முஹம்மது(ஸல்) அவர்கள் புத்தமத வேதங்களில் முன்னறிவிப்புகள்


புத்த மத வேத முன்னறிவிப்புகள்


1. பர்மிய மூலங்களிலிருந்து:

புத்தர் சரிபுத்தாவிற்கு கூறியதாவது
நம்முடைய சுழற்சி மகிழ்ச்சிகுரிய ஒன்றாகும். ககுஸநதா, கோனோகாம்னா, கஸபா என்ற மூன்று தலைவர்கள் ஏற்கனவே வாழ்ந்துள்ளனர். நானே உயர்ந்த புத்தராவேன். ஆனால் எனக்குப் பிறகு, இந்த மகிழ்ச்சியான சுழற்சி நீடித்துக் கொண்டிருக்கும் போதே அதனுடைய இறுதி ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே மெத்தெய்யா என்னும் புத்தர் தோன்றுவார். அவர் மிகவும் உன்னதமானவரும் எல்லா மனிதர்களின் தலைவருமாவார். [1]


2. (சிலோன் (-ஸ்ரீலங்கா) மூலங்களிலிருந்து):

நீங்கள் போன பிறகு எங்களுக்கு யார் போதிப்பார்கள்? என்று ஆனந்தா அருள் புரியப்பட்டவரிடம் கேட்டான்.

அருள் புரியப்பட்டவர் பதிலளித்தது:-

நான் இப்புவியில் தோன்றிய முதல் புத்தருமல்ல மேலும் நானே இறுதியானவரும் இல்லை. சரியான காலத்தில் வேறொரு புத்தர் இந்த உலகத்தில் தோன்றுவார்.  அவர் புனிதமானவர், மிகவும் அறிவொளி மிக்கவர், ஞானம் பொருந்திய நடத்தை அளிக்கப்பட்டவர்,  மக்களின் நம்பிக்கை நட்சத்திரம், பிரபஞ்சத்தை அறிந்த அவர் மனிதர்களின் ஒப்பற்ற தலைவர்;  வானவர்களுடையவும் மற்றும் மனிதர்களின் தலைவர்.  நான்  உங்களுக்கு போதித்த அதே மாறாத உண்மைகளை அவர் உங்களுக்கு வெளிப்படுத்துவார். அவர் தன்னுடைய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வார்.  அதன் ஆரம்பம் புகழ் மிக்கதாகவும் அவர் உச்சம் புகழ் மிக்கதாகவும் அதன் இலட்சியம் புகழ் மிக்கதாகவும் இருக்கும்.  நான் தற்போது பிரகடனப்படுத்துவது போன்று அவர் வாழ்க்கை நெறியை பிரகடனப்படுத்துவார்.  அது முற்றிலும் முழுமையானதும் பரிசுத்தமானதுமாகவும் இருக்கும்.  என்னுடைய சீடர்கள் நூற்றுக் கணக்கில் மாத்திரம் இருக்கையில் அவரின் சீடர்களோ ஆயிரக்கணக்கில் இருப்பர். [2]

எவ்வாறு அவரை நாங்கள் அறிவோம்?  என ஆனந்தா கேட்டான். அவர் ஷமைத்ரேயா என அறியப்படுவார் என அருள்புரியப்பட்டவர் பதிலளித்தார்.
அல்லது புத்தர் கூறினார்;
சந்தியாசிகளே, மனிதர்கள் எண்பதினாயிரம் ஆண்டுகள் வாழும் நாட்களில், உலகில் மெத்தெய்யா (அருட் கொடை) என்னும் பெயர் கொண்ட புத்தர் தோன்றுவார். அவர் புனிதமானவராவார் (அரஹாத்) அவர் மிக உன்னத ஞானத்தை பெற்றவர், உயர்ந்த நடை முறை ஞானம் அளிக்கப்பட்டவர், மங்களகரமானவர், பிரபஞ்சத்தை பற்றிய ஞானமுள்ளவர், நன்கு பயிற்சியளிக்கப்பட்ட மனிதர்களின் நடத்துனர், மனிதர்கள் மற்றும் வானவர்களின் தலைவர். அவரொரு அருள் செய்யப்பட்ட புத்தர். உன்னத ஞானத்தை அடைந்த பின்பு, வானவர்கள், பிசாசுகள், மிகப் பெரும் வானவர்கள், தத்துவ ஞானிகளின் இனம் மற்றும் பிராஹ்மணர்கள், இளவரசர்கள் பொது மக்கள் ஆகியோர் அடங்கிய இவ்வுலகிற்கு அதை வெளியிடுவார்.  நான் இந்த ஞானங்களையெல்லாம் பெற்று அதையே (மேற் கூறப்பட்ட) அதே மக்களுக்கு வெளியிடுவதைப் போன்றே (அவரும் அதை வெளியிடுவார்).  இத்தகைய தன்மைகளோடுள்ள புத்தவாகிய நான் இவ்வுலகில் தோன்றியிருப்பதைப் போல (அவரும் தோன்றுவார்). நான் தற்போது பிரகடனப்படுத்துவது போன்று வாழ்க்கை நெறியை அவர் பிரகடனப்படுத்துவார்.  அது முற்றிலும் முழுமையானதும் பரிசுத்தமானதுமாகவும் இருக்கும். நான் தற்போது பல்லாயிரக்கணக்கான சந்தியாச சமுதாயத்தை உருவாக்கியிருப்பதைப் போன்று அவர் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் சமுதாயத்தை உருவாக்குவார். [3]

அல்லது

அந்தக் காலத்தில், சகோதரர்களே, மெத்தெய்யா என்னும் பெயர் கொண்ட உன்னதமான ஒருவர் இவ்வுலகில் தோன்றுவார்.  அவர் புனிதமானவர், முழு அறிவொளி பெற்றவர், ஞானத்திலும் நன்மையிலும் மகிழ்ச்சியிலும் நிரம்பியவர்,  உலகங்களின் அறிவுகளைக் கொண்ட அவர், தலமையை விரும்பும் மனிதர்களுக்கோர் இணையற்ற தலைவர், தெய்வங்கள் மற்றும் மனிதர்களின் போதகர் தற்போது நானிருப்பது போன்ற உயர்வு மிக்க புத்தர். முகத்திற்கு முகம் நேராக பார்ப்பதைப் போன்று அவர் இந்தப் பிரபஞ்சத்தை அதனுடைய ஆவிகள், அதனுடைய பிராஹ்மணர்கள், அதனுடைய மாராக்கள், அதனுடைய உலகின் துறவிகள் மற்றும் பிராஹ்மணர்கள், இளவரசர்கள் மற்றும் மக்களை, நான் தற்போது தெளிவாக கண்டு உணர்வது போன்று, தெளிவாக கண்டு உணர்வார். அவர் பிரகடனப்படுத்தும் மார்க்கம் உள்ளேயும் புறமும் சத்தியமானதாகும். அது அதன் ஆரம்பத்திலும், அதன் முன்னேற்றத்திலும், அதன் உச்சியிலும்  இனிமையானதாக இருக்கும்.  மிக்க உயர்ந்த வாழ்க்கை(நெறி)யை அதன் எல்லா முழுமையோடும் அதன் அனைத்து பரிசுத்தத்தோடும், நான் தற்போது அறியச் செய்வது போன்று, அறியச் செய்வார். சில நூற்றுக்கணக்கான சகோதரர்கள் உள்ள கூட்டமைப்பு என்னை பின் தொடரும் அதே வேளையில் அவரையோ ஆயிரக்கணக்கான சகோதரர்கள் உள்ள கூட்டமைப்பு  பின் தொடரும். [4]


3. (சைன, சமஸ்கிருத மூலங்களிலிருந்து):

