ஸுன்னாவின் ஒளியில் அமல்களின் சிறப்புக்கள்




தொகுப்பு: 
அப்துல்லாஹ் இப்னு அலீ அல்ஜுஐஸின்

தமிழாக்கம்:
M. முஜீபுர் ரஹ்மான் உமரீ

 

உள்ளடக்கம்:

முன்னுரை

சாட்சியம் கூற வேண்டும்

நல்லறங்களைச் செய்து பாவங்களை விட்டும் விலகி ஈமானின் உறுதியை நிலை நாட்டிட வேண்டும்

அல்லாஹ்வின் 99 அழகிய பெயர்களை (அஸ்மாவுல் ஹுஸ்னா) பொருளுணர்ந்து மனனம் செய்ய வேண்டும். அப்பெயர்களின் தன்மைகளை உறுதியாக நம்ப வேண்டும்

அல்குர்ஆனை அதிகமாக ஓதவேண்டும். மேலும் அதனை பொருளுணர்ந்து படித்து அதன்படி செயல்படவேண்டும்

அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அதிகமாக திக்ர் செய்ய வேண்டும்

சொர்க்கத்தை வேண்டி துஆச் செய்யவேண்டும்

பாவமன்னிப்புத் தேடவேண்டும்

அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் கல்வி கற்க வேண்டும்

ஐவேளை கடமையான தொழுகைகளையும் உபரியான தொழுகைகளையும் நிறைவேற்ற வேண்டும்

வணக்க வழிபாடு செய்வதற்காக அதிகமாக பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்

பள்ளிவாயில் கட்டிக் கொடுக்க வேண்டும்

பாங்கிற்கு பதில் கூறவேண்டும்

நோன்பு நோற்க வேண்டும்

ஹஜ்ஜை முறையாக நிறைவேற்ற வேண்டும்

நீதியை நிலைநாட்ட அல்லாஹ்வுடைய பாதையில் போராட வேண்டும்

அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ய வேண்டும்

தர்மம் செய்ய வேண்டும்

கடனாளிக்கு -கஷ்டப்படுபவர்களுக்கு- தவணை கொடுக்க வேண்டும்.

துன்பம் தரும் பொருட்களை பாதையிலிருந்து அகற்ற வேண்டும்

விலங்கினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும்

அனாதைகளை ஆதரிக்க வேண்டும்

பெண் பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்

நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும்

வீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது

உண்மையையே பேசவேண்டும். பொய் பேசக் கூடாது

நாவையும் கற்பையும் பேணவேண்டும்

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்

பொறாமை, கர்வம் ஆகியவைகளை விட்டும் 
உள்ளத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்

நல்லோர் நற்சான்று கூறுமாறு நடந்து கொள்ளவேண்டும்

பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்

அல்லாஹ்விடத்தில் தந்தைக்காக பிள்ளை பாவமன்னிப்புக் கோரவேண்டும்.

நோய் விசாரிக்கச் செல்ல வேண்டும்

மார்க்கச் சகோதரர்களை சந்திக்கச் செல்லவேண்டும்

பிள்ளைகளோ அல்லது நேசத்திற்குரியவரோ மரணித்துவிட்டால் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்

சோதனையின் ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையை மேற்கொள்ள வேண்டும்

பார்வையை இழந்துவிட்டால் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் பொறுமை காக்கவேண்டும்

பெண் தன் கணவனுக்கு கட்டுப்பட வேண்டும்

யாசகம் கேட்கக் கூடாது

அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத் தூதராகவும்...

அல்லாஹ்விடம் கூலியை பெறும் நோக்கத்தில் பாங்கு சொல்லுதல்

கால்நடைகளை பால் கொடுக்கும் காலங்களில் பிறருக்குக் கொடுத்து விட்டு, அக்காலம் முடிந்த பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்

உடமையை பாதுகாப்பதற்காக -போரிட்டு- அநீதமாக கொலை செய்யப்பட்டவருக்குச் சொர்க்கம்

பிரசவத்தின் காரணமாக மரணித்துவிட்ட பெண்ணுக்குச் சொர்க்கம்

அன்னிய ஊரில் மரணிப்பதின் சிறப்பு

மூன்று வரிசைகளில் நின்று முஸ்லிம்களால் தொழ வைக்கப்பட்டவருக்குச் சொர்க்கம்

சோதனைக்குள்ளாக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூற வேண்டும்

ஸலாம் கூறல், உணவளித்தல், உறவினர்களுடன் இணைந்து வாழ்தல், நல்ல வார்த்தைகளில் உரையாடுதல் போன்ற நற்பண்புகளை கடைபிடிக்கவேண்டும்

தொழுகை வரிசையில் இடைவெளியை அடைக்கவேண்டும்

உடலாலும் பொருளாலும் பலவீனமான காரணத்தால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர் சொர்க்கவாதி

பெருமையடித்தல், மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகியவற்றை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்

வெட்கப்பட வேண்டும்

வியாபாரக் கொடுக்கல், வாங்கலிலும் உரிமை கோருவதிலும் உரிமை வழங்குவதிலும் நலினத்தைக் கடைபிடிக்க வேண்டும்

முஸ்லிம் சமுதாயக் கூட்டமைப்பைச் சார்ந்திருக்க வேண்டும்

நீதமான அரசன், இரக்கமுள்ள மனிதன், பிறரிடம் கையேந்தாதவர் ஆகிய மூவரின் சிறப்பு

தன்னிடம் பிறர் நல்ல முறையில் நடந்து கொள்ள விரும்புவது போன்று நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்

நீதமாக தீர்ப்புக் கூறும் நீதிபதியின் சிறப்பு

அல்லாஹ்வின் மீதே தவக்கல் வைத்திருப்பதினால் பிறரிடம் ஓதிப் பார்க்கச் செல்லாதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள், நெருப்பினால் சூடிட்டு மருத்தும் பார்க்கச் செல்லாதவர்களின் சிறப்பு

அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் வார்த்தையைக் கூற வேண்டும்

வசதியிருந்தும் -அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராக- மிகஉயர்தர ஆடைகளை அணியாமலிருப்பவரின் சிறப்பு

இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே!



முன்னுரை:

بسم الله الرحمن الرحيم 

அல்லாஹ் ஒருவனுக்கே அனைத்துப் புகழும்!
அவனையே நாம் புகழ்கின்றோம்! அவனிடமே உதவி கோருகிறோம்! அவனிடமே பாவமன்னிப்புத் தேடுகிறோம்! அவனிடமே தவ்பாச் செய்கிறோம்!
நம் ஆன்மாவின் தீங்கை விட்டும் நம்முடைய தீய செயல்களை விட்டும் அல்லாஹ்விடமே பாதுகாப்புத் தேடுகிறோம்!

அல்லாஹ் நேர்வழி காட்டியோரை எவராலும் வழிகெடுக்க முடியாது! அவன் வழிகெடுத்து விட்டோருக்கு எவராலும் நேர்வழிகாட்ட முடியாது!

இணையற்றவனான, தனித்தவனான அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியோர் எவருமில்லை என்றும் நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய அடிமையாகவும் அவனது தூதராகவும் உள்ளார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.

சொர்க்கம் செல்ல காரணமாக அமையும் அமல்களின் சிறப்புகள் ளை கூறும் சில ஹதீஸ்களை எனக்கும் என்னுடைய முஸ்லிம் சகோதரர்களுக்கும் நினைவூட்டுவதற்காக ஒன்றிணைத்துள்ளேன். இதற்கு சுன்னாவின் ஒளியில் சொர்க்கப் பாதை என்று பெயரிட்டுள்ளேன். 

- சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்களையும், சொர்க்கத்தில் நுழைய, அங்கு வீடோ, கோட்டைகளோ கட்டப்பட, சொர்க்க வாயில்கள் திறக்கப்பட, சொர்க்கத்தில் உயர்ந்த பதவி கிடைக்க, சொர்க்கக் கிரீடங்கள் அணிவிக்கப்பட, சொர்க்கத்தில் பயிர்கள் நட ஆக இவை போன்றவைகளுக்கு காரணங்களாக அமையும் அமல்களை கொண்ட ஹதீஸ்களை இந்நூலில் தொகுத்துள்ளேன்.

- மனிதன் தன் அமல்களின் காரணமாக மட்டும் சொர்க்கத்தில் நுழைந்துவிட முடியாது. அமல்கள் சொர்க்கத்தில் நுழைய காரணமாக இருந்தாலும் அல்லாஹ்வின் பெருங்கருணையினால்தான் மனிதன் சொர்க்கத்தில் நுழைய முடியும் என்பதே மார்க்க நிலைபாடு. 

(ادخلوا الجنة بما كنتم تعملون )

நீங்கள் செய்து கொண்டிருந்த (நல்லறங்களின்) காரணத்தால் நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள்! என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 16:32) இதில் சொர்க்கத்தில் நுழைய நல்ல அமல்கள் காரணமாக அமைகின்றன என்பதை அல்லாஹ் உணர்த்துகிறான். 

அமல்களின் காரணத்தால் மட்டும் ஒருவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட முடியாது. மாறாக அல்லாஹ்வின் பெருங்கருணையினால்தான் சொர்க்கத்தில் நுழைய முடியும் என நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

فَإِنَّهُ لَا يُدْخِلُ أَحَدًا الْجَنَّةَ عَمَلُهُ قَالُوا وَلَا أَنْتَ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَلَا أَنَا إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي اللَّهُ بِمَغْفِرَةٍ وَرَحْمَةٍ

நிச்சயமாக எந்த மனிதரையும் அவருடைய அமல் அவரை சொர்க்கத்தில் நுழைவித்துவிட முடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களைக் கூடவா? என்று கேட்டனர். அதற்கவர்கள், ஆம், நானும் கூட, அல்லாஹ்வின் கருணையும் பவமன்னிப்பும் என்னை சூழ்ந்து கொள்ளவில்லை என்றால் என்னைக் கூட என்னுடைய அமல் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடாது என்றார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : புகாரீ 5986)

மற்றொரு அறிவிப்பவில்

وَاعْلَمُوا أَنَّهُ لَنْ يَنْجُوَ أَحَدٌ مِنْكُمْ بِعَمَلِهِ

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களில் எவரும் அவருடைய அமலின் காரணத்தால் -மறுமையில்- வெற்றியடையந்துவிட முடியாது என்றார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 5041)

மனிதன் செய்யும் நல்லறங்களுக்கு பகரமாக சொர்க்கம் கிடைப்பதில்லை. மாறாக மனிதனின் நல்லறங்கள் சொர்க்கம் கிடைப்பதற்கு காரணமாகவே அமைகின்றன. எனவே அல்லாஹ்வின் பெருங்கருணையின் காரணமாகத்தான் சொர்க்கம் கிடைக்கிறது என்பதை மேற்கண்ட வசனமும் நபிமொழியும் உணர்த்துகின்றன.

- மிகமுக்கியமாக கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் யாதெனில் ஈமான் இல்லாமல் நிறைவேற்றப்படும் எந்த நல்லறமும் சொர்க்கத்தைப் பெற்றுதர ஒருபோதும் காரணமாக அமையாது. எனவே அனைத்து அமல்களும் முறையான இறை நம்பிக்கையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். 

- சொர்க்கத்திற்கு மனிதனை அழைத்துச் செல்லும் செயல்களை அல்லாஹ் அதிகமாக ஆக்கியிருப்பது அவன் தன் அடியார்கள் மீது செய்த பெருங்கருணைதான். மனிதர்கள் பலதரப்பட்டவர்களாக வாழ்கின்றனர். சிலருக்கு சில அமல்களை செய்யும் சக்தியும் வாய்ப்பும் இருக்கும். மற்ற அமல்களை நிறைவேற்றும் சக்தியோ, வாய்ப்போ அவருக்கு கிடைக்காமல் போய்விடலாம். பெற்றோருக்கு பணிவிடை செய்வது, அனாதைகளை அரவணைப்பது போன்ற நல்லறங்களை இலகுவாக நிறைவேற்றிடும் ஒருவருக்கு தஹஜ்ஜுத் தொழுவது, நஃபிலான நோன்பு நோற்பது போன்றவை சற்று சிரமமாக இருக்கலாம். தஹஜ்ஜுத் தொழுவது, நஃபிலான நோன்பு நோற்பது போன்ற நல்லறங்களை மிக இலகுவாக நிறைவேற்றும் ஒருவருக்கு பெற்றோருக்கு பணிவிடை செய்வது, அனாதைகளை அரவணைப்பது போன்றவை சற்று சிரமமாக இருக்கலாம்.

எனவே எந்த நல்லறங்களை உங்களால் செய்ய முடியுமோ, எதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றவோ அவைகளை தவறவிட்டுவிடாமல் பயன்படுத்திக் கொண்டு நன்மைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! உங்களால் நிறைவேற்றக் கடினமாகத் தோன்றும் நல்லறங்களையும் செய்வதற்காக முயற்சித்துக் கொண்டிருங்கள்! 

காலித் இப்னு மிஃதான் அல்கலாயீ அத்தாபியீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :
நன்மையின் வாயில் திறக்கப்பட்டுவிட்டால் அதன்பால் விரைந்து செல்லுங்கள்! ஏனெனில் அது எப்போது மூடப்படும் என்று உங்களுக்குத் தெரியாது.

இந்த நபிமொழித் தொகுப்பை பள்ளிவாயிலில் பொதுமக்களுக்கு வாசித்துக் காட்டுமாறு பள்ளிவாயில் இமாம்களை நான் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் பயனடையும் வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கலாம். 

இந்நூலை எழுதியவருக்கும் அதனை வாசிப்பவருக்கும் அதனை செவிமடுப்பவருக்கும் இந்நூலின் மூலம் பயனடையும் வாய்ப்பை அல்லாஹ் ஏற்படுத்துவானாக! அவனே செவியேற்பவன், பதிலளிப்பவன்.

மார்க்கச் சகோதரரே! இறுதியாக ஒரு வேண்டுகோள்! வெகு தொலைவில் இருக்கும் உங்களுடைய மார்க்கச் சகோதரன் -எனக்காக- நல்லவற்றை வேண்டிப் பிரார்த்திக்க மறந்துவிடாதீர்கள்! 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்
11-2-1413 ல் எழுதி நிறைவு செய்யப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு அலீ அல்ஜுஐஸின்
அல்கஸீம் - இஸ்லாமியக் கல்லூரி - ஷரீஆ பிரிவு
புரைதா - தபால் பெட்டி எண் : 281
ஸவூதி அரேபியா.


சாட்சியம் கூற வேண்டும்

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் அவன் தூதருமாவார்கள் என்றும் சாட்சி கூற வேண்டும். பிறகு இச்சாட்சியத்திற்;கிணங்க வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். 
 ( مَنْ شَهِدَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَأَنَّ عِيسَى عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ وَكَلِمَتُهُ أَلْقَاهَا إِلَى مَرْيَمَ وَرُوحٌ مِنْهُ وَالْجَنَّةُ حَقٌّ وَالنَّارُ حَقٌّ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ عَلَى مَا كَانَ مِنَ الْعَمَلِ )

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, அவன் தனித்தவன், அவனுக்கு யாதொரு இணையுமில்லை, நிச்சயமாக முஹம்மது (ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் அவனது தூதருமாவார்கள், நிச்சயமாக ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதருமாவார்கள், மேலும் அவர்கள் மரியமிடம் அல்லாஹ் போட்ட வார்த்தையும் அவனிடமிருந்து கொடுக்கப்பட்ட ரூஹும் ஆவார்கள், சொர்க்கம் இருப்பது உண்மையாகும், நரகம் இருப்பதும்; உண்மையாகும் என சாட்சி கூறுபவரை அவர் செய்த நல்லறங்களுடன் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : உபாதா பின் ஸாமித் -ரலி, நூற்கள் : புகாரீ 3140, முஸ்லிம்)

( مَا مِنْ عَبْدٍ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ مَاتَ عَلَى ذَلِكَ إِلَّا دَخَلَ الْجَنَّةَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قُلْتُ وَإِنْ زَنَى  وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قُلْتُ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ قَالَ وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ عَلَى رَغْمِ أَنْفِ أَبِي ذَرٍّ ) 
அபூதர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : 
ஓர் அடியார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறி அக்கொள்கையுடனே மரணித்து விட்டால் நிச்சயமாக அவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலுமா?! என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவன் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்! என்று பதிலளித்தார்கள். -மீண்டும்- நான் அவர் திருடினாலும் விபச்சாரம் செய்தாலுமா?! என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அவன் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்! என்று பதிலளித்தார்கள். நான் மூன்றாவது அல்லது நான்காவது தடவை இவ்வாறு கேட்டபோது அபூதரின் மூக்கு -மண்ணில் ஒட்டட்டும்! அவன் திருடினாலும் விபச்சாரம் செய்தாலும்தான்! என்று கூறினார்கள். (நூற்கள் : புகாரீ 5379, முஸ்லிம்)
( . . اذْهَبْ بِنَعْلَيَّ هَاتَيْنِ فَمَنْ لَقِيتَ مِنْ وَرَاءِ هَذَا الْحَائِطِ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُسْتَيْقِنًا بِهَا قَلْبُهُ فَبَشِّرْهُ بِالْجَنَّةِ ) 
< < < அபூஹுரைராவே! (நான் இங்குதான் இருக்கின்றேன் என்பதற்கு ஆதாரமாக) என்னுடைய இரு காலணிகளையும் எடுத்துச் செல்லுங்கள்! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என மனமார ஏற்று உறுதியாகச் சாட்சி கூறுபவருக்கு சொர்க்கம் உள்ளது என்ற சுபச்செய்தியை இந்த தோட்டத்திற்கு வெளியே நீங்கள் சந்திப்பவர்களுக்கு அறிவித்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியனுப்பினார்கள். 
(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி, அறிவிப்பவர்: அபூஹுரைரா-ரலி, நூல் : முஸ்லிம் 46)


நல்லறங்களைச் செய்து, பாவங்களை விட்டும் விலகி ஈமானின் உறுதியை நிலை நாட்டிட வேண்டும்
 
﴿ إِنَّ الَّذِيْنَ آمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ كَانَتْ لَهُمْ جَنَّاتُ الْفِرْدَوْسِ نُزُلاً – خَالِدِيْنَ فِيْهَا لاَ يَبْغُوْنَ عَنْهَا حِوَلاً ﴾
நிச்சயமாக ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிபவர்களுக்கு ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கங்கள் அவர்களின் தங்கு மிடமாகும். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். அதிலிருந்து மாறுவதை விரும்பமாட்டார்கள். 
(அல்குர்ஆன்:18:107-108)
 
﴿ وَالَّذِيْنَ آمَنُوْا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيْهَا خَالِدُوْنَ ﴾
எவர்கள் ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிகின்றார்களோ அவர்களே சொர்க்கத்திற்குரியவர்கள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். 
(அல்குர்ஆன் : 2:82)
 
﴿ إِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلاَئِكَةُ أَلاَّ تَخَافُوْا وَلاَ تَحْزَنُوْا وَأَبْشِرُوْا بِالْجَنَّةِ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ ﴾
நிச்சயமாக எங்கள் இரட்சகன் அல்லாஹ்தான் எனக் கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள் மீது (அவர்களின் மரண வேளையில்) மலக்குமார்கள் இறங்கி, நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கம் உள்ளது என்ற சுபச் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறுவார்கள். 
(அல்குர்ஆன் : 41:30)
 
﴿ إِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوْا فَلاَ خَوْفٌ عَلَيْهِمْ وَلاَ هُمْ يَحْزَنُوْنَ – اُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِيْنَ فِيْهَا جَزَاءً بِمَا كَانُوْا يَعْمَلُوْنَ ﴾
நிச்சயமாக எங்களுடைய இரட்சகன் அல்லாஹ்தான் என்று கூறி அதில் உறுதியாக நிலைத்து நின்றவர்களுக்கு யாதொரு பயமுமில்லை, அவர்கள் கவலையடையவும் மாட்டார்கள். அவர்கள் சொர்க்கவாதிகள். அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளின் கூலியாக அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். 
 (அல்குர்ஆன் : 46:13-14)
 
( كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى  )
என்னுடைய சமுதாயத்தினரில் மறுத்தவரைத் தவிர மற்ற அனைவரும் சொர்க்கத்தில் நுழைவார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! மறுப்பவர் என்றால் யார்? என்று -நபித் தோழர்கள்- கேட்டார்கள். எனக்குக் கட்டுப்பட்டவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார். எனக்கு மாறு செய்தவர் நிச்சயமாக மறுத்துவிட்டார் என்று கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 6737)
 
( مَنْ آمَنَ بِاللَّهِ وَبِرَسُولِهِ وَأَقَامَ الصَّلَاةَ وَصَامَ رَمَضَانَ كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ جَاهَدَ فِي سَبِيلِ اللَّهِ أَوْ جَلَسَ فِي أَرْضِهِ الَّتِي وُلِدَ فِيهَا . . . ) 
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் ஈமான் கொண்டு, தொழுகையைக் கடைபிடித்து, ரமலானில் நோன்பு நோற்பவரை சொர்க்கத்தில் நுழைவிப்பதை அல்லாஹ் தன்மீது கடமையாக்கிக் கொண்டான். அவர் அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் புரிந்தாலும் அல்லது அவர் பிறந்த பூமியிலேயே தங்கியிருந்தாலும் சரியே! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 2581)


அல்லாஹ்வின் 99 அழகிய பெயர்களை (அஸ்மாவுல் ஹுஸ்னா) பொருளுணர்ந்து மனனம் செய்ய வேண்டும். அப்பெயர்களின் தன்மைகளை உறுதியாக நம்ப வேண்டும்

(إِنَّ لِلَّهِ تِسْعَةً وَتِسْعِينَ اسْمًا مِائَةً إِلَّا وَاحِدًا مَنْ أَحْصَاهَا دَخَلَ الْجَنَّةَ)

நிச்சயமாக அல்லாஹ்வுக்கு நூறில் ஒன்று குறைய 99 பெயர்கள் உள்ளன. யார் அதனை எண்ணுகிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மற்றொரு அறிவிப்பில் - அதனை மனனம் செய்தவர் - என்று வந்துள்ளது.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 2531, முஸ்லிம்)



அல்குர்ஆனை அதிகமாக ஓதவேண்டும். மேலும் அதனை பொருளுணர்ந்து படித்து அதன்படி செயல்படவேண்டும்
 
 ( يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا )

நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! நீர் உலகத்தில் அழகாக ஓதியது போன்று அழகாக ஓதுவீராக! நிச்சயமாக உமது உயர் பதவி நீர் எந்த வசனத்தை இறுதியாக ஓதுகிறீரோ அந்த இடமாகும் என அல்குர்ஆனை ஓதி அதன்படி வாழ்ந்தவருக்கு (சொர்க்கத்தில் நுழையும் போது) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அம்ர்-ரலி, நூல்: திர்மிதீ2838, அபூதாவூத், அஹ்மத்)

) الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ ) 

அல்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுபவர் தூய்மையான, கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1329)
 
புகாரீயின் அறிவிப்பில், பொருளுணர்ந்து ஓதுபவர் என்ற வாசகத்திற்கு பதிலாக மனனமாக ஓதுபவர் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 

) يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ فَيَقُولُ يَا رَبِّ حَلِّهِ فَيُلْبَسُ تَاجَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ زِدْهُ فَيُلْبَسُ حُلَّةَ الْكَرَامَةِ ثُمَّ يَقُولُ يَا رَبِّ ارْضَ عَنْهُ فَيَرْضَى عَنْهُ فَيُقَالُ لَهُ اقْرَأْ وَارْقَ وَتُزَادُ بِكُلِّ آيَةٍ حَسَنَةً (

(அல்குர்ஆனை ஓதி, அதன்படி செயல்பட்டவருக்கு பரிந்துரை செய்வதற்காக) மறுமை நாளில் அல்குர்ஆன் வரும். அப்போது அது, இரட்சகனே! இவருக்கு ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். அது மீண்டும், இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ 2839)

( القرآن مشفَّع وماحِلٌ مصدَّق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقه إلى النار)

அல்குர்ஆன் செய்யும் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படும். மேலும் -அல்குர்ஆனின் கட்டளைப்படி செயல்படாதவர்களுக்கு எதிராக அது கூறும்- வாதங்களும் உண்மை என நம்பப்படும். எனவே அதன் வழிகாட்டுதலுக்கிணங்க செயல்படுவர்களை அது சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதனைப் -புறக்கணித்து- முதுகுக்குப் பின் தள்ளியவரை நரகத்தில் இழுத்து விட்டுவிடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : இப்னு ஹிப்பான்)
 
அ. ஆயத்துல் குர்ஸிய்யீ (சூரத்துல் பகராவின் 255-வது வசனம்)

(من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت)

கடமையான ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஆயத்துல் குர்ஸிய்யை ஓதுபவர் சொர்க்கம் செல்ல அவரின் மரணம்தான் தடையாக உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : நஸயீ -அமலுல் யவ்மி வல்லைலா)

ஆ. சூரத்துல் முல்க் (தபாரக்) (67-வது அத்தியாயம்)

(سورة من القرآن ما هي إلا ثلاثون آية خاصمت عن صاحبها حتى أدخلته الجنة وهى تبارك)

அல்குர்ஆனில் 30 வசனங்களை மட்டுமே கொண்ட ஒரு அத்தியாயம் உள்ளது. அதனை ஓதியவரை சொர்க்கத்தில் நுழைவிக்கும் வரை அது -அல்லாஹ்விடம்- மன்றாடும். அதுதான் தபாரக் அத்தியாயம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : தபரானீ)

 ( إِنَّ سُورَةً مِنَ الْقُرْآنِ ثَلَاثُونَ آيَةً شَفَعَتْ لِرَجُلٍ حَتَّى غُفِرَ لَهُ وَهِيَ سُورَةُ تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ )

அல்குர்ஆனில் 30 வசனங்களைக் கொண்ட ஒரு அத்தியாயம் ஒருவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும்வரை அவருக்காக பரிந்துரை செய்யும். அதுதான் தபாரக் அத்தியாயம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ 2816)

இ. குல் ஹுவல்லாஹு அஹத் (112-வது அத்தியாயம்)
(عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَقْبَلْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعَ رَجُلًا يَقْرَأُ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ الصَّمَدُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ وَجَبَتْ قُلْتُ وَمَا وَجَبَتْ قَالَ الْجَنَّةُ )

அபூஹுரைரா -ரலி அவர்கள் கூறுகின்றார்கள் :
குல் ஹுவல்லாஹு அஹத் எனும் அத்தியாயத்தை ஒருவர் ஓதியதை செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், கடமையாகிவிட்டது! என்று கூறினார்கள். அப்போது நான், என்ன கடமையாகிவிட்டது? என்று கேட்டேன். அதற்கவர்கள், அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். 
(நூல் : முஅத்தா, திர்மிதீ 2822)
 
 (. . . . وَمَا يَحْمِلُكَ أَنْ تَقْرَأَ هَذِهِ السُّورَةَ فِي كُلِّ رَكْعَةٍ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُحِبُّهَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ حُبَّهَا أَدْخَلَكَ الْجَنَّةَ )

குபா மஸ்ஜிதில் அன்ஸாரிகளுக்கு தொழுவைத்துக் கொண்டிருந்த ஒருவர் ஒவ்வொரு ரகஅத்திலும் குல் ஹுவல்லாஹு அஹத் அத்தியாயத்தை ஓதிவிட்டு அதற்குப் பிறகு மற்ற வசனங்களை ஓதுவதை வழமையாக்கிக் கொண்டிருந்தார். இதனைப் பற்றி விசாரித்த நபி (ஸல்) அவர்கள், நீர் ஒவ்வொரு ரகஅத்திலும் இந்த அத்தியாயத்தை ஓதக் காரணம் என்ன? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! நிச்சயமாக நான் அதனை நேசிக்கின்றேன்! என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக நீர் அதனை நேசிப்பது உன்னை சொர்க்கத்தில் நுழைவித்துவிடும் என்றார்கள். 
(ஹதீஸின் ஒரு பகுதி, அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : திர்மிதீ 2826)
 
 ( مَنْ قَرَأَ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ حَتَّى يَخْتِمَهَا عَشْرَ مَرَّاتٍ بَنَى اللَّهُ لَهُ قَصْرًا فِي الْجَنَّةِ  . . . )

குல் ஹுவல்லாஹு அஹத் சூராவை யாரேனும் பத்துத் தடவை முழுமையாக ஓதிமுடித்தால் அவருக்காக அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு மாளிகையைக் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அறிவிப்பவர்: முஆத்-ரலி, நூல்: அஹ்மத்15057)


அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அதிகமாக திக்ர் செய்ய வேண்டும்
 
( لَقِيتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي فَقَالَ يَا مُحَمَّدُ أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلَامَ وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ عَذْبَةُ الْمَاءِ وَأَنَّهَا قِيعَانٌ وَأَنَّ غِرَاسَهَا سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ )

என்னை இரவில் அழைத்துச் செல்லப்பட்ட -மிஃராஜ் பயணத்தின்- போது இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்தேன். அவர்கள் என்னிடம், முஹம்மதே! உங்களுடைய சமுதாயத்தினருக்கு என்னுடைய ஸலாமைக் கூறுங்கள்! நிச்சயமாக மிகத் தூய்மையான மணலையும் சுவையான தண்ணீரையும் கொண்ட சொர்க்கத்தில் பொட்டல் வெளியும் உள்ளது. அதில் நடவேண்டியது சுப்ஹானல்லாஹ், வல்ஹம்து லில்லாஹ், வலா இலாஹ இல்லல்லாஹ், வல்லாஹு அக்பர் என்பதாகும் என்பதையும் அவர்களுக்கு அறிவித்துவிடுங்கள்! என்று கூறியதாக நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். 
(அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் -ரலி, நூல் : திர்மிதீ 3384)

( مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ غُرِسَتْ لَهُ نَخْلَةٌ فِي الْجَنَّةِ ) 

ஸுப்ஹானல்லாஹி அளீம் வபி ஹம்திஹீ என யாரேனும் கூறினால் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்-ரலி, நூல்: திர்மிதீ 3386)

(عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِهِ وَهُوَ يَغْرِسُ غَرْسًا فَقَالَ يَا أَبَا هُرَيْرَةَ مَا الَّذِي تَغْرِسُ قُلْتُ غِرَاسًا لِي قَالَ أَلَا أَدُلُّكَ عَلَى غِرَاسٍ خَيْرٍ لَكَ مِنْ هَذَا قَالَ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ قُلْ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ يُغْرَسْ لَكَ بِكُلِّ وَاحِدَةٍ شَجَرَةٌ فِي الْجَنَّةِ )

பயிரை நட்டிக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களை கடந்து சென்ற நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! என்ன ஊன்றுகிறீர்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், நான் எனக்காக ஒரு கன்றை ஊன்றுகிறேன் என்றார்கள். இதனை விட உமக்குச் சிறந்த பயிரை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுவீராக! இவை ஒவ்வொன்றிற்கும் சொர்க்கத்தில் ஒரு மரம் நடப்படும் என்றார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னுமாஜா 3797)

அ. கடமையான தொழுகைக்குப் பிறகும் தூங்கச் செல்லும் போதும் ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் என்ற திக்ர்களை கூறுதல்.

(عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم قَالَ جَاءَ الْفُقَرَاءُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا ذَهَبَ أَهْلُ الدُّثُورِ مِنَ الْأَمْوَالِ بِالدَّرَجَاتِ الْعُلَا وَالنَّعِيمِ الْمُقِيمِ يُصَلُّونَ كَمَا نُصَلِّي وَيَصُومُونَ كَمَا نَصُومُ وَلَهُمْ فَضْلٌ مِنْ أَمْوَالٍ يَحُجُّونَ بِهَا وَيَعْتَمِرُونَ وَيُجَاهِدُونَ وَيَتَصَدَّقُونَ قَالَ أَلَا أُحَدِّثُكُمْ إِنْ أَخَذْتُمْ أَدْرَكْتُمْ مَنْ سَبَقَكُمْ وَلَمْ يُدْرِكْكُمْ أَحَدٌ بَعْدَكُمْ وَكُنْتُمْ خَيْرَ مَنْ أَنْتُمْ بَيْنَ ظَهْرَانَيْهِ إِلَّا مَنْ عَمِلَ مِثْلَهُ تُسَبِّحُونَ وَتَحْمَدُونَ وَتُكَبِّرُونَ خَلْفَ كُلِّ صَلَاةٍ ثَلَاثًا وَثَلَاثِينَ فَاخْتَلَفْنَا بَيْنَنَا فَقَالَ بَعْضُنَا نُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَنُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ تَقُولُ سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَاللَّهُ أَكْبَرُ حَتَّى يَكُونَ مِنْهُنَّ كُلِّهِنَّ ثَلَاثًا وَثَلَاثِينَ )

வசதிபடைத்தோர் தங்கள் பொருளாதாரத்தின் மூலம் -சொர்க்கத்தில்- உயர்ந்த பதவிகளையும் நிரந்தர இன்பங்களையும் பெற்றுத் தரும் காரியங்களில் முன்னேறிச் செல்கின்றார்கள். நாங்கள் தொழுவது போன்று அவர்களும் தொழுகின்றார்கள், நாங்கள் நோன்பு நோற்பது போன்று அவர்களும் நோன்பு நோற்கின்றார்கள், அவர்களுக்கு பொருளாதார வசதியிருப்பதினால் அதன் மூலம் ஹஜ் செய்கின்றார்கள், உம்ராச் செய்கின்றார்கள், அறப்போர் புரியச் செல்கின்றார்கள், தர்மம் செய்கின்றார்கள்! என்று ஏழைகள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உங்களுக்கு ஒன்றை அறிவிக்கட்டுமா? அதன்படி நீங்கள் செயல்பட்டால் -நன்மைகளில்- உங்களை முந்தி விட்டவர்களை நீங்கள் சென்றடைந்துவிடுவீர்கள். உங்களுக்கு பின்னுள்ளவர் எவரும் உங்களை வந்தடைய முடியாது. உங்களுடன் வாழ்பவர்களில் இதனைப் போன்று செயல்படுபவர்களைத் தவிர உள்ள அனைவர்களை விடவும் நீங்களே சிறந்தவர்களாவீர்கள்! அது என்னவெனில்: -கடமையான- ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், அல்லாஹு அக்பர் என்று கூறுங்கள் என்றார்கள். இதில் எங்களுக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. 33 தடவை ஸுப்ஹானல்லஹ், 33 தடவை அல்ஹம்து லில்லாஹ், 34 தடவை அல்லாஹுஅக்பர் என்று கூறுவோம் என எங்களில் சிலர் கூறினர். நான் -நபி (ஸல்)- அவர்களிடம் திரும்பச் சென்று விளக்கம் கேட்டேன். அதற்கவர்கள், ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வல்லாஹு அக்பர் என்று -33 தடவை- கூறு! இவ்வாறு கூறுவதினால் அவை ஒவ்வொன்றையும் 33 தடவை கூறியதாகிவிடும் என்றார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 798, முஸ்லிம்)

( خَصْلَتَانِ أَوْ خَلَّتَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا عَبْدٌ مُسْلِمٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ يُسَبِّحُ فِي دُبُرِ كُلِّ صَلَاةٍ عَشْرًا وَيَحْمَدُ عَشْرًا وَيُكَبِّرُ عَشْرًا فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ وَخَمْسُ مِائَةٍ فِي الْمِيزَانِ وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ إِذَا أَخَذَ مَضْجَعَهُ وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ فَذَلِكَ مِائَةٌ بِاللِّسَانِ وَأَلْفٌ فِي الْمِيزَانِ فَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَعْقِدُهَا بِيَدِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ هُمَا يَسِيرٌ وَمَنْ يَعْمَلُ بِهِمَا قَلِيلٌ قَالَ يَأْتِي أَحَدَكُمْ يَعْنِي الشَّيْطَانَ فِي مَنَامِهِ فَيُنَوِّمُهُ قَبْلَ أَنْ يَقُولَهُ وَيَأْتِيهِ فِي صَلَاتِهِ فَيُذَكِّرُهُ حَاجَةً قَبْلَ أَنْ يَقُولَهَا )

இரண்டு நல்லறங்கள் உள்ளன. அதனை முறையாகக் கடைபிடிக்கும் இறையடியான் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைவான். அவ்விரண்டும் மிக எளிதானது. எனினும் அதனைக் கடைபிடிப்பவர் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே! -அதில் ஒன்று- : -கடமையான- ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் 10 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்றும் 10 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்றும் 10 தடவை அல்லாஹு அக்பர் என்றும் கூறவேண்டும். இவ்வாறு -ஐவேளைத் தொழுகையில்- 150 தடவை மொழிவது மறுமைத் தராசில் 1500 நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன. மற்றொன்று : உறங்குவதற்காகப் படுக்கையில் சாயும் போது 34 தடவை அல்லாஹு அக்பர் என்றும் 33 தடவை அல்ஹம்து லில்லாஹ் என்றும் 33 தடவை ஸுப்ஹானல்லாஹ் என்றும் கூறவேண்டும். இவ்வாறு மொழிந்த 100 -திக்ர்கள்- நன்மைத் தராசில் 1000 நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித் தோழர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே! இவ்விரண்டும் மிக எளிதாக இருக்கும் போது அதனைக் கடைபிடிப்பவர் ஏன் மிகக் குறைவாக உள்ளனர்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உறங்கச் செல்லும் ஒருவரிடம் அவன் -ஷைத்தான்- வந்து இதனைக் கூறுவதற்கு முன் அவரை தூங்கவைத்துவிடுகிறான். அதுபோல் அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரிடம் வந்து இதனைக் கூறுவதற்கு முன்னரே வேலைகளை நினைவூட்டி -எழுந்திருக்கச் செய்து- விடுகிறான் என்று பதிலளித்தார்கள். 

