பொய் பற்றி ஸலபுகளின் கூற்றுக்கள்

قال عمر بن الخطاب رضي الله عنه: (لأن يضعني الصدق- وقلَّما يضع- أحبُّ إليَّ من أن يرفعني الكذب، وقلَّما يفعل) 

((أدب الدنيا والدين)) للماوردي (1/263).

1. உமர் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாக வந்துள்ள ஒரு செய்தி:

பொய்யுரைத்து அது என்னை உயர்த்துவதை விட உண்மையுரைத்து அது என்னைத் தாழ்த்துவது எனக்கு விருப்பமானது. (எனினும், பொதுவாக) உண்மையுரைப்பது (ஒருவரை) தாழ்த்துவதும் பொய்யுரைப்பது (ஒருவரை) உயர்த்துவதும் அரிது.*


قال عبد الله بن مسعود رضي الله عنه: (أعظم الخطايا الكذب... ومَن يَعْفُ يَعْفُ الله عنه)
((الحلية)) لأبي نعيم (1/138)

2. இப்னு மஸ்ஊத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாக வந்துள்ள ஒரு செய்தி:

"பொய் பாவங்களிலேயே மிக மோசமானது... யார் மன்னிக்கின்றாரோ அல்லாஹ் அவரை மன்னிப்பான்".


وفي رواية: وَأَعْظَمَ الْخَطَايَا اللِّسَانُ الْكَذُوبُ... وَشَرَّ الرَّوَايَا رَوَايَا الْكَذِبِ. 
الزهد لهناد بن السري (497)

3. இன்னொரு அறிவிப்பில்: "பாவங்களிலேயே மிக மோசமானது அதிகம் பொய்யுரைக்கும் நாவாகும். மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்பவற்றில் மிகவும் மோசமானது பொய்யான செய்திகளாகும்".


وكان عبد الله يقول أيضا: (إن الكذب لا يصلح منه جد ولا هزل، ولا يعد الرجل صبيا، ثم لا ينجز له)
الزهد لوكيع (396)، (401)، ومسند أحمد  ٣٨٩٦، وقال ش الأرناؤوط: إسناده صحيح على شرط مسلم.

4. அதே போன்று இப்னு மஸ்ஊத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

"விளையாட்டுக்காகவோ, விளையாட்டுக்கல்லாமலோ பொய்யுரைப்பது கூடாது. ஒரு மனிதன் ஒரு குழந்தையிடம் (கூட ஏதாவது ஒன்றை) வாக்களித்துவிட்டு, பின்னர், (அதனை) அவனுக்கு நிறைவேற்றிக் கொடுக்காமல் இருப்பது கூடாது".


قال أبو بكر الصديق:  إياكم والكذب، فإن الكذب مجانب للإيمان.
الزهد لوكيع (399) بسند صحيح.

5. மாபெரும் உண்மையாளரான அபூபக்ர் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்:

"பொய் பேசுவதை நான் உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறேன். ஏனெனில், பொய்யானது ஈமானுக்கு  முற்றிலும் எதிரானதாகும்".


قال سعد بن أبي وقاص ضي الله عنه: المؤمن يُطبَع على الخلال كلها غير الخيانة والكذب . 
السنة للخلال (1524)، (1525)، والمصنف لابن أبي شيبة (26117) ، وغيرهما بإسناد صحيح.

6. அல்-அஷறதுல் முபஷ்ஷரீன்களில் ஒருவரான ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்: 

"ஒரு முஃமின் நம்பிக்கைத் துரோகத்தையும் பொய்யையும் தவிர எல்லா வகையான இயல்புகளையும் கொண்டிருக்க முடியும்".


قال ابن مسعود رضي الله عنه: المؤمن يُطوَى على الخلال كلها غير الخيانة والكذب.
السنة للخلال (1526)، والمصنف لابن أبي شيبة (26116)، (30976) والطبراني في "الكبير (8909)، وغيرها بإسناد صحيح.

7. ஸஃத் இப்னு அபீ வக்காஸ் (றளியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறிய அதே கருத்தையை
இப்னு மஸ்ஊத் (றளியல்லாஹு அன்ஹு) அவர்களும் கூறியுள்ளார்கள்.


وكان ابن عباس يقول: (الكذب فجور، والنَّمِيمَة سحرٌ، فمن كذب فقد فجر، ومن نمَّ فقد سحر)
 ((عيون الأخبار)) لابن قتيبة (2/31).

8. இப்னு அப்பாஸ் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறியதாக வந்துள்ள ஒரு செய்தி: 

"பொய்யானது மோசமான பாவமாகும். கோள் சொல்வது ஒரு (வகைச்) சூனியமாகும். யார் பொய்யுரைக்கிறாரோ அவர் மோசமான பாவத்தைச் செய்துவிட்டார். யார்  கோள் சொல்கிறாரோ அவர் (ஒருவகைச்) சூனியத்தைச் செய்தவராவார்".

குறிப்பு: சூனியத்தால் எவ்வாறு மனிதர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முடியுமோ அவ்வாறு கோள் சொல்வதாலும் மனிதர்களுக்கு மத்தியில் பிரிவினையை ஏற்படுத்த முடியும். அதனால் தான் இங்கு கோள் சொல்வது சூனியத்திற்கு ஒப்பிடப்பட்டுள்ளது.


قال ابن عمر: (زعموا زاملة الكذب)
((عيون الأخبار)) لابن قتيبة (2/32).