ராஜகிரிஹாவிலுள்ள கிரித்ரகுதா [5] மலை மேல் தாத்தகதா வாழ்ந்த அந்த முன் நாட்களில் பிக்சுக்களிடம் அவர் இவ்வாறு உரையாற்றினார்; வரும் வருடங்களில் இந்த ஜம்புத்யிபா நாடு சமாதானமாகவும் ஓய்வாகவும் இருக்கும் போது, மனிதர்களின் வயது 80000 வருடங்களாயிருக்கும் போது மைத்ரேயா என்ற பிரஹ்மன் தோன்றுவார். அவரின் உடல் சுத்த தங்கத்தினாலாதும், பிரகாசமானதும், ஒளி சிந்துவதாகவும் பரிசுத்தமானதாகவும் இருக்கும். தன் நாட்டை விட்டு வெளியேறிய பிறகு அவர் முழுமையான புத்தராக ஆவார். எல்லா படைப்புக்களின் நலன்களுக்காகவும் அவர் முப்பரிமாண சட்டத்தை[6] போதிப்பார். நான் விட்டுச் செல்லும் சட்டத்தின் சிறப்புக்கள் எவரிடம் உள்ளனவோ அவரே இரட்சிக்கப்படுவார்.  விலை மதிப்பற்ற மூன்று வணக்கப் பொருட்களுக்காக இவைகளை (-இந்த உபதேசங்களை) தங்கள் மனதில் மரியாதையுடன் எண்ணுவார்களேயானால், அவர்கள் பண்பட்ட சீடர்களாகயிருந்தாலும் அல்லது கொள்கைகளுக்கு அடிபணிபவர்களோ அல்லது அடிபணியாதவர்களாக இருப்பினும், அவரின் (-அந்த இறுதி புத்தரின்) பிரச்சார சக்தியால் (போதியின்) கனியை பெறவும் இறுதி மீட்சியை பெறவும் செய்வார்கள். நான் விட்டுச் செல்லும் சட்டத்தால் கவரப்பட்டவர்களின் மாற்றத்திற்காக முப்பரிமாண சட்டத்தை அவர் பிரகடனப்படுத்தும் அதே வேளையில் மற்றவர்களும் மாற்றப்படுவார்கள். [7]


4 (திபெத்திய மூலங்களிலிருந்து):

பான்ஜ்சென்-ரின்-போச்சி(மிகப்பெரும் ஞானஆபரணம்) பெலிங்ஸ்(மேற்கத்தியர்கள்) என்பவர்களின் புமியில் ஆத்மீக வெற்றியாளராக(கோம்-இதன்-தா) தோன்றி, பல காலமாகவிருந்த அறியாமைகள் தவறுகள் ஆகியவற்றை அழிப்பதற்கு  மனமிரங்கும் அவ் வேளை வரை, பெலிங்-பா(ஐரோப்பா) வின் தவறான கருத்தோட்டங்களை களைய முயல்வது பெரும்பாலும் பயன் தராது. அவளின்(ஐரோப்பாவின்) மக்கள் எவர் சொல்லையும் கேட்க மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
தனக்குப் பிறகு மைத்ரேயா என்பவரின் தோற்றத்தை பற்றி கவுதம புத்தர் முன்னறிவித்துள்ளார் என்பது மேற்கண்ட புத்தமத வெளிப்பாடுகளிலிருந்து தெரிய வருகின்றது. [8]


ஆதார நூல்கள்

[1] Buddhism in Translation by Warren PP, 481-2
[2] Gospel of Buddha by Carus  PP. 217-8
[3] Buddhist and Christian Gospels by Edmunds Vol. II. PP. 160-1
[4]  Cakkavati-Sihanada Suttanta.  The Mahabodhi Society Translation
[5] Others think at “Benares”
[6] மும்முறை திருப்பிச் சொல்லப்படும்
[7] Si-Yu-Ki. Vol 2. PP. 46-7
[8]  The Secret Doctrine by Nlavatsky. Vol. III. P. 412.


மைத்ரேயா:

புத்த மைத்ரேயா தோன்றி விட்டார் என சில புத்தர்கள் கருதுகின்றனர்[9]
1.             சைனாவின் ட்ஆங் என்ற வமிசத்தை சேர்ந்த ஆறாவது சக்ரவர்த்தியினுடைய தாயார் வூ அவர்களுக்கு தா-யுன்-கிங் என்ற சூத்ரா அளிக்கப்பட்டது. வரக்கூடிய புத்தா மைத்ரேயா அவள்தான் என்று சொல்லப்பட்டுள்ளது.[10]
2.             யூலா மற்றும் விஜயவிர்யா ஆகிய அரசர்கள் போதிசத்வ மைத்ரேயாவின் அவதாரங்களாக கருதப்பட்டனர்.[11]
3.             மைத்ரேயா துஷிதா என்ற வானத்தை விட்டு புறப்பட்டு விட்டார். மேலும் 1914ம் ஆண்டு பூமியில் ஒரு சிறுவனாக இருந்தார் என்று பர்மாவைச் சேர்ந்த லேதி ஸயாதா எனும் துறவி போதிசத்ய மைத்ரேயாவின் வருகையைப் பற்றி எல்லா இடங்களிலும் பிரகடனப்படுத்தி வருகிறார்.[12]
மைத்ரேயாவிடமிருந்து வேத புத்தகங்களை பெற்று வருவதாக கடந்த காலங்களிலும்[13] நிகழ் காலத்திலும்[14] புத்தர்கள் நடித்து வருகின்றனர். புத்த கவுதமாவின் உருவத்தை செய்வதற்காக வானத்திலிருந்து அவர் றெங்கி வருகின்றார்[15] என்று கூட அவரைப்பற்றி கற்பனை செய்து வைத்துள்ளனர். 
மேற்கண்ட உரிமை கோரல்கள் பெரும்பாலும் புத்த மத உலகின் தீவீர கவனத்தை கவராததால் நாம் அதைப்பற்றி விமர்சிக்க அவசியமில்லை. தியாசோபிஸ்டுகளைப் போன்ற புத்தர்கள் எதிர் காலத்தில் மைத்ரேயா தோன்றுவார் என காத்திருக்கின்றனர். உலகமெங்கிலுமுள்ள புத்தர்கள் மைத்ரேயாவின் சிலையை நிறுவியுள்ளனர். சில நேரங்களில் அதன் உயரம் 70 அடியும்[16] அல்லது அதற்கு மேலாகவெல்லாம் உருவாக்கியிருக்கின்றார்கள். சைனாவிலுள்ள சிரிக்கும் புத்த மைத்ரேயா [17] வைப் பற்றி ஐரோப்பிய சுற்றுலாவாசிகள் நன்கு அறிவர்.

சங்கராச்சாரியார் புத்தா மைத்ரேயாவாக இருக்க முடியாது:

சில பிராமணர்கள் கவுதம புத்தாவை விஷ்ணுவின் 9வது அவதாரமாக கருதுகின்றனர்[18].  தியோசோபிஸிட்டுகளைச் சேர்ந்த சில பிராமணர்கள் சங்கராச்சாரியை எதிர்பார்க்கப்பட்ட மைத்ரேவாக கருதுகின்றனர்.
சங்காராச்சாரியா அவர்களின் மறை பொருளான போதனைகளே அவர்தான் எல்லா வகைகளிலும் புதிய உடம்பிலுள்ள புத்தர் என்பதை நிரூபிக்க போதுமானதாகும். நான் இப்பொழுது அளித்துக் கொண்டிருக்கும் தகவல்கள் திபெத்திய போதனையாளரிடமிருந்து நேரடியாக பெற்றதல்ல ஆனால் இதன்னிந்தியாவின் அத்வைதியைச் சேர்ந்த ஒரு பிராமணரிடமிருந்து பெற்ற தகவல்களே இவை ... புத்தாவின் சில பிற்காலத்திய அவதாரங்கள் மேல் புத்தரின் ஆவி மேலாடியதாக பலவிதமாக விவரிக்கப்படுகின்றது. ஆனால் மனித உருவில் சங்கராச்சாரியாரின் உருவில்தான் அவர் இப்பூமியில் மீண்டும் அவதரித்தார். அவரின் முந்தைய போதனைகளில் இருந்த சில இடைவெளிகளை நிரப்புவதற்கும் அதிலுள்ள சில தவறுகளை சரி செய்வதுமே அவர் தோன்றியதின் இலட்சியமாகும். புத்தர் கூட அவர் தன் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்திலும் தவறிழைக்காமல் இருக்க முடியும் என்பது போன்ற வாதங்கள் மறைபொருளுள்ள புத்த மதத்தில் இல்லை.[19]
சங்கராச்சாரியார் புத்தா மைத்ரேயாவாக இருக்க முடியாது.  ஏனெனில், தன் வாழ் நாளில் ஒரு போதும் அவர் தான் புத்த மைத்ரேயா என்று உரிமை கொண்டாடியதில்லை.
நாம் தொடர்ந்து காணப் பத்துமுழுமைத்துவங்கள்[20] அவர் வாழ்வில் காணப்படவில்லை. அதுதான் முற்றிலும் ஞானம் நிறைந்த புத்தர்  இடம் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று.
அவர் வேதங்களை புத்தர்களுக்கெதிராக பயன்படுத்தினார்.[21] அவர் எழுதுவதாவது:
அ) வேதங்கள்தான் மிக உயர்ந்த ஆதாரமாகும்.[22]
ஆ) அறிவைப் பெறுவதற்கு வேதங்களைப் போன்ற ஆதாரங்கள் எதுவுமில்லை.[23]
வேதங்களின் வண்டவாளங்களை கவுதம புத்தர் வெளிச்சம் போட்டு காட்டியதாக சில மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய மற்றும் சில புத்தமத அறிஞர்களும் கருதுகின்றனர்.
அ) வெறுமை நிறைந்த சக்கையே வேதங்கள் என்பவைகளாகும். அவைகளில் எதார்த்தமோ, மாண்புகளோ அல்லது அடிப்படை உண்மைகளோ இல்லை.[24] நகஸேனா.
ஆ) நவீன கால புரட்டஸ்டான்ட் இந்து மதமாகிய ஆர்ய சமாஜின் நிறுவனரும் பெரும்பாலும் தயானந்த சரஸ்வதி என்று அறியப்படுபவருமான பண்டிட் மூல் சங்கர் புத்த மதத்தை வேதங்கள் மற்றும் சாஸ்திரங்களை கடுமையாக மறுக்கும் ஒரு மதமாக கருதுகிறார்.[25]
இ) பலியிடும் சடங்கு முறையை புத்தர் இகழ்ந்தார்;  வேதம் கற்றோரின் அறிவை முற்றிலும் முட்டாள்தனமானது என இடித்துரைத்தார்.[26] ஓல்டன்பர்க்.
ஈ) கவுதம புத்தர் வேதங்களை இகழ்ந்துரைத்தார்.[27] மச்பைல்
சாக்ய முனி அவர்களின் பல வாக்குகள் இந்த கண்ணோட்டத்தை ஆதரிக்கின்றன:-
அ) வேதங்களை வாசிப்பது, குருக்களுக்கு அர்ப்பணங்களை அளிப்பது அல்லது கடவுள்களுக்கு பலியிடுவது, சூட்டினாலோ அல்லது குளிரினாலோ தன்னையே வதைத்துக் கொள்வது மேலும் அது போன்ற நிலையான வாழ்க்கையைப் பெறுவதற்கான பல வகையான பாவ மீட்சி நடவடிக்கைகள் மனிதனை பரிசுத்தப்படுத்துவதில்லை.[28] அமக்கான்ட் சுத்
ஆ) ஆகவே பிராமணர்களின் மூன்று வேதங்களிலுள்ள முப்பரிமாண ஞானமென்பது தண்ணீரற்ற பாலைவனமென்றும், பாதையற்ற காஇடன்றும், அழிவென்றும் அழைக்கப்படுகின்றது.[29]
இ) வேதங்களுக்கு எந்த வித மதிப்புமில்லை.[30]
ஈ) வேதங்களை படிப்பதெல்லாம் அறிவாளி என்று நடிப்பவர்கள் செய்யும் வீண் வேலை. அறிவாளிகளை தடம் புரளச் செய்யும் ஏமாற்று வித்தை: கவனமற்ற கண்களை பிடிப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள கானல் நீர்;  ஆனாலும் முன்இனச்சரிக்கையுள்ள புத்திசாலி அதில் சிக்காமல் தன்னை காத்துக் கொள்கின்றான்.  காக்கக்கூடிய எந்த மறைவான சக்திகளும் வேதங்களில் இல்லை. அவைகள் மனித இனத்திற்கு எதிரான துரோக, கோழை, வஞ்சக சிந்தனை கொண்ட(வர்களால் உருவாக்கப்பட்ட)வைகள். பிராமணர்களுக்கு தேவையானது அவர்களின் வாழ்க்கை வசதி சாதனங்களே. அதற்காகவே அவர்கள் வேதங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.  சங்கீத நடையிலுள்ள அவைகளை சிந்திக்காமல் மனனம் செய்வதால் எளிதில் மறப்பதுமில்லை. எளிதில் விளங்காத அவைகளின் செய்திகள் செல்வத்தையும் அதிகாரத்தையும் கைப்பற்ற கனவு கண்டு கொண்டிருக்கும் முட்டாள்களின் மனத்தையேயன்றி வேறவரையும் மயக்குவதில்லை. கண் மூடித்தனமான கொள்கைகள், சட்டங்கள், அர்த்தமற்ற, இட்டுக்கட்டப்பட்ட, வீணாணவைகளை அவர்களின் அறிவற்ற மூளைகள் சிந்தனையற்ற கபளீகரம் செய்கின்றன. இந்த பேராசைக்கார பொய்யர்கள் ஏமாற்று வித்தையை பிரச்சாரம் செய்கின்றனர் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்லும் கதைகளை முட்டாள்கள் மாத்திரமே நம்புகின்றனர்.[31]பூரிதத்தா ஜாதகா.
தான் புத்த மதத்தவனென்றோ புத்தமதத்தை சீர்திருத்த வந்தவர் என்றோ தன் வாழ்நாளில் ஒரு போதும் சங்கராச்சாரியார் வெளிப்படுத்தியதே இல்லை. புத்த மதத்தின் மிகக்கொடும் எதிரிகளில் ஒருவராகவே அவர் திகழ்ந்தார் மேலும் அதை இந்தியாவிலிருந்து துரத்துவதில் வெற்றியும் கண்டார்.[32] இது போன்ற மேலும் சில காரணங்களை நாம் பிறகு கொடுப்போம்.

இயேசு புத்த மைத்ரேயாவா?;