மேலும் நபி (ஸல்) அவர்கள் கை விரல்களால் -தஸ்பீஹ் எண்ணியதை- நான் கண்டேன்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூற்கள் : அஹ்மத், அபூதாவூத் 4404, திர்மிதீ, நஸாயீ, இப்னு ஹிப்பான்)

ஆ. உளுச் செய்த பின் கூறும் திக்ர்

( . . . مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ يَتَوَضَّأُ فَيُبْلِغُ أَوْ فَيُسْبِغُ الْوَضُوءَ ثُمَّ يَقُولُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ إِلَّا فُتِحَتْ لَهُ أَبْوَابُ الْجَنَّةِ الثَّمَانِيَةُ يَدْخُلُ مِنْ أَيِّهَا شَاءَ )

உங்களில் ஒருவர் முறையாக உளுச் செய்து விட்டு, பிறகு அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லா ஷரீக்க லஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு என்று கூறுவரானால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காக திறக்கப்படுகின்றன. அதில் அவர் விரும்பியவற்றில் நுழைந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : உக்பா-ரலி, நூல் : முஸ்லிம் 345)

இ. லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
 
( . . يَا عَبْدَ اللَّهِ بْنَ قَيْسٍ أَلَا أَدُلُّكَ عَلَى كَنْزٍ مِنْ كُنُوزِ الْجَنَّةِ فَقُلْتُ بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ قُلْ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ )

அப்துல்லாஹ் இப்னு கைஸே! சொர்க்கத்தின் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷத்தை உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்றேன். அதற்கவர்கள், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று கூறு! என்றார்கள். 
(அறிவிப்பவர் : அபூ மூஸா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4873)

(أوصاني خليلي أن أكثر من قول لاحول ولا قوة إلا بالله فإنها كنز من كنوز الجنة )

லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதை அதிகமாகக் கூறுமாறு என்னுடைய உற்றநேசர் (நபி -ஸல்- அவர்கள்) எனக்கு உபதேசம் செய்தார்கள். ஏனெனில் நிச்சயமாக அது சொர்க்கத்துப் பொக்கிஷங்களில் ஒரு பொக்கிஷமாகும். 
(அறிவிப்பவர் : அபூதர் -ரலி, நூற்கள் : அஹ்மத், இப்னு ஹிப்பான்)

( مَنْ دَخَلَ السُّوقَ فَقَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ أَلْفِ حَسَنَةٍ وَمَحَا عَنْهُ أَلْفَ أَلْفِ سَيِّئَةٍ وَرَفَعَ لَهُ أَلْفَ أَلْفِ دَرَجَةٍ ) وفي رواية (وَبَنَى لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ )

கடை வீதியில் நுழையும் ஒருவர், லா யிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, யுஹ்யீ வயுமீத்து, வஹுவ ஹைய்யுன் லாயமூத்து, பியதிஹில் கைரு, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் எனக் கூறுவரானால் அவருக்கு 10 லட்சம் நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான். 10 லட்சம் தீமைகளை அல்லாஹ் அழிக்கின்றான். 10 லட்சம் அந்தஸத்துகளை உயர்த்துகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
-மற்றொரு அறிவிப்பில்- அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என்றும் வந்துள்ளது.


சொர்க்கத்தை வேண்டி துஆச் செய்யவேண்டும்

( مَنْ سَأَلَ اللَّهَ الْجَنَّةَ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ الْجَنَّةُ اللَّهُمَّ أَدْخِلْهُ الْجَنَّةَ وَمَنِ اسْتَجَارَ مِنَ النَّارِ ثَلَاثَ مَرَّاتٍ قَالَتِ النَّارُ اللَّهُمَّ أَجِرْهُ مِنَ النَّارِ ) 

சொர்க்கத்தைத் தரவேண்டுமென மூன்று தடவை யாரேனும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்! அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுவாயாக! என்று சொர்க்கம் கூறுகிறது. நரகத்தை விட்டும் காப்பாற்ற வேண்டுமென மூன்று தடவை யாரேனும் -அல்லாஹ்விடம்- பிரார்த்தித்தால், யாஅல்லாஹ்! நரகை விட்டும் இவரைக் காப்பாற்றுவாயாக! என நரகம் கூறுகிறது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : திர்மிதீ 2495, நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்)


பாவமன்னிப்புத் தேடவேண்டும்

{ إلا من تاب وآمن وعمل صالحا فألئك يدخلون الجنة ولا يظلمون شيئا}

தவ்பாச் செய்து, ஈமான் கொண்டு, நல்லறங்கள் புரிந்தவர்களே சொர்க்கத்தில் நுழைவார்கள், இவர்கள் சிறிதும் அநீதி இழைக்கப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் : 19:60)

{ يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار }

முஃமின்களே! -பாவத்திலிருந்து விலகி- தூய மனதுடன் நீங்கள் அல்லாஹ்விடம் தவ்பாச் செய்யுங்கள்! அவ்வாறு செய்தால் உங்கள் இரட்சகன் உங்கள் பாவங்களை உங்களை விட்டும் போக்கி, உங்களை சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்யலாம். அதன் கீழே சதா நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். . . . (அல்குர்ஆன் : 66:8)

செய்யதுல் இஸ்திஃபார்

( سَيِّدُ الِاسْتِغْفَارِ أَنْ تَقُولَ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ قَالَ وَمَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ وَمَنْ قَالَهَا مِنَ اللَّيْلِ وَهُوَ مُوقِنٌ بِهَا فَمَاتَ قَبْلَ أَنْ يُصْبِحَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ) 

செய்யதுல் இஸ்திஃபார் -பாவமன்னிப்புத் தேடும் வாசகங்களில் தலையாய வாசகம்- யாதெனில் :

அல்லாஹும்ம அன்த்த ரப்பீ, லாயிலாஹ இல்லா அன்த்த, கலக்த்தனீ வஅன அப்துக, வஅன அலா அஹ்திக வவஃதிக மஸ்த்ததஃத்து, அவூது பி(க்)க மின் ஷர்ரி மா ஸனஃத்து, அபூஉ ல(க்)க பிநிஃமத்தி(க்)க அலய்ய, வஅபூஉ ல(க்)க பிதன்பீ ஃபஃபிர்லீ, ஃபஇன்னஹு லா யஃபிருத் துனூப இல்லா அன்த்

இதனை உறுதியான நம்பிக்கையுடன் பகலில் கூறிய ஒருவர், மாலைப் பொழுதை அடைவதற்கு முன் அன்றைய தினமே மரணித்து விட்டால் அவர் சொர்க்கவாதிகளில் ஒருவராவார். இதனை உறுதியான நம்பிக்கையுடன் இரவில் கூறியவர் காலைப் பொழுதை அடைவதற்கு முன் மரணித்து விட்டால் அவர் சொர்க்கவாதிகளில் ஒருவராவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஷதாத் இப்னு அவ்ஸ் -ரலி, நூல் : புகாரீ 5831)


அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் கல்வி கற்க வேண்டும்

 ( . . . وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ . . . )

யாரேனும் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடப்பாரானால் அதன் மூலம் அவருக்கு அல்லாஹ் சொர்க்கப் பாதையை எளிதாக்கி விடுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 4867)


ஐவேளை கடமையான தொழுகைகளையும்
உபரியான தொழுகைகளையும் நிறைவேற்ற வேண்டும்
 
அ. ஐவேளைத் தொழுகை

( . . . خَمْسُ صَلَوَاتٍ كَتَبَهُنَّ اللَّهُ عَلَى الْعِبَادِ مَنْ جَاءَ بِهِنَّ لَمْ يُضَيِّعْ مِنْهُنَّ شَيْئًا اسْتِخْفَافًا بِحَقِّهِنَّ كَانَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ أَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ وَمَنْ لَمْ يَأْتِ بِهِنَّ فَلَيْسَ لَهُ عِنْدَ اللَّهِ عَهْدٌ إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ أَدْخَلَهُ الْجَنَّةَ )

ஐவேளைத் தொழுகைகளை அல்லாஹ் அடியார்கள் மீது கடமையாக்கியுள்ளான். அதன் கடமைகளை எளிதாகக் கருதி அதில் எதனையும் வீணாக்கி விடாமல் முறையாக நிறைவேற்றுபவரை சொர்க்கத்தில் நுழைவிக்கும் ஒப்பந்தம் அல்லாஹ்விடம் உள்ளது. அத்தொழுகைகளை யார் நிறைவேற்றவில்லையோ அவருக்கு அல்லாஹ்விடம் எந்த ஒப்பந்தமுமில்லை. அவன் நாடினால் அவருக்கு தண்டனை வழங்குவான், அவன் நாடினால் அவரை சொர்க்கத்தில் நுழைவிக்கச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : உபாதா இப்னு ஸாமித் - ரலி, நூற்கள் : முஅத்தா, அஹ்மத், அபூதாவூத், நஸாயீ 457, இப்னுமாஜா, இப்னு ஹிப்பான்)

ஆ. ஃபஜ்ர் மற்றும் அஸர் தொழுகையின் சிறப்பு

( مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ )

-பகலின்- இரு ஓர (ஃபஜ்ர் மற்றும் அஸர்) தொழுகைகளைத் தொழுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூமூஸா -ரலி, நூற்கள் : புகாரீ 540, முஸ்லிம்)

இ. தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய சுன்னத்தான தொழுகைகள்

( مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يُصَلِّي لِلَّهِ كُلَّ يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ رَكْعَةً تَطَوُّعًا غَيْرَ فَرِيضَةٍ إِلَّا بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ أَوْ إِلَّا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ . . )

ஒர் இறையடியார் கடமையல்லாத உபரியான தொழுகை 12 ரகஅத்களை தினமும் அல்லாஹ்வுக்காக தொழுவாரானால் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
(அறிவிப்பவர் : உம்மு ஹபீபா -ரலி, நூல் : முஸ்லிம் 1199)

( مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ ) 

ஒரு நாளில் யாரேனும் -உபரியான- 12 ரகஅத்கள் தொழுதால் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறக் கேட்டேன். இதனை நான் கேட்டதிலிருந்து அத்தொழுகைகளை -தொழாமல்- விடவேயில்லை என உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 1198)

(. . . أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَهَا وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الْعِشَاءِ وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ )

ளுஹருக்கு முன்னால் 4, அதற்கு பிறகு 2 ரகஅத்கள், மஃரிபுக்கு பிறகு 2 ரகஅத்கள், இஷாவுக்குப் பிறகு 2 ரகஅத்கள், ஃபஜ்ர் தொழுகைக்கு முன் 2 ரகஅத்கள் (ஆகியவை உபரியான 12 ரகஅத்களாகும்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ : 380)

ஈ. உளுவின் சுன்னத் தொழுகை

(عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ لِبِلَالٍ عِنْدَ صَلَاةِ الْغَدَاةِ يَا بِلَالُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ عِنْدَكَ فِي الْإِسْلَامِ مَنْفَعَةً فَإِنِّي سَمِعْتُ اللَّيْلَةَ خَشْفَ نَعْلَيْكَ بَيْنَ يَدَيَّ فِي الْجَنَّةِ قَالَ بِلَالٌ مَا عَمِلْتُ عَمَلًا فِي الْإِسْلَامِ أَرْجَى عِنْدِي مَنْفَعَةً مِنْ أَنِّي لَا أَتَطَهَّرُ طُهُورًا تَامًّا فِي سَاعَةٍ مِنْ لَيْلٍ وَلَا نَهَارٍ إِلَّا صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كَتَبَ اللَّهُ لِي أَنْ أُصَلِّيَ )

நன்மையைப் பெற்றுத் தரும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தில் நீர் செய்த நல்லறத்தை எனக்கு அறிவிப்பீராக! ஏனெனில் நிச்சயமாக நான் நேற்றிரவு -கனவில்- சொர்க்கத்தில் எனக்கு முன்னர் உமது செருப்பு சப்தத்தைக் கேட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம் ஃபஜ்ர் தொழுகையின் போது கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், எனக்கு நன்மை கிடைக்கும் என்ற நோக்கத்தில் இஸ்லாத்தில் நான் செய்த நல்லறம் யாதெனில், இரவு, பகல் எந்த நேரத்தில் நான் முறையாக உளுச் செய்தாலும் அந்த உளுவுடன் நான் எவ்வளவு தொழுவேன் என அல்லாஹ் எனக்கு எழுதிவிட்டானோ அதனைத் தொழுதுவிடுவேன் என்றார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா-ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 4497)

( . . يَا بِلَالُ بِمَ سَبَقْتَنِي إِلَى الْجَنَّةِ مَا دَخَلْتُ الْجَنَّةَ قَطُّ إِلَّا سَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةَ فَسَمِعْتُ خَشْخَشَتَكَ أَمَامِي فَقَالَ بِلَالٌ يَا رَسُولَ اللَّهِ مَا أَذَّنْتُ قَطُّ إِلَّا صَلَّيْتُ رَكْعَتَيْنِ وَمَا أَصَابَنِي حَدَثٌ قَطُّ إِلَّا تَوَضَّأْتُ عِنْدَهَا وَرَأَيْتُ أَنَّ لِلَّهِ عَلَيَّ رَكْعَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ بِهِمَا )

பிலாலே! எந்தச் செயலின் காரணத்தால் சொர்க்கத்தில் என்னை விட நீர் முந்திச் சென்றுவிட்டீர்! நான் -கனவில்- எப்போது சொர்க்கத்தில் நுழைந்தாலும் எனக்கு முன்னர் உமது காலடி ஓசையைக் கேட்கின்றேன்! நேற்றிரவு -கனவில்- நான் சொர்க்கத்தில் நுழைந்த போதும் எனக்கு முன்னால் உமது காலடி சப்தத்தைக் கேட்டேன் என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், நான் பாங்கு சொன்னால் கண்டிப்;பாக இரண்டு ரகஅத்கள் தொழுதுவிடுவேன், எப்போது உளு முறிந்தாலும் உடனே உளுச் செய்துவிட்டு நிச்சயமாக அல்லாஹ்வுக்காக நான் இரண்டு ரகஅத்கள் தொழவேண்டும் என எண்ணி தொழுதுவிடுவேன் என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்விரண்டின் காரணமாகத்தான்! (நீர் சொர்க்கத்தில் முந்தி விட்டீர்!) என்றார்கள். (அறிவிப்பவர் : புரைதா-ரலி, நூல் : திர்மிதீ 3622)

உ. இறையச்சத்துடனும் மன ஈடுபாட்டுடனும் 2 ரகஅத்கள் தொழுதல்

( . . . مَا مِنْ مُسْلِمٍ يَتَوَضَّأُ فَيُحْسِنُ وُضُوءَهُ ثُمَّ يَقُومُ فَيُصَلِّي رَكْعَتَيْنِ مُقْبِلٌ عَلَيْهِمَا بِقَلْبِهِ وَوَجْهِهِ إِلَّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ . . )

ஒரு முஸ்லிம் அழகிய முறையில் உளுச் செய்து, பிறகு மனதாலும் முகத்தாலும் (அல்லாஹ்வை) முன்னோக்கியவனாக இரண்டு ரகஅத்கள் தொழுவாரானால் அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : உக்பா -ரலி, நூல் : முஸ்லிம் 345)

ஊ. அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தாச் செய்தல்
 
(. . . مَعْدَانُ بْنُ أَبِي طَلْحَةَ الْيَعْمَرِيُّ قَالَ لَقِيتُ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ أَخْبِرْنِي بِعَمَلٍ أَعْمَلُهُ يُدْخِلُنِي اللَّهُ بِهِ الْجَنَّةَ أَوْ قَالَ قُلْتُ بِأَحَبِّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ فَسَكَتَ ثُمَّ سَأَلْتُهُ فَسَكَتَ ثُمَّ سَأَلْتُهُ الثَّالِثَةَ فَقَالَ سَأَلْتُ عَنْ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عَلَيْكَ بِكَثْرَةِ السُّجُودِ لِلَّهِ فَإِنَّكَ لَا تَسْجُدُ لِلَّهِ سَجْدَةً إِلَّا رَفَعَكَ اللَّهُ بِهَا دَرَجَةً وَحَطَّ عَنْكَ بِهَا خَطِيئَةً . . )

காலித் இப்னு மிஃதான் என்பவர் அறிவிக்கின்றார் :
நபி (ஸல்) அவர்களின் அடிமையான ஸவ்பான் (ரலி) அவர்களை சந்தித்த போது நான் அவர்களிடம், ஒரு அமலைச் செய்தால் அதன் மூலம் அல்லாஹ் என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யவேண்டும், அப்படிப்பட்ட அமலை எனக்கு நீங்கள் அறிவியுங்கள்! என்றோ, அல்லது அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான அமலை அறிவியுங்கள்! என்றோ நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் -பதிலளிக்காமல்- அமைதியாக இருந்தார்கள். நான் மீண்டும் அவர்களிடம் கேட்டேன். அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். நான் மூன்றாவது முறையாகக் கேட்டேன். அப்போது அவர்கள், இதைப் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், நீ அல்லாஹ்வுக்காக அதிகமாக ஸஜ்தாச் செய்து கொள்! ஏனெனில் நிச்சயமாக நீ அல்லாஹ்வுக்காக ஸஜ்தாச் செய்வதன் மூலம் அல்லாஹ் உன்னுடைய அந்தஸ்த்தை உயர்த்துகிறான். மேலும் உன்னுடைய பாவத்தை அழிக்கின்றான் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 753)

( رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ قَالَ كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي سَلْ فَقُلْتُ أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ قَالَ أَوْ غَيْرَ ذَلِكَ قُلْتُ هُوَ ذَاكَ قَالَ فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ ) 

ரபீஆ இப்னு கஃப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : 
நான் நபி (ஸல்) அவர்களுடன் இரவு தங்கியிருந்தேன். அவர்களுக்கு உளுச் செய்யத் தண்ணீர் கொண்டுவருவது போன்ற பணிவிடைகளைச் செய்தேன். அப்போது அவர்கள், ஏதேனும் கேள்! என்றார்கள். நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும்! என்றேன். இதைத் தவிர வேறு ஏதேனும் உண்டா? என்று கேட்டார்கள். இது மட்டும்தான்! என்றேன். அப்படியானால் நீ இதனை அடைவதற்காக -அல்லாஹ்வுக்கு- அதிகமாக ஸஜ்தாச் செய்து எனக்கு உதவிசெய்! என்றார்கள்.
(நூல் : முஸ்லிம் 754)

எ. இரவுத் தொழுகை

( . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ ) 

மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூற்கள் : திர்மிதீ, இப்னுமாஜா 3242, அஹ்மத், ஹாகிம்)


வணக்க, வழிபாடு செய்வதற்காக
அதிகமாக பள்ளிவாசலுக்குச் செல்ல வேண்டும்

 ( مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ أَوْ رَاحَ أَعَدَّ اللَّهُ لَهُ فِي الْجَنَّةِ نُزُلًا كُلَّمَا غَدَا أَوْ رَاحَ )

காலையிலோ, மாலையிலோ பள்ளிவாயிலுக்குச் செல்பவருக்காக அவர் காலையிலும், மாலையிலும் செல்லும் போதெல்லாம் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு தங்குமிடத்தை அல்லாஹ் ஏற்பாடு செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1073)

( ثلاثة كلهم ضامن على الله إن عاش رزق وكفي وإن مات أدخله الله الجنة، وذكم منهم: ومن خرج إلى المسجد فهو ضامن على الله )

மூன்று நபர்கள், அவர்கள் வாழ்ந்தால் போதுமான வாழ்வாதாரம் அளிக்கப்படும் என்றும் அவர்கள் மரணித்துவிட்டால் அவர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பதாகவும் அல்லாஹ் முழுப்பொறுப்பேற்றுக் கொண்டான். அம்மூவரில் பள்ளிவாயிலுக்குச் செல்வதற்காக வெளியேறுபவரும் ஒருவர். அவரும் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

மூன்று நபர்களுக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான். அவர்கள் வாழ்ந்தால் அவர்களுக்கு போதுமான வாழ்வாதாரம் அளிப்பான். மரணித்துவிட்டால் அவர்களை சொர்க்கத்தில் நுழைவிப்பான். அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்ட அம்மூவரில் பள்ளிவாயிலுக்குச் செல்வதற்காக வெளியேறுபவரும் ஒருவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : அபூதாவூத், இப்னுஹிப்பான்)


பள்ளிவாயில் கட்டிக் கொடுக்க வேண்டும்

 (. . . مَنْ بَنَى مَسْجِدًا قَالَ بُكَيْرٌ حَسِبْتُ أَنَّهُ قَالَ يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ بَنَى اللَّهُ لَهُ مِثْلَهُ فِي الْجَنَّةِ )

அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுவதற்காக யாரேனும் பள்ளிவாயில் கட்டினால் அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் அதனைப் போன்று கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உஸ்மான்; -ரலி, நூற்கள் : புகாரீ 431, முஸ்லிம்)

 ( مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ كَمَفْحَصِ قَطَاةٍ أَوْ أَصْغَرَ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ) 

யாரேனும் அல்லாஹ்வுக்காக புறா போன்ற பறவையின் இறக்கை அளவோ அல்லது அதனை விட சிறிய அளவோ பள்ளிவாயில் கட்டுவதில் பங்கெடுத்துக் கொண்டால் அல்லாஹ் அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொடுக்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் -ரலி, நூல் : இப்னுமாஜா 730)


