ஜும்ஆ விற்கு 40 பேர்தான் என்ற பலவீனமான வாதம்

ஜும்ஆ விற்கு 40 பேர்தான் என்ற பலவீனமான வாதம் ஹதீஸ் துறை அறிஞர்களிடம் தோற்றுப் போன வாதமாகும். 
-------
இந்த நூற்றாண்டிலும் ஜும்ஆ தொழுகை கூடுமாக வேண்டுமானால்  40 பேர் இருந்தாக வேண்டு்ம் என்ற ஒரு வாதம் முன்வைக்கப்படுவது ஆங்காங்கு  அவதானிக்கப்பட்டாலும் அது ஹதீஸ் துறை அறிஞர்களிடம் தோற்றுப் போன, ஆதரமற்ற , பலவீனமான வாணமாகும். தெளிவு: 

(٩) باب إذا نفر الناس عن الإمام فصلاته، ومن بقي معه جائزة، 
குத்பா ஓதும் இமாமை விட்டும் வந்த மக்கள் பிரிந்து செல்வதால் அவரது ஜும்ஆ தொழுகையும் அவரோடு இருப்பவர்களின் தொழுகையும் கூடுமானதே ( பூரணமானதே) என இமாம் புகாரி ரஹி அவர்கள் தனது நூலில் தலைப்பிட்டு மதீனாவில் வியாபாரக் கூட்டம் வருவதை அறிந்த பலர் நபி (ஸல்)   அவர்களோடு ஜும்ஆ தொழாமல் 12 பேர் மாத்திரம் மிஞ்சி இருந்தனர். இறைத் தூதர் (ஸல்) அவர்கள் அந்த எண்ணிக்கையோடு தொழுதார்கள் என வரும் பின்வரும் ஹதீஸை ஆதாரமாக எடுத்தெழுதி உள்ளார்கள்.  

٤٩٣ - عن جابر بن عبد اللَّه قال: بينا (١) نحن نصلي مع النبي -ﷺ-؛ إذ أقبلت عِيرٌ تحمل طعامًا، فالتفتوا إليها حتى ما بقي مع النبي -ﷺ- إلّا اثنا عشر رجلًا فنزلت هذه الآية: ﴿وإذا رَأوْا تِجارَةً أوْ لَهْوًا انْفَضُّوا إلَيْها وتَرَكُوكَ قائِمًا﴾ [الجمعة ١١].
பின்னர் அது  பற்றி விளக்கும் : அதன் முன்னணி விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் இப்னு ஹஜர் ரஹி அவர்கள் பின்வருமாறு விபரிக்கின்றார்கள் : 
ظاهر الترجمة أن استمرار الجماعة الذين تنعقد بهم الجمعة إلى تمامها ليس بشرط في صحتها. بل الشرط أن تبقى منهم بقية. 
ஜும்ஆ கூடுமாகுவதற்கென குறித்த எண்ணிக்கையினர் தொடராக இருக்க வேண்டும் என்பது அது கூடுமாகுவதற்கான கட்டாய நிபந்தனை கிடையாது. மாற்றமாக இருந்து வந்த சொச்சம் பேர் இமாமுடன் இருத்தல் வேண்டும். 
ولم يتعرض البخاري لعدد من تقوم بهم الجمعة ؛لأنه لم يثبت منه شيء على شرطه ... 
"இத்தனை பேர் இருப்பதால்தான் ஜும்ஆ கூடும்" என்ற விஷயத்தை புகாரி அவர்கள் (தனது நூலில்) பேசாதிருப்பது அது ( எண்ணிக்கை) தொடர்பான ஹதீஸ் அவரது  நிபந்தனைகளுக்கு அப்பாற்பட்டும் உறுதியற்றும் இருப்பதற்காகவே" அது பற்றி அவர்கள் பேசவில்லை. (ஃபத்ஹுல் பாரி)

கவனிக்க:
----
ஜும்ஆ கூடுமாகுவதற்கென தெளிவான எண்ணிக்கையை கூறும் ஹதீஸ்கள் இல்லை என்பதால் இருவர் முதற் கொண்டு 15 பேர், 30  எனப் பல்வேறு வகையான முரண்பட்ட கருத்துக்கள் இமாம்கள் மத்தியில் இருக்க 40 என மட்டிடும் அதிகாரம் பெற்ற ஏழாண்டு கல்வித் திட்ட மௌலவிகள் மக்களை குழப்புவது கருத்துக்களை அணுகத் தெரியாததன் விளைவினாலேயே.

ஆகவே மௌலவிகள் மக்களை தாம் சார்ந்த மத்ஹபின் பெயரில் வழிகெடுக்கும் நிலை ஜும்ஆ தொழுகயின் எண்ணிக்கையிலும் தொடர்வது தவிர்க்கப்பட வேண்டும். 

எம்.ஜே. எம். Rizwan Junaid  மதனி

Previous Post Next Post