கடந்த சில காலங்களாக சில மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அறிஞர்கள் இயேசுதான் புத்த மைத்ரேயா என்று விளம்பரத்திக் கொண்டிருக்கின்றனர்.
    1.          இந்த எதிர்காலப் புத்தர், இந்த மைத்ரேயா எனப்படுபவர், சட்டத்தினுடையவரல்லாத ஆனால் அன்பின் போதகரான அவர் தோன்றி விட்டார் என்பதை புத்தர்கள் எப்பொழுதேனும் தெரிந்து கொள்வார்களா?.[33] மேக்ஸ் முல்லர்
   2.          கிறிஸ்து மைத்ரேயா இன்னும் வரவிருக்கிறார்.[34]  எட்மண்ட்ஸ்
   3.          பின் நாளில் நாம் அவர்களை கவுதமா என்றும் மைத்ரேயா என்றும் கிறிஸ்து என்றும் அறிகிறோம்.[35] சி. ஜினராதாஸா.
   4.          மைத்ரேயா எனப்படுபவரும் கிறிஸ்து எனப்படுபவரும் ஒருவரே.[36]  ஜோஹன்னா.
   5.          மாறாக, மைத்ரேயப் பிரபு கிறிஸ்துவாக தோன்றிய பொழுது தன் சீடர்களை நான் உங்களை நேசிக்கிறது போல நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள் என்று கூறினார் .[37]
   6.          மைத்ரேயப் பிரபு பலஸ்தீனை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட பொழுது அதே வழி 
   7.          முறையையே பின்பற்றினார்.[38] லீட் பீட்டர்.
   8.          இனிமேல் நடக்கவிருக்கும் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது அவர்  மைத்ரேயாவாக இருப்பார் என்று பிளாவட்ஸ்கி கூறுகிறார்.[39]
அந்த கண்ணோட்டத்தை நாம் விரிவான முறையில் நிராகரிப்போம்.  ஆனால் இங்கே சுருக்கமாக:-
-            தான் புத்த மைத்ரேயா என்று தன் வாழ் நாளில் இயேசு ஒரு போதும் கூறியதேயில்லை என்று நான்கு சுவிசேஷங்களை படிக்கும் எவரும் அறிந்திடுவர்.
-            அவரின் குணநலன்கள் பத்து முழுமைத்துவங்களை  பிரதிபலித்திடவில்லை. இதை நாம் பிற்பாடு விரிவாக காண்போம்.
-            இயேசு எதிரிகளிடத்தில் காட்டிக்கொடுக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டு சிலுவையில் இறந்தார் என்பதே கிறிஸ்துவ மதத்தின் முக்கியமான கொள்கை.  நான்கு சுவிசேஷங்களும் இதில் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளன.[40]  இயேசுவே கூட இதற்கு சாட்சி கூறுமாறும் செய்யப்படுகின்றார்.[41] இயேசு புத்தா மைத்ரேயா என்ற பிரபலபடுத்தப்பட்ட வாதாட்டத்தை புத்தர்கள் சிந்திப்பதற்கு முதலில் இந்த கொள்கையை கிறிஸ்தவர்கள் கைவிட வேண்டும்.  ஏனெனில் கவுதம புத்தர் கூறியுள்ளதாவது ;
பிக்சுக்களே, ஒருவர் தாத்தகுதாவின் உயிரை வன்முறையின் மூலம் பறித்திடுவதென்பது சாத்தியமற்ற காரியமாகும்.  பிக்சுக்களே, தாத்தகுதாக்கள் சரியான இயற்கையான மரணத்தையே தழுவுகின்றனர்.[42]
இயேசு தன்னுடைய இரண்டாம் வருகையின் போது மைத்ரேயாகவாக இருப்பார் என்ற ப்ளாவட்ஸ்கியின் கண்ணோட்டம் நிரூபிக்கப்பட முடியாதது.  இயேசு ஒரு வேளை இவ்வுலகிற்கு திரும்ப வந்தால் கூட  தான் மைத்ரேயா என்று வாதாட முடியாது. ஏனெனில் அதே இயேசுவே[43] கர்த்தர் தாமே... வானத்திலிருந்து றெங்கி வருவார்[44] வல்லமையுடனும் மிகுந்த மகிமையுடனும் வானத்து மேகங்கள் மேல் வரக் கூடிய[45]
இவைகளுக்கு மாறாக புத்த முன்னறிவிப்பு சொல்வது என்னவெனில் இந்த மைத்ரேயா பூமியில் பிறந்திட வேண்டும்[46] மேலும் ஜோசப், மேரி அல்லாத வேறு பெற்றோர்களுக்கு[47] பிறந்திட வேண்டும் என்பதுதான்.
மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மறிப்பதில்லை என்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டு கொள்வதில்லை.[48] ஆனால் புத்தமத முன்னறிவிப்போ புத்த மைத்ரேயா சரியான காலத்தில் மரணமாகவேண்டுமென்று[49] கூறுகின்றது.
ஆகவே இயேசு தன்னுடைய இரண்டாம் வருகையின் போது புத்தா மைத்ரேயாக வருவார் என்ற ப்ளாவட்ஸ்கியின் கூற்றை கிறிஸ்தவ மத வேதமோ அல்லது புத்த மத வேதமோ ஆதரிக்கவில்லை. மேலும் வேத வாக்குகள் மாற்றப்பட முடியாதது[50]
மைத்ரேயாவிற்கு சமமான அர்த்தமுள்ள வார்த்தைகள்
கவுதம புத்தரினால் முன்னறிவிக்கப்பட்ட அந்த மாமனிதரின் பெயர் பல மொழிகளில் பல மாதிரியாக இருக்கிறது. பாலி மொழியில் மெத்தய்யா என்பது அவர் பெயராகும். சுமஸ்கிருதத்தில் மைத்ரேயா  என்பதாகும்.  பர்மியில் அர்மீதிய்யா[51] என்பதாகும். சைன மொழியில் மெய்த்தாலியே[52] அல்லது மில்லீ புஸா[53] அல்லது மில்லி போ[54] அல்லது த்ரூஹரூ[55] என்பதாகும். திபெத்திய மொழியில் ப்யாம்ஸ்-பா[56] அல்லது மகித்ரெஜா[57] என்பதாகும். ஜப்பானிய மொழியில் மிரோக்கு[58] என்பதாகும்.
மெத்தய்யாவிற்கு சமமான ஆங்கில வார்த்தை:-
1.                           அன்பின் போதகர்[59]   மேக்ஸ் முல்லர்
2.                           அன்பின் பிரபுவானவர்[60] அ. தர்மபல்
3.                           நேசமுள்ளவர் என பெயருள்ளவர் [61] காரஸ்
4.                           நேசம் மிக்க புத்தர் [62] ரைஸ் டேவிட்ஸ்
5.                           பரிபூரண அன்பு   அல்லது உதாரண குணமிக்க [63] ல. நரஸஹ
6.                           சகோதர வாங்சையுள்ள புத்தர்  லில்லி [64]
7.                          சிநேகிதம் உள்ள [65] புத்தர் பவுஸ்போல்
8.                           அன்பும் இரக்கமுமுள்ள [66]  மோனியர் வில்லியம்ஸ்
9.                           அன்பும் அருளுமிக்க [67]  எஸ்.பீல்
10.                       இரக்கமிக்க  அல்லது அருள் மிக்க குடும்பத்தைச் சேர்ந்த [68] கெட்டி 
11.                         அருள் மிக்கவர் [69] ஹெர்பெர்ட் பேனஸ்
12.                        அருள் மிக்கவர் [70]  ஜோஸப் எட்கின்ஸ்
13.                        சிநேகிதத்தன்மை சிநேகிதமிக்க,தயைமிக்க, நேசமிக்க, அன்பான, இணக்கமாக, இரக்கமான, மற்றவர்கள் மீது மிக்க ஈடுபாடுள்ள [71]  வில்லியம் ஸ்ழுட்.