பாங்கிற்கு பதில் கூறவேண்டும்

 ( إِذَا قَالَ الْمُؤَذِّنُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ فَقَالَ أَحَدُكُمُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ ثُمَّ قَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ قَالَ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ ثُمَّ قَالَ حَيَّ عَلَى الصَّلَاةِ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ حَيَّ عَلَى الْفَلَاحِ قَالَ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ ثُمَّ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ قَالَ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ ثُمَّ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مِنْ قَلْبِهِ دَخَلَ الْجَنَّةَ ) 

அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று முஅத்தின் கூறினால் -அதனைக் செவியேற்பவர்- அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றும் அஷ்ஹது அன் லா யிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் அஷ்ஹது அன் லா யிலாஹ இல்லல்லாஹ் என்றும் அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் என்று கூறினால் அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரசூலுல்லாஹ் என்றும் ஹய்ய அலஸ் ஸலாஹ் என்று கூறினால் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்றும் ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறினால் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்றும் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று கூறினால் அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்றும் லா யிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் லா லாயிலாஹ இல்லல்லாஹ் என்றும் உங்களில் மன ஈடுபாட்டுடன் கூறுபவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : உமர் -ரலி, நூல்: முஸ்லிம் 578)



நோன்பு நோற்க வேண்டும் 

( إِذَا جَاءَ رَمَضَانُ فُتِّحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ وَصُفِّدَتِ الشَّيَاطِينُ ) 

ரமலான் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப் படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1793)

( إِنَّ فِي الْجَنَّةِ بَابًا يُقَالُ لَهُ الرَّيَّانُ يَدْخُلُ مِنْهُ الصَّائِمُونَ يَوْمَ الْقِيَامَةِ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ يُقَالُ أَيْنَ الصَّائِمُونَ فَيَقُومُونَ لَا يَدْخُلُ مِنْهُ أَحَدٌ غَيْرُهُمْ فَإِذَا دَخَلُوا أُغْلِقَ فَلَمْ يَدْخُلْ مِنْهُ أَحَدٌ )

சொர்க்கத்தில் ரய்யான் என்றழைக்கப்படும் ஒரு வாயில் உள்ளது. மறுமை நாளில் அதில் நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதில் நுழையமாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே? என அழைப்பு விடுக்கப்படும். உடனே அவர்கள் எழுந்து அதனுள் செல்வார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதில் நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாயில் மூடப்பட்டுவிடும். அதன் பிறகு அதில் எவரும் நுழையமாட்டர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் -ரலி, நூற்கள் : புகாரீ 1763, முஸ்லிம்)

( فِي الْجَنَّةِ ثَمَانِيَةُ أَبْوَابٍ فِيهَا بَابٌ يُسَمَّى الرَّيَّانَ لَا يَدْخُلُهُ إِلَّا الصَّائِمُونَ ) 

சொர்க்கத்திற்கு எட்டு வாயில்கள் உள்ளன. அதில் ரய்யான் என்றழைக்கப்படும் ஒரு வாயில் உள்ளது. நோன்பாளிகளைத் தவிர வேறு எவரும் அதில் நுழையமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ 3017)

( . . . وَمَنْ دَخَلَهُ لَمْ يَظْمَأْ أَبَدًا )

அந்த வாயிலில் நுழைபவருக்கு ஒரு போதும் தாகமே ஏற்படாது என்ற வாசகம் திர்மிதீயின் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது. (ஹதீஸ் எண் : 696)

(. . . وَمَنْ صَامَ يَوْمًا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ )

அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் ஒரு நோன்பு நோற்பாரானால் அதன் மூலம் அவர் சொர்க்கம் செல்வது உறுதியாகி விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி, நூல் : அஹ்மத் 22235)


ஹஜ்ஜை முறையாக நிறைவேற்ற வேண்டும்

 ( الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلَّا الْجَنَّةُ )

ஒரு உம்ரா மற்றொரு உம்ராவிற்கு மத்தியிலுள்ள -சிறு- பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது. ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குரிய கூலி சொர்க்கத்தைத் தவிர வேறில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ-1650, முஸ்லிம்)
 

நீதியை நிலைநாட்ட அல்லாஹ்வின் பாதையில் போராட வேண்டும்

( تَكَفَّلَ اللَّهُ لِمَنْ جَاهَدَ فِي سَبِيلِهِ لَا يُخْرِجُهُ إِلَّا الْجِهَادُ فِي سَبِيلِهِ وَتَصْدِيقُ كَلِمَاتِهِ بِأَنْ يُدْخِلَهُ الْجَنَّةَ أَوْ يَرْجِعَهُ إِلَى مَسْكَنِهِ الَّذِي خَرَجَ مِنْهُ مَعَ مَا نَالَ مِنْ أَجْرٍ أَوْ غَنِيمَةٍ )
அல்லாஹுடைய பாதையில் போராட வேண்டும் அவனுடைய வார்த்தைகளை உண்மைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியேறி அல்லாஹ்வுடைய பாதையில் போராடுபவருக்கு அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்கிறான். -அவர் மரணித்து விட்டால்- அவரை சொர்க்கத்தில் நுழைவிப்பதாகவும் அல்லது போரில் கிடைத்த -கனீமத்- பொருள்களுடனோ நற்கூலியுடனோ அவர் வெளியேறிய வீட்டிற்கே திரும்பச் செய்வதாகவும் அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொண்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி நூற்கள் : புகாரீ 2891 முஸ்லிம்)
 
( . . . إِنَّ فِي الْجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ . . . )
நிச்சயமாக சொர்க்கத்திற்கு நூறு படித்தரங்கள் உள்ளன. அதனை அல்லாஹ்வுடைய பாதையில் அறப்போர் செய்பவர்களுக்காக அல்லாஹ் தயார் செய்து வைத்துள்ளான். அதில் இரண்டு படித்தரங்களுக்கு மத்தியில் உள்ள இடைவெளி வானம் பூமிக்கு மத்தியிலுள்ள இடைவெளியைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி நூல் : புகாரீ 2581)
 
( وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلَالِ السُّيُوفِ )
அறிந்து கொள்ளுங்கள்! சொர்க்கம் வாள்களின் நிழல்களுக்கு கீழே உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா -ரலி நூல் : புகாரீ 2607 முஸ்லிம்)
 

அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்ய வேண்டும்

( مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ فَقَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّهم عَنْهم بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ مَا عَلَى مَنْ دُعِيَ مِنْ تِلْكَ الْأَبْوَابِ مِنْ ضَرُورَةٍ فَهَلْ يُدْعَى أَحَدٌ مِنْ تِلْكَ الْأَبْوَابِ كُلِّهَا قَالَ نَعَمْ وَأَرْجُو أَنْ تَكُونَ مِنْهُمْ )
அல்லாஹ்வுடைய பாதையில் ஜோடியாக செலவு செய்தவர் சொர்க்கத்தில் பல வாயில்களிலிருந்தும் அழைக்கப்படுவார். அல்லாஹ்வின் அடிமையே! இது மிகச் சிறப்புமிக்கது! தொழுகையாளியாக இருந்தவர் ஸலாஹ் (தொழுகை) எனும் வாயிலில் அழைக்கப்படுவார். அறப்போர் புரிபவராக இருந்தவர் ஜிஹாத் (அறப்போர்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார். நோன்பாளியாக இருந்தவர் ரய்யான் எனும் வாயிலில் அழைக்கப்படுவார். தர்மம் வழங்குபவராக இருந்தவர் ஸதகா (தர்மம்) எனும் வாயிலில் அழைக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதரே! எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்! ----- யாரேனும் ஒருவர் இந்த அனைத்து வாயில்களிலிருந்தும் அழைப்படுவாரா? என்று கேட்டார்கள். அதற்கு ஆம்! நீரும் அத்தகையோரில் ஒருவராக இருக்கலாம் என நான் கருதுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி நூற்கள் : புகாரீ 1764 முஸ்லிம்)
 

தர்மம் செய்ய வேண்டும்

(. . . وَمَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ خُتِمَ لَهُ بِهَا دَخَلَ الْجَنَّةَ )
அல்லாஹ்வுடைய பொருத்தத்தைப் பெறும் நோக்கத்தில் யாரேனும் தர்மம் செய்தால் அதன் மூலம் அவர் சொர்க்கத்தில் நுழைவது உறுதியாகி விட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி நூல் : அஹ்மத் 22235)
 

கடனாளிக்கு -கஷ்டப்படுபவர்களுக்கு- தவணை கொடுக்க வேண்டும்

( أَنَّ رَجُلًا مَاتَ فَدَخَلَ الْجَنَّةَ فَقِيلَ لَهُ مَا كُنْتَ تَعْمَلُ قَالَ فَإِمَّا ذَكَرَ وَإِمَّا ذُكِّرَ فَقَالَ إِنِّي كُنْتُ أُبَايِعُ النَّاسَ فَكُنْتُ أُنْظِرُ الْمُعْسِرَ وَأَتَجَوَّزُ فِي السِّكَّةِ أَوْ فِي النَّقْدِ فَغُفِرَ لَهُ )
மரணித்து பிறகு சொர்க்கத்தில் நுழைந்துவிட்ட ஒருவரிடம் நீ என்ன அமல் செய்து கொண்டிருந்தாய்? என கேட்கப்பட்டது. அவராக நினைத்தோ அல்லது நினைவூட்டப்பட்டோ கூறினார் : நான் மக்களுக்கு வியாபாரம் செய்து கொண்டிருந்தேன். கஷ்டப்படுவோருக்கு -கடனாளிகளுக்கு- தவணை கொடுப்பேன். காசு பணங்களில் ஏதேனும் குறையிருந்தாலும் அதனை பெரிது படுத்தாது வாங்கிக் கொள்வேன் என்று கூறினார். இதனால் அவரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஹுதைஃபா -ரலி நூல் : முஸ்லிம் 2919)


துன்பம் தரும் பொருட்களை பாதையிலிருந்து அகற்ற வேண்டும்

( لَقَدْ رَأَيْتُ رَجُلًا يَتَقَلَّبُ فِي الْجَنَّةِ فِي شَجَرَةٍ قَطَعَهَا مِنْ ظَهْرِ الطَّرِيقِ كَانَتْ تُؤْذِي النَّاسَ) 
பாதையின் நடுவே மக்களுக்கு துன்பம் தந்து கொண்டிருந்த மரத்தை வெட்டியதன் காரணமாக ஒருவர் சொர்க்கத்தில் சுற்றித் திரிவதை நான் கண்டேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி நூல் : முஸ்லிம் 4745)
 
( نَزَعَ رَجُلٌ لَمْ يَعْمَلْ خَيْرًا قَطُّ غُصْنَ شَوْكٍ عَنِ الطَّرِيقِ إِمَّا كَانَ فِي شَجَرَةٍ فَقَطَعَهُ وَأَلْقَاهُ وَإِمَّا كَانَ مَوْضُوعًا فَأَمَاطَهُ فَشَكَرَ اللَّهُ لَهُ بِهَا فَأَدْخَلَهُ الْجَنَّةَ )
ஒருவர் பாதையை விட்டும் ஒரு முள் மரக் கிளையை வெட்டி எறிந்தார் அல்லது பாதையில் போடப்பட்டிந்த அந்தக் கிளையை அகற்றினார். இதனைத் தவிர வேறு எந்த நல்லறத்தையும் அவர் செய்துவிடவில்லை. எனினும் இச்செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவரை சுவர்க்கத்தில் நுழையச் செய்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : அபூதாவூத் 4565)
 

விலங்கினங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும்

( أَنَّ رَجُلًا رَأَى كَلْبًا يَأْكُلُ الثَّرَى مِنَ الْعَطَشِ فَأَخَذَ الرَّجُلُ خُفَّهُ فَجَعَلَ يَغْرِفُ لَهُ بِهِ حَتَّى أَرْوَاهُ فَشَكَرَ اللَّهُ لَهُ فَأَدْخَلَهُ الْجَنَّةَ )
ஒரு நாய் தாகத்தின் காரணமாக மண்ணை நக்கிக் கொண்டிருப்பதை கண்ட ஒருவர் தன் காலுறையைக் கழற்றி அதில் தண்ணீர் அள்ளி அதன் தாகத்தைத் தணித்தார். இச்செயலை ஏற்றுக் கொண்ட அல்லாஹ் அதன் காரணத்தால் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹ{ரைரா -ரலி நூல் : புகாரீ 168)
 

 அனாதைகளை ஆதரிக்க வேண்டும்

( أَنَا وَكَافِلُ الْيَتِيمِ فِي الْجَنَّةِ هَكَذَا وَأَشَارَ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى وَفَرَّجَ بَيْنَهُمَا شَيْئًا )
நானும் அனாதைக்கு பொறுப்பேற்றவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் சற்று விரித்துக் காட்டி சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஃது -ரலி நூல் : புகாரீ 4892)
 
( كَافِلُ الْيَتِيمِ لَهُ أَوْ لِغَيْرِهِ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ فِي الْجَنَّةِ )
தன் உறவினருடைய அனாதைக்கோ அல்லது பிறருடைய அனாதைக்கோ பொறுப்பேற்றவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு -அருகில்- இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி நூல் : முஸ்லிம் 5296)
 
( أنا أول من يفتح له باب الجنة إلا أنه تأتي امرأة تبادرني فأقول لها ما لك؟ ومن أنت؟ فتقول أنا امرأة قعدت على أيتام لي )
சொர்க்கக் கதவு முதன் முதலில் எனக்காகத்தான் திறக்கப்படும். ஆனால் என்னுடன் -சொர்க்கத்தில் நுழைய- ஒரு பெண் வருவாள். நான் அவளிடம் நீ யார்? இவ்வாறு நுழையக் காரணமென்ன? என்று கேட்பேன். அதற்கவள் நான் என்னுடைய அனாதைகளுடன் வாழ்வைக் கழித்த பெண்! என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி நூல் : அபூயஃலா)


பெண் பிள்ளைகளை நல்லொழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்

(مَنْ عَالَ جَارِيَتَيْنِ حَتَّى تَبْلُغَا جَاءَ يَوْمَ الْقِيَامَةِ أَنَا وَهُوَ وَضَمَّ أَصَابِعَهُ)
இரண்டு பெண் குழந்தைகளை பருவமடையும் வரை -முறையாக- வளர்த்தவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் விரல்களை இணைத்துக் காண்பித்தார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : முஸ்லிம் 4765)
 
( مَنْ عَالَ جَارِيَتَيْنِ دَخَلْتُ أَنَا وَهُوَ الْجَنَّةَ كَهَاتَيْنِ وَأَشَارَ بِأُصْبُعَيْهِ )
இரண்டு பெண் குழந்தைகளை முறையாக வளர்ப்பவரும் நானும் சொர்க்கத்தில் இவ்வாறு நுழைவோம் என நபி (ஸல்) அவர்கள் தம் இரு விரல்களாலும் சைகை செய்தார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூல் : திர்மிதீ 1837)
 
( عَنْ عَائِشَةَ أَنَّهَا قَالَتْ جَاءَتْنِي مِسْكِينَةٌ تَحْمِلُ ابْنَتَيْنِ لَهَا فَأَطْعَمْتُهَا ثَلَاثَ تَمَرَاتٍ فَأَعْطَتْ كُلَّ وَاحِدَةٍ مِنْهُمَا تَمْرَةً وَرَفَعَتْ إِلَى فِيهَا تَمْرَةً لِتَأْكُلَهَا فَاسْتَطْعَمَتْهَا ابْنَتَاهَا فَشَقَّتِ التَّمْرَةَ الَّتِي كَانَتْ تُرِيدُ أَنْ تَأْكُلَهَا بَيْنَهُمَا فَأَعْجَبَنِي شَأْنُهَا فَذَكَرْتُ الَّذِي صَنَعَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ اللَّهَ قَدْ أَوْجَبَ لَهَا بِهَا الْجَنَّةَ أَوْ أَعْتَقَهَا بِهَا مِنَ النَّارِ )
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
இரு சிறுமிகளை சுமந்தவளாக என்னிடம் ஒரு ஏழைப் பெண் வந்தார். நான் அவருக்கு மூன்று பேரீத்தம் பழங்களைக் கொடுத்தேன். இருவருக்கும் ஒவ்வொரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள ஒன்றை தான் உண்பதற்காக வாய் வரை உயர்த்தி விட்டார். அப்போது அவருடைய இரு பிள்ளைகளும் அதனையும் கேட்டனர். தான் உண்ண நினைத்த அப்பழத்தை இரண்டாகப் பிளந்து அவ்விருவருக்கும் கொடுத்தார். அவருடைய இச்செயலைக் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்ட நான், இச்சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கவர்கள், அவளின் இச்செயலின் காரணமாக நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தைக் கடமையாக்கிவிட்டான். அல்லது அவளை நரகத்திலிருந்து உரிமை விட்டுவிட்டான் என்றார்கள். (நூல் : முஸ்லிம் 4764)
 
( أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ جَاءَتْنِي امْرَأَةٌ وَمَعَهَا ابْنَتَانِ لَهَا فَسَأَلَتْنِي فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ وَاحِدَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا فَأَخَذَتْهَا فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا شَيْئًا ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ وَابْنَتَاهَا فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ حَدِيثَهَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنِ ابْتُلِيَ مِنَ الْبَنَاتِ بِشَيْءٍ فَأَحْسَنَ إِلَيْهِنَّ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ )
புகாரீ, முஸ்லிம் இரண்டிலும் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
ஒரு பெண்மணி இரண்டு சிறுமிகளுடன் என்னிடம் வந்து யாசகம் கேட்டார். அப்போது ஒரு பேரித்தம் பழத்தைத் தவிர வேறு எதுவும் என்னிடம் இல்லை. எனவே என்னிடம் இருந்த அதனை அவரிடம் கொடுத்தேன். அவர் அதனை இரண்டாகப் பிளந்து தன் இரு பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டு, அதில் எதனையும் அவர் உண்ணாமல் தம் பிள்ளைகளுடன் வெளியேறிச் சென்றார். இச்சம்பவத்தை என்னிடம் வந்த நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள், பெண் பிள்ளைகளின் காரணமாக ஏதேனும் சோதனைக்கு ஆளாக்கப்பட்ட ஒருவர் -அக்கஷ்டங்களுடன்- அவர்களுக்கு கருணை காட்டினால் அவரை நரகத்தை விட்டும் தடுக்கும் திரையாக அப்பிள்ளைகள் ஆகிவிடுவார்கள் என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம் 4763)
 
(من كن ثلاث بنات أو ثلاث أخوات فاتقى الله وأقام عليهن كان معي في الجنة هكذا وأومأ بالسباحة والوسطى)
எவருக்கேனும் மூன்று பெண் பிள்ளைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அல்லாஹ்வுக்குப் பயந்து அவர்களை முறையாகப் பேணிவளர்த்தால் அவர் சொர்க்கத்தில் என்னுடன் இவ்வாறு இருப்பார் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் உயர்த்தி சைகை செய்தார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : அபூ யஃலா)
 
( مَنْ كُنَّ لَهُ ثَلَاثُ بَنَاتٍ يُؤْوِيهِنَّ وَيَرْحَمُهُنَّ وَيَكْفُلُهُنَّ وَجَبَتْ لَهُ الْجَنَّةُ الْبَتَّةَ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَإِنْ كَانَتِ اثْنَتَيْنِ قَالَ وَإِنْ كَانَتِ اثْنَتَيْنِ قَالَ فَرَأَى بَعْضُ الْقَوْمِ أَنْ لَوْ قَالُوا لَهُ وَاحِدَةً لَقَالَ وَاحِدَةً )
ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து அவர்களை ஆதரித்து, இரக்கம் காட்டி, பொறுப்புடன் வளர்த்தால் அவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைத்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தால்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலும்தான்! என்று கூறினார்கள். அவர்கள் ஒரு பெண் பிள்ளையைப் பற்றி கேட்டிருந்தால் ஒரு பெண் பிள்ளை இருந்தாலும்தான்! என நிச்சயமாகக் கூறியிருப்பார்கள் என அக்கூட்டத்தில் இருந்த சிலர் கருதினர்.
(அறிவிப்பவர் : ஜாபிர் -ரலி, நூல் : அஹ்மத் 13729)
 
