அல்லாஹ் தஆலா கூறியுள்ளான்:
"அவ்வாறன்று, எனினும் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களின் உள்ளங்களின் மீது துருவாகப் படிந்து விட்டது."
(சூறா அல் முதப்பிபீன்:14)
இமாம் ஹஸனுல் பஸ்ரி றஹ் அவர்கள் இவ்வசனத்திற்கு பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்கள் :
"உங்களுக்கு துருப்பிடித்தல் என்றால் என்னவென்று தெரியும். பாவத்திற்கு பின்னால் பாவம் செய்வது. மொத்தமாக இதயமே இறந்துவிடும் அளவுக்கு பாவத்துக்கு மேல் பாவம் செய்வது."