மத்ஹபுகளின் முன் சென்ற சத்திய இமாம்களும் பின் வந்த மத்ஹபுகளின் அசத்தியவாதிகளும்

- உஸ்தாத் SM இஸ்மாயீல் நத்வி

சித்தாந்தங்கள்,கொள்கை கோட்பாடுகள் உருவாகிய பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பிற்காலத்தில் தோன்றும் அதே சித்தாந்தத்தை பேசக்கூடிய சிலர்களால் அவைகள் வேறுபட்ட கோணத்தில் மாற்றி அமைக்கப்படும், சீர்குலைக்கப்படும் .

இது அரசியல் ,பொருளாதாரம் வணிகம் ,அறிவியல், போன்ற துறைகளுக்கு வேண்டுமென்றால் பொருத்தமான ஒன்றாக , இயல்பான ஒன்றாக அமையும் ,ஆனால் மார்க்கத்தைப் பற்றிப் பேசக்கூடிய 
கொள்கைக் கோட்பாடுகள் என்பது 
சீர்குழையாமல் , மாற்றி அமைக்கப் படாமல் தூயவடிவில் மாசு அடையாமல் இருந்தால்தான் அவைகள் இஸ்லாமியக் கொள்கைகளாக தொடர்ந்து நிலைக்க முடியும்.

ஸஹாபாக்கள் இறைத்தூதர் ﷺ அவர்களை நன்கு புரிந்து , இறைச்செய்தியான வஹியின் பின்னணிகளையும் காலச் சூழ்நிலைகளையும் தெளிவாக விளங்கி வைத்திருந்தார்கள் , அவர்கள் சென்ற அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த அவர்களின் மாணவர்களாகிய தாபியீன்களின் காலகட்டங்களில் இஸ்லாமிய கொள்கைகள் மிகப்பெரிய சவாலை சந்தித்து , பல வழிகெட்ட பிரிவுகளும்
தோன்றியது இந்த சூழ்நிலையில் மார்க்கத்தை (உசூல்கள் என்ற (அகீதா-عقيدة) இஸ்லாமிய கொள்கைகள் , ஃபுரூஆதுகள் (فقه) இஸ்லாமிய கிளை சட்டங்கள் ) முறையாக பாதுகாப்பதற்கு அந்தக் காலகட்டத்தில் தோன்றிய பல அறிஞர்கள் தங்களது முழு முயற்சியையும் எடுத்து இஸ்லாமிய கொள்கைகளை , மார்க்க கிளை சட்டங்களை ஆவணப்படுத்தினார்கள், புத்தக வடிவில் கொண்டு வந்தார்கள்,

காலப்போக்கில் பின் வந்த சில அறிஞர்கள் தங்களது ஆசிரியர்களான மத்ஹபுகளின் 
(Fiqh School of thoughts- மார்க்கசட்ட சிந்தனை பள்ளிகள்) இமாம்களின் கொள்கைகள் கோட்பாடுகளை தங்களுடைய சுய புரியுதல்களினால், சுய சிந்தனைகளால் மாற்றி அமைத்தனர் இதுவே பிறகு மத்ஹபுகள் தேவை இல்லை என்ற சிந்தனைகளை முன்னோக்குவதற்கு காரணமாக அமைந்தது,

நேரடியாக மார்க்கத்தை குர்ஆன் ஸுன்னாவில் இருந்து விளங்குவோம் இஜ்மாஃ,கியாஸ் தேவை இல்லை என்ற முயற்சியில்
நான்கு மத்ஹபுகள் தேவையில்லை என்று சொன்னவர்கள் ஐந்தாவது மத்ஹபை உருவாக்கி....

இன்று பல குழுக்களாக பிரிந்து நிற்கின்றனர், மத்ஹபுகளின் பெயர்களில் அரங்கேற்றப்படும் மார்க்கத்திற்கு புறம்பான விடயங்கள் எந்த அளவுக்கு கண்டிக்கப்பட வேண்டுமோ அதே போன்று மத்ஹபுகள் தேவையில்லை என்ற வாதத்தின் அடிப்படையில் மார்க்கத்திற்கு புறம்பாக செய்யப்படுகிற பல விடயங்களும் கண்டிக்கப்பட வேண்டும்.

குர்ஆன் ஸுன்னாவிற்கு நெருக்கமான இமாம்களின் ஆய்வுகளான இஜ்திஹாதுகளை ஓர் அளவுகோலாக வைத்து பின்பற்றுவது தவறு இல்லை,

ஆனால் தங்களது மத்ஹபுகளின் வழிமுறைதான் சரி மற்றவர்கள் வழிமுறை வழிகேடு என்று நினைப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல.