( مَنْ عَالَ ابْنَتَيْنِ أَوْ ثَلَاثَ بَنَاتٍ أَوْ أُخْتَيْنِ أَوْ ثَلَاثَ أَخَوَاتٍ حَتَّى يَمُتْنَ أَوْ يَمُوتَ عَنْهُنَّ كُنْتُ أَنَا وَهُوَ كَهَاتَيْنِ وَأَشَارَ بِأُصْبُعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى ) 
யாரேனும் இரண்டு அல்லது மூன்று பெண் பிள்ளைகளையோ, இரண்டு அல்லது மூன்று சகோதரிகளையோ அவர்கள் மரணிக்கும் வரை அல்லது அவர்களை விட்டும் இவர் மரணிக்கும் வரை பொறுப்பேற்றுக் கொண்டால் நானும் அவரும் சொர்க்கத்தில் இவ்வாறு இருப்போம் என நபி (ஸல்) அவர்கள் தம் நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் -உயர்த்தி- சைகை செய்தார்கள். மற்றொரு அறிவிப்பில் : அவர்கள் பருவம் அடையும் வரை என்று வந்துள்ளது.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : அஹ்மத் 12041, இப்னு ஹிப்பான்)


நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும்

(سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ الْفَمُ وَالْفَرْجُ )
எந்தச் செயலின் காரணத்தால் மக்கள் அதிகமாக சொர்க்கத்தில் நுழைவார்கள் என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அல்லாஹ்வுக்கு பயப்படுவதாலும் நற்குணத்தாலும் என்று பதிலளித்தார்கள். எந்தச் செயலின் காரணத்தால் அதிகமாக மக்கள் நரகத்தில் நுழைவார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், வாய் மற்றும் இச்சை உறுப்பின் காரணத்தால்! என்று பதிலளித்தார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : திர்மிதீ 1927)
 
( أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ )
உரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஉமாமா -ரலி, நூல் : அபூதாவூத் 4167)
 

வீண் தர்க்கத்தில் ஈடுபடக் கூடாது

( أَنَا زَعِيمٌ بِبَيْتٍ فِي رَبَضِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْمِرَاءَ وَإِنْ كَانَ مُحِقًّا وَبِبَيْتٍ فِي وَسَطِ الْجَنَّةِ لِمَنْ تَرَكَ الْكَذِبَ وَإِنْ كَانَ مَازِحًا وَبِبَيْتٍ فِي أَعْلَى الْجَنَّةِ لِمَنْ حَسَّنَ خُلُقَهُ )
உரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஉமாமா -ரலி, நூல் : அபூதாவூத் 4167)


உண்மையையே பேசவேண்டும். பொய் பேசக் கூடாது

( إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا )
நிச்சயமாக உண்மை நல்லவைகளின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக நல்லவை சொர்க்கத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. உண்மை பேசும் மனிதன் உண்மையாளனாகிவிடுகிறான். நிச்சயமாக பொய் தீமையின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக தீமை நரகத்தின் பக்கம் வழிகாட்டுகிறது. நிச்சயமாக பொய்யுரைப்பவன் அல்லாஹ்விடத்தில் பொய்யன் என்று எழுதப்படுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் -ரலி, நூற்கள் : புகாரீ 5629, முஸ்லிம்)

 
நாவையும் கற்பையும் பேணவேண்டும்

( مَنْ يَضْمَنْ لِي مَا بَيْنَ لَحْيَيْهِ وَمَا بَيْنَ رِجْلَيْهِ أَضْمَنْ لَهُ الْجَنَّةَ )
இரு தாடைகளுக்கு மத்தியிலுள்ள உறுப்பிற்கும் இரு தொடைகளுக்கு மத்தியிலுள்ள உறுப்பிற்கும் பொறுப்பேற்றுக் கொள்பவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅத் -ரலி, நூல் : புகாரீ 5993)
 

கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்

(قال رجل لرسول الله صلى الله عليه وسلم دلني على عمل يدخلني الجنة قال رسول الله صلى الله عليه وسلم لا تغضب ولك الجنة)
என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்குக் கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், நீ கோபம் கொள்ளாதே! உனக்கு சொர்க்கம் உள்ளது! என்றார்கள். 
(அறிவிப்பவர் : அபூ தர்தா -ரலி, நூல் : தபரானீ)
 
(عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَوْصِنِي قَالَ لَا تَغْضَبْ فَرَدَّدَ مِرَارًا قَالَ لَا تَغْضَبْ )
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, எனக்கு உபதேசம் செய்யுங்கள்! என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே! என்று கூறினார்கள். உபதேசம் செய்ய அவர் பல முறை வேண்டிய போதும் நபி (ஸல்) அவர்கள் நீ கோபம் கொள்ளாதே! என்றே கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 5651)
 
( مَنْ كَظَمَ غَيْظًا وَهُوَ قَادِرٌ عَلَى أَنْ يُنْفِذَهُ دَعَاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُخَيِّرَهُ اللَّهُ مِنَ الْحُورِ الْعِينِ مَا شَاءَ )
தன் கோபத்தை வெளிப்படுத்த சக்தி பெற்றிருந்தும் அதனை அடக்கிக் கொண்டவரை மறுமை நாளில் படைப்பினங்களுக்கு முன்னிலையில் அழைத்து, அவர் விரும்பிய ஹ{ருல்ஈனை (சொர்க்கத்து கன்னியரை) தேர்ந்தெடுத்துக் கொள்ள அல்லாஹ் அனுமதி வழங்குவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : முஆத் இப்னு அனஸ் அல்ஜுஹ்னீ -ரலி, நூற்கள்: அபூதாவூத் 4147, திர்மிதீ, இப்னுமாஜா)


பொறாமை, கர்வம் ஆகியவைகளை விட்டும் 
உள்ளத்தைத் தூய்மைப் படுத்த வேண்டும்

( أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ كُنَّا جُلُوسًا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَطْلُعُ عَلَيْكُمُ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ تَنْطِفُ لِحْيَتُهُ مِنْ وُضُوئِهِ قَدْ تَعَلَّقَ نَعْلَيْهِ فِي يَدِهِ الشِّمَالِ فَلَمَّا كَانَ الْغَدُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ مِثْلَ الْمَرَّةِ الْأُولَى فَلَمَّا كَانَ الْيَوْمُ الثَّالِثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ مَقَالَتِهِ أَيْضًا فَطَلَعَ ذَلِكَ الرَّجُلُ عَلَى مِثْلِ حَالِهِ الْأُولَى فَلَمَّا قَامَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ تَبِعَهُ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ فَقَالَ إِنِّي لَاحَيْتُ أَبِي فَأَقْسَمْتُ أَنْ لَا أَدْخُلَ عَلَيْهِ ثَلَاثًا فَإِنْ رَأَيْتَ أَنْ تُؤْوِيَنِي إِلَيْكَ حَتَّى تَمْضِيَ فَعَلْتَ قَالَ نَعَمْ قَالَ أَنَسٌ وَكَانَ عَبْدُ اللَّهِ يُحَدِّثُ أَنَّهُ بَاتَ مَعَهُ تِلْكَ اللَّيَالِيَ الثَّلَاثَ فَلَمْ يَرَهُ يَقُومُ مِنَ اللَّيْلِ شَيْئًا غَيْرَ أَنَّهُ إِذَا تَعَارَّ وَتَقَلَّبَ عَلَى فِرَاشِهِ ذَكَرَ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَبَّرَ حَتَّى يَقُومَ لِصَلَاةِ الْفَجْرِ قَالَ عَبْدُ اللَّهِ غَيْرَ أَنِّي لَمْ أَسْمَعْهُ يَقُولُ إِلَّا خَيْرًا فَلَمَّا مَضَتِ الثَّلَاثُ لَيَالٍ وَكِدْتُ أَنْ أَحْتَقِرَ عَمَلَهُ قُلْتُ يَا عَبْدَ اللَّهِ إِنِّي لَمْ يَكُنْ بَيْنِي وَبَيْنَ أَبِي غَضَبٌ وَلَا هَجْرٌ ثَمَّ وَلَكِنْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَكَ ثَلَاثَ مِرَارٍ يَطْلُعُ عَلَيْكُمُ الْآنَ رَجُلٌ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَطَلَعْتَ أَنْتَ الثَّلَاثَ مِرَارٍ فَأَرَدْتُ أَنْ آوِيَ إِلَيْكَ لِأَنْظُرَ مَا عَمَلُكَ فَأَقْتَدِيَ بِهِ فَلَمْ أَرَكَ تَعْمَلُ كَثِيرَ عَمَلٍ فَمَا الَّذِي بَلَغَ بِكَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ قَالَ فَلَمَّا وَلَّيْتُ دَعَانِي فَقَالَ مَا هُوَ إِلَّا مَا رَأَيْتَ غَيْرَ أَنِّي لَا أَجِدُ فِي نَفْسِي لِأَحَدٍ مِنَ الْمُسْلِمِينَ غِشًّا وَلَا أَحْسُدُ أَحَدًا عَلَى خَيْرٍ أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ فَقَالَ عَبْدُ اللَّهِ هَذِهِ الَّتِي بَلَغَتْ بِكَ وَهِيَ الَّتِي لَا نُطِيقُ )

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது சொர்க்கவாசிகளில் ஒருவர் இப்போது உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போது அன்சாரித் தோழர் ஒருவர் தாடியில் உளுச் செய்த தண்ணீர் வடிந்து கொண்டிருக்க, இடது கையில் இரு செருப்புக்களையும் பிடித்தவராக வருகை தந்தார். மறுநாள் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்தில் வந்தார். அதற்கு அடுத்த நாளும் நபி (ஸல்) அவர்கள், இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று கூறினார்கள். அப்போதும் அதே மனிதர் அதே தோற்றத்திலேயே வருகை தந்தார். நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்றதும் அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அம்மனிதரை பின் தொடர்ந்து சென்று அவரிடம், எனது தந்தையுடன் ஏற்பட்ட ஒரு பிரச்சினையின் காரணமாக அவரிடத்தில் மூன்று நாட்கள் தங்கமாட்டேன் என சத்தியம் செய்துவிட்டேன். எனவே அந்த நாட்களில் உங்களுடன் தங்க அனுமதியளித்தால் அதனை நான் நிறைவேற்றிவிடுவேன் என்று கூறினார். அதற்கவர் சம்மதம் தெரிவித்தார். ஒரு இரவோ, அல்லது மூன்று இரவுகளோ அவருடன் தங்கி அவரைக் கவனித்த அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் அவரைப் பற்றிக் கூறும்போது, 

அவர் இரவு தொழுகையை நிறைவேற்றியதாகத் தெரியவில்லை. ஆனால் படுக்கையில் புரண்டு படுக்கும் போதும் தூக்கத்திலிருந்து விழிக்கும் போதும் தக்பீர் மற்றும் திக்ர் செய்து கொள்வார். பிறகு ஃபஜ்ர் தொழுகைக்காக எழுந்து விடுவார். மேலும் நல்லவற்றைத் தவிர வேறு எதையும் அவர் பேச நான் கேட்கவில்லை. இவ்வாறு மூன்று இரவுகள் கழிந்த பிறகு நான் அவருடைய அமல்களை மிகவும் குறைவாக மதிப்பிடும் நிலைக்கு வந்துவிட்டேன். அப்போது நான் அவரிடம், அல்லாஹ்வின் அடிமையே! நிச்சயமாக எனக்கும் எனது தந்தைக்கும் மத்தியில் கோபத்தால் பிளவு ஏற்படும் அளவுக்கு எந்தப் பிரச்சினையும் நிகழவில்லை. நபி (ஸல்) அவர்கள் இப்போது சொர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடம் வருவார்! என்று மூன்று தடவை உங்களைப் பற்றி கூறக் கேட்டேன். அந்த மூன்று தடவைகளும் நீங்கள்தான் வருகை தந்தீர்கள்! எனவே உங்களுடன் தங்கியிருந்து உங்கள் அமல்களை பார்த்து அதனைப் பின்பற்ற விரும்பினேன். நான் கண்டவரை நீங்கள் பெரிய அமல் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை. அப்படியிருக்க, நபி (ஸல்) அவர்கள் உங்களைப் பற்றி இவ்வாறு கூறும் அளவிற்கு உம்மை உயர்த்தியது எது? என்று அவரிடம் கேட்டேன். அதற்கவர், நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை! என்று கூறினார். இந்நிலையில் நான் அவரிடமிருந்து விடைபெற்றேன். நான் சிறிது தூரம் வந்த பிறகு அவர் என்னை அழைத்து, நீர் பார்த்தவைகளைத் தவிர வேறு எதனையும் நான் செய்யவில்லை. அதனுடன், எந்த முஸ்லிமுக்கும் மோசடி செய்ய நினைக்கமாட்டேன். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகள் பற்றி நான் பொறாமை கொள்ளவும் மாட்டேன் என்றார். அப்போது, இவைகள்தான் உம்மை அந்த அளவிற்கு உயர்த்தி விட்டது. இதனை செயல்படுத்த முடியாதவர்களாகத்தான் நாங்கள் உள்ளோம்! என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : அஹ்மத் 12236, நஸாயீ)
 

நல்லோர் நற்சான்று கூறுமாறு நடந்து கொள்ளவேண்டும்
 
(مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرًا فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرًّا فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ قَالَ عُمَرُ فِدًى لَكَ أَبِي وَأُمِّي مُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا خَيْرٌ فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ وَمُرَّ بِجَنَازَةٍ فَأُثْنِيَ عَلَيْهَا شَرٌّ فَقُلْتَ وَجَبَتْ وَجَبَتْ وَجَبَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ خَيْرًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَمَنْ أَثْنَيْتُمْ عَلَيْهِ شَرًّا وَجَبَتْ لَهُ النَّارُ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ أَنْتُمْ شُهَدَاءُ اللَّهِ فِي الْأَرْضِ ) 
ஒரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அதனைப் பற்றி நற்சான்று கூறப்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள், கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அதனைப் பற்றி தவறான கருத்துக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! என்று கூறினார்கள். அப்போது, -அல்லாஹ்வின் தூதரே!- எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அற்பணமாகட்டும்! ஒரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அதனைப் பற்றி நற்சான்று கூறப்பட்டது. உடனே கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! என்று கூறினீர்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. அதனைப் பற்றி தவறான கருத்துக் கூறப்பட்டது. அப்போதும் கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! கடமையாகிவிட்டது! என்று கூறினீர்கள்! என அதற்கு உமர் (ரலி) அவர்கள் விளக்கம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நற்சான்று வழங்கியவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது. நீங்கள் கெட்ட அபிப்பிராயம் கூறியவருக்கு நரகம் கடமையாகிவிட்டது. பூமியில் நீங்கள் அல்லாஹ்வின் சாட்சியாளர்கள்! பூமியில் நீங்கள் அல்லாஹ்வின் சாட்சியாளர்கள்! பூமியில் நீங்கள் அல்லாஹ்வின் சாட்சியாளர்கள்! என்றார்கள்.
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1578)

(. . . قَالَ النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ فَقُلْنَا وَثَلَاثَةٌ قَالَ وَثَلَاثَةٌ فَقُلْنَا وَاثْنَانِ قَالَ وَاثْنَانِ ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الْوَاحِدِ )

யாரேனும் ஒரு முஸ்லிமுக்கு நால்வர் நற்சான்று கூறினால் அல்லாஹ் அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, மூவர் கூறினால்? என்று கேட்டோம், அதற்கவர்கள், மூவர் கூறினாலும்தான்! என்றார்கள். இருவர் கூறினால்? என்று கேட்டோம். அதற்கவர்கள், இருவர் கூறினாலும்தான்! என்றார்கள். அதன் பிறகு நாங்கள் ஒருவர் சாட்சி கூறுவதைப் பற்றி கேட்கவில்லை. (அறிவிப்பவர் : உமர் -ரலி, நூல் : புகாரீ 1279)

( أَهْلُ الْجَنَّةِ مَنْ مَلَأَ اللَّهُ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ خَيْرًا وَهُوَ يَسْمَعُ وَأَهْلُ النَّارِ مَنْ مَلَأَ أُذُنَيْهِ مِنْ ثَنَاءِ النَّاسِ شَرًّا وَهُوَ يَسْمَعُ )

தன்னைப் பற்றி மக்கள் நற்சான்று கூறுவதை யாருடைய காதுகளில் அல்லாஹ் அதிகமாக கேட்கச் செய்து விட்டானோ அவர் சொர்க்கவாதியாவார். தன்னைப் பற்றி மக்கள் தவறாகக் கூறுவதை யாருடைய காதுகளில் அல்லாஹ் அதிகமாக கேட்கச் செய்து விட்டானோ அவர் நரகவாதியாவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் -ரலி, நூல் : இப்னுமாஜா 4214)


பெற்றோர்களுக்கு பணிவிடை செய்ய வேண்டும்
 
(رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ ثُمَّ رَغِمَ أَنْفُهُ قِيلَ مَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَنْ أَدْرَكَ وَالِدَيْهِ عِنْدَ الْكِبَرِ أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا ثُمَّ لَمْ يَدْخُلِ الْجَنَّةَ ) 
அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! மீண்டும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! அவன் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், முதியோரான பெற்றோர்களில் இருவரையோ அல்லது ஒருவரையோ பெற்றுக் கொண்டும் -அவர்களுக்கு பணிவிடை செய்வதன் மூலம்- சொர்க்கம் செல்லாதவன் என்று பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 4628)
 
( الْوَالِدُ أَوْسَطُ أَبْوَابِ الْجَنَّةِ فَإِنْ شِئْتَ فَأَضِعْ ذَلِكَ الْبَابَ أَوِ احْفَظْهُ)
சொர்க்க வாயில்களில் சிறந்த வாயில் தந்தை ஆவார். நீ விரும்பினால் அந்த வாயிலை பாதுகாத்துக்கொள்! அல்லது வீணாக்கிவிடு! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூ தர்தா -ரலி, நூற்கள் : திர்மிதீ 1822, இப்னுமாஜா, அஹ்மத், இப்னு ஹிப்பான்)
 
( عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا)
அல்லாஹ்வின் தூதரே! நான் போருக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். அதுபற்றி உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன்! என்று ஜாஹிமா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்;. அதற்கு நபி (ஸல்) அவர்கள் உமக்கு தாய் இருக்கின்றாரா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். அப்படியானால் அவருக்கு முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவரின் இரு கால்களுக்குக் கீழே உள்ளது என்றார்கள். 
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு ஜாஹிமா -ரலி, நூற்கள் : அஹ்மத், நஸாயீ 3053, ஹாகிம்)

(ألك والدان؟ قلت : نعم قال الزمهما فإن الجنة تحت أرجلهما)
உனக்கு பெற்றோர்கள் இருக்கின்றார்களா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர், ஆம் என்றார். அப்படியானால் அவர்கள் இருவருக்கும் முறையாகப் பணிவிடை செய்! நிச்சயமாக சொர்க்கம் அவ்விருவரின் கால்களுக்கு கீழே உள்ளது என்று கூறியதாக தபரானீயின் அறிவிப்பவில் வந்துள்ளது.

