இந்த உம்மத்தின் அறிஞர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட ஹதீஸ் கலை அடிப்படை விதிகளுக்கமைய ஒரு ஹதீஸ் ஸஹீஹானது என்று தெரிந்தும் எவன் அதனை மனமுரண்டாக மறுக்க முயற்சிப்பானோ அவன் இந்த தூதை நிராகரித்து விட்டான், யூத நஸாராக்களுடனே அவன் மறுமையில் எழுப்பாட்டப்படுவான்.
இமாம் சுயூதி ரஹிமஹுல்லாஹ்
நூல் - மிப்தாஹுல் ஜன்னா பில் இஹ்திஜாஜ் பிஸ்ஸுன்னா (14)
இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் தனது "அல் இஹ்காம் பீ உஸூலில் அஹ்காம்" என்ற நூலின் முதலாவது பாகம் பதினொராவது தலைப்புக்கு கீழே ஸுன்னா பற்றி தெளிவுபடுத்தும் போது ;
இமாம் இஸ்ஹாக் பின் ராஹவைஹி அவர்களது இக்கூற்றை பதிவு செய்துள்ளார்கள்.
"ஹதீஸ் கலை அடிப்படை விதிகளுக்கமைய ஒரு ஹதீஸ் ஸஹீஹானது என்று உறுதியான பிறகு எவரொருவர் ஒழிவு மறைவின்றி வெளிப்படையாகவே அது ஹதீஸ் இல்லையென்று புறக்கணிப்பாரோ அவர் நிராகரித்துவிட்டார்"
அல்லாமா இப்னுல் வஸீர் ரஹிமஹுல்லாஹ்அ வர்கள் கூறுகிறார்கள் ;
ஒரு ஹதீஸை அது ஹதீஸ்தான் என்று தெரிந்து கொண்டு மனமுரண்டாக பொய்ப்பிப்பது தெளிவான இறை நிராகரிப்பாகும். நூல் - அல் அவாஸிம் வல்கவாஸிம் - (2/274)
Sheikh Mufaris Thajudeen Rashadi
Al Manar Centre, Dubai, UAE.