மைத்ரேயாவிற்கு சமமான அரபி வார்த்தை ரஹ்மத் என்பதாகும்.
தயையுள்ள, அன்பும் நேசமும் மிக்க, சிநேகித, இரக்கமுள்ள, கருணை அல்லது அருள் நிறைந்த இது போன்ற  அனைத்தும் ரஹ்மத் எனும் அரபி பதத்தின் அர்த்தங்களாக வெளித்தப்படுத்தப்படுகின்றன.  எட்வர்ட் வில்லியம் லேனுடைய அரபி-ஆங்கில அகராதி ரஹ்மத் எனும் பதத்தின் சில அர்த்தங்களை தருகின்றது:-
இரக்கம், பச்சாதாபம், அருள், இளகிய மனமுள்ள, நன்மை செய்ய விருப்பமுள்ள, பரிவான, பிழை பொறுத்தல் மற்றும் மன்னித்தல் 
பேட்ஜரின் ஆங்கில-அரபி அகராதி நன்மை மற்றும் இறையருள் என்ற அர்த்தங்களையும் சேர்த்து தருகின்றது.
அர்-ரஹ்மான், அர்-ரஹீம் என்ற இரண்டு வார்த்தைகளும் ரஹ்மத் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டவைகளே. நன்மை செய்யத் தேவைப்படும் இளகிய மனம் என்பதை அது குறிக்கிறது. அதனால் அது அன்பு இரக்கம் என்ற கருத்தை உள்ளடக்கியிருக்கிறது. அர் ரஹ்மான், அர்-ரஹீம் ஆகிய இரண்டு வார்த்தைகளும் பொருளின் தீவீரத்தை பல்வேறு அளவுகளில் குறிக்கும் பெயர்ச் சொல்களேயாகும். முதல் வார்த்தை ப லான் என்ற அளவையுடையது. அது இரக்கம் என்ற தன்மையின் மிகப் பெரும் அளவை குறிக்கிறது. மற்றொன்று  பாயில் என்ற அளவை குறித்து அந்த வார்த்தை குறிக்கும் குணத்தின் தொடர்ச்சியான செயல் மற்றும் வெளிப்பாட்டைஙம் குறிப்பதாகும். இந்த இரண்டு வார்த்தைகளும் நபி (ஸல்) அவர்களால் விளக்கப்பட்டுள்ளது... அவர் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளதாவது: அர்-ரஹ்மான் என்பது இவ்வுலக படைப்புக்களில் தன் அன்பு அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும்  அளவற்ற அருளாளனாகிய இறைவன் ஆகும்.  அர்-ரஹீம் என்பது அதற்கு பிறகு ஏற்படும் நிலையின் போது, அதாவது மனிதனின் (நற்) செயல்களுக்கு கூலியை அளிக்கும் பொழுது  அன்பு இரக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் நிகரற்ற அன்புடைய இறைவன் என்பதாகும்.  இவ்வாறாக, அர்-ரஹ்மான் என்ற வார்த்தையிலுள்ள அருள் என்ற தன்மையானது மனிதன் இவ்வுலகில் தோன்றுவதற்கு முன்னமேயே அவன் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை, அதாவது அதற்கான எந்த வித தகுதியும் அவனிடத்தில் இல்லாமலிருக்கும் போதே படைப்பதில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அர்-ரஹீம் என்ற தன்மை மனிதன் அதற்குத் தகுதியானவைகளை செய்யும் போது வெளித்தப்படுகின்றது. அதாவது முதல் வார்த்தை மிகப் பெரும் அளவிற்கு அன்பையும் தாரளத்தன்மையைஙம் வெளிப்படுத்துவதாகும் இரண்டாவது வார்த்தை வரம்பற்ற, தொடர்ந்த அருளையும் இரக்கத்தையும் வெளிப்படுத்துவதாகும்.  முதல் வார்த்தையின் அர்த்தம் இறை நம்பிக்கையாளனைஙம் இறை மறுப்பாளனைஙம் உள்ளடக்குகின்றஇதன்றும் இரண்டாவது வார்த்தை இறை நம்பிக்கையாபெரும்பாலும் குறிக்கின்றது என்று அகராதி வல்லுனர்கள் அனைவரும் ஒருமித்து கூறுகின்றனர்.  அர்-ரஹ்மான் என்ற வார்த்தைகளில் அடங்கியிருக்கும் அனைத்தும் தழுவிய அன்பு, நன்மை ஆகியவற்றை ஆங்கிலத்தில் வெளிப்படுத்த முயலும் போது அம் மொழியில் அதற்கு சரி சமமான வார்த்தை இல்லாமலே இருக்கிறது என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆகவே அர்-ரஹ்மான் என்ற வார்த்தைக்கு அளவற்ற அருளாளன் என்ற பொருளையே நான் கொடுக்கின்றேன் ஏனெனில் நல்லவைகளை செய்தல் எனும் கருத்து அதில் மிகைத்திருக்கின்றது.[72]  
மெத்திய்யா என்பது மெத்தா என்ற மூலத்திலிருந்தாகும்.  மெத்தா சுத்தா என்பது தன் வாழ்க்கையே ஆபத்திலிருக்கும் போது கூட தன் குழந்தையை கவனிக்கும் ஒரு தாயைப் போல, ஒவ்வொருவரும் தன்னில் அளவற்ற சிநேகிதத்தை எல்லா மனிதரின் பாலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் [73]
அளவற்ற அருளாளன் ...., நல்லவர், கெட்டவர், நம்பிக்கையாளர், நிராகரிப்பாளர் போன்ற அனைத்து மாந்தருக்கும் இறைவன் அளிக்கும் உலகளாவிய அருளின் தன்மையை இவ்வார்த்தை வெளிப்படுத்துகின்றது. இது மிக உயர்ந்த சிந்தனையாகும்.[74]
இவ்வாறாக ரஹ்மத் என்ற வார்த்தை மெத்தய்யா என்ற வார்த்தையின் அர்த்தத்தை முழுமையாக வெளிப்படுத்துகின்றது.  சேல் அவர்கள் ரஹ்மத் என்ற வார்த்தையை அருட் கொடை[75] என்றே மொழி பெயர்த்துள்ளார்.

மைத்ரேயாவை அடையாளங் காணுதல்:

(1) முஹம்மது (ஸல்) அவர்கள்தான் புத்தா மைத்ரேயா
இயேசு மற்றும் சங்கராச்சாரியார் ஆகியோரைப் பின்பற்றுபவர்கள் தங்களுடைய போதகர்களை அவர்கள் மைத்ரேயா என்று ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் சொந்த போதகர்கள் தங்களின் வாழ்நாளில்; இது பற்றி ஏதும் சொல்லவேயில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் இயேசு, சங்கராச்சாரியார் போன்றல்லாமல் தான்  மைத்ரேயாவாக (அருளாக) அனுப்பப்பட்டுள்ளேன் என்று அவரே பிரகடனப்படுத்தியுள்ளார். 
உம்மை படைப்புக்களுக்க அருட் கொடையாகவே அன்றி உம்மை நாம் அனுப்பவில்லை.[76]
அடிக்கடி நபி அவர்கள் மைத்ரேயா(அருட் கொடை) என்றே திருமறை குர்ஆனில் அழைக்கப்படுகின்றார். 
-            நீர் உம் அதிபதியிடமிருந்து (மனிதர்களுக்கு) அருட் கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளீர்.[77]
-            (இந்த நபியிடம் யார் எதைச் சொன்னாலும்) அவர் கேட்டுக் கொள்பவராகவே இருக்கிறார் எனக்கூறி நபியைத் துன்புறுத்துவொரும் அவர்களில் இருக்கிறார்கள்;(நபியே) நீர் கூறும்; (நபி அவ்வாறு) செவியேற்பது உங்களுக்கே நன்மையாகும். அவர் அல்லாஹ்வை நம்புகிறார்; மூமின்களையும் நம்புகிறார்;  அன்றியும் உங்களில் ஈமான் கொண்டவர்கள் மீது அவர் அருட்கொடையாகவும் இருக்கின்றார் திருக்குர்ஆன் 9;61[78]
உரையாடிக் கொண்டிருக்கும் போது முஹம்மது (ஸல்) அவர்கள் தான் மைத்ரேயாவாக அனுப்பப்பட்டிருப்பதாக பல முறை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
அபூ சாலிஹ் அறிவிப்பதாவது நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரையாற்றும் போது மக்களே, நான் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அருட்கொடை (மைத்ரேயா) என்று கூறும் வழக்கமுடையவர்களாக இருந்தனர்.[79]
உஹத் யுத்த களத்தில் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்களால் தாக்கப்பட்டும் முகத்தில் அம்பால் காயப்படுத்தப்பட்டும் ஏறக்குறைய தன் உயிரையே இழக்கும் நிலையில்[80] இருந்தார்கள். கடுமையாக இரத்தம் வெளியேறிக் கொண்டிருக்கும் பரிதாபகரமான இந்தச் சந்தர்ப்பத்தில் எதிரிகளை சபிக்கும்படி அவர்களுடைய தோழர்கள் சிலர் அவரிடம் வேண்டிக் கொண்டனர். ஆனால் அவர் அவர்களுடைய வேண்டுகோளை மறுத்து நிராகரித்துக் கொண்டிருக்கும் எதிரிகளுக்காக பிரார்த்தனை புரிந்தார்.
நான் சபிப்பதற்காக அனுப்பப்படவில்லை. ஆனால் என் (இறைவன் பக்கம்) அழைப்பவராகவும் அருட்கொடை (மைத்ரே)யாகவும் அனுப்பப்பட்டுள்ளேன். இறைவா என் மக்களை நேர்வழிப்படுத்தி (அவர்களை மன்னிப்பாயாக) ஏனெனில் அவர்கள் என்னை அறியாமல் இருக்கின்றனர்.[81]
முஹம்மது (ஸல்) அவர்கள் எப்பொழுதும் அன்பு செலுத்தக்கூடிய மனப்பான்மையுடையவராகவே இருந்தார். அவரின் முகம் எப்பொழுதும் அன்பைப் பொழிவதாக இருந்தது.[82] தான் நபியாக அவதரித்திருப்பது எத்தகைய நன்மை பயக்கக்கூடியது மேலும் இவ்வுலகிற்கு அவர் இறைவனின் அருட் கொடை என்பதற்கான எத்தகைய அத்தாட்சி என்பதை திருக்குர்ஆனில் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டுகின்றார்.[83]
மிகத் தீவீரமான, யுத்தப் பிரிய, பல கொடுமையான பழக்கங்களுள்ள இனத்தில் உதித்த முஹம்மது அவர்கள் இரக்கத்திற்கு மிகப் பெரும் மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்பிற்குரிய விசயமாகும். மனிதனின் இதயத்தில் இரக்கத்தை உண்டாக்கிய இறைவனிற்கு அவர் நன்றி செலுத்தினார்...எல்லா குணங்களிலும் இரக்கத்தையே இறைவனால் விரும்பப்பட்ட உயர்ந்த குணமாக அவர் கருதினார். திருக்குர்ஆனின் ஒவ்வொரு அத்தியாயமும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவனின் திருப்பெயரால் என்ற பிரார்த்தனையோடு தொடங்குகின்றது.[84]
(2) இதயங்களை அளத்தல்
இறைச் செய்தி அளிக்கப்பட்டு அளவற்ற அருளாளின் பிரதிநிதிகளாக பூமியில் அனுப்பப்பட்டுள்ள போதகர்கள் அனைவரும் இயற்கையிலேயே அருள் நிறைந்தவர்களாக இருந்தார்கள் என்றே முஸ்லிம்கள் நம்புகின்றனர். அவர்களின் இதயங்கள் அருளின் மிகப் பொக்கிஷங்களாக இருந்தன. மற்ற இறைச் செய்தி பெறாதவர்களை விட அவர்கள் அதிக அருளுடையவர்களாக இருந்தனர். இறைவன் தன் ஞானத்தால் அவர்களுக்கு தன்னுடைய பல அளவிலான அருளை வழங்கினான்.  திருக்குர்ஆன் கூறுகின்றது ;
வெர்கள் இறைத்தூதர்கள்;  அவர்களில் சிலரை மற்றவர்களை விட மேன்மைப்படுத்தியிக்கின்றோம்.[85]
அவர்களுக்கிடையே ஒப்பிடும்போது சில இறைத் தூதர்கள் அவர்களில் மற்ற சிலரை விட அதிக அருள் மிக்கவர்களாக இருந்தனர். இறைவனின் அருளால் முஹம்மது (ஸல்) அவர்கள் (அவன் மனிதனுக்கு அருளியிருக்கும்) அவனுடைய அருளின் மிகப் பெரும் பாகத்தை பெற்றிருந்தனர் என்று நாம் நம்புகிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் முஹம்மது (ஸல்) அவர்களின் இதயம் மற்ற இறைத்தூதர்களின் இதயத்தோடு ஒப்பிடும் போது மிகப் பெரும் அருள் பொக்கிரூமாக இருந்தது எனலாம்.
இதை எவ்வாறு அறிவது? இதயத்தின் விரிவை அளப்பதற்கு நமக்கொரு திட்டமான அளவை தேவை. அத்தகைய அளவையை இயேசு தருகின்றார்.
இதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசுகின்றது[86]
நாவு தான் இதயத்தினுடைய உண்மையான நிலையை காண்பிக்கும் அடையாளமாகும் என Rt. Rev. W.W. How D.D எழுதுகின்றார். 
உள்ளேயிருக்கும் ஊற்றுத்தான் வாயின் வார்த்தைகளில் பாய்ந்தோடுகின்றது[87]
மேற்கண்ட அளவு கோலின் பிரகாரம் ஒரு இறைச் செய்தியளிக்கப்பட்ட போதகரின் போதனைகளில் அருள்  அல்லது அருள் மிக்க  என்பது ஒரு முறை வந்திருந்தால் அவரின் இதயம் ஒரு புள்ளி அளவிற்கு அருள்மிக்கஇதன்று எடுத்துக் கொள்வோம்.
இந்த அளவு கோலின் படி நாம் முஹம்மது (ஸல்) அவர்களின் இதயத்தின் விரிவை அளப்போம். அருள் அருள்மிக்க  என்ற வார்த்தைகள் திருக்குர்ஆனில் மாத்திரம் 409 தடவைகள் உபயோகிக்கப்பட்டுள்ளன.
சுமார் இரண்டரை லட்சம் பக்கங்களில் பதியப்பட்டிருக்கும் நபி(ஸல்) அவர்களின் ஹதீதுகளில் வரும் இந்த வார்த்தையின் எண்ணிக்கைகளை நாம் வேண்டுமென்றே விட்டு விடுவோம். அவ்வாறாயின், நபி (ஸல்) அவர்களின் இதயம் 409 புள்ளிகளை விட அதிக அளவிற்கு விரிவானது.
இயேசுவின் இதய விரிவின் அளவை அவரே கூறியுள்ள அளவு கோலின்படியே நாம் இப்போது அளப்போம். நான்கு சுவிசேங்களிலும் பதியப்பட்டுள்ள பிரகாரப்படி இயேசுவின் வாயிலிருந்து அருள்  அருள்மிக்க  என்ற வார்த்தைகள் 9 முறையே வந்துள்ளது என நாம் அறிகிறோம். ஆகவே அவரின் இதயத்தின் விரிவு 9 புள்ளிகள் மாத்திரமேயாகும்.
மேற்கண்ட கண்ணோட்டத்தின்படி ஒரு நடுநிலையானவர் இயேசுவை விட முஹம்மதையே புத்தா மைத்ரேயாவாக கருதுவார்.
முஹம்மது (ஸல்) அவர்களின் பரந்து விரிந்த அருள்மிக்க தன்மை திருக்குர்ஆனில் நன்கு தெளிவாக்கப்பட்டுள்ளது ;-
மூஃமின்களே நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார் நீங்கள் துன்பத்திற்கு உள்ளாகி விட்டால் அது அவருக்கு மிக்க வருத்தத்தை கொடுக்கின்றது. அன்றி உங்கள்; நன்மைகளையே அவர் பெரிதும் விரும்புகிறார். இன்னும் முமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்.[88]
இரக்கமுள்ளவர்  என்பது ரவூப் எனும் அரபி வார்த்தையின் மொழி பெயர்ப்பாகும். மிகப் பெரும் அருள் என்பதே அதன் பொருள் என இமாம் புகாரி[89] அவர்கள் விளக்கியுள்ளார்கள்.  ரவூப் என்பது ரஹ்மத்தை விட அதிக சிறப்பான, மிருதுவான பிரியம் என்பதாகும் அல்லது அதனுடைய மிகவும் உயர்ந்த நிலை[90] என்பதாகும்.
சங்கராச்சாரியார் இறைச் செய்தி அளிக்கப்படாதவராததால் (வேதம் அவருக்கு கொடுக்கப்படவில்லை) அவரை நாம் கணக்கிலெடுக்க வேண்டிய அவசியமில்லை.
3 அழிவற்ற பெயர்
பல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாத்தை பற்றி எழுதியதை நாம் படிக்கும் போது  புதுமையான ஒரு விசயத்தை காண்கின்றோம். அதாவது முஹம்மது என்ற வார்த்தை மஹமெத்  மஹோமத் மொஹமெத் மெஹமெத்  மஹெம்மெத் என்று பலவாறாக உச்சரிக்கப்படுகின்றது.
இந்த இயற்கையான வித்தியாசங்களை நமது தலைப்பிற்கு பயன்படுத்துவோம்.
1 மஹமெத்  அல்லது மஹாமெத். இந்த வார்த்தை மாஹா, மெத்தா என்ற இரு வார்த்தைகளின் சேர்க்கையினால் வந்ததாகத் தோன்றுகின்றது. மஹோ அல்லது மஹா என்ற வார்த்தைக்கு பாலியிலும் சமஸ்கிருதத்திலும் மகிமை வாய்ந்த, புகழ்மிக்க என்பதுதான் அர்த்தமாகும். மெத்தா என்பது அருள் என்பதாகும். ஆகவே மஹமெத் அல்லது மஹோமெத் என்ற முழு வார்த்தையின் அர்த்தம் புகழ் மிக்க அருட்கொடை  என்பதாகும். முஹம்மது (ஸல்) அவர்களை திருக்குர்ஆன் மிகப் பெரும் அருட்கொடை என அழைக்கிறது.