( رِضَى الرَّبِّ فِي رِضَى الْوَالِدِ وَسَخَطُ الرَّبِّ فِي سَخَطِ الْوَالِدِ )
அல்லாஹ்வின் பொருத்தம் தந்தையின் பொருத்தத்தில் உள்ளது. அல்லாஹ்வின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூற்கள் : திர்மிதீ 1821, ஹாகிம், இப்னுஹிப்பான்)

(دخلت الجنة فسمعت فيها قراءة فقلت من هذا؟ قالوا : حارثة بن النعمان فقال رسول الله صلى الله عليه وسلم كذلكم البر كذلكم البر )
சொர்க்கத்தில் நுழைந்த போது அங்கே (குர்ஆன்) ஓதும் சப்தத்தைக் கேட்ட நான், இவர் யார்? என வினவினேன். ஹாரிஸா இப்னு நுஃமான் என்று -மலக்குகள்- பதிலளித்தனர்! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், உங்களுடைய நல்லறங்களுக்கு இவ்வாறுதான் கூலி கிடைக்கும்! உங்களுடைய நல்லறங்களுக்கு இவ்வாறுதான் கூலி கிடைக்கும்! என்றார்கள்.
(அறிவிப்பவர் : ஆயிஷா -ரலி, நூல் : ஹாகிம்)

( عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ نِمْتُ فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالُوا هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ كَذَلِكَ الْبِرُّ كَذَلِكَ الْبِرُّ وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ )
தூங்கிக் கொண்டிருந்த நான் -கனவில்- என்னை சொர்க்கத்தில் இருப்பதாகக் கண்டேன். அங்கு ஒருவர் ஓதிக் கொண்டிருக்கும் சப்தத்தை செவியுற்ற நான், இவர் யார்? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஹாரிஸா இப்னு நுஃமான் என்று பதிலளித்தார்கள்! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள், இது போன்றுதான் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! இது போன்றுதான் நல்லறங்களுக்குக் கூலி கிடைக்கும்! தாயிக்குப் பணிவிடை செய்யும் மனிதர்களிலேயே அவர் மிகச் சிறந்த பணிவிடையாளராகத் திகழ்ந்தார் என்றார்கள். 


அல்லாஹ்விடத்தில் தந்தைக்காக பிள்ளை பாவமன்னிப்புக் கோரவேண்டும்
 
( إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ أَنَّى هَذَا فَيُقَالُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ )

ஒரு மனிதருக்கு சொர்க்கத்தில் நிச்சயமாக அந்தஸ்த்துக்கள் உயர்த்தப்படும். அப்போது அவர், இது எவ்வாறு எனக்குக் கிடைத்தது? என்று ஆச்சரியப்பட்டுக் கேட்பார். இது உனக்காக உன்னுடைய மகன் பாவமன்னிப்புத் தேடியதனால் கிடைத்தது என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : அஹ்மத், இப்னுமாஜா 3650)


நோய் விசாரிக்கச் செல்ல வேண்டும்
 
( عَائِدُ الْمَرِيضِ فِي مَخْرَفَةِ الْجَنَّةِ حَتَّى يَرْجِعَ )
நோய் விசாரிப்பவர் –நோயாளியை விட்டும்- திரும்பும் வரை சொர்க்கத் தோட்டத்தில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : ஸவ்பான்-ரலி, நூல் : முஸ்லிம் 4657)

( مَنْ عَادَ مَرِيضًا لَمْ يَزَلْ فِي خُرْفَةِ الْجَنَّةِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ قَالَ جَنَاهَا )
நோய் விசாரிப்பவர் சொர்க்கப் பூங்காவில் இருக்கின்றார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது சொர்க்கப் பூங்கா என்றால் என்னவென கேட்கப்பட்டது. அதற்கவர்கள் சொர்க்கத் தோட்டம் என பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : ஸவ்பான்-ரலி, நூல் : முஸ்லிம் 4660)
 
( . . . مَا مِنْ مُسْلِمٍ يَعُودُ مُسْلِمًا غُدْوَةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُمْسِيَ وَإِنْ عَادَهُ عَشِيَّةً إِلَّا صَلَّى عَلَيْهِ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ حَتَّى يُصْبِحَ وَكَانَ لَهُ خَرِيفٌ فِي الْجَنَّةِ )
யாரேனும் ஒரு முஸ்லிம் ஒரு முஸ்லிம் நோயாளியை காலையில் விசாரிக்கச் சென்றால் 70.000 மலக்குகள் அவருக்காக மாலை வரை பிரார்த்தனை செய்கின்றார்கள். அவர் மாலையில் விசாரிக்கச் சென்றால் காலை வரை 70.000 மலக்குகள் அவருக்காக பிரார்த்தனை செய்கின்றார்கள். மேலும் சொர்க்கத்தில் அவருக்குக் காய்த்துக் குலுங்கும் தோட்டம் உள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அலீ இப்னு அபீதாலிப் -ரலி, நூற்கள் : திர்மிதீ 891, இப்னுமாஜா, அபூதாவூத்)
 
( مَنْ عَادَ مَرِيضًا أَوْ زَارَ أَخًا لَهُ فِي اللَّهِ نَادَاهُ مُنَادٍ أَنْ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّأْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا )
நோயாளியை விசாரிக்கச் சென்றால் அல்லது மார்க்கச் சகோதரனைச் சந்திக்கச் சென்றால் -மலக்குமார்களில்- அழைப்பவர் அவரை அழைத்து நீ மிகச் சிறந்த காரியம் செய்தாய்! மிகச் சிறந்த செயலுக்காக அடியெடுத்து வைத்துள்ளாய்! மேலும் சொர்க்கத்தில் உனக்கென ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டாய்! - - - என்று கூறுவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி. நூற்கள் : இப்னுமாஜா, திர்மிதீ 1931)
 

மார்க்கச் சகோதரர்களை சந்திக்கச் செல்லவேண்டும்
 
( ألا أخبركم برجالكم في الجنة؟ قالوا : بلى يا رسول الله فقال : النبي في الجنة، والصديق في الجنة، والرجل يزور أخاه في ناحية المصر لا يزوره إلا لله في الجنة)

சொர்க்கவாசிகளை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அறிவியுங்கள்! அல்லாஹ்வின் தூதரே! என -நபித்தோழர்கள்- கூறினார்கள். அப்போது, நபி சொர்க்கத்தில் இருப்பார். சித்தீக் (உண்மையாளர்) சொர்க்கத்தில் இருப்பார். பட்டணத்தின் கடைசிப் பகுதியில் வாழும் சகோதரரை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றவரும் சொர்க்கத்தில் இருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : தப்ரானீ)

(ما من عبد أتى أخاه يزوره في الله إلا ناداه مناد في السماء : أن طبت وطابت لك الجنة، وإلا قال الله في ملكوت عرشه: عبدي زار فيّ عليّ قراه، فلم يرض له بثواب دون الجنة)

ஒரு அடியான் தன் மார்க்கச் சகோதரனை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால் வானத்திலிருந்து அழைப்பவர் அவரை அழைத்து: நீ சிறந்த காரியம் செய்துவிட்டாய்! இதனால் உனக்கு சிறந்த சொர்க்கம் கிடைத்துவிட்டது! என்று கூறுவார். அதுமட்டுமல்ல! அல்லாஹ் தன் அர்ஷைச் சுற்றியுள்ள மலக்குகளிடம் : என்னுடைய அடியான் எனக்காக -அவரைச்- சந்திக்கச் சென்றுள்ளான்! எனவே அவனுக்கு நான் விருந்து உபசரணை செய்வேன்! என்று கூறுவான். எனவே அவன் சொர்க்கத்தைத் தவிர மற்ற கூலியைக் கொண்டு அவரை திருப்தியடையச் செய்யமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூற்கள் : பஸ்ஸார், அபூயஃலா)


பிள்ளைகளோ அல்லது நேசத்திற்குரியவரோ மரணித்துவிட்டால் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்
 
(يَقُولُ اللَّهُ تَعَالَى مَا لِعَبْدِي الْمُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ إِلَّا الْجَنَّةُ )
முஃமினான என்னுடைய அடியான் உலகத்தாரில் மிகஅதிகமாக நேசிக்கும் ஒருவரை நான் கைப்பற்றிய பிறகும் அவன் பொறுமையைக் கடைபிடித்தால் என்னிடத்தில் அதற்குரிய கூலி சொர்க்கத்தைத் தவிர வேறில்லை என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 5944)
 
( مَا مِنَ النَّاسِ مُسْلِمٌ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا أَدْخَلَهُ اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمْ )
முஸ்லிம்களில் எவருக்கேனும் பருவமடையாத மூன்று குழந்தைகள் மரணித்து விட்டால் அக்குழந்தைகளுக்கு வழங்கும் அருட்கொடைகளால் அல்லாஹ் அவரையும் சொர்க்கத்தில் நுழையச் செய்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் -ரலி, நூற்கள் : புகாரீ 1292)
 
( مَنِ احْتَسَبَ ثَلَاثَةً مِنْ صُلْبِهِ دَخَلَ الْجَنَّةَ فَقَامَتِ امْرَأَةٌ فَقَالَتْ أَوِ اثْنَانِ قَالَ أَوِ اثْنَانِ قَالَتِ الْمَرْأَةُ يَا لَيْتَنِي قُلْتُ وَاحِدًا )
மூன்று குழந்தைகளை இழந்தும் பொறுமையை கடைபிடிப்பவர் சொர்க்கத்தில் நுழைந்து விட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி எழுந்து, இரண்டு குழந்தைகளை இழந்தவர்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு குழந்தைகளை இழந்தவரும்தான்! என்று கூறினார்கள். நான் ஒரு குழந்தையைப் பற்றிக் கேட்டிருக்கக் கூடாதா? என்று அப்பெண் கூறினார்!
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நஸாயீ : 1849)

(أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِنِسْوَةٍ مِنَ الْأَنْصَارِ لَا يَمُوتُ لِإِحْدَاكُنَّ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَتَحْتَسِبَهُ إِلَّا دَخَلَتِ الْجَنَّةَ فَقَالَتِ امْرَأَةٌ مِنْهُنَّ أَوِ اثْنَيْنِ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَوِ اثْنَيْنِ )
மூன்று பிள்ளைகள் மரணித்த பிறகும் பொறுமையைக் கடைபிடித்தவர் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று அன்ஸாரிப் பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களில் ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! இரண்டு பிள்ளைகள் மரணித்திருந்தால்? என்று கேட்டார். இரண்டு பிள்ளைகள் மரணித்திருந்தாலும்தான்! என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 4767)
 
( لَا يَمُوتُ لِمُسْلِمٍ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ فَيَلِجَ النَّارَ إِلَّا تَحِلَّةَ الْقَسَمِ قَالَ أَبو عَبْد اللَّهِ ( وَإِنْ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا ) ) 
ஒரு முஸ்லிமுக்கு மூன்று பிள்ளைகள் மரணித்து விட்டால் (நீங்கள் நரகத்தை கடந்தே தீரவேண்டும் என்ற அல்குர்ஆன் 19:71 வசனத்தின்) சத்தியத்தை நிறைவேற்றுவதற்காக நரகத்தின் மீது கடந்து செல்வதைத் தவிர அவர் ஒரு போதும் நரகில் நுழைந்து விடமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ 1173, முஸ்லிம்)
 
(عَنْ أَبِي حَسَّانَ قَالَ قُلْتُ لِأَبِي هُرَيْرَةَ إِنَّهُ قَدْ مَاتَ لِيَ ابْنَانِ فَمَا أَنْتَ مُحَدِّثِي عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِحَدِيثٍ تُطَيِّبُ بِهِ أَنْفُسَنَا عَنْ مَوْتَانَا قَالَ قَالَ نَعَمْ صِغَارُهُمْ دَعَامِيصُ الْجَنَّةِ يَتَلَقَّى أَحَدُهُمْ أَبَاهُ أَوْ قَالَ أَبَوَيْهِ فَيَأْخُذُ بِثَوْبِهِ أَوْ قَالَ بِيَدِهِ كَمَا آخُذُ أَنَا بِصَنِفَةِ ثَوْبِكَ هَذَا فَلَا يَتَنَاهَى أَوْ قَالَ فَلَا يَنْتَهِي حَتَّى يُدْخِلَهُ اللَّهُ وَأَبَاهُ الْجَنَّةَ )
அபூஹஸ்ஸான் அவர்கள் கூறுகின்றார்கள் :
எனது இரண்டு மகன்கள் மரணித்து விட்டார்கள். மரணித்தவர்கள் பற்றி எங்களுடைய உள்ளங்கள் அமைதி பெறும் விதமாக நபி (ஸல்) அவர்களிடம் நீர் கேட்ட செய்திகளை எங்களுக்கு அறிவிக்கமாட்டீரா? என்று நான் அபூஹுரைராவிடம் கேட்டேன். அதற்கவர், ஆம்! அறிவிக்கின்றேன், மரணித்துவிட்ட உங்களுடைய சிறுவர்கள் சொர்க்கத்திலும் உங்களுடனே இருப்பார்கள். அச்சிறுவர்கள் தம் பெற்றோர்களை சந்தித்து -நான் உமது ஆடையை இப்போது பிடித்திருப்பதைப் போன்று- அவர்களின் ஆடையைப் பிடித்துக் கொண்டு அவர்களையும் அவர்களின் பெற்றோரையும் அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்யும் வரை அதனை விடமாட்டார் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள். 
(நூல் : முஸ்லிம் 4769)
 
( مُعَاوِيَةُ بْنُ قُرَّةَ عَنْ أَبِيهِ رَضِي اللَّهم عَنْهم أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ وَمَعَهُ ابْنٌ لَهُ فَقَالَ لَهُ أَتُحِبُّهُ فَقَالَ أَحَبَّكَ اللَّهُ كَمَا أُحِبُّهُ فَمَاتَ فَفَقَدَهُ فَسَأَلَ عَنْهُ فَقَالَ مَا يَسُرُّكَ أَنْ لَا تَأْتِيَ بَابًا مِنْ أَبْوَابِ الْجَنَّةِ إِلَّا وَجَدْتَهُ عِنْدَهُ يَسْعَى يَفْتَحُ لَكَ )
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்தார். அவருடன் அவருடைய மகனும் இருந்தான். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் நீர் இவனை நேசிக்கின்றீரா? என்று கேட்டார்கள். அதற்கவர், நான் இவனை நேசிப்பதைப் போன்று அல்லாஹ் உங்களை நேசிக்கட்டுமாக! என்று கூறினார். அச்சிறுவன் மரணித்து விட்டான். அச்சிறுவனை இழந்துவிட்ட அவர், அவனைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ சொர்க்க வாயில்களில் எந்த வாயிலுக்குச் சென்றாலும் அதனை உமக்காகத் திறந்துவிட அவன் ஓடிவந்து நிற்பான் என்பது உமக்கு மகிழ்ச்சியைத் தரவில்லையா! என்று கூறினார்கள். 
(அறிவிப்பவர் : முஆவியா இப்னு குர்ராஹ் -ரலி, நூல் : நஸாயீ 1847)
 
( مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ لَهُ ثَلَاثَةٌ مِنَ الْوَلَدِ لَمْ يَبْلُغُوا الْحِنْثَ إِلَّا تَلَقَّوْهُ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ الثَّمَانِيَةِ مِنْ أَيِّهَا شَاءَ دَخَلَ )
ஒரு முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று பிள்ளைகள் மரணித்துவிட்டால் சொர்க்கத்தின் எட்டு வாயில்களிலும் அவர்களை சந்தித்து, அவர் விரும்பிய வாயில் வழியாக சொர்க்கத்தில் நுழைந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உத்பா இப்னு அப்த் அஸ்ஸுலமீ -ரலி, நூல் : இப்னுமாஜா 1593)
 
( إِذَا مَاتَ وَلَدُ الْعَبْدِ قَالَ اللَّهُ لِمَلَائِكَتِهِ قَبَضْتُمْ وَلَدَ عَبْدِي فَيَقُولُونَ نَعَمْ فَيَقُولُ قَبَضْتُمْ ثَمَرَةَ فُؤَادِهِ فَيَقُولُونَ نَعَمْ فَيَقُولُ مَاذَا قَالَ عَبْدِي فَيَقُولُونَ حَمِدَكَ وَاسْتَرْجَعَ فَيَقُولُ اللَّهُ ابْنُوا لِعَبْدِي بَيْتًا فِي الْجَنَّةِ وَسَمُّوهُ بَيْتَ الْحَمْدِ )
ஒரு அடியானின் குழந்தை மரணித்துவிட்டால், அல்லாஹ் மலக்குமார்களிடம் என்னுடைய அடியானின் குழந்தையைக் கைப்பற்றிவிட்டீர்களா? என்று கேட்கின்றான். மலக்குகள் ஆம்! என்று கூறுகின்றார்கள். என்னுடைய அடியானின் உள்ளக் கனியை கைப்பற்றிவிட்டீர்களா? என்று கேட்கின்றான். அதற்கு அவர்கள், ஆம் என்று கூறுகின்றார்கள். என்னுடைய அடியான் -அப்போது- என்ன கூறினான்? என்று அல்லாஹ் கேட்கிறான். அதற்கவர்கள், அவன் உன்னைப் புகழ்ந்தான், மேலும் இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்றும் கூறினான் என்பார்கள். அப்போது அல்லாஹ், என்னுடைய அடியானுக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுங்கள்! அதற்கு பைத்துல் ஹம்த் (புகழுக்குரிய வீடு) என்று பெயரிடுங்கள்! என்று கூறுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ -ரலி, நூல் : திர்மிதீ 942)


சோதனையின் ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையை மேற்கொள்ள வேண்டும்
 
(يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ ابْنَ آدَمَ إِنْ صَبَرْتَ وَاحْتَسَبْتَ عِنْدَ الصَّدْمَةِ الْأُولَى لَمْ أَرْضَ لَكَ ثَوَابًا دُونَ الْجَنَّةِ )

ஆதமின் மகனே! சோதனை ஏற்பட்ட ஆரம்பக் கட்டத்திலேயே பொறுமையைக் கடைபிடித்து, என்னிடத்தில் கூலியையும் எதிர்பார்த்தால் அதன் கூலியாக சொர்க்கத்தை தவிர வேறு எதனைத் தரவும் நான் விரும்ப மாட்டேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூ உமாமா -ரலி, நூல் : இப்னுமாஜா 1586)


பார்வையை இழந்துவிட்டால் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும்
 
 ( إِنَّ اللَّهَ قَالَ إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ يُرِيدُ عَيْنَيْهِ )

என்னுடைய அடியானின் இரு கண்களிலும் நான் சோதனையை ஏற்படுத்தி, அதில் அவன் பொறுமையைக் கடைபிடித்தால் அதற்கு பகரமாக நான் சொர்க்கத்தைக் கொடுக்கின்றேன் என அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : புகாரீ 5221)


வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் பொறுமை காக்கவேண்டும்

 (عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا)

அதாஉ அவர்கள் கூறுகின்றார்கள் :
சொர்க்கத்துப் பெண்களில் ஒருவரை நான் உனக்கு காண்பிக்கட்டுமா? என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், ஆம்! என்றேன். இதோ இந்த கருப்புப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நிச்சயமாக நான் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் என்னுடைய ஆடைகளும் விலகி விடுகின்றன. எனவே -இந்நோய் நீங்க- எனக்காகத் துஆச் செய்யுங்கள்! என்றார். அதற்கவர், நீ பொறுமையாக இருக்க விரும்பினால் உனக்குச் சொர்க்கம் கிடைக்கும்!. அல்லது நீ விரும்பினால் உனக்கு குணமாக நான் அல்லாஹ்விடம் துஆச் செய்கின்றேன் என்றார்கள். அதற்கு அப்பெண், நான் பொறுமையாக இருந்து கொள்கிறேன், ஆனால் -வலிப்பின் போது- என்னுடைய ஆடைகள் விலகி விடுகின்றன. எனவே ஆடைகள் விலகாமல் இருக்க அல்லாஹ்விடத்தில் துஆச் செய்யுங்கள்! என்றார். நபி (ஸல்) அவர்கள் அதற்காகத் துஆச் செய்தார்கள்.
(நூற்கள் : புகாரீ 5220, முஸ்லிம்)
 