தங்களுடைய ஆய்வு சத்தியத்திற்கு நெருக்கமானது என்று நினைப்பதே உகந்தது( المذهب الاقرب الى السنة)

சங்கையான இமாம்களான அபூ ஹனீபா ,மாலிக்,ஷாஃபிஈ,அஹ்மத் 
ரஹிமஹுமுல்லாஹ் போன்றோர் தங்களுக்கென்று எந்த ஒரு தனிப்பட்ட கொள்கைகளையும் இஸ்லாதிற்கு மாறுபட்ட வழிமுறைகளையும் தங்களுக்காக அவர்கள் அமைத்து அதை மற்றவர்கள் பின்பற்றச் சொல்லவில்லை.

இன்னும் தெளிவாகச் சொன்னால் அவர்களின் காலங்களில் தங்களை குறிப்பிட்ட மத்ஹபுகளின் பெயர்களில் அவர்கள் அழைத்து கொண்டதில்லை , பின்வந்த அறிஞர் பெருமக்கள் அந்தந்த இமாம்களின் மார்க்க சட்ட ரீதியான வழிமுறைகளை , சட்டம் இயற்றப்படுகின்ற விதிமுறைகளை
மத்ஹபுகளாக தோற்றுவித்தனர்.

காரணம் அவர்கள் காலத்து வழிகெட்ட பிரிவினர்களில் இருந்து தங்களை நேரான பாதையில் பயணிக்கக் கூடிய அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சேர்த்தவர்கள் என்ற அடையாளத்தை காட்டுவதற்காக
தங்களின் பெயர்களுக்கு பின்பு ஹனஃபி,ஷாஃபிஈ,மாலிக்கி,ஹம்பளி
என்று இட்டுக் கொண்டார்கள்.

மார்க்க கிளை சட்டங்களில் தங்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் , இஸ்லாமிய கொள்கை சட்டங்களில்(அகீதா) அனைவரும் ஒத்த கருத்தைக் கொண்டிருந்தனர், அதுவே அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கைகளாக தோன்றியது.

இந்த அழகான கட்டமைப்பை உடைப்பதற்காக ஷீஆக்களும் அவர்களின் சீடர்களான பித்அதுவாதிகளான ,பரேல்விகள் 
போலி சுன்னத் ஜமாஅதை கட்டமைத்து உண்மையான அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅதாக இன்று மக்கள் மன்றத்திலே காட்டிக் கொண்டு தங்களின் வழிகேடான கொள்கைகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள்.

அதன் விளைவாக சங்கையான இமாம்களின் பெயரில் மார்க்கம் கூறியதாக பல அணாச்சாரங்களை
கட்டவிழ்த்து விட்டனர், பொதுமக்கள் இவர்களின் வழிகேட்டிற்கு பலியாகி இன்று இதுவே சரியான இஸ்லாமிய கொள்கை என்ற விதத்தில் மார்க்கமாக, அவைகள் தான் மத்ஹபுகளாக கல்வி ஞானம் இல்லாத பொது மக்களிடம் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதற்கு நல்ல உதாரணம் தான் அரபு மொழியில் ஆய்வு புத்தகமாக பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு நூலை அறிமுகம் செய்ய விரும்புகிறேன், அரபு மொழி தெரிந்த அறிஞர்கள் இதை தங்களது ஆய்வுக்கு கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்,

அஸீஸா பின்தி முபாரக் அல்கல்பானி
என்ற இஸ்லாமிய பெண்ஆய்வாளர்

المسائلُ العَقَديَّة التي خالف فيها بعضُ فُقَهاء الشافعيَّة أئمَّة المذهب

"ஷாஃபிஈ மத்ஹபின் சிலர் இஸ்லாமிய கொள்கை விடயத்தில் 
தங்களது இமாம்களுக்கே மாறு செய்தார்கள் "
என்ற தலைப்பில் ஒரு ஆய்வு புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார்.

நபிமார்கள்,இறைநேசர்கள், வலிமார்களிடம் (அல்லாஹ்விடம் கேட்பது போன்று) துஆ கேட்பது (இஸ்திகாஸா,வஸீலா) என்று ஆரம்பித்து மார்க கிளை சட்டங்களில்
அவசியமாக்கப்படாத சில விடயங்களை வாஜிபுகளாக ஆக்கிய விடயங்கள் வரை துறை சார்ந்த நிபுணர்களின் நூல்களை மேற்கோள் காட்டி மிக நேர்த்தியான முறையில் இந்த புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

இந்த புத்தகத்தின் சுருக்கத்தை அரபு மொழியில் படிக்க கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும்.


இந்த புத்தகத்தை முழுவதுமாக அரபு மொழியில் டவுன்லோட் செய்து படிப்பதற்கு கீழ்காணும் சுட்டியை சொடுக்கவும்

Previous Post Next Post