2 மொஹமெத் என்பது மொஹ், மெத்தா என்ற வார்த்தைகளின் சேர்வினால் வந்ததாக தோன்றுகின்றது. மொஹ் என்பது சமஸ்கிருதத்தில் பிரியம், இரக்கம் என்பது அர்த்தமாகும்.[91] ஆகவே மொஹமெத் என்ற முழு வார்த்தையின் அர்த்தம் பிரியமுள்ள அல்லது இரக்கம் நிறைந்த அருட்கொடை என்பதாகும். முஹம்மது (ஸல்) அவர்கள் அசாதரணமான அளவிற்கு  இரக்க இயல்பு கொண்டவர் என அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் காண்பிக்கின்றன.
3 மெஹமெத் என்ற வார்த்தை மெஹ், மெத்தா என்ற வார்த்தைகள் சேர்க்கையில் உண்டானதாகவும் தோன்றுகின்றது. மெஹ் என்றால் மழை என்பதாகும். ஆகவே மெஹமெத் என்ற முழு வார்த்தையின் அர்த்தம் மழை போன்ற அருள்  என்பதாகும் அல்லது மழை போன்று எல்லோருக்கும் அருளை பொழிபவர் என்பதாகும். மழை என்பது படைப்புக்களுக்கு இறைவனின் பொதுவான அருட்கொடை என திருக்குர்ஆன் கூறுகின்றது.
அன்றியும் வானத்திலிருந்து மிக்க பாக்கியமுள்ள தண்ணீரை (மழையை) நாம் இறக்கி வைத்து, அதைக் கொண்டு தோட்டங்களையும், அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைப்பிக்கின்றோம். அடுக்கடுக்கான பாளைகளைக் கொண்ட (குலைகளையுடைய) நெடிய பேரீச்ச மரங்களையும் (உண்டாக்கினோம்). (அவற்றின் கனிகளை) அடியார்களுக்கு உணவாக (அளிக்கிறோம்), மேலும், அதைக் கொண்டு இநற்து கிடந்த ஊரை (பூமியை) நாம் உயர்ப்பிக்கிறோம்.  இவ்விதமே, (றெந்தவர்கள் உயிர்ப்பிக்கப்பெற்று) வெளியேறுதலும் இருக்கின்றது. திருக்குர்ஆன் 50;
இன்னும் அல்லாஹ் வானத்திலிருந்து மழையைப் பொழிய வைத்து அதைக் கொண்டு உயிரிழந்த பூமியை உயிர் பெறச் செய்கின்றான்.  நிச்சயமாக செவியேற்கும் மக்களுக்கு இதில் (தக்க அத்தாட்சி இருக்கின்றது)
அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுக்களில் ஓடச் செய்கிறான்;  அதன் பின் அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களையுடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான்.
மழை என்பது இறைவனின் எல்லா படைப்புக்களுக்கும் பொதுவான ஆசிர்வாதம் மற்றும் அருளாயிருப்பது போல் நபி (ஸல்) அவர்களும் அவன் படைப்புக்கள் அனைத்திற்கும் அருட்கொடையே ஆவார்கள்.  திருக்குர்ஆன் இதை ஆதரித்து
உம்மை மனித இனத்திற்கு ஒரு அருட்கொடையாகவேயன்றி நாம் அனுப்பவில்லை.[92]
4 மஹெமா அல்லது மஹிமா எனும் உயர்வு, புகழ்[93] என்ற அர்த்தமுடைய வார்த்தையும் மெத்தா எனும் அருள் என்ற வார்த்தையும் சேர்ந்த மஹம்மெத் என்ற பெயர் புகழ்மிக்க அருள் அல்லது உயர்வு மிக்க அருள் என்றும் பொருள்படலாம்.
மறைபொருளான மற்றும் பிரபலமான கொள்கையும் புத்தாக்களும்
மறைபொருளான கொள்கை அல்லது வெளிப்படையான கொள்கை என்று எந்த வித வேறுபாடும் காட்டாமல் நான் பிரச்சாரம் செய்துள்ளேன். ஆனந்தா, உண்மையைப் பொறுத்த வரையில், (சிலவற்றை கூறிவிட்டு) சிலவற்றை மறைக்கும் போதகரைப்போலுள்ளவர் அல்ல தாத்தகதா அவர்கள்.[94]
இயேசு புத்தா மைத்ரேயாவாக இருந்தால் மேல் குறிப்பிடப்பட்டுள்ள குணம் நன்கு அவருக்கு பொருந்தியிருக்க வேண்டும்.  ஆனால் நிலமை அவ்வாறல்ல:-
சிஷ்யர்கள் அவரிடம் வந்து ஏன் அவர்களிடம் உதாரணங்களின் மூலமே பேசுகின்றீர்கள் என்று கேட்டனர்.  அதற்கு மறுமொழியாக அவர் உங்களுக்கோ பரலோக ராஜ்யத்தின் ரகசியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன ஆனால் அவர்களுக்கோ அது கொடுக்கப்படவி;ல்லை. அவர்கள் கண்டும் காணாதவர்களாக கேட்டும் கேட்காதவர்களாக எதையும் புரியாதவர்களாக இருக்கும் பொருட்டு அவர்களிடம் நான் உதாரணங்களின் மூலம் பேசுகின்றேன் என்று இயேசு கூறினார். மத்தேயு 13: 10-13
அவரின் போதனையைக் கேட்பவர்களில் பெரும்பாலோர் பரலோக ராஜ்யத்தின் ரகசியங்களை புரிந்து கொள்ளக் கூடாதென நம்முடைய பிரபு பொதுவாக விரும்பினார்.[95]
குற்றவாளியாக பிரதான ஆசாரியார் முன்பு இயேசு நிறுத்தப்பட்டார். இயேசுவின் கொள்கைகளைப் பற்றி அவர் வினவியபோது- நான் உலகத்திற்கு வெளிப்படையாகவே பேசினேன்.யூதர்கள் எப்பொழுதும் வந்து போய்க் கொண்டிருக்கும் ஆலயங்களிலும் கோவில்களிலும் எப்பொழுதும் போதித்தேன். இரகசியமாக நான் எதையும் சொல்லவில்லை.
இயேசு இரகசியமாக போதித்தது என்னவென நாம் காணலாம்;-
அவர் தனித்திருக்கிறபோதுஇ பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடம் கேட்டார்கள். அதற்கு அவர்; தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் குணப்படாதபடிக்கும் பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், கேட்டும் உணராதபவர்களாகவும் இருக்கும்படி இப்படிச் சொல்லப்படுகின்றது என்றார். மார்க் 4: 10-12. 
தன்னுடைய இரகசிய கொள்கையை பிரபலப்படுத்த வேண்டாமென சிஷ்யர்களுக்கு இயேசு கட்டளையிட்டார். 
பரிசுத்தமானதைகளை நாய்களுக்குக் போடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்;  போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். மத்தேயு. 7;6. 
பொது இடங்களில் எப்பொழுதும் உவமைகளினாலேயே பேசினார்;-
அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். உவகைளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை அவர் தம்முடைய சீஷரோடு தனித்திருக்கும் போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச் சொன்னார். மார்க் 4:33-34
மறைபொருளான மற்றும் வெளிப்படையான போதனைகளென்று இயேசு வித்தியாசப்படுத்தினார் என்று மேற்கண்டவைகளிலிருந்து நன்கு தெரிய வருகின்றது. கேட்பவர்களில் பெரும்பாலோர் உண்மையைப் புரிந்து கொள்ளக் கூடாதென வேண்டுமென்றே அவர் விரும்பினார். அவருடைய போதனைகளை, அவை மதிப்புள்ளவைகளோ அல்லது மதிப்பற்றவைகளோ,  கேட்பவர்கள் பெரும்பாலோரிடமிருந்து தடுத்து வைத்தார்.
புராதன கிறிஸ்துவர்களிடம் ஏராளமான ரகசிய சுவிசேஷங்கள், நடபடிகள், மற்றும் கடிதங்கள் ஆகியவை இருந்தன என்று பைபிள் ஆராய்ச்சி மாணவர்களுக்கு நன்கு தெரியும்.  அவைகளில் சில பகுதிகள் இப்பொழுதும் காணக்கிடைக்கின்றன.
அபோகிரைபல் வேத புத்தகம் எனப்படுவது உண்மையில் எல்லோரிருடைய கையிலும் இருக்க முடியாத அளவிற்கு மிகவும் புனிதமானதும் இரகசியமானதுமாகும்.[96]
அங்கீகரிக்கப்பட்ட வேத புத்தகங்களைத் தவிர மற்ற வேத புத்தகங்களும் இருந்தன என்பதை லூக்காவின் குறிப்பு தெளிவாகவே காட்டுகின்றது.
அவைகளைக் குறித்து சரித்திரம் எழுத அநேகம் பேர் ஏற்ப்பட்டபடியினால்  லூக்கா 1:1
அநேகம் பேர். இது மத்தேயுவினுடைய சுவிஷேசத்தையோ அல்லது மார்க்கினுடைய சுவிஷேசத்தையோ குறிக்கவில்லை.[97]
ஆகவே இயேசு புத்தா மைத்ரேயாவாக இருக்கமுடியாது என மேலுள்ளவைகளிலிருந்து தெளிவாக தெரிகின்றது. சங்கராச்சாரியோ வேதமளிக்கப்படாதவரதால் அவரை இதில் உட்படுத்த அவசியமில்லை.
ஆனால் இதற்கு நேர் மாறாக முஹம்மது(ஸல்) அவர்கள் இறைவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்தவராக தன்னுடைய கொள்கையனைத்தையும் மறைபொருளுள்ள அல்லது வெளிப்படையான என்று வித்தியாசம் பாராமல் அனைவருக்கும் முழுமையாக வெளியிட்டார்.
தூதரே உம் இறைவனிடமிருந்து உம் மீது இறக்கப்பட்டதை (மக்களுக்கு) எடுத்துக் கூறி விடும் (இவ்வாறு) நீர் செய்யாவிட்டால், அவனுடைய தூதை நீர் நிறைவேற்றியவராக மாட்டீர். அல்லாஹ் உம்மை மனிதர்களி(ன் தீங்கி)லிருந்து காப்பாற்றுவான். திருக்குர்ஆன் 5:67.
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் திருக்குர்ஆன் வெளிப்படையாகவே ஓதப்பட்டது. இப்பொழுது ஓதப்படும் அதே முறையிலேயே ஓதப்பட்டது.  தன் கொள்கையை மறைப்பதை விட்டும் முஸ்லிம்களை நபி (ஸல்) அவர்கள் கடுமையாக தடுத்திருந்தார்கள்.
    1.          ஒருவன் கல்வியை கற்று அதை (மற்றவர்களிடமிருந்து) மறைப்பானேயானால் அவன் மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் நெருப்பினாலான கடிவாளத்தை கொண்டு கடிவாளமிடப்படாமல் வரமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.[98]
2.          அறிவைப் பற்றி எவரிடனும் ஏதேனும் கேட்கப்பட்டு அவர் அதை மறைத்தாரெனில், (அவன் மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில்) நெருப்பினாலான கடிவாளத்தைக் கொண்டு கடிவாளமிடப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.[99]  
   3.          அறிவைப் பற்றி எவரிடனும் ஏதேனும் கேட்கப்பட்டு அவர் அதை மறைத்தாரெனில், நெருப்பினாலான கடிவாளத்தைக் கொண்டு கடிவாளமிடப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.[100]
4.          ஒருவருக்குத் தெரிந்த அறிவைப் பற்றி எவரிடனும் ஏதேனும் கேட்கப்பட்டு அவர் அதை மறைத்தாரெனில்இ நெருப்பினாலான கடிவாளத்தை கொண்டு கடிவாளமிடப்படுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைர (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.[101]
ஆகவே முஹம்மது (ஸல்) அவர்கள்தான் புத்த மைத்ரேயா இயேசு அல்ல என்பது தெளிவு.