பெண் தன் கணவனுக்கு கட்டுப்பட வேண்டும்
 
(إذا صلت المرأة خمسها وحصنت فرجها وأطاعت بعلها دخلت من أي أبواب الجنة شاءت)
ஓரு பெண் ஐவேளைத் தொழுது, ரமலான் மாதம் நோன்பு நோற்று, கற்பைக் காத்து, கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்தால் சொர்க்க வாயில்களில் அவள் விரும்பிய வாயிலில் நுழையலாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : இப்னு ஹிப்பான்)

(عَنِ الْحُصَيْنِ بْنِ مِحْصَنٍ أَنَّ عَمَّةً لَهُ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي حَاجَةٍ فَفَرَغَتْ مِنْ حَاجَتِهَا فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَذَاتُ زَوْجٍ أَنْتِ قَالَتْ نَعَمْ قَالَ كَيْفَ أَنْتِ لَهُ قَالَتْ مَا آلُوهُ إِلَّا مَا عَجَزْتُ عَنْهُ قَالَ فَانْظُرِي أَيْنَ أَنْتِ مِنْهُ فَإِنَّمَا هُوَ جَنَّتُكِ وَنَارُكِ )

ஹுஸைன் இப்னு மிஹ்ஸன் (ரலி) அவர்களின் மாமி ஒரு தேவைக்காக நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களின் தேவை முடிந்து புறப்பட்ட போது நபி (ஸல்) அவர்கள், நீ கணவனுடன் வாழும் பெண்தானே? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்! என்றார். நீ அவருடன் எப்படி நடந்து கொள்கின்றாய்? என்று கேட்டார்கள். அதற்கவர், என்னால் முடியாததைத் தவிர வேறு எதிலும் நான் அவருக்கு குறை வைக்கவில்லை என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவருடைய விஷயத்தில் நீ மிகக் கவனமாக நடந்து கொள்! ஏனெனில் நிச்சயமாக அவர்தான் உன்னுடைய சொர்க்கமும் நரகமும் ஆவர் என்றார்கள்.
(அறிவிப்பவர் : ஹுஸைன் இப்னு மிஹ்ஸன் -ரலி, நூல் : அஹ்மத் 18233)

( ألا أخبركم بنساءكم من أهل الجنة؟ قالوا : بلى يا رسول الله قال : كل ولود ودود إذا غضبت أو أسيء إليها أو غضب (أي زوجها) قالت : يدي في يدك لا أكتحل بغمض حتى ترضى)
பெண்களில் சொர்க்கவாதிகளை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்று -நபித்தோழர்கள்- கூறினார்கள். அதிகமாக நேசிக்கக் கூடியவள்! அதிகமாக குழந்தையைப் பெறக் கூடியவள்! அவள் கோபப்பட்டாலோ, பிறர் அவளுக்கு தீங்கிழைத்து விட்டாலோ, கணவன் அவள் மீது கோபப்பட்டாலோ என்னுடைய கையை உன் கைமீது வைத்துவிட்டேன்! நீ என்னை பொருந்திக் கொள்ளும் வரை இமைகளுக்கு சுர்மா கூட இடமாட்டேன் என்று கூறுபவள்! என்றார்கள். (அறிவிப்பவர் : அனஸ் -ரலி, நூல் : தபரானீ)

(الودود الولود التي ظلمت أو ظلمت قالت : هذه ناصيتي بيدك لا أذوق غمضا حتى ترضى)
மற்றொரு அறிவிப்பில் : 
அதிகமாக நேசிப்பவள், அதிகமாகக் குழந்தை பெறுபவள், அவள் அநீதமிழைத்து விட்டாலோ அல்லது அவளுக்கு நீ அநீதமிழைத்தாலோ இதோ என்னுடைய நெற்றிப் பிடியை உன் கையில் கொடுத்துவிட்டேன். நீ என்னைப் பொருந்திக் கொள்ளும்வரை ---- கூட சுவைக்கமாட்டேன் என்று கூறுவாள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


யாசகம் கேட்கக் கூடாது
 
( مَنْ يَكْفُلُ لِي أَنْ لَا يَسْأَلَ النَّاسَ شَيْئًا وَأَتَكَفَّلُ لَهُ بِالْجَنَّةِ فَقَالَ ثَوْبَانُ أَنَا فَكَانَ لَا يَسْأَلُ أَحَدًا شَيْئًا )
மக்களிடம் எதனையும் -யாசகம்- கேட்கமாட்டேன் என எனக்கு உத்திரவாதம் தருபவர் யார்? அவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே ஸவ்பான் (ரலி) அவர்கள், நான்! என்று கூறினார்கள். அவர்கள் எவரிடமும் எந்த உதவியும் கேட்காதவராக இருந்தார்கள். 
(அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூற்கள் : அபூதாவூத் 1400, அஹ்மத், நஸாயீ)

فَكَانَ ثَوْبَانُ يَقَعُ سَوْطُهُ وَهُوَ رَاكِبٌ فَلَا يَقُولُ لِأَحَدٍ نَاوِلْنِيهِ حَتَّى يَنْزِلَ فَيَأْخُذَهُ 
ஸவ்பான் (ரலி) அவர்கள் வாகனத்தில் இருக்கும் போது அவருடைய சாட்டை கீழே விழுந்து விட்டால் இதனை எடுத்துத் தாருங்கள்! என்று கூட எவரிடத்திலும் கேட்க மாட்டார்கள். அவர்களே இறங்கி அதனை எடுத்துக் கொள்வார்கள். (அஹ்மத், இப்னுமாஜா : 1827)
 

அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி(ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளல். 
 
(مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ نَبِيًّا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ )
அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : முஸ்லிம் 3496)
 
( مَنْ قَالَ رَضِيتُ بِاللَّهِ رَبًّا وَبِالْإِسْلَامِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولًا وَجَبَتْ لَهُ الْجَنَّةُ )
அல்லாஹ்வை இரட்சகனாகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும், முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத் தூதராகவும் நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன் என்று கூறுபவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : அபூதாவூத் 1306)


அல்லாஹ்விடம் கூலியை பெறும் நோக்கத்தில் பாங்கு சொல்லுதல்
 
மறுமை நாளில் நாட்களை அல்லாஹ் அதற்குரிய தோற்றத்தில் எழுப்புவான். அதில் வெள்ளிக் கிழமையை ஒளிவீசும் பூக்களாக எழுப்புவான். மணமகனிடம் செல்லும் மணமகள் -அலங்கரிக்கப்படுவது- போன்று வெள்ளிக் கிழமையை -முறையாக- பேணியவர்கள் அப்பூக்களால் அலங்கரிக்கப்படுவார்கள். அவைகள் ஓளி வீசிக் கொண்டிருக்கும். அவ்வொளியில் அவர்கள் நடந்து செல்வார்கள். அவர்களின் நிறம் பணிக் கட்டி போன்று வெண்மையாக இருக்கும். அவர்களின் மணம் கஸ்தூரி போன்று கமழ்ந்து கொண்டிருக்கும். அவர்கள் கற்பூர மலையில் மூழ்குவார்கள். அவர்களை மனித இனத்தவரும் ஜின் இனத்தவரும் ஆச்சரியத்தால் கண்ணிமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்க, இந்நிலையில் அவர்கள் அனைவரும் சொர்க்கத்தில் நுழைந்து விடுவார்கள். அல்லாஹ்விடம் நற்கூலியை எதிர்பார்த்து பாங்கு சொன்னவர்களைத் தவிர மற்ற எவரும் அவர்களுடன் இணைந்து கொள்ளமுடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ -ரலி, நூல் : இப்னு ஹுஸைமா)
 
12 வருடங்கள் பாங்கு சொன்னவருக்குச் சொர்க்கம்.
 
 ( مَنْ أَذَّنَ ثِنْتَيْ عَشْرَةَ سَنَةً وَجَبَتْ لَهُ الْجَنَّةُ وَكُتِبَ لَهُ بِتَأْذِينِهِ فِي كُلِّ يَوْمٍ سِتُّونَ حَسَنَةً وَلِكُلِّ إِقَامَةٍ ثَلَاثُونَ حَسَنَةً )
பன்னிரெண்டு வருடங்கள் பாங்கு சொன்னவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது, ஒவ்வொரு நாளும் அவர் கூறும் பாங்கிற்காக 60 நன்மைகளும் இகாமத்திற்காக 30 நன்மைகளும் அவருக்கு எழுதப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூற்கள் : இப்னுமாஜா 720, ஹாகிம்)


கால்நடைகளை பால் கொடுக்கும் காலங்களில் பிறருக்குக் கொடுத்து விட்டு, அக்காலம் முடிந்த பிறகு அதனைத் திரும்பப் பெற்றுக் கொள்ள வேண்டும்
 
 ( أَرْبَعُونَ خَصْلَةً أَعْلَاهُنَّ مَنِيحَةُ الْعَنْزِ مَا مِنْ عَامِلٍ يَعْمَلُ بِخَصْلَةٍ مِنْهَا رَجَاءَ ثَوَابِهَا وَتَصْدِيقَ مَوْعُودِهَا إِلَّا أَدْخَلَهُ اللَّهُ بِهَا الْجَنَّةَ )
நாற்பது நல்லறங்கள் உள்ளன. அவைகளில் மிக உயர்ந்தவை : கால்நடைகளை பால் கொடுக்கும் காலங்களில் பிறருக்குக் கொடுத்து விட்டு, அக்காலம் முடிந்த பிறகு அதனைத் திரும்பப் பெறுவதாகும். அந்த -நாற்பது- நல்லறங்களில் ஏதேனும் ஒன்றை -அல்லாஹ்விடத்தில்- நன்மையை எதிர்பார்த்தவராகவும், அதற்காக வாக்களிக்கப்பட்ட கூலி நிச்சயமாக கிடைக்கும் என்ற நம்பிக்கையுடனும் செயல்படுத்தினால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : புகாரீ 2438)


உடமையை பாதுகாப்பதற்காக -போரிட்டு- அநீதமாக கொலை செய்யப்பட்டவருக்குச் சொர்க்கம்
 
 ( مَنْ قُتِلَ دُونَ مَالِهِ مَظْلُومًا فَلَهُ الْجَنَّةُ )
உடமையை பாதுகாப்பதற்காக -போரிட்டு- அநீதமாக கொலை செய்யப்பட்டவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : நஸாயீ 4018)
 
 ( مَنْ قُتِلَ دُونَ مَالِهِ فَهُوَ شَهِيدٌ )
தன் உடமையைக் காப்பதற்காக -போரிட்டு- கொலை செய்யப்பட்டவர் ஷஹீத் (தியாகி) ஆவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : புகாரீ 2300, முஸ்லிம்)


பிரசவத்தின் காரணமாக மரணித்துவிட்ட பெண்ணுக்குச் சொர்க்கம்
 
 ( . . الْقَتْلُ فِي سَبِيلِ اللَّهِ عَزَّ وَجَلَّ شَهَادَةٌ وَالطَّاعُونُ شَهَادَةٌ وَالْغَرَقُ شَهَادَةٌ وَالْبَطْنُ شَهَادَةٌ وَالنُّفَسَاءُ يَجُرُّهَا وَلَدُهَا بِسُرَرِهِ إِلَى الْجَنَّةِ)
அல்லாஹ்வுடைய பாதையில் போரிட்டு- கொல்லப்படுவதும் ஷஹாதத் ஆகும். காளராவினால் மரணிப்பதும் ஷஹாதத் ஆகும். மூழ்கி மரணிப்பதும் ஷஹாதத் ஆகும். வயிற்றுப் போக்கால் மரணிப்பதும் ஷஹாதத் ஆகும். பிறக்கும் குழந்தை தன் தொப்புள் கொடியினால் தாயை சொர்க்கத்தின் பக்கம் இழுக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : ராஷித் -ரலி, நூல் : அஹ்மத் 15426)
 

அன்னிய ஊரில் மரணிப்பதின் சிறப்பு
 
تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ لِمَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الرَّجُلَ إِذَا تُوُفِّيَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ فِي الْجَنَّة 
 
மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபி (ஸல்) அவர்கள், இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு -அந்தளவு இடம்- அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது என்று கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூற்கள் : அஹ்மத் 6369, நஸாயீ, இப்னுமாஜா)


வரிசைகளில் நின்று முஸ்லிம்களால் தொழ வைக்கப்பட்டவருக்குச் சொர்க்கம்
 
( مَا مِنْ مُسْلِمٍ يَمُوتُ فَيُصَلِّي عَلَيْهِ ثَلَاثَةُ صُفُوفٍ مِنَ الْمُسْلِمِينَ إِلَّا أَوْجَبَ )
 
மரணித்துவிட்ட ஒரு முஸ்லிமுக்காக மூன்று வரிசையில் நின்று முஸ்லிம்கள் தொழவைத்தால் அவருக்கு -சொர்க்கம்- கடமையாகிவிட்டது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான மாலிக் இப்னு ஹுபைரா (ரலி) அவர்கள், ஜனாஸாவில் கலந்து கொண்டவர் குறைவாக இருந்தால் -இந்த ஹதீஸின்படி செயல்படுவதற்காக- மக்களை மூன்று வரிசையாகப் பிரித்து நிற்கவைப்பார்கள் என்று மர்ஸத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 
(நூற்கள் : அபூதாவூத் 2753, திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத்)
 

சோதனைக்குள்ளாக்கப்பட்டவருக்கு ஆறுதல் கூற வேண்டும்
 
( مَا مِنْ مُؤْمِنٍ يُعَزِّي أَخَاهُ بِمُصِيبَةٍ إِلَّا كَسَاهُ اللَّهُ سُبْحَانَهُ مِنْ حُلَلِ الْكَرَامَةِ يَوْمَ الْقِيَامَةِ )
 
ஒரு முஃமின் தன் சகோதரனுக்கு ஏற்பட்டுள்ள சோதனைக்காக ஆறுதல் கூறினால் மறுமை நாளில் அல்லாஹ் அவருக்கு கண்ணியமான ஆடைகளை அணிவிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அம்ர் இப்னு ஹஸ்ம் -ரலி, நூற்கள் : இப்னுமாஜா 1590, பைஹகீ)
 

ஸலாம் கூறல், உணவளித்தல், உறவினர்களுடன் இணைந்து வாழ்தல், நல்ல வார்த்தைகளில் உரையாடுதல் போன்ற நற்பண்புகளை கடைபிடிக்கவேண்டும்
 
(وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ)
 
என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் முஃமின்களாகும் வரை சொர்க்கத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ளும் வரை முஃமின்களாக முடியாது. உங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் ஒன்றை நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 81)
 
( . . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ )
 
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி, நூற்கள் : திர்மிதீ, இப்னுமாஜா 3242, அஹ்மத், ஹாகிம்)
 
( إِنَّ فِي الْجَنَّةِ غُرْفَةً يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا أَعَدَّهَا اللَّهُ لِمَنْ أَطْعَمَ الطَّعَامَ وَأَلَانَ الْكَلَامَ وَتَابَعَ الصِّيَامَ وَصَلَّى وَالنَّاسُ نِيَامٌ )
 
சொர்க்கத்தில் ஒரு அறை உள்ளது. அதன் உட்புறத்திலிருந்து வெளிப்புறத்தையும் அதன் வெளிப்புறத்திலிருந்து உட்புறத்தையும் பார்க்கலாம். அதனை -பிறருக்கு- உணவளிப்பவருக்கும், நளினமாகப் பேசுபவருக்கும், அதிகமாக நோன்பு நோற்பவருக்கும், மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது இரவில் வணங்குபவருக்கும் அல்லாஹ் ஏற்பாடு செய்து வைத்துள்ளான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ -ரலி, நூற்கள் : அஹ்மத் 21831, இப்னுஹிப்பான், தப்ரானீ)
 
(عن شريح بن هاني عن أبيه أنه قال: يا رسول الله أخبرني بشيء يوجب لي الجنة؟ قال : عليك بحسن الكلام وبذل السلام)
 
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள்.
(அறிவிப்பவர் : ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, நூற்கள் : இப்னுஹிப்பான், ஹாகிம்)


வரிசையில் இடைவெளியை அடைக்கவேண்டும்
 
( من سد فرجة في صف رفعه الله بها درجة ونبى له بيتا في الجنة)
 
-தொழுகை- வரிசையின் இடைவெளியை அடைப்பவருக்கு அல்லாஹ் ஒரு அந்தஸ்தை உயர்த்துகிறான். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா-ரலி, நூல்: தபரானீ)
 
(من سد فرجة في الصف غفر له)
 
-தொழுகை- வரிசையின் இடைவெளியை அடைப்பவருக்கு பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா -ரலி, நூல் : பஸ்ஸார்)


உடலாலும் பொருளாலும் பலவீனமான காரணத்தால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர் சொர்க்கவாதி
 
( أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ الْجَنَّةِ كُلُّ ضَعِيفٍ مُتَضَعِّفٍ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ أَلَا أُخْبِرُكُمْ بِأَهْلِ النَّارِ كُلُّ عُتُلٍّ جَوَّاظٍ مُسْتَكْبِرٍ )
 
சொர்க்கவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (உடலாலும் பொருளாலும்) பலவீனமானவர், அதனால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர் ஒவ்வொருவரும் சொர்க்கவாதிகளே! அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். நரகவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கடின மனம் கொண்ட, பருமனான உடலுடன் ஆணவத்துடன் நடக்கும், பெருமை பிடித்த ஒவ்வொருவனும் நரகவாதியே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : ஹாரிஸா இப்னு வஹப் -ரலி, நூற்கள் : புகாரீ4537, முஸ்லிம்)
 
( احْتَجَّتِ النَّارُ وَالْجَنَّةُ فَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِي الْجَبَّارُونَ وَالْمُتَكَبِّرُونَ وَقَالَتْ هَذِهِ يَدْخُلُنِي الضُّعَفَاءُ وَالْمَسَاكِينُ فَقَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لِهَذِهِ أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ وَرُبَّمَا قَالَ أُصِيبُ بِكِ مَنْ أَشَاءُ وَقَالَ لِهَذِهِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْكُمَا مِلْؤُهَا )
 
சொர்க்கமும் நரகமும் உரையாடிக் கொண்டன. ஆணவக்காரர்களும் பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று நரகம் கூறியது. பலவீனர்களும் ஏழைகளும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது. அப்போது, நீ என்னுடைய தண்டனையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் தண்டனை வழங்குவேன்! நீ என்னுடைய கிருபையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் கிருபை செய்வேன்! மேலும் நீங்கள் இருவரும் -மக்களால்- நிரப்பப்பட்டு விடுவீர்கள்! என்று நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 5081)
 

பெருமையடித்தல், மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகியவற்றை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்
 
( مَنْ مَاتَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ الْكِبْرِ وَالْغُلُولِ وَالدَّيْنِ دَخَلَ الْجَنَّةَ )
 
பெருமையடித்தல், போரில் கிடைத்த பொருட்களில் மோசடி செய்தல், கடன் வாங்குதல் ஆகிய மூன்றை விட்டும் நீங்கியவனாக மரணித்தவன் சொர்க்கத்தில் நுழைந்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : ஸவ்பான் -ரலி, நூற்கள் : திர்மிதீ 1497, நஸாயீ, இப்னுமாஜா)


 வெட்கப்பட வேண்டும்
 
(الْحَيَاءُ مِنَ الْإِيمَانِ وَالْإِيمَانُ فِي الْجَنَّةِ وَالْبَذَاءُ مِنَ الْجَفَاءِ وَالْجَفَاءُ فِي النَّارِ)
 