9. இப்னு உமர் (றளியல்லாஹு அன்ஹுமா) அவர்கள் கூறியதாக வந்துள்ள ஒரு செய்தி:

"(ஒன்றைப் பற்றி இவ்வாறு மக்கள்) சொல்கிறார்கள் என்று (உறுதிப்படுத்தாமல்) கூறும் வார்த்தையானது பொய் சுமக்கும் வாகனமாகும்".

குறிப்பு: இதே கருத்தில் ஒரு நபிமொழி  அபூதாவூதிலும் (4972) வேறு கிரந்தங்களிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அதன் அறிவிப்பாளர் வரிசையில் இருக்கும் ஒரு குறையின் காரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொட்டும் அது உறுதி செய்யப்படவில்லை என்பதே சரியான கருத்து.


قال الأحنف: (ما خان شريفٌ، ولا كذب عاقلٌ، ولا اغتاب مؤمنٌ. وكانوا يحلفون فيحنثون، ويقولون فلا يكذبون)
 ((المجالسة وجواهر العلم)) للدينوري (1128).

10. மாபெரும் புத்திசாலிகளில் ஒருவரான தாபிஈ அஹ்னப் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்:
"ஒரு கண்ணியமான மனிதன் நம்பிக்கைத்துரோகம் செய்யமாட்டான். ஒரு புத்திசாலி பொய்யுரைக்க மாட்டான். ஒரு முஃமின் புறம் பேசமாட்டான். முன்னோர்கள் சத்தியம் செய்து, (சில நேரம் அதனை) முறித்து(ப் பரிகாரம் கொடுத்து) விடுவார்களாக இருந்தனர். (ஆனால்) அவர்கள் சொல்லில் பொய்யுரைப்பவர்களாக இருக்கவில்லை".


11. அஹ்னப் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாக வந்துள்ள ஒரு செய்தி:
قال الأحنف: (اثنان لا يجتمعان أبدًا: الكذب والمروءة)
((عيون الأخبار)) لابن قتيبة (2/32).     
 "பொய் மற்றும் உயர் பண்பு ஆகிய இரண்டும் ஒரு போதும் ஒன்று சேர்ந்திருக்கமாட்டாது".


قال الإمام ابن القيم: (إياك والكذب؛ فإنه يفسد عليك تصور المعلومات على ما هي عليه، ويفسد عليك تصويرها وتعليمها للناس)

 ((الفوائد)) (ص 135).

12. இமாம் இப்னுல் கையிம் (றஹிமஹுல்லாஹ்) கூறினர்கள்: 
"பொய் பேசுவதை உமக்கு எச்சரிக்கை செய்கின்றேன். ஏனெனில், அது தகவல்களை அவை எவ்வாறு இருக்கின்றனவோ அவ்வாறே நீர் புரிந்து கொள்ளும் திறனில் பாதிப்பை ஏற்படுத்திவிடும். மேலும், அவற்றை மற்றவர்களுக்குப் புரியவைகின்ற, கற்பிக்கின்ற உனது திறனிலும் பாதிப்பை ஏற்படுத்தும்".


13. எவருக்கும் பாதிப்பு இல்லாமல் பொய் பேசலாமா?

قال الإمام ابن عثيمين: (والكذب حرام وكلما كانت آثاره أسوأ، كان أشد إثمًا، وليس في الكذب شيء حلالًا وأما ما ادعاه بعض العامة، حيث يقولون: إن الكذب نوعان: أسود، وأبيض، فالحرام هو الأسود، والحلال هو الأبيض، فجوابه: أن الكذب كله أسود، ليس فيه شيء أبيض، لكن يتضاعف إثمه بحسب ما يترتب عليه، فإذا كان يترتب عليه أكل مال المسلم أو غرر على مسلم صار أشد إثمًا، وإذا كان لا يترتب عليه أي شيء من الأضرار فإنه أخف ولكنه حرام)   
இமாம் இப்னு உஸைமீன்  (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
"பொய் ஹறாமாகும். அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் அளவுக்கு அதன் பாவமும் கடுமையாக இருக்கும். பொய்யில் ஹலால் என்று ஒன்று கிடையாது. பொய் என்பது கருப்பு, வெள்ளை என்ற இரண்டு வகைகள் என்றும்; அவற்றில் ஹறாமானது கருப்புப் பொய்யே என்றும், ஹலாலானது வெள்ளைப் பொய் என்றும் சில பொதுமக்கள் வாதிடுவதற்கான பதில் யாதெனில்: அனைத்துப் பொய்களும் கருப்பானவையே; அவற்றில் வெண்மையான எந்த ஒன்றும் கிடையாது. ஆனால் பொய்யால் ஏற்படும் விளைவைப் பொறுத்து அதன் பாவம் பன்மடங்காகும். அதன் மூலம் ஒரு முஸ்லிமின் சொத்து தவறான முறையில் உண்ணப்படுமாக இருந்தால் அல்லது ஒரு முஸ்லிம் ஏமாற்றப்படுவானாக இருந்தால் அது கடுமையான பாவமாக இருக்கும். அதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றால் அதன் பாவத்தின் தன்மை ஒப்பீட்டு அளவில் குறைவாக இருக்கும். ஆனாலும் அதுவும் ஹறாமானதாகும்.
شرح رياض الصالحين لابن عثيمين (2/570).

-ஸுன்னஹ் அகாடமி
أحدث أقدم