ஒருமுறை உமர் இப்னு அப்துல் அஸீஸ் رحمه الله , காலத்தில் நிலநடுக்கம் வந்தபோது பல நாடுகளில் இருக்கும் அவருடைய பிரதிநிதிகளிடம் இவ்வாறு கட்டளையிட்டார்கள், இஸ்லாமியர்களை அல்லாஹ்விடத்தில் தவ்பா கேட்க சொல்லுங்கள், மேலும் அவனிடத்தில் தாழ்ந்து நடக்க சொல்லுங்கள், மேலும் தங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்க சொல்லுங்கள்.
இப்னு பாஸின் மஜ்மூ ஃபதவா (2/129)
“`அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்)தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.“`
(ஸுரா அஷ்-ஷூரா ஆயத்து 30)