ஷைஃக் ஸாலிஹ் ஸிந்தி ஹஃபிதஹுல்லாஹ் கூறினார்கள்:
நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து அவனது அடியானின் மீதுள்ள மிகப்பெரிய நிஃமத்தானது, அவன் தன்னைப் பற்றி அவனுடைய அடியானை அறியச் செய்வதாகும்.
உனக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் ஆரோக்கியம், வாழ்வாதாரம், செல்வம், (சீரான) செவிப்புலன், கேள்விப்புலன், பார்வை முதலிய அருட்கொடைகளிலிருந்து ஏதேனும் ஒன்றை நீ எண்ண நாடினால், அவை எல்லாவற்றையும் விட மிக மகத்தான அருட்கொடையை நீ மறந்துவிடாதே! அதுதான், அவன் தன்னைப் பற்றி உன்னை அறிந்து கொள்ளுமாறு செய்ததாகும்.
இதுதான் (ஒரு அடியானுக்கு அல்லாஹ் செய்யும்) மாபெரும் அருட்கொடையாகும். மேலும், இதுவே பேருபகாரம் ஆகும். இதனை நெருங்கக்கூடிய வேறு எந்த ஒரு அருட்கொடையும் இல்லை.
நிச்சயமாக எல்லா நலவுகளும் இந்தக் கல்வியுடனே பின்னிப் பிணைந்துள்ளன. அதாவது, நீ அல்லாஹ்வைப் பற்றி தெரிந்து கொள்வதும், மேலும் அவனை அறிய வேண்டிய முறையில் அறிந்து கொள்வதுமாகும்.
ஷர்ஹ அல்-அகீதா அல்-வாஸிதிய்யா, பக்கம் 28-32.