[9] Studies in Japanese Buddhism by  Reischaner, P. 264
[10] Chinese Buddhism by J. Edkins, P. 122.
[11] Life of Buddha by Rockhill,PP. 237-8
[12] The Coming World Teacher by P. Parki, P.52
[13]  Si-Yu-Ki by Beal. Vol. I. P. 226
[14]  Buddhism and Buddhist in China by Hodous. P. 38
[15]  Si-Yu-Ki Vol. II. PP. 121-2
[16]  Hodous PP. 120-1
[17]  Ibid PP. 20-1.
[18]  The Essence of Buddhism by L. Narasu. P. 27 Foot Note
[19]  Esoteric Buddhism by A.P. Senett. P. 149.
[20] Warren  PP. 22-37
[21]  Satyarath Prakash by Mool Shankar, PP. 415-16
[22]  Sankara’s Sselected Works, by S. Vankataramanan P. 205
[23]  Ibid. P. 206
[24]  Vol. XXV. P. 18
[25] Satyarath Prakash P. 414.
[26] Buddah P. 172.
[27] Asoka P. 35.
[28]  Buddhism by Rhys Davids. P. 131.
[29]  Vol. XI. P. 185.
[30]  Silavimansa quoted in Early History of the Spread of Buddhism and the Buddhist Schools by N. Dut. P. 13.
[31] Narasud PP. 129-30
[32] Shankaracharya by Sita Nath Datta.
[33] Chips from a German Workshop Vol. I PP. 452-3.
[34] The Buddhist and the Christian Gospels Vol. 2. P. 164.
[35] Buddha and Christ P.8
[36] The Coming Christ P. 106.
[37] The Coming World Teacher, P.23
[38] The Master and the Path. P. 51
[39]  Isis Unveiled, Vol. II P. 156.  Foot Note. 
[40]  Matt. 27:27; Mark 15:37; Luke 23:46; John 21:30.
[41] Luke 23:43.
[42]  Vinay Text by Max Muller Part III. PP. 246-7
[43]  Acts 1:11
[44]  I Thes. 4:16
[45] Matt, 24:30.
[46]  The Life and Teachings of Buddha by A. Dharampal P.82
[47] May and June 1928. P. 280.
[48] Romans 6:9;  Matt 28:20.
[49] Warren P. 485; Maitreya Samiti by Laumann Vol. I. P. 22.
[50] John 10:35.
[51]  The Legend of Gaudama by  Bigandet. Vol. I. P. 11. Foot Note.
[52] Si-Yu-Ki Vol. I. P. XXIX.
[53] Buddisht China by Johnston P. 367.
[54] Edkins P. 208.
[55]  Yuan Chwang Vol. I P. 239 by T. Watters.
[56] Pr. ‘Jampa’ or ‘Champa’  Lamaism by Waddel P. 355.
[57]  The Religion of Tibet and the True Religion by Frauson P. 38. 
[58] Reischauer PP. 264-5.
[59]  Chips from a German Workshop. Vol. I P. 452.
[60] The Life and Teachings of Buddha. P. 83.
[61] The Gospel of Buddha. P. 218 
[62]  Buddhism. P. 180
[63]  Essence of Buddhism. P. 101;105
[64] Buddhism in Christendom P. VII.
[65] Sutta Nipata. P. 205
[66] Buddhism P. 181
[67]  The Chinese Dhammapada P. 69
[68] Gods of Northern Buddhism. P.20; 68
[69]  The Way of Buddha P. 15
[70] Chinese Buddhism. P. 240 
[71] The Pali Dictionary
[72]  Mohammed Ali’s Translation of the Koran, Foot Note 3.
[73]  The Maha Bodhi Society Translation.
[74]  The Muslim Doctrine of God by S.M. Zwemer D.D. PP. 35-6
[75]  The Koran 21. P. 26
[76]   The Koran 21. P. 26.
[77] Ibid. 9. PP. 187-8
[78] Ibid 9. PP. 187-8
[79]  D.P. 6. 
[80]  Sale’s Koran Foot Note P. 60.
[81]  Quoted in RAHMAT – AL- LIL – ALAMINA Vil. I P 114 by Q. Md. Sulaiman
[82]  Mohammed by  S. D. Margoliouth P. 70
[83]  Ibid. P. 52.
[84]  The Story of Mohammed P. 100
[85]  The Koran : 2P. 36.
[86]  Matt 12:34
[87]  Commentary on the New Testament 
[88] The Holy Qur’an 9:128
[89]  Vol 2. P. 229.
[90] Arabic English Lexicon by Lane.
[91]  The Student’s H.E. Dictionary by R.N. Lal. 
[92] 21. P 326
[93]  The Students’ H.E. Dictionary by R.N. Lal
[94]  S.B.E. Vol. XI. P. 36.
[95] Four Gospels by W.W. How D.D. 
[96]  Apocryphal New Testament by M.R. James P. XIV
[97] W.W. How. D.D. The Four Gospels.
[98]  Ta. Vol. IV P. 248, quotess A and T.
[99]  Vol I P. 117
[100]  Ibid. P. 118
[101]  S.B.E. Vol XI P. 97
Previous Post Next Post