தை இமாம் ஷாஃபி அவர்கள்பதிவு செய்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக ஹதீஸ் கலைஅறிஞர்கள் இமாம் ஷாஃபி அவர்களுக்கு"நாஸிருஸ் ஸுன்னா' நபி வழிக்கு உதவிசெய்தவர் என்ற பட்டப் பெயரைச்சூட்டியுள்ளனர்.

3-இமாம் அவர்களின் சில முக்கியமான புத்தகங்கள் :-

ஹதீஸ் கலை தொடர்பாக "அல் உம்மு'' என்ற நூலில் "அர்ரிஸாலா'' என்ற தொகுப்பைமிகப் பெரும் ஆய்வாக இமாம் ஷாஃபி அவர்கள்தொகுத்துள்ளார்கள். ஹதீஸ் கலைதொடர்பாகவோ, நபி வழிச் சட்டங்கள் ஆய்வுதொடர்பாகவோ, நூல் எழுதக் கூடிய யாராகஇருந்தாலும் அவர் இமாம் ஷாஃபிஅவர்களுக்குக் கடன் பட்டவராகத் தான்இருப்பார்கள். அந்த அளவிற்கு யாரும் மறுக்கமுடியாத தெளிவான ஆய்வுகளை முதன்மையான படைப்பாக வழங்கிஉள்ளார்கள்.

4-இமாம் அவர்களை பற்றி அறிஞர்களின் கருத்துகள்:-

ஹதீஸ் கலை அறிஞர்கள் என்றாவது ஒருநாள் பேசினால் அது இமாம் ஷாஃபி உடையநாவைக் கொண்டு தான் இருக்கும் (அதாவதுஅவரது கருத்தாகத் தான் இருக்கும்)'' என்று  முஹம்மத் பின் ஹசன் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஹதீஸ் கலை அறிஞர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை ஷாஃபிவிழிக்கச் செய்தார்'' என அறிஞர் "ஸஃபரானி' அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாங்கள் நபியவர்களுடைய ஹதீஸ்களில்முஜ்மல் (மூடலானது) எது? "முஃபஸ்ஸிர்'' (தெளிவு படுத்துவது) எது? "நாஸிஹ்'' (பழையசட்டத்தை மாற்றிய ஹதீஸ்) எது? "மன்ஸூஹ்'' (மாற்றப்பட்ட சட்டம்) எது? என்பதைஷாஃபியுடன் அமர்கின்ற வரைஅறியாதவர்களாகத் தான் இருந்தோம்'' என்றுஇமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள்கூறியுள்ளார்கள்.

 (ஆதாரம்: ஹுல்யத்துல்அவ்லியா, பாகம்: 9, பக்கம்: 97)

இன்னும்பல ....

இமாம் அவர்களின் சில முக்கிய போதனைகள் :-

ஆதாரம் இல்லாமல் ஏற்காதே!

இமாம் ஷாஃபி அவர்கள் கூறுகிறார்கள். ஆதாரம் இல்லாமல் கல்வியைத் தேடுபவனின்உதாரணம் இரவில் விறகு சுமப்பவனின்உதாரணத்தைப் போன்றதாகும்.  அவன் ஒருகட்டு விறகைச் சுமக்கின்றான். அதில் ஒரு கடும்விஷப் பாம்பு இருக்கிறது. அவன் அறியாதநேரத்தில் அவனைத் தீண்டி விடும். (இதுபோன்று தான் ஆதாரம் இல்லாமல் கல்வியைத்தேடுபவனை அக்கல்வி அவன் அறியாதவிதத்தில் அவனை வழிதவறச் செய்து விடும்) 

(மத்கல் - இமாம் பைஹகீ பாகம்: 1, பக்கம்: 211)

ஆதாரப்பூர்வமான ஹதீஸை மட்டும்பின்பற்று!

ஷாஃபி அவர்கள் ஒரு ஹதீஸைஅறிவித்தார்கள். அப்போது ஒருவர் ஷாஃபிஅவர்களிடம், நீங்கள் இதனை ஆதாரமாகஎடுப்பீர்களா? என்று கேட்டார். அதற்கு இமாம்ஷாஃபி அவர்கள் "எப்போது நபி (ஸல்) அவர்களிடமிருந்து  ஒரு ஹதீஸ்அறிவிக்கப்பட்டு நான் அதை பற்றிப்பிடிக்கவில்லையோ (அப்போது)  என்னுடையஅறிவு மழுங்கி விட்டது என்று நான் உங்களிடம்சான்று பகர்கிறேன்' என்று கூறி தன்னுடையகரத்தால் தம்முடைய தலையை நோக்கிசுட்டிக் காட்டினார்கள்.

 (முஹ்தஸர்அல்முஅம்மல், 
பாகம்: 1 பக்கம்: 57)

தவறு இல்லாத நூல்கள் இல்லை!

ஷாஃபி இமாம் அவர்கள் கூறினார்கள். "நான் இந்தப் புத்தகங்களை தொகுத்துள்ளேன். நான் ஆய்வு செய்வதில் குறை வைக்கவில்லை. என்றாலும் இதில் கட்டாயம் தவறுகள் பெற்றுக்கொள்ளப்படும். ஏனென்றால் அல்லாஹ்"அல்லாஹ் அல்லாதவர்களிமிருந்துவருமென்றால் அதிலே அவர்கள் அதிகமானமுரண்பாடுகளை பெற்றிருப்பார்கள்' என்று தன்திருமறையில் கூறுகிறான். என்னுடைய இந்தப்புத்தகங்களிலே திருமறைக் குர்ஆனுக்கும், நபிவழிக்கும் மாற்றமாக நீங்கள் கண்டால்நிச்சயமாக நான் அதை விட்டும் திரும்பிவிட்டேன். (அதாவது என்னுடைய கருத்துதவறானது. நபிவழி தான் சரியானதுஎன்பதாகும்)

 (முஹ்தஸர் அல்முஅம்மல், 
பாகம்: 1 பக்கம்: 57)

இறப்பு:-

இமாம் ஷாஃபி அவர்கள் ஹிஜிரி 204ம்வருடம் எகிப்தில் வஃபாத் ஆனார்கள்.

அஃலாம்- அறிஞர்கள்#
أحدث أقدم