வெட்கம் ஈமானில் ஒரு பகுதி, ஈமான் சொர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். கெட்ட வார்த்தைகள் வெறுப்பையும் பிளவுவையும் ஏற்படுத்தும். வெறுப்பும் பிளவும் நரகில் கொண்டு சேர்க்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூற்கள் : திர்மிதீ 1932, அஹ்மத்)


வியாபாரக் கொடுக்கல், வாங்கலிலும் உரிமை கோருவதிலும் உரிமை வழங்குவதிலும் நலினத்தைக் கடைபிடிக்க வேண்டும்
 
( . . . أَدْخَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ الْجَنَّةَ رَجُلًا كَانَ سَهْلًا مُشْتَرِيًا وَبَائِعًا وَقَاضِيًا وَمُقْتَضِيًا )
 
விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்துவிட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உஸ்மான் -ரலி, நூற்கள் : அஹ்மத் 387, நஸாயீ, இப்னுமாஜா)
 
( دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ بِسَمَاحَتِهِ قَاضِيًا وَمُتَقَاضِيًا )
 
உரிமையை கேட்கும் போதும், உரிமையை வழங்கும் போதும் நலினத்தைக் கடைபிடித்தவன் சொர்க்கத்தில் நுழைந்து விட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : அஹ்மத் 6669)
 
 
( رَحِمَ اللَّهُ رَجُلًا سَمْحًا إِذَا بَاعَ وَإِذَا اشْتَرَى وَإِذَا اقْتَضَى )
 
விற்கும் போதும், வாங்கும் போதும், உரிமையைக் கேட்கும் போதும் நலினத்தைக் கடைபிடிப்பவனுக்கு அல்லாஹ் கிருபை செய்கின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் -ரலி, நூல் : புகாரீ 1934)
 

முஸ்லிம் சமுதாயக் கூட்டமைப்பைச் சார்ந்திருக்க வேண்டும்
 
( . . . عَلَيْكُمْ بِالْجَمَاعَةِ وَإِيَّاكُمْ وَالْفُرْقَةَ فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الْوَاحِدِ وَهُوَ مِنَ الِاثْنَيْنِ أَبْعَدُ مَنْ أَرَادَ بُحْبُوحَةَ الْجَنَّةِ فَلْيَلْزَمِ الْجَمَاعَةَ . . . )
 
முஸ்லிம் சமுதாயக் கூட்டமைப்பைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிவினையை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன்! தனியாக இருப்பவனிடம் நிச்சயமாக ஷைத்தான் இருக்கின்றான், அவன் இருவராக இருப்பவர்களை விட்டும் வெகுதூரம் சென்று விடுகிறான். எவர் சொர்க்கத்தில் நடுப்பகுதியில் இருக்க விரும்புகிறாரோ அவர் முஸ்லிம் சமுதாய ஜமாஅத்தை (முஸ்லிம் ஆட்சித் தலைமையை)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உமர் -ரலி, நூல் : திர்மிதீ 2091)
 

நீதமான அரசன், இரக்கமுள்ள மனிதன், பிறரிடம் கையேந்தாதவர்  ஆகிய மூவரின் சிறப்பு
 
( . . . وَأَهْلُ الْجَنَّةِ ثَلَاثَةٌ ذُو سُلْطَانٍ مُقْسِطٌ مُتَصَدِّقٌ مُوَفَّقٌ وَرَجُلٌ رَحِيمٌ رَقِيقُ الْقَلْبِ لِكُلِّ ذِي قُرْبَى وَمُسْلِمٍ وَعَفِيفٌ مُتَعَفِّفٌ ذُو عِيَالٍ)
 
மூன்று நபர்கள் சொர்க்கவாசிகள் : நீதமாக நடந்து, தர்மங்கள் செய்து, மக்களால் போற்றப்படும் அரசன். அனைத்து உறவினர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரின் விஷயத்திலும் இரக்க குணமும் கருணை உள்ளமும் கொண்ட மனிதன். குடும்பச் சுமையிருந்தும் கூட ஹராமை விட்டும், பிறரிடம் யாசிப்பதை விட்டும் தன்னைக் காத்துக் கொண்டு, அவ்வாறே நடந்து கொள்ளுமாறு பிறரையும் தூண்டும் மனிதன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : இயாழ் இப்னு ஹிமார் -ரலி, நூல் : முஸ்லிம் 5109)


தன்னிடம் பிறர் நல்ல முறையில் நடந்து கொள்ள விரும்புவது போன்று நாம் பிறரிடம் நடந்து கொள்ள வேண்டும்
 
(. . فَمَنْ أَحَبَّ أَنْ يُزَحْزَحَ عَنِ النَّارِ وَيُدْخَلَ الْجَنَّةَ فَلْتَأْتِهِ مَنِيَّتُهُ وَهُوَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَلْيَأْتِ إِلَى النَّاسِ الَّذِي يُحِبُّ أَنْ يُؤْتَى إِلَيْهِ)
 
யார் நரகத்தை விட்டும் தூரமாகி, சொர்க்கத்தில் நுழைய விரும்புகின்ரோ அவருக்கு அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்டிருக்கும் நிலையில் மரணம் வரட்டும்! மேலும் தன்னிடம் பிறர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அவர் விரும்புவாரோ அது போன்றே அவர் பிறரிடம் நடந்து கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் -ரலி, நூல் : முஸ்லிம் 3431)


நீதமாக தீர்ப்புக் கூறும் நீதிபதியின் சிறப்பு
 
( الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ )
 
மூன்று நீதிபதிகள். அதில் ஒருவர் சொர்க்கவாதி. இருவர் நரகவாதிகள். உண்மையை அறிந்து அதன்படி தீர்ப்பு வழங்குபவர் சொர்க்கவாதி. உண்மையை அறிந்திருந்தும் அதற்கு மாற்றமான தீர்ப்பு வழங்குபவரும், கல்வியறிவு இல்லாமல் மடைமையாக மக்களுக்குத் தீர்ப்பு வழங்குபவரும் நரகவாதிகள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : புரைதா -ரலி, நூற்கள் : அபூதாவூத் 3102, திர்மிதீ, நஸாயீ, இப்னுமாஜா, ஹாகிம்)
 

அல்லாஹ்வின் மீதே தவக்கல் வைத்திருப்பதினால் பிறரிடம் ஓதிப் பார்க்கச் செல்லாதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள், நெருப்பினால் சூடிட்டு மருத்தும் பார்க்கச் செல்லாதவர்களின் சிறப்பு
 
( يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هُمِ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ )
 
என்னுடைய சமுதாயத்தில் 70.000 பேர் கேள்விக் கணக்கின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? என -நபித்தோழர்கள்- கேட்டனர். அதற்கவர்கள், அவர்கள் பிறரிடம் ஓதிப் பார்க்கச் செல்லாதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள், நெருப்பினால் கூ10டிட்டு மருத்தும் பார்க்கச் செல்லாதவர்கள், தங்களின் இரட்சகனின் மீதே தவக்குல் வைத்திருப்பவர்கள் என்றார்கள்.
(அறிவிப்பவர் : இப்ரான் இப்னு ஹுஸைன் -ரலி, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 321)
 
 
( الشِّفَاءُ فِي ثَلَاثَةٍ شَرْبَةِ عَسَلٍ وَشَرْطَةِ مِحْجَمٍ وَكَيَّةِ نَارٍ وَأَنْهَى أُمَّتِي عَنْ الْكَيِّ )
 
தேன் அருந்துவது, இரத்தம் குத்தி எடுப்பது, நெருப்பினால் சூடிட்டு மருத்துவம் செய்வது ஆகிய மூன்றிலும் நோய் நிவாரணம் உள்ளன. எனினும் நெருப்பினால் சூடிட்டு மருத்தும் செய்வதை விட்டும் என்னுடைய உம்மத்தினரை நான் தடுக்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் -ரலி, நூல் புகாரீ 5680)
 

அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறும் வார்த்தையைக் கூற வேண்டும்
 
( إِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ رِضْوَانِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَرْفَعُهُ اللَّهُ بِهَا دَرَجَاتٍ وَإِنَّ الْعَبْدَ لَيَتَكَلَّمُ بِالْكَلِمَةِ مِنْ سَخَطِ اللَّهِ لَا يُلْقِي لَهَا بَالًا يَهْوِي بِهَا فِي جَهَنَّمَ )
 
ஒரு அடியான் அல்லாஹ்வுக்குப் பிரியமான ஒரு வார்த்தையை -அதன் பயனை அறியாமல்- எதார்த்தமாக கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அதன் மூலம் அவனுக்கு பல அந்தஸ்துகளை உயர்த்துகிறான். ஒரு அடியான் அல்லாஹ் வெறுக்கக் கூடிய ஒரு வார்த்தையை -அதன் விளைவு தெரியாமல்- எதார்த்தமாகக் கூறுகிறான். ஆனால் அல்லாஹ் அதன் காரணத்தால் அவனை நரகத்தில் வீசிவிடுகிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : புகாரீ 5997)
 

வசதியிருந்தும் -அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராக- மிகஉயர்தர ஆடைகளை அணியாமலிருப்பவரின் சிறப்பு
 
( مَنْ تَرَكَ اللِّبَاسَ تَوَاضُعًا لِلَّهِ وَهُوَ يَقْدِرُ عَلَيْهِ دَعَاهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى رُءُوسِ الْخَلَائِقِ حَتَّى يُخَيِّرَهُ مِنْ أَيِّ حُلَلِ الْإِيمَانِ شَاءَ يَلْبَسُهَا )
 
வசதியிருந்தும் -அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராக- மிகஉயர்தர ஆடைகளை அணியாமல் தவிர்ந்து கொண்டவரை மறுமையில் அல்லாஹ் படைப்பினங்களுக்கு மத்தியில் அழைத்து, முஃமின்கள் அணியும் சொர்க்கத்து ஆடைகளில் அவர் விரும்பியதை அணிந்து கொள்ள அனுமதியளிப்பான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : முஆத் -ரலி, நூற்கள் : திர்மிதீ 2405, அஹ்மத், ஹாகிம்)


இவைகளும் மிக முக்கியமாக கடைபிடிக்கவேண்டிய நல்லறங்களே
 
( اضْمَنُوا لِي سِتًّا مِنْ أَنْفُسِكُمْ أَضْمَنْ لَكُمُ الْجَنَّةَ اصْدُقُوا إِذَا حَدَّثْتُمْ وَأَوْفُوا إِذَا وَعَدْتُمْ وَأَدُّوا إِذَا اؤْتُمِنْتُمْ وَاحْفَظُوا فُرُوجَكُمْ وَغُضُّوا أَبْصَارَكُمْ وَكُفُّوا أَيْدِيَكُمْ )
 
ஆறு காரியங்களைச் செய்வதாக நீங்கள் எனக்கு உத்திரவாதம் தந்தால் உங்களுக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பேசினால் உண்மையே பேசுங்கள்! வாக்களித்தால் நிறைவேற்றுங்கள்! அமாநிதத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிடுங்கள்! கற்பைக் காத்துக் கொள்ளுங்கள்! பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள்! கைகளை -அநீதம் இழைப்பதை விட்டும்- தடுத்துக் கொள்ளுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : உபாதா -ரலி, நூற்கள் : அஹ்மத் 21695, இப்னுஹிப்பான், ஹாகிம்)
 
(عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمُ الْيَوْمَ صَائِمًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمُ الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمُ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمُ الْيَوْمَ مَرِيضًا قَالَ أَبُو بَكْرٍ رَضِي اللَّه عَنْه أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ)
 
உங்களில் இன்று நோன்பு நோற்றிருப்பவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்று ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்று ஏழைக்கு உணவளித்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இன்று நோயாளியை விசாரித்தவர் யார்? என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், நான்! என்றார்கள். இவைகள் அனைத்தையும் நிறைவேற்றும் ஒருவர் நிச்சயமாக சொர்க்கத்தில் நுழைந்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(அறிவிப்பவர் : அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம் 1707)
 
 
( خمس من عملهن في يوم كتبه الله من أهل الجنة من عاد مريضاً وشهد جنازة وصام يوماً وراح يوم الجمعة وأعتق رقبة)
 
ஐந்து காரியங்கள் உள்ளன. ஒரு நாளில் அதனை யார் நிறைவேற்றுகின்றாரோ அல்லாஹ் அவரை சொர்க்கவாதிகளில் எழுதிவிடுகிறான். அவர் நோயாளியை விசாரிக்கவேண்டும். ஜனாஸாவில் கலந்து கொள்ளவேண்டும். அன்றைய தினம் நோன்பு நோற்றிருக்க வேண்டும். ஜும்ஆவிற்கு முன்னேரத்தில் செல்ல வேண்டும். அடிமையை உரிமைவிட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ -ரலி, நூல் : இப்னுஹிப்பான்)
 
( عَنْ مُعَاذٍ قَالَ عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي خَمْسٍ مَنْ فَعَلَ مِنْهُنَّ كَانَ ضَامِنًا عَلَى اللَّهِ مَنْ عَادَ مَرِيضًا أَوْ خَرَجَ مَعَ جَنَازَةٍ أَوْ خَرَجَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ أَوْ دَخَلَ عَلَى إِمَامٍ يُرِيدُ بِذَلِكَ تَعْزِيرَهُ وَتَوْقِيرَهُ أَوْ قَعَدَ فِي بَيْتِهِ فَيَسْلَمُ النَّاسُ مِنْهُ وَيَسْلَمُ )
 
ஐந்து காரியங்கள் உள்ளன. அவைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்பவர் அல்லாஹ்வின் பொறுப்பில் வந்துவிடுகிறார் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்திரவாதம் கொடுத்தார்கள். நோயாளியை விசாரிப்பவர் அல்லது ஜனாஸாவில் கலந்து கொள்பவர் அல்லது அல்லாஹ்வுடைய பாதையில் போராட வெளியேறிச் செல்பவர் அல்லது -முஸ்லிம்களின் ஆட்சித்- தலைவரை மதிக்கவேண்டும், கண்ணியப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் அவரிடம் செல்பவர் அல்லது பிறருக்கு துன்பம் கொடுக்காமலும் பிறரின் துன்பத்திற்கு ஆளாகாமலும் தன் வீட்டிலேயே அமர்ந்து கொள்பவர் என்று கூறினார்கள். 

மற்றொரு அறிவிப்பில் : எந்த மனிதரைப் பற்றியும் புறம் பேசாமல் வீட்டிலேயே அமர்ந்து கொள்பவர் என்று வந்துள்ளது.
(அறிவிப்பவர் : முஆத் இப்னு ஜபல் -ரலி, நூற்கள் : அஹ்மத் 21079, இப்னுஹுஸைமா, இப்னுஹிப்பான், ஹாகிம்)

அபூ கஸீர் அஸ்ஸுஹைமீ அவர்கள் தன் தந்தை கூறியதாக அறிவிக்கின்றார்கள் :
ஒரு அடியான் ஒரு அமலைச் செய்தால் சொர்க்கத்தில் நுழைந்துவிட வேண்டும்! அத்தகைய அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று அபூதர் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், அல்லாஹ்வை ஈமான் கொள்ளவேண்டும் என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக ஈமானுடன் செயல்களும் உள்ளன! என்றேன். அதற்கவர்கள், அல்லாஹ் அவருக்கு வழங்கியதிலிருந்து சிறிதளவாவது தர்மம் செய்யவேண்டும் என்றார்கள். அவரிடம் எதுவும் இல்லை என்றால்? என்று நான் கேட்டேன். அதற்கவர்கள், அவர் தன் நாவால் நல்லவைகளைக் கூறட்டும்! என்றார்கள். அவர் சரியாக பேசமுடியாத திக்குவாய்க்காரராக இருந்தால்? என்று கேட்டேன். அதற்கவர்கள், பலவீனமானவருக்கு உதவி செய்யட்டும்! என்று கூறினார்கள். அவரே சக்தியற்ற பலவீனமானவராக இருந்தால்? என்று கேட்டேன். கைத்தொழில் தெரியாதவனுக்கு அதனைக் கற்றுக் கொடுக்கட்டும்! என்றார்கள். அவரே தொழில் தெரியாதவராக இருந்தால்? என்று கேட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னை நோக்கிப் பார்த்து, உன்னுடைய நண்பனிடம் எந்த ஒரு நலவையும் விட்டுவைக்க நீர் விரும்பவில்லை போலும்! அவன் மக்களுக்கு துன்பமிழைக்காமல் இருக்கட்டும்! என்று கூறினார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! நிச்சயமாக இது இலகுவான வார்த்தையாகும் என்றேன். அதற்கவர்கள், என்னுடைய உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, யாரேனும் ஒர் அடியான் அல்லாஹ்விடம் இருக்கும் கூலியைப் பெறும் நோக்கத்தில் இவற்றில் ஏதேனும் ஒன்றை நிறைவேற்றினால் நிச்சயமாக மறுமையில் அச்செயல் அவரின் கையைப் பிடித்து அவரை சொர்க்கத்தில் நுழையச் செய்துவிடும் என்றார்கள். 
(நூற்கள் : இப்னுஹிப்பான், தப்ரானீ, ஹாகிம்)
 
(عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ عَلِّمْنِي عَمَلًا يُدْخِلُنِي الْجَنَّةَ فَقَالَ لَئِنْ كُنْتَ أَقْصَرْتَ الْخُطْبَةَ لَقَدْ أَعْرَضْتَ الْمَسْأَلَةَ أَعْتِقِ النَّسَمَةَ وَفُكَّ الرَّقَبَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَوَلَيْسَتَا بِوَاحِدَةٍ قَالَ لَا إِنَّ عِتْقَ النَّسَمَةِ أَنْ تَفَرَّدَ بِعِتْقِهَا وَفَكَّ الرَّقَبَةِ أَنْ تُعِينَ فِي عِتْقِهَا وَالْمِنْحَةُ الْوَكُوفُ وَالْفَيْءُ عَلَى ذِي الرَّحِمِ الظَّالِمِ فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَأَطْعِمِ الْجَائِعَ وَاسْقِ الظَّمْآنَ وَأْمُرْ بِالْمَعْرُوفِ وَانْهَ عَنِ الْمُنْكَرِ فَإِنْ لَمْ تُطِقْ ذَلِكَ فَكُفَّ لِسَانَكَ إِلَّا مِنَ الْخَيْرِ )
 
ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னை சொர்க்கத்தில் நுழையச் செய்யும் ஒரு அமலை எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டார். அதற்கவர்கள், நீர் மிகச் சிறிய வார்த்தையைக் கூறினாலும் நிச்சயமாக மிகப் பெரிய செய்தியைக் கேட்டுவிட்டீர்! -- ஜீவன்களை உரிமை விடு! அடிமையை உரிமை விடு! என்றார்கள். அதற்கவர், இவ்விரண்டும் ஒன்றில்லையா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இல்லை, ஜீவன்களை உரிமை விடுவதென்பது நீ தனிப்பட்ட ரீதியில் உரிமை வழங்குவதாகும். அடிமையை உரிமை விடுவதென்பது அதற்குரிய கிரயத்தை நீ கொடுப்பதாகும். மேலும் பால் கொடுக்கும் கால்நடைகளை பிறருக்குக் கொடு! பிரிந்து வாழும் உறவினர்களுடன் இணைந்து வாழவேண்டும். இதனைச் செய்ய உமக்கு சக்தியில்லை என்றால் பசித்தவருக்கு உணவளி! தாகித்தவருக்கு தண்ணீர் புகட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! இதற்கும் நீர் சக்தி பெறவில்லை என்றால் நன்மையைத் தவிர வேறு எதனையும் பேசாதவாறு உனது நாவை காத்துக் கொள்! என்றார்கள். 
(அறிவிப்பவர் : பரா இப்னு ஆஸிப் -ரலி, நூற்கள் : தயாலிஸீ, அஹ்மத் 17902, இப்னுஹிப்பான்)
 
முற்றும்


Previous Post Next Post